பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் என்ற தொடரை யார் படிக்கிறாய்ங்க, அவிக என்ன நினைக்கிறாய்ங்கன்னு ஒன்னும் தெரியாத நிலைல இதை தொடர்ந்து எழுதிக்கிட்டிருக்கேன். பல தடவை சொல்லியிருக்கேன். என்னுது கடகலக்னம் ரெண்டே கால் நாளைக்கு மிஞ்சி ஒரே வேலைய தொடர்ந்து செய்ய முடியாதுன்னு. இருந்தாலும் இதை தொடர உங்கள்ள யாரோ ஒருத்தரோட வில் பவர் தான் காரணமா இருக்கும். அந்த யாரோ நீங்களா கூட இருக்கலாம்.
1997 ல டச் ஆன பாபா 1999ல ஷீர்டி வரவச்சதையும் பிரதி வியாழன் பிரச்சினைகளால பாதிக்கப்பட்ட தன் பக்தர்களை எனக்கு எண்டார்ஸ் பண்ணிக்கிட்டிருந்தாருங்கற விசயத்தையும் கடந்த பதிவுகள்ள சொல்லியிருக்கன். இந்த லிஸ்ட்ல எங்க தொகுதி எம்.எல்.ஏ வையும் எண்டார்ஸ் பண்ணாருன்னும் சொல்லியிருந்தன்.
படக்குனு 2004க்கு தாவி 2004 முதல் 6 வருஷத்துல நடந்த சம்பவங்களை விவரிக்கிறேன்னு கடந்த பதிவை முடிச்சிருந்தேன். ஆனா இன்னைக்கு நடந்த மேட்டரால 1998ல நடந்த ஒரு சம்பவமும்,1999ல நடந்த இன்னொரு சம்பவமும் ஞா வந்தது. அந்த 2 சம்பவங்களை இப்ப பார்ப்போம்.
முதல்ல இன்னைக்கு நடந்த சம்பவம்:
உஞ்ச விருத்தி பிராமணன் போல பவித்திரமா வாழ்ந்த காலம் ஒன்றுண்டுன்னு பெருமையா சொன்னாலும் அது அந்த காலம்னு தான் சொல்ல முடியுது. இப்ப நானேதும் சந்தனக்கட்டை ஓட்டறதில்ல, நில ஆக்கிரமிப்பு பண்றதில்லன்னாலும் யோக சித்திக்கு தேவையான முக்கிய அம்சமான பிரத்யாஹாரத்தை ( பிறர் தரும் பொருளை ஏற்பது) பின்பற்ற முடியாத நிலை. அதனால எனக்குள்ள கொழுந்து விட்டு எரிஞ்சிட்டிருந்த அக்னி சிம்னிக்குள்ள விளக்கு மாதிரி ஆயிருச்சு.
எனக்குள்ள கனன்றுக்கிட்டிருந்த சத்தியாக்ரஹம் (ஆக்கிரஹம்னா கோவம்னு அர்த்தம்) இன்னைக்கு கேவலம் குண்டூசி/சின்ன குத்தூசி கணக்கா கட்டுரை எழுதற ரேஞ்சுக்கு வந்துருச்சு. ஒரு வார்த்தைல சொல்லனும்னா நீர்த்து போயிட்டன். லைஃபோட காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டேனு தான் சொல்லனும். அதே நேரத்துல இந்த காம்ப்ரமைஸ் நிரந்தரம் கிடையாது.
எனக்குள்ள ஒரு நம்பிக்கை இருக்கு ஒரு நாளில்லை ஒரு நாள் விடியும். இந்த ப்ருஹன்னளை வேடம் முடியும். எதிர்காலத்துல இன்றைய லஞ்ச லாவணியங்கள், ஜன நாயகப்படுகொலைகளுக்கு எதிரா நடக்கப்போற தர்ம யுத்தத்துல அபிமன்யு போல பத்மவ்யூகத்துல சிக்கி சாவேனோ, அர்ச்சுனன் மாதிரி ஜெயிச்சு வருவேனோ தெரியாது. ஆனால் யுத்தம் நிச்சயம். அதுல எனக்கொரு பங்கு நிச்சயம்.
என்னங்கண்ணா மொக்கை அதிகமாயிருச்சா மேட்டருக்கு வந்துர்ரன்.
ஸ்ரீ சாயி சத நாமாவளி ஒரு லட்சம் பிரதி போடறதா அறிவிச்சாச்சே தவிர வேலைகள் என்னமோ அரசு அலுவலகம் கணக்கா தான் நகருது. ஒரு டெம்போ வரணும், வேகம் வரணும்னா பாபா தொடர்பான பாடல்களை கேட்கனும்னு ஒரு துடிப்பு. ( தளர்ந்து போன காலத்துல வாயாக்ரா மாதிரி).
சங்கராபரணம் படத்துல ஓங்கார நாதானுசந்தான மவுகானமேன்னு பாட்டு வரும்.
அதுல ஒரு வரி "அத்வைத சித்திக்கி அமரத்வ லப்திக்கி கானமே சோபானமு"
ஓங்கார நாதானுசந்தான மவுகானமேங்கற வரியை பார்த்து இது ஏதோ சந்தானம் சம்பந்தப்பட்டதுன்னு நினைச்சுராதிங்க தம்பி.. ஓங்கார நாதத்துடன் இணைக்க கூடியது கானம் ஒன்றேன்னு இதுக்கு அர்த்தம். (அனு சந்தானம்னா இணைத்தல்னு அர்த்தம் சொல்லலாம்)
"அத்வைத சித்திக்கி அமரத்வ லப்திக்கி கானமே சோபானமு" ங்கற வரியை பாருங்க. அத்வைதம்னா அல்ஜீப்ரானு நினைச்சு பயந்துக்காதிங்க. த்வைதம்னா ரெண்டுனு அர்த்தம். அத்வைதம்னா ரெண்டல்லாத நிலைனு அர்த்தம். த்வைதம்னா கடவுள்+பக்தன்னு ரெண்டு கிராக்கியிருப்பாய்ங்க. அத்வைதத்துல பக்தன் கடவுளோட போய் ஜிங்குனு ஒட்டிக்கிட்டு ஏகமாயிருவான். அதான் அத்வைதம். ஓகே.
இந்த அத்வைத ஸ்டேஜுக்கும், அமரத்வ லப்திக்கும் ( கடவுளா மார்ரது) கானம் தான் வழிங்கறார் கவிஞர்.(வேற யாரு வேட்டூரி சுந்தர ராமமூர்த்திதான்)
இந்த காரணங்களால ஷீர்டி சாயி மஹத்யம்ங்கற படத்தோட பாடல்களை இன்டர் நெட்ல் டவுன் லோட் பண்ணி கேட்கலாம். அப்படியாச்சும் சார்ஜ் ஏறுதா பார்க்கலாம்னு ஒரு எண்ணம் வந்தது.
ஆன்மீகத்துல ஒரு விதியிருக்கு. உங்க ஆன்மீக கிராஃப் சன் க்ரூப்ஸ் ஷேர் விலை மாதிரி எப்பவும் ஏறிக்கிட்டே போகாது. கொஞ்ச நாள் ஏறும் படக்குனு விழுந்துரும். விழுந்த ஒவ்வொரு தரமும் ரெண்டு மடங்கு ஏறும். ( நன்றி: ஓஷோ)
இதை ஆன்மீக மெனோஃபஸ்னு கூட சொல்லலாம்.
ஏறக்குறைய ஒரு வாரமா அப்ப்பப்போ ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தேன். வேலைக்காகலே.இன்னைக்கு ஒரே பிடியா ஒரு மணி நேரம் உட்கார்ந்தும் மண்டை காஞ்சதுதான் மிச்சம்.
நெட்ல எல்லாம் கிடைக்கும்ங்கறது மிகை. கடைசில கடுப்பா போய் ஃப்ரெண்டோட சி.டி சென்டர்ல நோண்டி நுங்கெடுத்து சி.டியை பிக் அப் பண்ணிக்கிட்டு வீட்டுக்கு வந்தேன்.
