முன்னுரை:
அண்ணே வணக்கம்ணே,
நம்ம சூப்பர ஸ்டாரு ரஜினி காந்தோட நமக்கு வாய்க்கா தகராறு எதுவும் கிடையாது. ஒரு காலத்துல நானும் ஃபேன் தான். அப்பாறம் விலகிட்டம். அவர் மேல எனக்கு எள்ளளவு மரியாதை கூட கிடையாது. காரணம் பெங்களூர் வந்தா நான் ராஜ் குமார் ரசிகன்னு சொல்லிக்குவார். ஆந்திரா பக்கம் வந்தா என்.டி.ஆர் ,ஏ.என். ஆர் ரசிகன்னுவாரு. சிவாஜி தெலுங்கு ரீ மேக்ல சிரஞ்சீவிய கூட இம்மிட்டேட் பண்ணியிருந்தார். தமிழ் நாட்ல எம்.ஜி.ஆர் சிவாஜிம்பார். கமலை கூட இம்மிட்டேட் பண்ணுவார் (சிவாஜி- தமிழ்), ஆனா ஒன்னுங்கண்ணா ஒரு மனுசன் இந்த ரேஞ்சுக்கு தன்னை தானே கேவலப்படுத்திக்க முடியும்,சீப்பட முடியும்னு நான் கெஸ் பண்ணவே இல்லிங்கண்ணா. இத்தனை இருந்தும் சனம் அவரை சூ. ஸ்டார், சூ.ஸ்டார்னு சொல்லிக்கிட்டே இருக்காய்ங்க. சொல்ட்டு போவட்டும்.அவரும் தான் சூ.ஸ்டாருனு நம்பறாரோனு ஒரு சந்தேகம் வந்துருச்சு அதனால தான் அவருக்கு இந்த சவால்.
சவால்:
அய்யா சூப்பர ஸ்டாரு இந்த பட்டத்தை அல்லாரும் சொல்றாய்ங்க. நீங்களும் சொல்லிக்கிறிங்க. இந்த பட்டத்தை உங்களுக்கு ஆரு கொடுத்தா? ஞா இருக்கா? ஜஸ்ட் ஒரு டிஸ்ட் ரிப்யூட்டர் கொடுத்தாரு. கொடுத்தாருங்கறத விட அடிச்சாருனு சொல்லலாம். அதாவது போஸ்டர்.
தெலுங்குலயும் ஒரு சூப்பர ஸ்டாரு கீறாரு..அவரு பேரு கிருஷ்ணா. அவருக்கு இந்த சூப்பர ஸ்டாரு பட்டம் எப்படி வந்தது தெரியுமா? ஆந்திராவுல ஜோதி சித்ராவோ சிதாராவோனு ஒரு சினிமா பத்திரிக்கை.அவிக வருசா வருசம் யாரு சூப்பர் ஸ்டாருனு போட்டி வைப்பாய்ங்க. அதுக்குனு அவிக புக்லயே ஒரு ப்ரிண்டட் ப்ரொஃபர்மா பப்ளிஷ் பண்ணுவாய்ங்க.உடனே கிருஷ்ணா ஃபேன்ஸ் எல்லாம் மாட்டு வண்டி கட்டிக்கிட்டு கடை கடையா போய் புக் வாங்கி கிருஷ்ணா பேரை எழுதி போஸ்ட் பண்ணிருவாய்ங்க
அந்த ..........ரு கூட இல்லாம சூப்பர ஸ்டாருனு போட்டுக்க வெட்கமாவே இல்லியா?
நான் அல்லாத்தயும் மறந்துட்டு பாசிட்டிவா எதயாச்சும் பண்ணலானு இருந்தாலும் இந்த டிவிக்காரவுக விடமாட்டேங்கறாய்ங்க தலைவா ! நேத்து நான் ஏதோ நாட்டு நடப்பை தெரிஞ்சிக்கிடலாம்னு டிவியை போட்டேன் .அருணாச்சலம் படம் ஓடுது. படக்குனு சேனல் மாத்திட்டன். மைண்ட்ல இருக்கிற சேனலை மாத்த முடியலியே.
