மனித வாழ்வை அதிகம் பாதிப்பது ஜோதிஷமா வாஸ்துவாங்கற மேட்டரை வச்சு ஒரு மெகா பட்டிமன்றமே நடத்தலாம். ஜோசியரை கேட்டா ஜோசியம்
ஜோசியம் ஜோசியம் னு கோர்ட் டவாலி மாதிரி சொல்வாரு. வாஸ்து பார்ட்டிய கேட்டா வாஸ்து வாஸ்து வாஸ்தும்பாரு.
இந்த உலகத்துல எல்லாமே கரெக்டு தான். காதல், கண்ணாலம், செக்ஸு, கட்சி, சங்கம்,வியாபாரம் ஏன் விபச்சாரம் கூட கரெக்டுதான் . மனுஷன் தான் தப்பு. காதல் தப்பு பண்றதில்லை. காதலர்கள் தான் தப்பு பண்றாய்ங்க
மனுஷனை கெடுக்கிறது அகங்காரம். வாஸ்துக்கராருக்கு கிரகம் எல்லாம் சின்னதா தெரியும் .. ஜோசியருக்கு திசைகள் எல்லாம் சின்னதா தெரியும்.அளவுக்கு மீறின ஸ்பெஷலைசேஷன் தீங்கை தான் தரும்.
நேரு காலத்துல அரசாங்கம் சலூன் கூட வச்சது. ( அரசாங்கம் நடத்தற ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தாங்கண்ணா). இன்னைக்கு நோட்டை அரசாங்கம் அடிக்கிறது வீண் வேலை அதை கூட க்ளோபல் டெண்டர் கூப்டு ப்ரைவேட்டுக்கு கொடுங்கனு கேட்பாய்ங்க போல.
வாஸ்து வாஸ்துன்னு அலட்டிக்கிறாய்ங்களே அவிகளுக்கு ஒரு கேள்வி. எம்.ஜி.ஆர் குடியிருந்த வீட்டுல இளைய தளபதி ( எந்த ராணுவத்துலிங்கண்ணா) குடி போனாருன்னா விஜய் எம்.ஜி ஆராயிர முடியுமா?
ஜாதகன் என்பவன் காஷ்மீர் ஆப்பிள் மாதிரி. வாஸ்துங்கறது அதை வைக்கிற இடம் மாதிரி. அழுகிப்போன ஆப்பிளை ஃப்ரிட்ஜ்ல வச்சா அது நல்ல ஆப்பிளா மாறிருமா?
கெரகம் கெரகம்னு அலட்டிக்கிறாய்ங்களே அவிகளுக்கு ஒரு கேள்வி:
ஜாதகத்துல இருதார யோகம் உள்ளவங்க எல்லாருக்குமே ரெண்டு பெண்டாட்டி அமைஞ்சுருக்கா?
அரசு வேலை கிடைக்கும்னு நீங்க எழுதி கொடுத்தவிக எல்லாருக்கும் அரசு வேலை கிடைச்சிருக்கா?
அஷ்டம சனில மாட்டினவன்லாம் செத்துப்போயிர்ரானா? ஒன்பதுல குரு உள்ளவன் எல்லாம் (டெட் லாக்ல இருந்து) ஓடிப்போயிர்ரானா?
இல்லை இல்லை.
ஜாதகம் நல்லாருக்குன்னா அந்த ஜாதகன் நல்ல காஷ்மீர் ஆப்பிள் மாதிரி. இல்லேங்கலை அதை கெய்சர் மேல வச்சா வெந்து போயிராம இருக்குமா? நோ !
அததுக்குள்ள இம்பார்டன்ஸ் அததுக்கு இருக்கு. கூட்டி கழிச்சு நெட் ரிசல்ட்டு கொடுங்கப்பு. வாஸ்துகாரவுக ஜோதிஷத்துல உள்ள பேசிக்கல் ப்ரின்ஸிப்பிள்சையாவது தெரிஞ்சிக்கிடனும். அதே மாதிரி சோசியருங்க வாஸ்துல ப்ரிலிமினரி நாலெட்ஜாவது பெறனும். ரெண்டையும் கூட்டிகழிச்சு பலன் ,பரிகாரம் சொல்லனும்.
மனித வாழ்க்கைங்கறது ஒரு நாடகம். என்ன எழுதினவர்தான் நாம பண்ற அலப்பறைக்கு அரண்டு போய் ஒளிஞ்சிக்கிட்டாரு. தூண்ல இருப்பாரு, துரும்புல இருப்பாருங்கறாய்ங்க. சிலர் கடவுள் ரஞ்சிதாம்மா கூட அப்பா அம்மா விளையாட்டு விளையாடினாரு வீடியோ கூட பார்த்தோமேங்கறாய்ங்க.