அதுக்கு முன்னாடி ஒரு உபகதை.ராம ராவண யுத்தம் முடிஞ்சுருச்சு. ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடக்குது. ராமர் அனுமாரை கூப்டு ஒரு ரத்தினமாலையை ப்ரசண்ட் பண்றாரு. உடனே அனுமாரு அதை பிச்சி ஒவ்வொரு மணியா கடிச்சு பார்க்க ஆரம்பிச்சாரு. சீதைக்கு கோவம் வந்துருச்சு . குரங்குனு காட்டிட்ட பார்த்தியானு நினைச்சோ என்னமோ " வாட் ஈஸ் திஸ்?"னிட்டு சீறினாய்ங்க.
ஆஞ்சனேயர் இந்த மணிகள்ள என் ராமனோட அதிர்வுகள்,ருசி இருக்கானு பார்க்கிறேன். அப்படி இருந்தாதான் இதை அணிவேன்னாராம். சீதைக்கு கடுப்பாகி ஆமா பொல்லாத அதிர்வு உன் நெஞ்சத்துல அது இருக்கோ இல்லையோ செக் பண்ணிக்கலயானு கேட்டாங்க. உடனே அனுமாரு ஒரு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணி தன் இதயத்துல ராமன் சீதா,லட்சுமணர்கள் இருக்கிறதை காட்டினாராம்.
நாம ஆஞ்சனேயர் ரேஞ்சுல்லயா?
கடந்த காலத்துல அம்மவாரி சத நாமாவளின்னு ஒரு பாக்கெட் புக் போட்டிருக்கேன். சரி மேட்சிங்கா இருக்கட்டும்னு ஸ்ரீ சாய் சத நாமாவளினு அறிவிச்சாச்சு. அப்புறம் பார்த்தா ஸ்ரீ சாயி நாமாவளின்னு ஒரு ஐட்டம் செலாவணில இருக்கு. அதுல மொத்தம் 108 உருப்படி இருக்கு.
ஆன்மீகத்துல நாமம் - நாமி ( பெயர் - பெயருக்குடையவர்) ரெண்டுக்கும் வித்யாசம் கிடையாது. ரெண்டுமே சமம். அதாவது ராமனால் முடியற வேலை எல்லாமே ராம நாமத்தாலயும் முடியும். (ஒரு சந்தர்ப்பத்துல ராமனையே ஜெயிச்சதாவும் சொல்றாய்ங்க)
நாம ஜபத்துக்கு நான் விரோதி இல்லை. ஆனால் நாமங்களை அவற்றிற்குரிய அர்த்தங்களோடு , தாத்பரியங்களோடு, ரெஃபரென்ஸ் டு தி கான்டெக்ஸ்டோடு சொல்ல வேண்டும் என்பது என் கருத்து, அனுபவம்.
(சில சந்தர்ப்பங்கள்ள அர்த்தம் தெரியாம சொல்லிக்கிட்டிருந்த நாமங்கள் கூட பலன் தர்ரதுண்டு. உதாரணமா ஆஞ்சனெயருக்கு லட்சுமி ப்ரதாயானு ஒரு பேர் உண்டு. ( செல்வத்தை வழங்குபவனேனு அர்த்தம் அதை படிக்கிறப்பல்லாம் லட்சுமிக்கும் அனுமாருக்கும் என்னப்பா சம்பந்தம்னு நினைச்சிட்டே படிக்கிறது வழக்கம். சோத்துக்கு லாட்டரி அடிச்சிட்டிருந்த எனக்கு ஓரளவு மினிமம் கியாரண்டி கிடைச்சு இன்னைக்கு தினசரி யோசனை பண்ணாம அம்பது அறுபது ரூபா என் திருப்திக்காக செலவழிக்கிறதுக்கு திருமகள் அருள் புரிய காரணம் ஆஞ்சனேயர் தான்னு சில வருஷங்களுக்கு முன்னாடிதான் ஸ்ட்ரைக் ஆச்சு. சீதை செல்வத்துக்கு அதி தேவதையான லட்சுமியோட அம்சம். ராமர் சீதைய தொலைச்சுட்டு அவதிப்பட்டப்போ சீதைய மறுபடி அடைய ஆஞ்சனேயர் தானே உதவினார். ஆக அனுமார் செல்வத்தை வழங்குபவர்னுதானே அர்த்தமாகுது . அனுபவமாகுது)
ஈதிப்படி இருக்க சாயி சத நாமாவளில சிலது ரெம்ப சாதாரணமா இருந்தது. அதையெல்லாம் அவாய்ட் பண்ணிட்டன் ..ஆக சாயி நாமாவளிய எடிட் பண்ணிட்டன். இன்னைக்கு 2,000 காப்பி வெளிய போயிருக்கு .ஒரே ஒரு பார்ட்டி மட்டும் ஃபோன் பண்ணி கம்ப்ளெயிண்ட் பண்ணாப்ல.
