அண்ணே வணக்கம்ணே
இந்த வெற்றி மீது வெற்றி பதிவோடயே யார் அந்த தேவி ங்கற நேத்தைய பதிவை விரிவுபடுத்தி போட்டிருக்கேன். திரட்டி, இன்ட்லி மூலமா ஏற்கெனவே படிச்சிருந்தாலும் இங்கே அழுத்தி இன்னொரு தாட்டி ஸ்க்ரால் பண்ணிருங்க
ஐ.சில இருக்கிறச்ச (இன்டென்சிவ் கேர் இல்லிங்கண்ணா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்)வாத்தியாரோட கொள்கை பாடல்களை கேட்டா ஒரு சக்தியே பிறக்கும் தான் இல்லேங்கலை. ஆனால் என் சாய்ஸ் மட்டும் தோல்விதான்.
வெற்றி வந்த பிறவுதான் உண்மையான யுத்தம் ஆரம்பிக்குது.அதை ஏற்று எதிர்கொள்ளவோ மறுக்கவோ நமக்கு சுதந்திரம் இருக்காது. யுவார் கமிட்டட் அண்ட் கெம்ப்ல்ட் டு ஸ்ட்ரகிள். லைஃப் ஈஸ் டு லிவ். நாட் டு ஸ்ட்ரகிள். வாழ்க்கைல யுத்தமிருக்கலாம். வாழ்க்கையே யுத்தமாயிட்டா ? எனி ஹவ் வெற்றிக்கு பின்னாடி யுத்தம் ஆரம்பமானதும் கூடவே தோல்விபயம் துவங்குது. ஜெயிச்சே ஆகனும்ங்கற கட்டாயம் ஏற்பட்டுருது. எங்கே கட்டாயத்தன்மை இருக்கோ அங்கன காதல், கில்மா கூட நரகமாயிருது. சகஜமா இருக்கக்கூடிய திறமைகள் கூட ஜெயிச்சுட்ட எம்.எல்.ஏ தொகுதி பக்கம் தலைகாட்டாத கணக்கா இந்த பக்கம் தலைவச்சு படுக்கமாட்டேங்கும்.
ஆனால் தோல்விக்கு பிறவு யுத்தமா? இல்லையாங்கறதை நாம டிசைட் பண்ணிக்கற பொசிஷனுக்கு வந்துர்ரம். இந்த வகைல பார்த்தா தோல்வியே பெட்டர் சாய்ஸ். ஆனாலும் வெற்றி மேல மனிதனுக்கு ஏனிந்த கவர்ச்சி?
இருட்டு மரணத்தின் அறிகுறி - வெற்றி வெளிச்சத்தை தருது. உங்களை வெளிச்சம் போடுது. இருட்டு தனிமையை தருது -தனிமை மரணத்தின் அறிகுறி - வெற்றி பணங்காசை தருது - ஏழ்மை மரணத்தின் அறிகுறி. ஆக வெற்றிங்கறது வாழ்வு .தோல்விங்கறது சாவு. அதனாலதான் எல்லா பார்ட்டியும் வெற்றியே நோக்கமா கூட்டு வைக்குது. இருந்தாலும் தோத்துப்போக ஒரு ஆள் தேவையாச்சே/ எவனோ ஒருத்தன் தோத்துத்தானே ஆகனும்.
இந்த 43 வயசுக்கு வெற்றி தோல்விகளோட அர்த்தங்கள் தாத்பர்யங்களே மாறிருச்சு.
( ஆடிய ஆட்டம் என்ன? - பி.ஜி.எம்ல பாட்டு கேட்குதுங்கோ ).உங்க மனச பொருத்தவரை வெற்றிங்கறது கிரீடமா இருந்தா பரவாயில்லே. அதான் தலைன்னு நீங்க அலைஞ்சு பறை சாத்தினா தலைக்கு கிரீடம் வருதோ இல்லியோ தலை நிமிர்ந்து நடக்க முடியாது.
வெற்றி வெற்றினு இந்த மனசு அலைபாயுதே தாளி இந்த வெற்றியெல்லாம் புதுசா என்னத்த தந்துரப்போவுது?