உங்க மென்டாலிட்டி ரெம்ப சிம்பிள். நீங்க ரிஸ்க் எடுக்க மாட்டிங்க. ஆனா உங்களுக்கு பவர் தேவை. அதுலயும் பொலிட்டிக்கல் பவர்.ஏதோ ஆர் எம் வீரப்பனை வச்சுக்கிட்டு கதை பண்ணிக்கிட்டிருந்திங்க. ஜெயலலிதாம்மா அவருக்கே ஆப்பு வச்சு துரத்திவிட்டுட்டாய்ங்க. உடனே உங்களுக்கு கடுப்பாயிருச்சு. இதான் அசல் மேட்டர். மேலுக்கு மணி ரத்தினம் வீட்டு மேல குண்டை குண்டா வீசினிங்க.
அந்த ஆட்சில அதுக்கு மிந்தியாகட்டும் பிந்தியாகட்டு லட்சம் அநியாயம் நடந்தது. ஆனால் நீங்க வாய்ஸ் கொடுக்கல்லே.
நீங்க அந்த தேர்தல்ல திமுக, த.மா.கா வுக்கு ஆதரவா வாய்ஸ் கொடுத்திங்க. காக்கா உக்கார பனம் பழம் விழுந்த கதையா ஒர்க் அவுட் ஆயிருச்சு. ஆனால் கலைஞர் பழம் தின்னு கொட்டை போட்ட கேஸாச்சே . வெற்றிக்கு பிறவு நன்றி அறிவுப்பு கூட்டத்துல கழக கண்மணிகள் எல்லாருக்கும் நேம் பை நேம் நன்றி தெரிவிச்சு மைக் செட் காரவுக பேரெல்லாம் ஆனபிறகு ரஜினிக்கும் நன்றின்னாரு. உங்களுக்கு கடுப்பாயிருச்சு.
இதையெல்லாம் மனசுல வச்சுத்தான் அருணாச்சலத்துல ஜனகராஜ் கேரக்டரை வச்சிருக்காய்ங்க. நீங்களும் ஓகே பண்ணி நடிச்சிருக்கிங்க.என்ன ஒரு வித்யாசம்னா ஜனகராஜுக்கு காத்தவராயனு பேர் வச்சவுக கருணா நிதினு வைக்கலை தட்ஸால்.
எந்த வாயால ஜெ ஒழியலைன்னா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்தமுடியாதுன்னு வசனம் விட்டிங்களோ அதே ஜெயாம்மாவை தைரியலட்சுமின்னு அர்ச்சனையும் பண்ணிங்க.
மேற்படி படத்துல " சிங்கம் ஒன்று புறப்பட்டதே " பாட்டு,அதுக்கான பில்டப்பை பார்த்து ரஜினி ரசிகனெல்லாம் எந்த அளவுக்கு உ.வசப்பட்டிருப்பானு நினைச்சா பயங்கர கடுப்பாகுது.
சரி சவால் மேட்டருக்கு வரேன். இன்னைக்கு சூப்பர் ஸ்டார் யாருனு ஒரு வாக்கெடுப்பு நடத்தற தம் இருக்கா? அதுவரை சூப்பர் ஸ்டாருன்னு போட்டுக்காத இருக்கிற பெரிய மன்ச தனம் இருக்கா?
சொல்லுங்க மிஸ்டர் ரஜினி .. டீலா ? நோ டீலா? சூப்பர் ஸ்டார்னா என்ன தெரியுமா?
ஒரு சூப்பர் ஸ்டாரோட படத்தை எடுத்து பார்த்தா அதுல சூப்பர் ஸ்டாரை தவிர ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கும் இருக்க கூடாது. கதை ஸ்டீரியோவா இருக்கனும். அரைச்ச மாவா இருக்கனும் ஆனால் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகனும். விகடன் விமர்சனத்துல இன்னொரு ரஜினி படம்னு பஞ்ச் வைக்கனும். அதான் சூப்பர்ஸ்டார் படம்.
தாளி இயந்திரன் சினிமாவுல எக்ஸ் ட்ரா ஃபிட்டிங்குன்னா ஒன்னா ரெண்டா .. முதல்வன் படம் ஞா இருக்கில்லை அர்ஜுனை போட்டு ஹிட்டாச்சு. யந்திரன் ஜனகராஜை போட்டு எடுத்தா கூட ஹிட்டாகும் அத்தீனி எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கு.
