கடந்த பதிவுல கிஷ்டரோட வி.ரூபத்தை பார்த்து அர்ச்சுனனோட பினாத்தலை சொல்லி முடிச்சிருந்தேன். ரிப்பீட்டு.........
அர்ச்சுனன் சொல்றதை பாருங்க //கதிரும் மதியும் கண்களாய் பெற்றாய்//
அட டுபாகூருங்களே ! ரீல் விடறதுதான் விடறிங்க நம்பறாப்ல விடலாம்லியா. உண்மையிலயே கிஷ்டர் வி.ரூபம் காட்டி அர்ச்சுனன் இப்படி உளறியிருந்தா ஒரிஜினல் கிஷ்டர் இன்னா சொல்லனு?
"இன்னாடா சொல்றெ கஸ்மாலம்.. விஸ்வமே நானா காட்சியளிக்கிற இந்த ரூபத்துல கேலக்சிலயே லோ ஓல்டேஜ் ப்ராப்ளத்துல டுபாகூரா கீர சூரியனும் சந்திரனுமாடா என் கண்ணுங்களா தெரியுதுன்னு திருத்தியிருக்கவேணாம்.
சரி தங்கச்சி சுபத்திராவ கட்டிக்கின பார்ட்டிங்கறதால "இன்னா மச்சான்.. நாளைக்கு நாலாங்கிளாஸ் படிக்கிற பையனுக்கு கூட மெய்யாலுமே இது கடவுள் சொன்னதுதானா இல்லே அய்யருங்க கோர்த்து வுட்டானுங்களானு டவுட் வராப்ல பேசிட்டயே. சூரியன் சந்திரனெல்லாம் பூமிக்கு கிட்ட இருக்கிறதால பெருசா தெரீதுபா. இதை யெல்லாம் தூக்கி சாப்பிடற நட்சத்திரமெல்லாம் இருக்கு. சிலதோட ஒளின்னா இன்னம் பூமிக்கு வந்து சேரவே இல்லை. தொலவா கீறதால சின்னதா தெம்புடுதே கண்டி அதுக்குத்தான் மச்சான் வெளிச்சம் சாஸ்தின்னு கரெக்ட் பண்ணியிருக்கவேணாம்.
அதனால தான் சொல்றேன். இப்போ செலாவணில கீற கீதைக்கு ஆசிரியன் கண்ணன் இல்லே.
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு இந்த ஒரு பாயிண்டை மட்டும் எடுத்து கிழிச்சேங்கண்ணா விஸ்வ ரூப தரிசனத்துலயே 116 ஓட்டையிருக்குங்கண்ணா.
இப்போ கிஷ்ணனோட ஸ்டேட்மென்டைபாருங்க.
//உடல் வேறு மனம் வேறு ஆத்மா வேறு //
இது ஏதோ இருட்டில விட்ட அம்பு மாதிரி குன்ஸாதான் தைக்குது விட்டுருவம் அடுத்த வரிய பாருங்க
//.சிலர் தியானம் செய்து செய்து பக்குவப்பட்ட மனதால் ஆத்மாவை நேரில் பார்க்கிறார்கள்.//
ஓஷோ சொல்வாரு. மனதுக்கு வியாதி வரும். இது மேற்கத்திய தத்துவம்
மனதே வியாதி - இது கிழக்கிந்திய தத்துவம். இந்த மயித்துல தியானம் செய்தா மனசு பக்குவப்படுதாம்.
மனசு பக்குவப்பட கவிதை07 படிச்சாலே போதும். அதுக்கு தியானம் தேவையில்லே.தியானத்தோட உண்மையான நோக்கம் மனசை இல்லாம ஆக்கிர்ரதுதான். மனசுன்னா என்ன? எண்ணங்கள். எண்ணங்களை நிறுத்தி- அதன் மூலம் மனச இல்லாம ஆக்கிர்ரதுதான் தியானம்.
எண்ணங்களை நிறுத்த என்ன வழி? எண்ணங்களை கவனிக்கனும். அப்படி கவனிச்சாலே எண்ணங்களின் எண்ணிக்கை, அவற்றின் பிறப்பிலான வேகம் குறைய ஆரம்பிச்சுரும். ஒரு எண்ணத்துக்கும் அடுத்த எண்ணத்துக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்க ஆரம்பிக்கும்.
அந்த இடைவெளிலதான் உறைக்கும். நான் உடலுமல்ல. மனமுமல்ல. (எண்ணங்களுமல்ல) இதுக்கெல்லாம் சம்பந்தமில்லாம நிக்கிற சாட்சின்னு (இலங்கை விவகாரத்துல ஐ. நா சபை மாதிரி)
இதையெல்லாம் நம்ம மகாசனங்க செக்ஸ் சாமியாருன்னு சொன்னாய்ங்களே அந்த ஓஷோ வாழைபபழத்தை உரிச்சு வச்ச கணக்கா சொல்லியிருக்காரு. ஆனால் இங்க பகவான் என்ன சொல்றாரு............
//தியானம் செய்து செய்து பக்குவப்பட்ட மனதால் ஆத்மாவை நேரில் பார்க்கிறார்கள்//
இதுலருந்தே தெரியலை.. இப்ப செலாவணில இருக்கிற கீதையோட ஆசிரியர் கண்ணன் இல்லே.யாரோ ஒரு அய்யரு.
உடுங்க ஜூட்
No comments:
Post a Comment