உடலுறவின் போது கோடிக்கணக்கான உயிரணுக்கள் பீய்சியடிக்கப்படுது. இருக்கிறது ஒரே முட்டைக்கரு.அதை துளைச்சா உயிரா மாறலாம், இல்லைன்னா கழிவறைலயோ, குளியலறையிலயோ கழிக்கப்படுவோம். ஜீவமரண போராட்டம்னா அதுதான்.
அந்த உயிரணுவோட சைசுக்கு அது கடக்கவேண்டிய தூரம் ரெம்ப சாஸ்தி. அந்த ஜீவமரண போராட்டத்துலயே ஜெயிச்சு வந்தவுக நாம. இந்த ஜகன் நாடகத்துல நாம இல்லேன்னா இந்த நாடகம் ரசிக்காது,ருசிக்காதுன்னு அந்த இயற்கையே அந்த ஜகன் மாதாவே நம்மை ரெகக்னைஸ் பண்ணியாச்சு.
அப்பாறம் இந்த உலகத்துல நடக்கிற உதவாக்கரை போட்டிகள்ள நாம ஜெயிச்சா என்ன தோத்தா என்ன? ஒரு தாட்டி 1987ல ஃப்ரெண்ட்ஸ் ஏதோ கொட்டேஷனை வச்சு படிச்சிட்டிருந்தய்ங்க.// லைஃப் ஈஸ் எ பஜில் சால்வ் இட் // , //லைஃப் ஈஸ் எ வார் ஃபேஸ் இட் // இந்த ரேஞ்சுல போகுது கொட்டேஷனு.
படக்குனு நான் சொன்னேன். லைஃப் ஈஸ் எ ஜோக் எஞ்சாய் இட். நெஜமாலுமே நம்ம வாழ்க்கைய மிஞ்சின ஜோக் வேற கிடையாது.கலைஞர் தாத்தா சி.எம் ஆனா அம்மா வீட்டுக்கு அதிகாரிகள் படை போகும். அம்மா சி.எம் ஆனா தாத்தா வீட்டுக்கு அதிகாரிகள் போவாய்ங்க.
மானிலத்துல ஆள்ற கட்சி மத்தில கூட்டணியில இருந்தா இங்க உள்ள கவர்னரு ஆட்டுக்கு தாடி மாதிரி பதவிசா இருப்பாரு. மேட்டர் வேற மாதிரி போனா பின்லாடன் தாடி மாதிரி ஆயிருவாரு. ஹ்யூமன் லைஃப்ல உள்ள மாதிரி ஐரனி வேற ஏதும் கிடையாது.
இயற்கையே இவனை அங்கீகரிச்சாச்சு. ஆனால் இவன் வாழ் நாள் எல்லாம் அங்கீகாரத்துக்காக அலைஞ்சிக்கிட்டே இருப்பான் . ஓருடல் ஓருயிரா இருந்தப்ப (அமீபா) ப்ளெசண்டா இருந்தான்.பல்லுயிரா பல்கி பெருகின பிற்பாடு இவனுக்குள்ள ஈகோ வந்துருச்சு. இயற்கைல இருந்து வேறுபடுத்தி பார்த்து சக உயிர்கள்கிட்டருந்தும்,இந்த இயற்கைலருந்தும் விலகிட்டான். அதனால லைஃப் லாங் சக உயிர்களை கம்யூனிக்கேட் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பான். சக உயிர்களோட இணைய மெனக்கெடுவான்.
அப்படி இணைய தன் உடல் தான் தடைனு பிரமிச்சு பல்வேறு முகமூடிகள்ளே கொல்லுவான் ,கொல்லப்பட விரும்புவான். செக்ஸ்,பணம்,பதவி,அதிகாரம் இப்படி நெம்பர் ஆஃப் ஆல்ட்டர்னேட்டிவ்ஸ்.
ஃபேக்ட் என்னன்னா இவன் ஆல்ரெடி இணைஞ்சிருக்கான். இந்த இயற்கையோட, சகமனிதர்களோட சக உயிர்களோட இணைஞ்சிருக்கான்.ஆனா ஈகோ காரணமா இதை உணர முடியறதில்லை.
