அண்ணே வணக்கம்ணே,
பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் தொடர்ல புது அத்யாயம் ஒன்னையும் போட்டிருக்கேண்ணே படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க. ( தனிக்காட்டு ராசா.. கிருமி அய்யா காமெடிக்கு சொன்னதுக்கே ட்ராஜடி ஆயிட்டா எப்படி ராசா கமெண்ட் ஃபார்ம் இருக்கிறதே உங்களுக்காகத்தானே)
எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானம்ங்கற மாதிரி ஆண்,பெண் உறவுல உடலுறவு பிரதானம். ஏதோ நம்ம தாய்குலங்களோட கருணையால காலம் ஓடிக்கிட்டிருக்கே தவிர இல்லேன்னா தினத்தந்தில புதுமணப்பெண் கள்ளக்காலனுடன் ஓட்டம்னு நீட்டி முழக்கி செய்தி போட முடியாது. இன்று ஓடிப்போனவர்கள்னு பட்டியல்தான் போட முடியும்.
இந்த மேட்டர்லயும் வாஸ்து பக்காவா வேலை செய்யுதுங்கண்ணா.
வடக்கும், கிழக்கும் ஆண்களை காட்டுமிடம் இந்த இடங்களிலான கூரையாகட்டும், தரையாகட்டும் தெற்கு,மேற்கை விட தாழ்ந்திருக்கனும். பேசேஜ் இருக்கலாம். வீட்ல உபயோக்கிக்கிற தண்ணி போற பைப் லைன், ட்ரெயினேஜ் இருக்கலாம். கட்டிடமோ, திண்ணை எட்செட்ராவோ இருக்ககூடாது. இருந்தா அந்த வீட்ல மதுரைதான். புருசங்காரன் பொஞ்சாதிக்கு காஃபி ஃப்ளாஸ்க் சுமக்க வேண்டியதுதான்.
இந்த மேட்டர்ல அடுத்து ரெம்ப முக்கியமான சில மேட்டர் எல்லாம் இருக்கு. ஈசானத்துல கழிவறை கூடாது. (கள்ளக்காதல் வரும் ) நைருதில டோர் கூடாது. (புருசன் டம்மி பீசாயிருவான். பொஞ்சாதி தினத்தந்தில செய்தியா வந்துருவாள்) பள்ளம் கூடாது. (புருசங்காரன் ஃபைனான்ஷியலா ஷெட் ஆயிருவான். தலைச்சன் குழந்தை காலி) தரை அமைப்பும் கூரை அமைப்பும் மத்த எல்லா திசைகளைவிட உசரமா இருக்கனும்.
வாயு மூலைல மனை (மிளகாய் விரையை விட அதிகமா) குறைய கூடாது. அந்த திசைல தெரு குத்து வரக்கூடாது. பள்ளம் ,கிணறு கூடாது. இருந்தா தொழிலே ஆரம்பிச்சுருவாய்ங்க.
(இந்த மாதிரி பலான மேட்டர்லாம் நிறைய இருக்கு நாளைக்கு பிரிச்சு மேஞ்சுருவமில்லை)
சரிங்கண்ணா இந்த மேட்டர்ல டீப்பா போறதுக்கு முந்தி கடந்த பதிவுல விட்ட தப்பான திசைகள்ள கிணறுகள் மேட்டரை முடிச்சு சூ காட்டிருவமா. அடுத்த பதிவுலருந்து கில்மா தான் ஜுஜுலிப்பா தான் ஓகே உடு ஜூட்
தப்பான திசைகள்ள கிணறு /செப்டிக் டாங்க்/பள்ளம் /சம்ப்பு இத்யாதி உள்ள வீடுகள் அவ்வீட்டு மனிதர்களின் வாழ்க்கைய பத்தி பேசிக்கிட்டிருந்தோம் ( படிச்சிக்கிட்டிருந்திங்க - நான் அடிச்சிக்கிட்டிருந்தேன்- டைப்பை சொன்னேங்கண்ணா)
கடந்த பதிவுல ஆக்னேயத்துல செப்டிக் டாங்க் மேட்டரை பார்த்தோம். நைருதில விவசாய கிணறு பத்தி ஏற்கெனவே சொல்லியிருக்கேன். அப்பன் ஃபைனான்ஷியலி ஷெட்,அம்மா மென்ட்டல், பெரிய பையன் டிக்கெட், சின்ன பையன் ஓடிப்போய் திரும்பி வந்தான் எட்செட்ரா.