என்னைக்கேட்டா எந்த ஒரு நூதன அனுபவமும் போக போக இயந்திரத்தனமா ஆயிரும். உங்க காதலி முதல் முதலா உங்க காதலிய அங்கீகரிச்சப்ப உங்களுக்கு ஏற்பட்ட புல்லரிப்பு, புள்ங்காகிதம், மயிர் கூச்செறிதலையெல்லாம் இப்ப உங்களால ஞா படுத்திக்க கூட முடியாது.
இந்த நாமாவளிகளும் அப்படித்தான். நாமாவளிகளை இயந்திரத்தனமா சொல்லிக்கிட்டிருக்கிறதால ஒரு புண்ணியமும் கிடையாது. ஏற்கெனவே சொன்னபடி அந்த நாமங்களை, அவற்றின் பொருளை, உட் பொருளை, தாத்பர்யத்தை அறிந்து சொல்லனும். வெறுமனே சொல்லிட்டு மறந்துர்ரதுல்ல. அவற்றை அடிக்கடி சிந்திக்கனும்.
கம்ப்ளெயிண்ட் பண்ண பார்ட்டி நாமாவளிய பல வருஷமா சொல்லியிருக்கலாம் . ஆன்மீகம் தொடர்பான அவரோட நுன்னிய அதிர்வுகள், உணர்வுகள் மங்கியும் போயிருக்கலாம்ஆனால் நம்ம பாக்கெட் புக் அவரோட சிந்தனைகளை நடராஜ் பென்சில் ரேஞ்சுல சீவி விட்டிருக்கும்.
இத்தனாம்பெரிய வியாக்யாணத்தை கொடுத்தது எதுக்குன்னா இன்னைக்கு நான் வாங்கின சி.டில மேற்படி ஸ்ரீ சாயி நாமாவளியோட ஒலி வடிவமும் இருக்கு. ஒவ்வொரு ஆயிரம் பிரதிக்கு புது மாஸ்டர் தான் எடுக்கறோம். நீங்க சொல்லுங்கண்ணா 108 ஆ போட்டுரலாமா? சதமே தொடரட்டுமா?
இந்த மேட்டர்ல பாபா என்ன சொல்றாரு? ஒலிவடிவத்தை கொடுத்து " அட பன்னாடை! என் நாமாவளியென்ன ஆரம்ப எழுத்தாளர் எழுதின நாவலா எடிட் பண்ணி ஒரு பக்க கதையா போட.. மரியாதையா அடுத்த ஆயிரத்துல திருத்தி போடு"ங்கறாரா?
அல்லது
நீ என்னமோ பெரிய்ய ரேஷனலிஸ்ட் மாதிரி உன் வில் பவரை நம்பி நாமாவளிய எடிட் பண்ணி போட்டே. வேலையா ஆமையா நகருது. இப்போ ஒரிஜினலோட ஒலிவடிவம் உன் முன்னாடி இருக்கு. இப்ப நீ யாருன்னு நான் தெரிஞ்சிக்க போறேன். திருத்தி போட்டா என்னை கன்சர்வேட்டிவ்னு நினைக்கிற உன்னை கன்சர்வேட்டிவ் லிஸ்ட்ல சேர்ப்பேன். திருத்தாம விட்டா என்னை ரேஷ்னலிஸ்டுனு நினைக்கிற ரேஷ்னலிஸ்ட் லிஸ்ட்ல சேர்ப்பேங்கறாரா?
அப்படி வரச்சத்தான் மேற்படி 2 சம்பவங்கள் ஞா வந்தது . அதை இப்போ பார்ப்போம்.
சாரிங்கண்ணா இந்த பதிவுல சொல்றதா சொன்ன ரெண்டு சம்பவங்களை அடுத்த பதிவுல சொல்றேங்கண்ணா
No comments:
Post a Comment