Wednesday, August 18, 2010

கில்மா ஜோசியம்

ஜாதக சக்கரத்துல கில்மா தொடர்பா உள்ள அம்சங்களையெல்லாம் வச்சு ஒரு தொடர் போட்டா என்னனு ஒரு கெட்ட எண்ணம் வந்துருச்சுங்கண்ணா. எதையும் தாங்கும் வலையுலகம் இதையும் தாங்குமா? தடை போடுமா? வெயிட் அண்ட் சீ.



ஜோதிஷத்துல கில்மான்னாலே சுக்கிரன் தான். இன உறுப்பு, அதிலான சுரப்பு, விறைப்பு, செயல்பாடு எல்லாத்துக்கும் இவர் தான் காரகர். இவர் செவ்வாயோட சேர்ந்தாலோ , அ செவ்வாய் வீட்ல ( மேஷம்,விருச்சிகம்) உட்கார்ந்தாலோ, அல்லது சுக்கிரனோட வீடுகள்ள ( ரிஷபம்,துலா) செவ்வாய் உட்கார்ந்தாலோ என்ன நடக்கும்னு இந்த பதிவுல பார்க்கலாம்.



ஜாதகம் உள்ளவுக அதை பக்கத்துல வச்சிக்கிட்டு படிங்க. லக்னம் முதல் வீடு. எண்ணும்போது க்ளாக் வைஸ் எண்ணுங்க. லக்னத்தோட சேர்த்து எண்ணுங்க.



ஜாதகம் இல்லாதவுக என்ன பண்றதுனு கேட்பிங்க. டேட் ஆஃப் பர்த் இருந்தா ஆன்லைன்லயே ஃப்ரீயா ஜாதகம் போட்டுக்க நிறைய வெப்சைட்ஸ் இருக்கு. போட்டு வச்சுக்கிட்டு இந்த பதிவை படிங்க.



http:www.astroloka .com

http:www.freehoro .com

http:www.scientificastrology.com



டேட் ஆஃப் பர்த் இல்லாதவுக என்ன பண்றதுனு கேட்பிங்க. இன்னைக்கு ( நீங்க படிக்கிற தினத்துக்கும்) என்ன தேதின்னு பார்த்து மேற்சொன்ன வெப்சைட்ஸ்ல காலை 6 மணி நேரத்துக்கு ஜாதகம் போட்டு பக்கத்துல வச்சிட்டு படிங்க. இதை தற்கால கிரக நிலை, கோசாரம்னு சொல்வாய்ங்க. இதனோட இம்பாக்ட் டெம்ப்ரரி.ஆனா ஆராய்ச்சிக்கு உதவும். உடனடி லாட்டரி மாதிரி ரிசல்ட் தெரியும்.



எந்த ராசிக்கு யார் அதிபதின்னு தெரிஞ்சிக்கிட்டா எந்த ராசிக்கு அதிபதி எங்கன இருக்காருனு பார்க்க உதவியா இருக்கும்.



படத்துல உள்ள ராசி சக்கரத்துல எது எந்த ராசி, எதுக்கு யார் அதிபதின்னு தெரியாதவுகளுக்கு பதிவோட கடைசில டேட்டா கொடுத்திருகேன் பாருங்க.



சுக்கிரனுக்கும், செவ்வாய்க்கும் இடையில் பல முரண்பாடுகள் .



சுக்கிரன், காதல் ,கல்யாணம்,உடலுறவு இத்யாதிக்கு காரகர்

செவ்வாய், கத்தி குத்து,கொலை,விவகாரம் இத்யாதிக்கு காரகர்



சுக்கிரன்: இன உறுப்புக்கு காரகர்



செவ்வாய்: ரத்தக்கசிவிற்கு ,காரகர் ( பெண் விஷயத்தில் இது ஓகே. ஆணுக்கு நேர்ந்தால்? அட பெண்ணுக்கே என்றாலும் உடலுறவின் போது நிகழ்ந்தால்)



செவ்வாய்: கோபம்,அடி தடிக்கு காரகர்

சுக்கிரன்:தாபம், மோகம்,இத்யாதிக்கு காரகர்



ஆமா இவிகளுக்கிடையில் ஒற்றுமையே இல்லையா என்று கேட்டால் இருக்கிறது

செவ்வாய்: புரட்சி சுக்கிரன்: திருமணம் (புரட்சி திருமணங்கள் நடக்கலாம்)