வேணம்னா லேட்டஸ்டா ஒன்னு சொல்றேன். மனைக்கு வடக்கு கிழக்கு திசைகள்ள தெரு இருந்தா தூளு ,சூப்பருனு சொல்லியிருக்கேன். அந்த மாதிரி ஒரு மனை ஹார்ட் ஆஃப் தி டவுன். பஸ் ஸ்டாண்டுக்கு சமீபம். அது சேல்ஸுக்கு வந்திருக்கிறதாவும் தான் வாங்கப்போறதாவும் நண்பர் ஒருத்தர் சொன்னார். வாஸ்து பார்க்கனு கூட்டிப்போனார்.
நம்மது கடகலக்னம்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேனே.வாஸ்து பார்க்க போனச்ச லக்னாதிபதி சந்திரன் எங்கன இருந்தாரோ சூப்பருனு சொல்ட்டு வந்துட்டன். நிறைய ஜோசியருங்க எப்படின்னா பணம் பைக்கு வந்ததுமே பார்த்த ஜாதகத்தை மைண்ட்ல இருந்து தூக்கிருவாய்ங்க. நமக்கு தூக்கம் வராது.
ஒரே ஒரு அஞ்சு ரூபாய்க்காக காலை பத்துலருந்து மாலை (?) 4 வரை அலைஞ்சிருக்கேன். அப்படியா கொத்தது அம்பதும் , நூறும், (இப்போ இரு நூற்று அம்பது) தந்தவுகளுக்கு அதுக்குரிய உழைப்பை ஸ்டஃப்ஃபை கொடுத்தமா இல்லியானு பாதி ராத்திரி எந்திரிச்சு ரோசிக்கிறதெல்லாம் உண்டுங்க.
பார்த்துட்டு வந்த சைட்டை பத்தியே ரோசிச்சிக்கிட்டிருந்தேன் தாளி தூள் சைட்டுல்லயா . அந்த மாதிரி நார்த் ஈஸ்ட் ப்ளாக் கிடைக்கிறதே கஷ்டமில்லையா . அதப்போய் ஏன் விக்கிறாய்ங்கனு யோசனையா போச்சு. மறு நாள் போனேன்.
நிதானமா பார்க்க ஆரம்பிச்சேன்.மாடிப்படி கூட நைருதில தான் வச்சிருக்கான். மனை வளரலை . குறையலை. நார்த் ,ஈஸ்ட்ல போற ரோட்டுக்கு தெற்குல இருக்கிற ஒட்டன் சந்து (சுஜாதா ஒக்காபிலரி) கணக்கே கிடையாது. என்ன ஃபால்ட்டு என்ன ஃபால்ட்டுனு ரோசிச்சிக்கிட்டே கிரவுண்டை ஒரு உதை உதைச்சேன். "டொம்" னு சத்தம். மறுபடி உதைச்சேன் "டொம்". அப்பாறம் பார்த்தா நைருதில கிணறு.
ஒடனே நண்பருக்கு இன்ஃபார்ம் பண்ணி மொத வேலையா இதை பெயர்த்து பார்த்து சப்ஜாடா தூர்த்த பிறவு மத்த வேலை பார்க்கற மாதிரியிருந்தா வாங்கிக்கங்கனு சொன்னேன். பை தி க்ரேஸ் ஆஃப் காட் இன்னைக்கு அந்த நார்த் ஈஸ்ட் ப்ளாக் லட்சுமி கடாட்சமா இருக்கு.