தலைவா .. உங்க ஞா இப்படி அகாலமா வர்ரதுக்கு டிவில வந்த அருணாச்சலம் மட்டுமில்லை. இன்னொரு காரணமும் இருக்கு. ஒரு தாட்டி காவிரி பிரச்சினைல ஹை கிளாஸ் டேஸ்டோட பி.ஜி.எம் எல்லாம் வச்சு உத்தமர் விஜயகுமாரோட உ.விரதம் இருந்திங்களே அப்போ கவர்னருகிட்டெ போய் மனு எல்லாம் கொடுத்திங்களே ஞா இருக்கா?
அதான் தலைவா.. கங்கை காவிரி இணைப்புக்கு சொந்த பணம் தரேன்னு சொன்னிங்களே. அக்கா...ங் அதே தான். இந்த இணைப்புக்காக நானும் ஒரு திட்டம் போட்டு 1986லருந்து மாரடிச்சிக்கிட்டிருக்கேன். அத பத்தி கழுகுல ஒரு பதிவை போட வாய்ப்பு கிடைச்சதா. போட்டேனா . அதைபத்தி கூகுல் க்ரூப்ஸ்ல சின்னதா டிஸ்கஷன்.
அதுல ரஜினி சார் ஒரு படம் எக்ஸ்ட் ரா நடிச்சா கூட தேசீய வருமானம் உயருது. தலை வருமானம் உசருது. இதுல சாமானியனுக்கு என்ன மயித்துக்கு பங்கு கிடைக்கபோவுது. தேசீய வருமானம், தலை வருமானம் உயர்ந்ததை வச்சு முன்னேற்றத்தை கணக்கு போடறதெல்லாம் உடான்ஸுனு சொல்லியிருந்தேனா. அதை பத்தி ஒரு அண்ணாத்தை ............
//ஸ்டுபிட் ஏழை நாட்டில் ரஜினி எப்படி கோடீஸ்வரன் ஆவார்? ரஜினியின் படம் பார்க்க எவனிடம் காசு இருக்கும்?மக்களிடம் காசு இல்லாமல் ரஜினி படம் எப்படி போனிஆகும்? நாட்டில் செழுமைக்கு அடையாளம் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை//
ன்னு ஒரு முத்தை உதிர்த்திருந்தார்.
ஃபிசிக்ஸ்ல உயிரற்ற வளர்ச்சிக்குனு ஒரு பரிசோதனை உண்டு. ஒரு குடுவைல படிகாரத்தை தூளாக்கி கரைச்சுரனும். அப்பாறம் அதே கரைசல்ல ஒரு படிகாரக்கல்லை கயிறு கட்டி தொங்க விடனும். மறு நாள் பார்த்தா கயித்துல கட்டின படிகாரக்கல் வளர்ந்திருக்கும். எப்டி எப்டி?
கரைசலா இருந்த படிகாரத்துகள் எல்லாம் கயித்துல கட்டின படிகாரத்தோட சங்கமமாகியிருக்கும்.
ஏழை நாட்லதான் கோடீஸ்வரன் மேலும் மேலும் கோடீஸ்வரனாறதுக்கு இதை விட ஆதாரம் வேற கிடையாது.
"சின்ன சேப்பனு பெத்த சேப்பா" ன்னு தெலுங்குல ஒரு சொலவடை உண்டு. அதாவது சின்ன மீனை பெரிய மீனு விழுங்கறது .
உங்க வீட்ல டிவிடி ப்ளேயர் இருந்து, பவர் கனெக்சன் இருந்தா யந்திரன் ரிலீஸான மறு நாள் இருபது ரூபாய் செலவுல குடும்பமே யந்திரனை பார்த்துரலாம்.
இதே உங்க வீட்ல பவர் இல்லே.. டிவிடி ப்ளேயர் இல்லேனு வைங்க யந்திரனை பார்க்க ரூ 200 முதல் 500 வரை செலவழிக்கனும்.
இப்ப புரியுதா ஏழை நாட்ல தான் ரஜினி மாதிரி பார்ட்டியெல்லாம் கோடீஸ்வரன் ஆகமுடியும்.
ரஜினி படத்துக்கு போறவன் எல்லாம் வசதியிருந்து போறதில்லை பாஸு. யதார்த்தம் நாறிப்போயிருக்க, எதிர்காலத்து மேல நம்பிக்கை நசிஞ்சு போய், அதுக்காக செய்ய ஏதுமில்லாத நிலைல யதார்த்தத்துலருந்து தப்பிச்சுக்க, கனவு காண போறான். அவனுக்கு கொஞ்சம் போல வசதியிருந்து, படிச்சிருந்து, மென்டல் மெச்சூரிட்டி இருந்தா யந்திரன் போகலாமா? பாத்ரூம்ல வழுக்குதே அதுக்கு ஆசிட் வாங்கி ஊத்தி கழுவலாமானு யோசிப்பான்.
நம்ம நாட்ல 10 கோடி யூத் வேலை வெட்டி இல்லாம இருக்கிறதா கணக்கு. இதுல தமிழ் நாட்டு எவ்ளனு தெரியலை. இதுக்கு காரணம் வறுமை. வறுமை கொஞ்சம் போல வழி விட்டிருந்தா அவன் ஸ்கில்ட் லேபராகியிருப்பான். கொஞ்சம் போல சம்பாதிச்சிருந்தா சேமிப்பு, எதிர்கால பாதுகாப்புனு ரோசிக்க ஆரம்பிச்சுருப்பான். இந்த மிஷன்ல ரஜினியெல்லாம் கொசுமாதிரி தெரிவாரு.
வேலை வெட்டி இருக்கிறவன்,சம்பாதனை உள்ளவன் எவனும் ரஜினியில தேங்கிரமாட்டான். ரசனையை வளர்த்துப்பான். ரஜினியெல்லாம் எப்படியா கொத்த காமெடி பீஸுனு தெரிஞ்சுக்குவான்.
அதனால ஏழை நாட்ல தான் ரஜினியெல்லாம் கோடீஸ்வரனாக முடியும்.
இன்னொரு அண்ணாத்தை இப்படி சொல்றார்
//மருத்துவத்தை விட நுணுக்கமான துறை பொருளாதாரம். ஆனால் இதில் அரசுக்கும் வல்லுனர்களுக்கும் அறிவுரை அள்ளித் தர சித்தூர் முருகேசன், அம்மாபட்டி பெரியகருப்பன், காரியாபட்டி பொன்னுத்தாயி என்று
ஆயிரம் பேர் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் உள்ளார்கள்.//
அண்ணாத்தை, சித்தூர் முருகேசன் ஒரு அரசு அதிகாரி பையன். சமீபத்துல பி.ப பட்டியல்ல சேர்க்கப்பட்ட முதலியார் வகுப்பை சேர்ந்தவன். சேஃப்டி ஜோன்ல தண்டத்தீனி தின்னு பி.காம் வரை படிச்சவன். சரீர உழைப்பே இல்லாம பார்ப்பனத்தனமா ஜோதிஷம் சொல்லி பணம் ஈட்டறவன். வாழ்க்கைய இன்னம் க்ளோசப்ல சரியா பார்க்காதவன். ஆனால் கொஞ்சம் போல சென்சிடிவ் பார்ட்டிங்கறதால தான் பார்த்த பிட்டுகளுக்கே அரண்டு போய் திட்டம் கிட்டம் போட்டு பதிவு போட்டு அலம்பல் பண்ணிட்டான்.
என்னை வேணம்னா நீங்க நக்கலடிக்கலாம். ஆனா அம்மாபட்டி பெரியகருப்பன், காரியாபட்டி பொன்னுத்தாயினு நக்கலடிச்சிங்க பாருங்க அங்கனதான் மிஸ்டேக் பண்ணிட்டிங்க.
அவிகளுக்கு தான் உண்மையான் நிலவரம் தெரியும். அவிக தான் சேத்துல காலை வைக்கிறவுக. திட்டமிடலுக்கு முதல் தேவை ஃபர்ஸ்ட் ஹேண்ட் இன்ஃபர்மேஷன் க்ராஸ் ரூட் லெவல்ல உள்ள பிரச்சினைகள் குறித்த அறிவு. அவிகளுக்கு மட்டும் பதிவு போடற கப்பாசிட்டி இருந்திருந்தா முருகேசன் போட்ட ஆ.இ 2000 எல்லாம் ஜ்ஜுஜுபி.