செவ்வாய்: போலீஸ் ஸ்டேஷன் சுக்கிரன்: திருமணம் போலீஸ் ஸ்டேஷன்ல திருமணம் நடக்கலாம் ( இந்த சேர்க்கை ரெம்ப உக்கிரமா இருந்தா தான் அங்கனயே ரேப் எல்லாம் நடந்துர்ரது)

செவ்வாய்: பூமி காரகர் சுக்கிரன் : கிருக (வீடு) காரகர்

செவ்வாய்,சுக்கிரனுக்கு இடையில் தொடர்பு ஏற்பட்டால் ( சேர்ந்தால், அவர் வீட்டில் இவர் இவர் வீட்டில் அவர் இருந்தால்,பார்த்தால் - செவ்வாய்க்கு தான் உள்ள ராசிக்கு 4,7,8 ஆம் ராசியை பார்க்கிற நேச்சர் உண்டு. சுக்கிரன் பாவம் ஒரே பார்வை தான் 7 ஆம் ராசியை பார்ப்பாரு) என்ன நடக்கும்னு பார்ப்போம்.

பெரும் போராட்டத்துக்கு பின் தான் சுகம் கிடைக்கும். சுகங்களுக்கிடையில் யுத்தம் வரும். இவர் திருமணம் கூட அனைவரையும் எதிர்த்துக்கொண்டு செய்யும் காதல் திருமணமாகவோ அ உறவினரில் ஒரு க்ரூப்புக்கு பிடிக்காது செய்த திருமணமாகவோ இருக்கலாம்.

உங்கள் திருமணம் அ காதலுக்கு உங்கள் சகோதரர்கள் வகையில் பெரும் எதிர்ப்பு தோன்றலாம் ( செவ் : சகோதரகாரகன்)

திருமணத்தின் போதே அடிதடிகள் நடக்கலாம். பதற்றம் நிறைந்த சூழலில் முதலிரவு நடக்கலாம். உ.ம் பெருந்தலைவர்கள் சாவு,பந்த்,கர்ஃப்யூ

மனைவியே கூட சில சந்தர்ப்பங்களில் இவருக்கு எதிரியாக திரும்பலாம். அல்லது எதிரி குடும்பத்தில் பிறந்தவராக இருக்கலாம் .அ திருமணத்துக்கு கணவர் தரப்பு உறவினர்கள் அனைவரும் விரோதிகளாகிவிடலாம். இன உறுப்பில் காயம் ஏற்படலாம். உடலுறவின் போது ரத்த கசிவு ஏற்படலாம்.

படுக்கையறையில் விபத்து ஏற்படலாம். மின் கசிவு ஏற்படலாம். தீ விபத்து நடக்கலாம்.

ரத்தம் வரும் அளவுக்கு அடிப்பட்ட நிலையில் உடலுறவு நிகழலாம் (ரேப்). இன உறுப்பில் கட்டிகள் வரலாம் ( சூ....ட்டு கட்டிதான் தலை !) , லூப்ரிகேட் ஆறதுக்கு மிந்தி அவசர திணிப்பால எரிச்சல், காயம் ஏற்படலாம். தோல் சிவக்கலாம். தடிக்கலாம்.

இதுக்கெல்லாம் என்ன பரிகாரம், சுக்கிரனோட ராகு,கேதுக்கள் சேர்ந்திருந்தா என்னங்கற மேட்டர் எல்லாம் வழக்கம் போல அடுத்த பதிவுல.



ராசி சக்கரம் விவரணை:



லெஃப்ட் டாப்ல உள்ள ராசி மீனம் இதுக்கு அதிபதி குரு அடுத்த ராசி மேஷம் இதுக்கு அதிபதி செவ்வாய் அடுத்த ராசி ரிஷபம் இதுக்கு அதிபதி சுக்கிரன் அடுத்த ராசி மிதுனம் இதுக்கு அதிபதி புதன் அடுத்த ராசி கடகம் இதுக்கு அதிபதி சந்திரன் அடுத்த ராசி சிம்மம் இதுக்கு அதிபதி சூரியன் அடுத்த ராசி கன்னி இதுக்கு அதிபதி புதன் அடுத்த ராசி துலா இதுக்கு அதிபதி சுக்கிரன் அடுத்த ராசி விருச்சிகம் இதுக்கு அதிபதி செவ்வாய் அடுத்த ராசி தனுசு இதுக்கு அதிபதி குரு அடுத்த ராசி மகரம் இதுக்கு அதிபதி சனி அடுத்த ராசி கும்பம் இதுக்கும் அதிபதி சனிதான்.

1 comment: