கடந்த பதிவின் சுருக்கம்:
கடந்த பதிவுல பெட் ரூம் வாயு மூலைல ( வடமேற்குல) அமையனும்னு சொல்லியிருந்தேன்.சஞ்சலம், நிலையற்ற தன்மை, கோர்ட்டு,வியாஜ்யம்,நோய், சண்டை ,சச்சரவு, குடும்ப நபர்கள் வெளி நடப்பு செய்யறது, இவ்ளோ ஏன் விபசாரத்துக்கு கூட காரகம் உள்ள திசை எதுன்னா வடமேற்குதான். இங்கன பெட் ரூம் அமையறது நல்லதான்னு விவரமா சொல்லிக்கிட்டிருந்தேன். வாயு மூலைக்கான காரகத்வங்கள்ள மொதல் பாய்ண்டான சஞ்சலம், நிலையற்ற தன்மைக்கும் செக்ஸுக்கும் என்ன சம்பந்தம் அது எப்படியெல்லாம் "பலான " மேட்டருக்கு உதவுதுன்னும் சொல்லியிருந்தேன்.
மேட்டருக்கு வந்துருவமா?
வாயு மூலையோட காரகத்வங்கள்ள அடுத்து வர்ரது கோர்ட்டு,வியாஜ்யம், சண்டை,சச்சரவு. இதெல்லாம் எப்படி பலான மேட்டருக்கு உதவும்னு கேட்பிங்க. சொல்றேன்.
நீங்க யாரை காதலிக்கிறிங்க? யாருடனான காதல் நிரந்தரமா இருக்கும்? யாருடனான திருமண உறவு தொடரும்? யாருடனான உடலுறவு அதே ஆர்வத்தோட தொடரும்? உடலுறவை என்ரிச் பண்றது ( மறக்க முடியாததாவும், ஆழமானதாவும் ?) பண்றது எது? இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டா பெட் ரூம் அமைக்க , கோர்ட்டு,வியாஜ்யம், சண்டை,சச்சரவுக்கெல்லாம் காரகத்வம் வகிக்கிற வாயுமூலையை ஏன் பெரியவங்க ரெகமெண்ட் பண்ணாய்ங்கனு புரியும்.
யார் தன்னை தான் ரெம்ப அட்மைர் பண்றாய்ங்களோ அவிங்க தான் கனவு காணுவாய்ங்க. பாசிட்டிவ் திங்கர்சாயிருந்தா தாங்கள் கனவு கண்ட வாழ்க்கைய ஏற்கெனவே வாழ்ந்துக்கிட்டிருக்கிறவுகளை தங்கள் ஆதர்சமா நினைப்பாய்ங்க. நெகட்டிவ் திங்கர்ஸா இருந்தா எதிரியா பாவிப்பாய்ங்க.
ஆமாங்கண்ணா..
நீங்க ஃப்யூச்சர்ல எப்படி இருக்கனும்னு ஆசைப்பட்டிங்களோ அப்படி ப்ரசன்ட்ல இருக்கிறவனை தான் உங்க மனசு எதிரியா பாவிக்குது. ( இது ஒரு கோணம்)
யார் தங்களை ரெம்ப அட்மைர் பண்றாய்ங்களோ அவிங்க தான் தங்களை சதா எதிராளிகளோட தங்களை ஒப்பிட்டு பார்ப்பாய்ங்க
நீங்க ஒருத்தரை எதிரியா பாவிக்கிறிங்கன்னா என்ன அர்த்தம்? உங்க கிட்ட இல்லாதது ஏதோ அவங்கிட்ட இருக்கு..
ஆக ஏதோ ஒரு வகையில எதிரியோட கேரக்டருக்கும் உங்க கேரக்டருக்கும் தொடர்பிருக்கு.
"ஃப்ரெண்ட் ஆர் எ ஃபோ"ன்னு ஒரு வார்த்தை உண்டு. நண்பனா எதிரியா (தெரியலியே) . ஒருத்தனை எதிரியா பாவிக்கிறது அவனை ஒரு வகைல ஆராதிக்கிற மாதிரிதான். ( நான் சந்திரபாபுவை)
நண்பர்கள்னு சொல்லிக்கிறாய்ங்களே அவிக மத்தில இருக்கிற பாலிடிக்ஸ் தாளி பார்லெமெண்ட் சென்ட்ரல் ஹால்ல, மாஃபியா க்ரூப்ஸ் நடுவுல கூட இருக்காது. அதாவது பகிரங்க எதிரியா பிரகடனப்படுத்திக்கிற தில்லில்லாத பார்ட்டிங்க தான் உங்க நட்பு வளையத்துல நுழைவாய்ங்க.
உங்க எதிரியையும் , உங்களையும் ஏதோ ஒரு நூல் இணைக்குது. அதோட ஒரு முனை உங்க மனசுல அ உங்க கேரக்டர்ல இருக்குது. மறு முனை உன எதிரியோட மனசுல,கேரக்டர்ல இருக்குது.
ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர். அதாவது எதிரெதிர் மைண்ட் செட் கொண்டவுக மத்திலதான் கவர்ச்சியே இருக்கும். உ.ம் என்.டி.ஆர் - சந்திரபாபு, எம்.ஜி.ஆர் - கருணாநிதி, விஜயகாந்த் -கருணா நிதி,
காம்ரெட்ஸ் இன் டெஸ்ட் ரஸ்ங்கறாய்ங்களே? ( ஓரின பறவைகள் ஒரே கூட்டில்). இதுவும் நிஜம்தான். ஆனா இந்த உறவுல த்ரில், ஜில், கில் எதுவும் இருக்காது. தொங்கிப்போன மூஞ்சியோட பேச்சுவார்த்தை கூட இல்லாம தொடரும். சில சமயம் காரணமே இல்லாம அறுந்துரும்.
கவிஞர் உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்னு பாடினாரு. இங்க எவன் தன்னை கரீக்டா அறிஞ்சு வச்சிருக்கான். தவறாம தப்பாத்தான் புரிஞ்சி வச்சிருக்கான். அதனால தப்பான முனை இவனை கவர்ந்துருது.
சின்ன வயசுல சிறுவர்கள்,சிறுவர்களோடயும், சிறுமிகள் சிறுமிகளோடவும்தான் நெருக்கமா இருப்பாய்ங்க. டீன் ஏஜ்லதான் ஆப்போசிட் செக்ஸ் மேல கவர்ச்சியே வரும். (சிலருக்கு கட்டைல போற வரை வரதுல்லிங்கண்ணா.ரிட்டையர் ஆகி பார்க் பெஞ்சில தலைய தொங்கப்போட்டுக்கிட்டு பேசற தாத்தாக்களை பாருங்க.ஏன் அவிக பாட்டிகளோட பழகக்கூடாது. அப்போ (வாச்சும்) மூஞ்சி பல்பு போடாது.
சில இம்மெச்சூர்ட் மைண்ட்ஸ் யாரை தாங்கள் வெறுக்கனுமோ அவிகளை அட்மைர் பண்ண ஆரம்பிச்சுரும்.( 1986 வரை நான் ரஜினி , சிரஞ்சீவிய அட்மைர் பண்ணமாதிரி)
ஆக உங்க கவுண்டர் பார்ட் (கவுண்டமணி பார்ட்டில்லிங்கோ- எதிர் பார்ட்டி அ எதிரி பார்ட்டி ) உங்கள்ள ஒரு பாகம். எதிர்ப்பு இருந்தாதான் த்ரில். காலம் ஓடும். மோதல் -காதல் - கல்யாணம் ஃபார்முலா தெரியுமில்லை.
திருமண பொருத்தம் பார்க்கிறச்ச ராசிப்பொருத்தம்னு ஒரு கான்செப்ட் இதுல பெண் ராசிக்கு ஆணோட ராசி 8, 12 ஆவது ராசியா இருந்தா தூளுனு ஒர் ரூல் இருக்கு. 8ங்கறது மரணத்தை காட்டற இடம். பொதுவிதிப்படி பார்த்தா உங்க ராசிக்கு எட்டாவது ராசிக்காரியால உங்க ஆயுஷ் குறையனும், ஆபத்து ,விபத்து ஏற்படனும், நீங்க திவாலாகலாம், ஜெயிலுக்கு போக வேண்டி வரலாம். ஏன் மரணம் ஏற்பட கூட வாய்ப்பிருக்கு. 12 ஆவது ராசிக்காரியால அலைச்சல்,திரிச்சல்,வீண் விரயம் தான் ஏற்படும். ஆனால் 8,12 ஆவது ராசி பொருந்தும்னு ஏன் சொல்லியிருக்காய்ங்க?
ஏற்கெனவே நான் சொல்லியிருக்கேன். தம்பதிகள்ள யாரோ ஒருத்தர் மசாக்கிஸ்டா இன்னொருத்தர் சாடிஸ்டா இருந்தாதான் மேரீட் லைஃப் கன்டின்யூ ஆகும். உங்களுக்கு எட்டாவது ராசி, 12 ஆவது ராசி நிச்சயம் உங்களை இம்சை பண்ணும்.
அதாவது சாடிஸ்டா இருக்கும். நீங்க மசாக்கிஸ்டா இருப்பிங்க.