//அரசுக்கும் வல்லுனர்களுக்கும் அறிவுரை அள்ளித் தர//னும்னு முருகேசனுக்கென்ன வேண்டுதலையா? தாளி இவிக நிர்வாகத்தை தான் பார்த்தாச்சே . பத்தினியெல்லாம் பரத்தையாகி,ஆணினம் டாஸ் மாக்கே கதியாகி .. அவிக கரீட்டா ப்ளான் பண்ணி கரீட்டா ஒர்க் அவுட் பண்ணியிருந்தா நாங்கல்லாம் எதுக்குண்ணே அறிவுரை தரப்போறோம்.
//பொருளாதாரம் பற்றி ஒரு பாடம் கூட பன்னிரண்டாம் வகுப்பு வரை பெரும்பாலோர் படித்ததில்லை. அதனால் மக்களுக்கு உள்ள அறியாமையே இது போன்ற கட்டுரைகள்//
ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது துரை..என் திட்டத்துக்கு ஆதாரம் நீ சொல்ற பொருளாதார படிப்பு இல்லை . நான் போட்ட எதிர் நீச்சல். பொருளாதாரத்துல 12 ஆம் வகுப்பென்னா இன்டர்ல சி.இ.சி (சிவிக்ஸ் ,எக்கனாமிக்ஸ்,காமர்ஸ் ) டிகிரில ஹெச்.இ.பி ஹிஸ்டரி ,எக்கனாமிக்ஸ்,பாலிடிக்ஸ். ஆமாங்கண்ணா தெரியாம கேட்கறேன் காமராஜர் எத்தீனி நூற்றாண்டு பொருளாதாரம் படிச்சாருன்னு தமிழகம்தொழில் துறைல முன்னணி வகிச்சது
//வரும் தலைமுறை இப்போதுள்ள இளைஞர் தலைமுறையை விட மிக அறிவான தலைமுறையாக இருக்கும்.//
ஆமாங்கண்ணா அதனால தான் பாலம் எல்லாம் சரியுது. அதனால தான் தெலுங்கு கங்கை கால்வாய் அப்பப்ப பிச்சிக்கிட்டு ஓடுது. அதனாலதான் கடந்த மழைகாலத்துல நாகார்ஜுனா சாகர் பிழைக்குமானு ஆக்கிட்டாய்ங்க. இதயத்தால ரோசிச்சு மூளையால திட்டம் போடனும் பாஸு. இந்த தலைமுறைக்கு /வரப்போற தலைமுறைக்கு இதயமும் இருக்கபோறதில்லை. மூளையும் இருக்கப்போறதில்லை.
இவிக இந்த நாட்டு பஞ்சை பராரிக தீப்பெட்டி வாங்கி எக்ஸைஸ் டாக்ஸா தர்ர பத்து காசுல பெரீ படிப்பெல்லாம் படிச்சு ஃபாரீன் போய் ஒட்டகம் மேய்ப்பாய்ங்க. சொம்மா விடாதே கண்ணா..
உபரியா இன்னொரு பார்ட்டி: (கரன்சி ரத்து பற்றி)
//கடந்த இருபது வருடத்தில் ரஷ்யாவில் இரண்டு முறை கரன்சியை ரத்து செய்து புது கரன்சியை கொண்டு வந்தார்கள். இப்போது மூன்றாம் முறையாக கரன்சியை ரத்து செய்யலாமா என்று யோசித்துக் கொண்டுள்ளார்கள். விளைவு : அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக டாலர் அதிக புழக்கத்தில் உள்ள நாடு ரஷ்யா.//
இங்கன ரத்து பண்ணலயே. மேலும் இந்தியா ரஷ்யாமாதிரி சிதறிப்போவலியே. இந்தியா என்ன இரும்புத்திரைக்குள்ள மூச்சு திணறிக்கிட்டிருந்ததா இல்லையே . இருட்டை சபிக்கறத விட ஒரு விளக்கை ஏத்தப்பாருங்க தலை !
மற்ற விமர்சனங்களுக்கு என் பதில் நாளை.
கூகுல் சர்ச்சையை இப்பவே படிச்சு உங்க கருத்தை தெரிவிக்க இங்கன அழுத்துங்க.
No comments:
Post a Comment