நாடகம்ங்கறது பவர் ஃபுல்லான கலைவடிவம்தான் இல்லேங்கலை. உலகம்ங்கற மேடைல நடக்கிற வாழ்க்கைங்கற நாடகத்தோட ஒப்பிட்டா மேடை நாடகம்லாம் ஜுஜுபி. நாடகத்தை இங்கிலீஷ்ல ட்ராமாங்கறாய்ங்க. எதிராளி உ.வ பட்டு எதாச்சும் பேசினா உடனே நாம "த.. சொம்மா நாடகம் போடாதே"ன்னிக்கிட்டிருந்த பார்ட்டிங்க. இப்போ நாடகம்லாம் வாயிதா போன கேசாயிட்டதால "ஃபிலிம் காட்டாதப்பா"ங்கறோம்.
எதுனா சொல்லிவச்ச மாதிரி நடந்தா எல்லாம் ஒரு நாடகம் போல இருந்துச்சுப்பாங்கறோம். செயற்கையா எதுனா சம்பவம் நடந்தா நம்பவே முடியலை இட் வாஸ் ட்ரமட்டிக்.
நாடகத்தை நக்கலடிக்கிறதெல்லாம் சரி. நிறைய பேரோட வாழ்க்கையே நாடகமா தான் இருக்கு.செக்கு மாடு மாதிரி.. ஒரே வட்டத்துல சுழன்றுகிட்டு, சதா பழசை அசை போட்டுக்கிட்டு ..
நம்ம தாத்தாக்கள் ,அப்பாக்கள் செய்துக்கிட்டு இருந்ததைத்தான் நாமும் செய்யறோம். இன்னைக்கு நாம என்ன செய்துக்கிட்டு இருக்கோமோ இதையேதான் நம்ம பசங்களும் செய்யப்போறாய்ங்க (இன்னம் மோசமா).
என்ன ..மேடை கொஞ்சம் போல மாறியிருக்கு, காஸ்ட்யூம்ஸ் மாறியிருக்கு. செட் ப்ராப்பர்ட்டீஸ் மாறியிருக்கு. பாத்திரங்கள் குறைஞ்சிருக்கு (தனிக்குடித்தனத்தை சொல்றேன்)
வாழ்க்கை நாடகத்துல நீங்க வசிக்கிற வீடுதான் மேடை. நீங்க என்னா மாதிரி சூப்பர் ஆக்டரா இருந்தாலும் மேடை சரியில்லைன்னா நாடகம் நாஸ்தியாயிருங்கண்ணா.
நாடக பாத்திரத்தை பத்தி சொல்லும்போது என்னமா மோல்ட் பண்ணியிருக்காம்பானு சிலாகிப்பாய்ங்க. இங்கன மன்சாளும் அப்படித்தான் மோல்ட் ஆயிட்டிருக்காய்ங்க. ரெம்பவே ரிஜிட். அவனவன் உலகத்துல அவனவன் கிடக்கான். கிரகங்கள் காலடில பந்தா உதை படறான். ஒரே ஒரு ஏசு தான் நான் தேவகுமாரன். என் டாடி பரலோகத்துல இருக்காருனு சொல்ல முடிஞ்சது.
நாம வாஸ்து, கெரகம்னு அலை பாய்ஞ்சுக்கிட்டிருக்கோம். இப்ப உங்க பாக்கெட்ல ஒரு கோக் மூடியிருக்குனு வைங்க. ஆகாயத்துல ஒரு சூப்பர் மோஸ்ட் பவர் உள்ள காந்தத்தால் ஆன ஜம்போஜெட் விமானம் தாழ்வா பறந்தா என்ன ஆகும்/ ரோசிங்க.
அந்த மாதிரி நம்ம பாடிலயும், மைண்ட்லயும் ஏதோ இருக்கு. அதை வச்சுத்தான் கிரகங்கள் எல்லாம் நம்மை வதைக்குது. அதை வச்சுத்தான் திசைகள் வாட்டுது.
வெந்ததை தின்னு விதி வந்தால் சாகிற பார்ட்டி இன்னா மாதிரி யோக ஜாதகத்துல பிறந்து , இன்னா மாரி வாஸ்து உள்ள வீட்ல 100 வருஷம் வாழ்ந்தாலும் கிரிமினல் வேஸ்டு தலை.
இந்த படைப்பு சொல்லாம சொல்லுது .. " வி ஆர் ஆல் கனெக்டட்" நாம எல்லாருமே இணைக்கப்பட்டிருக்கோம். " ஊஹூம்.. நான் தனியாக்கும்" னா நாறிப்போயிருவம். கெரகம் வாஸ்து எல்லாமே நாலு காலை தூக்கிரும்.
இதுக்கெல்லாம் பின்னாடி பெரிய பெரிய மேட்டர் எல்லாம் ஒளிஞ்சிருக்கு. ஜோதிஷம்,வாஸ்து எல்லாம் பிட்டு. கலைஞரு குடும்ப பைத்தியத்தை விட்டொழிச்சா சரித்திர புருசனாயிருவாருன்னு டாஸ்மாக் கடைல கூட பேசிக்கிறாய்ங்க. இந்த பாயிண்ட் ஏன் அவருக்கு ஸ் ட்ரைக் ஆறதில்லை.
ஜெயாம்மா சசியை கழட்டிவிட்டா நெஜமாலுமே சிங்கம்தானு சால்னா விக்கிற ஆயா கூட சொல்லுது . இந்த பாயிண்ட் ஏன் அம்மாவுக்கு ஸ் ட்ரைக் ஆறதில்லை.
இவிக மூளைல பல ஸ்டேஷனுக ஒட்டடை படிஞ்சு கிடக்கு. அதான் மேட்டர். இவிக பக்காவா மோல்ட் ஆயிட்டாய்ங்க. எத்தனை கெரகம் வந்தாலும் இதையெல்லாம் மாத்தவே முடியாது. எத்தனை வாஸ்துபரிகாரம் பண்ணாலும் மாத்தவே முடியாது.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமாங்கறதெல்லாம் கையாலாகதவுக மொழி. உங்க கேரக்டரை ப்ளாஸ்டிக் சர்ஜரினு நினைச்சா அது ப்ளாஸ்டிக் சர்ஜரிதான். மேக்கப்புனு நினைச்சா அது மேக்கப்புதான். தூசுனு நினைச்சா தூசுதான். தம் பிடிச்சு "உஃபுனு" ஊதினா மேட்டர் ஓவர். அப்படி ஊத தேவை ஜஸ்ட் வில் பவர் தான்.
நாம ஏதோ கடகலக்னத்துல பிறந்ததாலயும், லக்னாதிபதி ரெண்டேகால் நாளைக்கொருதரம் ராசி மாறிர்ரதாலயும், அதுக்கேத்தாப்ல நம்ம சிந்தனை, சித்தாந்தம்லாம் மாறிர்ரதாலயும் நம்ம பாத்திரம் மோல்ட் ஆகாத அரைவேக்காடாவே இருக்கு. இதனால லாபம் என்னடான்னா நம்ம வாழ்க்கைல உள்ள நாடகத்தனத்தை நாமே பார்த்து சிரிக்க கத்துக்கிட்டம். அதனால நம்ம லைஃப்ல நாடகத்தனம் குறைவுன்னு தான் சொல்லனும்.
நாடகங்கள் ப்ரிட்டீஷ் காரனை விரட்டுச்சு. தமிழகத்துல காங்கிரஸ் ஆட்சிய விரட்டுச்சுங்கறாய்ங்க. நிறைய நாடகங்கள் பார்வையாளர்களை விரட்டியிருக்கும். சில சந்தர்ப்பங்கள்ள மக்கள் நாடக குழுவை விரட்டியிருப்பாய்ங்க.
ஒவ்வொரு வீடும் ஒரு நாடக மேடைதான்.ஒவ்வொரு மனிதனும் ஒரு கேரக்டர்தான். ( மறைந்த எழுத்தாளர் சாவி "கேரக்டர்ங்கற தலைப்புல தொடரே எழுதியிருக்காருங்கண்ணா.வீடுகளுக்கான வாஸ்து மேல எனக்கு ஆர்வம் வந்ததுக்கு காரணம் அந்த வீடுகள்ள மனிதர்கள் வாழறதுதான்.
மனிதர்களோட பெட்டர்மென்டுக்கு ஜோதிஷம் வாஸ்து மட்டுமே இல்லை மாந்திரீகத்துல இறங்கவும் நாம தயாருங்கண்ணா.
பி.கு:
வாஸ்து மேட்டர்ல தப்பான திசைகள்ள கிணறு, பள்ளம் இருந்து கெட்டு நொந்து போன குடும்பங்களோட கதைய அடுத்த பதிவுல நிச்சயம் பார்த்துரலாங்கண்ணா. பலான மேட்டர் கரெக்டா நடக்க தேவையான வாஸ்து அமைப்ப பத்தியும் அடுத்த பதிவுலயே பார்த்துரலாம். ஓகே உடுங்க ஜூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊட்
No comments:
Post a Comment