மேற்கு திசைல கிணறுக்கு எங்க வீடே உதாரணம். ( அம்மாவுக்கு யூட்ரஸ் கான்சர்)
சரி இப்படியே வடக்கு,கிழக்கு, வடகிழக்கு தவிர மத்த 6 திசைக்கும் 6 வீட்டுக்கதை சொல்லப்போறிங்களா ஆள விடுங்க சாமினு கிளம்பிராதிங்க. இன்னம் ஒரே ஒரு கதைதான். அதுவும் சரியான திசைல இருந்த கிணறு சனங்க பண்ண தப்பால அந்த குடும்பத்தையே நாசம் பண்ணதை மட்டும் சொல்லிர்ரன்.
விளை நிலத்துல கட்டப்பட்ட வீடு. ஜஸ்ட் இமேஜின் பண்ணுங்க சுத்தி நிலம். மத்தில வீடு . வீட்டுக்கு ஈசானியத்துல கிணறு அதுவும் சேந்து கிணறில்லை. விவசாய கிணறு. நல்லாதான் போய்க்கிட்டிருந்தது. சின்னவர் தலையெடுத்தாரு. கவுன்சிலரானாரு அம்புட்டுதேங் .ஏதோ கட்சில இளைஞரணி தலைவரானாரு. எவனோ அதி மேதாவி வீட்டுக்கு காம்பவுண்டு போடச்சொல்லி ஐடியா கொடுத்தான். ரெண்டே வருஷம் ஆளே போய் சேர்ந்துட்டாரு. எப்டி? எப்டி?எப்டி?னு கேட்கறிங்க சொல்றேன்.
கிணறோட பரப்பளவு வீட்டோட பரப்பளவுல பத்துல ஒரு பாகம் தான் இருக்கனும்னு சொல்லியிருக்கன். வீடா சின்னது. கிணறா பெருசு. ஆனாலும் காம்பவுண்ட் இல்லாததால டோட்டல் லேண்டுக்கு ஒர்க் அவுட் ஆகிட்டிருந்தது. மொத்த நிலத்தோட பரப்பளவோட ஒப்பிட்டா நூத்துல ஒரு பாகம் கூட இல்லாம இருந்தது. எதோ ஒரு அரை குறை சொன்ன ஐடியாவை அப்ளை பண்ணி காம்பவுண்ட் போட்டதுல அந்த கிணறு வீட்டுக்கு மட்டும் ஒர்க் அவுட் ஆச்சு. வீட்டோட பரப்பளவுல ஏறக்குறைய ரெண்டரை பங்கு இருந்தது .குடும்ப தலைவன் இல்லாத வீடு. அம்மா விதவை. அண்ணன் செமை லாலா பார்ட்டி இருந்து இல்லாத மாதிரிதான்.அதுக்கடுத்தவர் தான் சின்னவரு. வீட்டுல முக்கியஸ்தரு . காலியாயிட்டாரு.
சரிங்கண்ணா வாஸ்து குறித்த ரகசியங்கள்ள கிணறு எபிசோட் ஓவர். வெறுமனே மேடு பள்ளங்களை பேசிக்கிட்டிருந்தா தம்பி மாருங்க (தம்பிகளுக்கு ஏது மாரு?) கோவிச்சுக்க போறாய்ங்க.
உங்களுக்கு அடுத்த பதிவுல இருக்கு தம்பி தலை தீபாவளி
சாமி வணக்கம். என்னைய உங்க ப்ளாக் லேருந்து கழட்டி விட்ராதீங்க. fallow பண்ணா போதுமா. இல்ல வேற ஏதாவது பண்ணனுமா. கூடிய சீக்கிரம் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அந்த பாக்யம் கிடைக்குமா தெரியவில்லை. முடியவில்லை என்றால் post paid மூலமாக.
ReplyDelete//( தனிக்காட்டு ராசா.. கிருமி அய்யா காமெடிக்கு சொன்னதுக்கே ட்ராஜடி ஆயிட்டா எப்படி ராசா கமெண்ட் ஃபார்ம் இருக்கிறதே உங்களுக்காகத்தானே)
ReplyDelete//
தல.
நாங்க எல்லாம் மோசமானவங்களிலேயே முக்கியமானவங்க..............
நாங்களாவது ட்ராஜடி ஆவராதாவது.......
உங்களுக்கு பிஞ்சு மனசு தல .....