இவன் என்ன வேணா பண்ணிட்டு போவட்டும். எனக்கு அப்ஜெக்ஷனில்லே. ஏன் அதை பண்றான்னு புரிஞ்சிக்கிட்டு பண்ணலாம்லியா? உன்னோட பேசிக்கல் இன்ஸ்டிங்ட் என்ன? சக உயிர்களோட இணையனும். ஆல்ரெடி இணைக்கப்பட்டிருக்கே நைனா. அதுக்கு ஏன் கொல்றது,கொல்லப்படறது.அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவா கெட்ட காரியம் பண்றது, அதை சொசைட்டி தடை பண்ணிவச்சிருக்கிறதால பணம் பணம்னு அலையறது,பதவி பதவின்னு பதைக்கிறது. கிடைச்சா துள்ளி குதிக்கிறது.. கிடைக்கலைன்னா துவண்டு போறது
ஆஃப்டரால் நூறு ரூபா ஃப்ளாஸ்க்.அதுல கேப் கொடுக்காம இந்த நிமிஷம் வென்னீர் அடுத்த நிமிஷம் ஐஸ் வாட்டர் ஊத்தினா அது "பொள்" அதை விட கேவலமா இந்த மனித உடல்? ஒரு தாட்டி மூச்சா போனம்னா பஸ் ஸ்டாண்ட் பொதுக்கழிவறைல ரூ 1/- குட்டிசுவத்து மேல அடிச்சு அதுவும் கிடையாது.
சிறு நீரகம் ஸ்ட்ரைக் பண்ணிருச்சுன்னா ஒரு தாட்டி டயாலிசிஸ் பண்ண ரூ 5 ஆயிரம் டாக்ஸஸ் எட்செட்ரா.ஜஸ்ட் உன்னோட ஈகோவ கழட்டி வச்சுட்டு பார்த்தா ஒழிஞ்சு போற பிரச்சினைக்கு கொலை,தற்கொலை,அஜால் குஜால், சுய இன்பம்,இழந்த சக்தி வைத்தியர்கள், நாலணா வேசிகள், கள்ளக்காதல்கள் ,வெட்டிக்கொலைகள், எயிட்ஸ்,கொனேரியா,சிஃபிலிஸ், போலீஸ் ரெய்டு, விதைகளே முழங்கால் வரை தொங்கி போற வயசு வரை படிப்பு, ஃபை டிஜிட்ல சமபளம் தரானேன்னு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை. பொய்,புனை,சுருட்டு,லஞ்சம் ஊழல், ஏசிபி ரெய்டு, பேட்டரி ஆஃப் ஆகிப்போய் பெண்டாட்டிக்கும் சேர்த்து ட்ரைவரை அப்பாயிண்ட் பண்றது, அடுத்த வேளை சோத்துக்கில்லாத சனத்துக்கு நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கி, கள்ள ஓட்டு வாங்கி , அடி தடி பண்ணி ,வெடிகுண்டு போட்டு பதவி.. தேவையா இதெல்லாம்?
வெற்றி எவனுக்கு வேணும்? எவனொருத்தன் மனசுல ஈகோ இருக்கோ எவனொருத்தன் தான் பிறக்கும்போதே, பிறக்கறதுக்கு முந்தியே இந்த இயற்கையால அங்கீகரிக்கப்படுள்ள விசயத்தை மறந்துட்டானோ எவன் தான் இந்த ஒட்டு மொத்த இயற்கையோட,சக உயிர்களோட பிணைக்கப்பட்டிருக்கிறதை உணரலையோ அவனுக்குத்தேன் வெற்றி வேணம்.
இதுவரை நம்ம வழி. இப்ப உங்க வழிக்கு வந்துர்ரன். வெற்றி தேவைனே வச்சிக்குவம். அதுக்கு என்ன வழி?
1.ஜெயிச்சுத்தான் ஆகனும்ங்கற கட்டாயம் இருக்க கூடாது
2.இப்படை தோற்கின் எப்படை வெல்லும்ங்கற ஓவர் கான்ஃபிடன்ஸ் இருக்ககூடாது
3. நம்ம பக்கம் தப்பு இருக்ககூடாது. நாம தப்பு பண்ணலைங்கற எண்ணமே ஆயிரம் யானை பலத்தை தரும்
ஹி ஹி.. இந்த 3 பாயிண்டையும் (வழக்கம் போல) அடுத்த பதிவுல நோண்டி நுங்கெடுக்கலாம்ணே உடுங்க ஜூட்
No comments:
Post a Comment