இந்த திருமண பொருத்தத்துலயே வசியப்பொருத்தம்னு ஒரு கான்செப்ட். இதன் படி
மேஷத்துக்கு விருச்சிகம் வசியமாம் ( எட்டாவது ராசி அதாவது கொலை பண்ணக்கூடிய ராசி)
ரிஷபத்துக்கு துலா வசியமாம் ( ஆறாவது ராசி. அதாவது கோர்ட்டுக்கு இழுக்கக்கூடிய ராசி)
சிம்மத்துக்கு துலா வசியமாம் ( மூன்றாவது ராசி - இதை மாரக ஸ்தானம்னு சொல்வாய்ங்க. மாரகம்னா மரணம்னு அர்த்தம்)
சிம்மத்துக்கு மகரம் வசியமாம் ( ஆறாவது ராசி -அதாவது கோர்ட்டுக்கு இழுக்கக்கூடிய ராசி)
துலாவுக்கு கன்னி வசியமாம் ( 12 ஆவது ராசி - அல்லல் அலைச்சலை தரவேண்டிய ராசி)
கடகத்துக்கு விருச்சிகம் வசியமாம் ( மனோகாரகனான சந்திரன் கடகத்துல ஆட்சி - விருச்சிகத்துல நீசம். சந்திரன் ரெண்டேகால் நாளைக்கொருதரம் ராசிமாறிக்கிட்டே இருப்பாரு .கடக ராசி கேரக்டர் மாறிக்கிட்டே இருக்கும். இதுலருந்து என்ன தெரியுது காதல்/தாம்பத்யம் ஓப்பனா சொன்னா உடலுறவு என்ரிச் ஆகனும்னா அதுல எதிர்பாரா தன்மை இருக்கனும். பை தி பை உங்களுக்கும் உங்க பார்ட்னருக்கும் எதிர்மறை குணங்கள் இருக்கனும். உங்க மத்தில பகை இருக்கனும். கொலை வெறி இருக்கனும்)
இதையெல்லாம் வாயுமூலை என்கரேஜ் பண்ணும். அதனால தான் வாயு மூலைல பெட் ரூம் புரியுதுங்களா?
வாயு மூலைக்கான அடுத்த காரகத்வம் விபச்சாரம். என்னங்கய்யா இது விபசாரம் பண்ற திக்கிலயா பெட் ரூம் கட்டறதுனு கேட்பிங்க .. சொல்றேன்.
வாத்யாரோட ராமன் தேடிய சீதை படம் பார்த்திங்களா அதுல ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் வரும் . ஒரு மனைவி எப்படி இருக்கனும்னு சொல்ற ஸ்லோகம்.
கார்யேஷு தாசி - வேலை செய்யறதுல அடிமை மாதிரி இருக்கனும்
கரண்யேஷு மந்திரி - பிரச்சினை வந்தப்ப யோசனை சொல்றதுல மந்திரி மாதிரி இருக்கனும்
போஜேஷு மாதா சாப்பாடு போடறதுல அம்மா மாதிரி இருக்கனும்
இதெல்லாம் ரொட்டீனா வருது. ஆனால் அடுத்த வரியை பாருங்க
சயனேஷு ரம்பா ( கில்மா மேட்டர்ல மாத்திரம் பட்லி மாதிரி - ஒடைச்சு சொன்னா விபசாரி மாதிரி - இருக்கனுமாம்)
அப்போ விபச்சாரத்துக்கு ஏத்த மூலை வாயு மூலைதானே. விபசாரி மாதிரி நடந்துக்கறதுன்னா எப்படி? அப்படி நடந்துக்கற மாதிரி மோட்டிவேட் பண்றது எப்படிங்கறதெல்லாம் இந்த தொடர்ல எழுதினா வேட்டியை உருவிருவாய்ங்க. இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம் தலை !
//நீங்க ஃப்யூச்சர்ல எப்படி இருக்கனும்னு ஆசைப்பட்டிங்களோ அப்படி ப்ரசன்ட்ல இருக்கிறவனை தான் உங்க மனசு எதிரியா பாவிக்குது. ( இது ஒரு கோணம்)
ReplyDeleteயார் தங்களை ரெம்ப அட்மைர் பண்றாய்ங்களோ அவிங்க தான் தங்களை சதா எதிராளிகளோட தங்களை ஒப்பிட்டு பார்ப்பாய்ங்க
நீங்க ஒருத்தரை எதிரியா பாவிக்கிறிங்கன்னா என்ன அர்த்தம்? உங்க கிட்ட இல்லாதது ஏதோ அவங்கிட்ட இருக்கு..
ஆக ஏதோ ஒரு வகையில எதிரியோட கேரக்டருக்கும் உங்க கேரக்டருக்கும் தொடர்பிருக்கு.//
உண்மை என்று தான் தோன்றுகிறது ...
;-)))) நல்லா சொன்னீங்க... கலக்குங்க... ஆனா வாஸ்துன்னாலே நரைச்சு போனவங்க மேட்டர்னு ஒரு நம்பிக்கை இருக்கே... முதலாவதாக அது மாறனும் அய்யா!
ReplyDeleteவிபசாரி மாதிரி நடந்துக்கறதுன்னா எப்படி? அப்படி நடந்துக்கற மாதிரி மோட்டிவேட் பண்றது epdi. please write about this. as many parts as much will explain more to ladys. i am looking for good educational subject from you. Many thanks.
ReplyDelete