Tuesday, June 15, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 4

கடந்த பதிவுல வடிவேலுவோட அல்டாப்பு தாங்க முடியாம நான் தரேண்டா பாபாவுக்கு அப்பாயிண்ட்மென்டுன்னு சவால் விட்டுட்டு வீட்டுக்கு வந்த கதைய படிச்சிருப்பிங்க. சாமிங்களுக்கும் நமக்கும் 1986ல இருந்து டீலிங். செமை அண்டர் ஸ்டாண்டிங். நல்லா போயிட்டிருக்கும்.  சினிமால வர்ர வடிவேலுக்கு  நடக்கிற  மாதிரி படக்குனு ட்ராக் மாறி " நல்லாதானே போயிக்கிட்டிருக்கு" னு திணற வைக்கும்.

கை கொடுத்த கையும் பகவானோடதுதான். கை விட்ட கையும் பகவானோடதுதான். கை கொடுத்தது என் நச்சரிப்பு தாங்காம. அப்படி கை கொடுத்ததால என்னெல்லாம் இழந்தேன்னு அப்பாறம் புரிஞ்சிக்கிட்டேன்.

அப்படி கைவிட்டதால என்னல்லாம் பெற்றேன்னும் அப்பாறமா தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

இன்னைய தேதிக்கு "ஆள விடு சாமி  நீ  கொடுத்தா பிரசாதம். எடுத்தா காணிக்கை "ன்னு தான் கிடக்கேன்.

தானா நடக்கிறது எதுவா இருந்தாலும் அது நன்மைல முடியறதையும், விடா முயற்சியால நடக்கிறதெல்லாம் தீமைல முடியறதையும் அனுபவத்துல பார்த்துட்டன்.

இருந்தாலும் சில நேரம் தமிழ் சினிமால வர்ர தங்கச்சி கேரக்டர்கள்  கணக்கா  வாழ்க்கைல வழுக்கி விழுந்துர்ரன் என்ன செய்ய. கர்மா துரத்தறது. (அதெல்லாம் ஒரு ம..ரும் இல்லிங்கண்ணா சபலம்தேங்)

மேற்படி சவால் சம்பவம் 1998 ல நடந்தது. 1986லர்ந்து 12 வருஷமா என்னெல்லாம் நடந்ததுன்னு மேண்டேஜ் ஷாட்ஸா ப்ரொஜெக்ட் ஆக ரெம்பவே நொந்து போயிட்டன்.

ராம நாமம்னா என்னை ராமனாவே ஆக்கிருச்சு. ராமர் எப்படி ஜஸ்ட் ஒரு குரங்கு படைய வச்சுக்கிட்டு ராவணனை எதிர்த்தாரோ அப்படி நான் ஒரே ஒரு குரங்கை வச்சிக்கிட்டு ( ஹி ஹி அந்த வயசுல என் மகளை சொல்றேன் .. அவளுக்கு 6 வயசு அப்போ.) சந்திரபாபுவை எதிர்த்தேன்.

(வாய்க்கா தகராறு விஷயமா இல்லிங்கண்ணா..இன்னைக்கு அவர் எதுக்கெல்லாம் குரல் கொடுக்கிறாரோ -விவசாயம், விளைபொருட்களுக்கு நியாயமான விலை,பவர் கட், படிப்படியா மதுவிலக்கு இப்படி ஒவ்வொன்னையும் டைல்யூட் பண்ணி தனி மனித வாழ்வை கூட நரகமாக்கிக்கிட்டிருந்தாருங்கண்ணா.இதெல்லாம் பின்னொரு சமயம் விவரமா பார்ப்போம்)

இதுல சபரி மாதிரி ஒரு கிழவி வேற  காசு எப்ப வரும் எப்ப தர முடியும்னே தெரியாது ஆனா ஒழுகுற குடிசைக்கு தார்ப்பால், என் மகளுக்கு ஒரு க்ளாஸ் பாலுன்னு ரெம்ப ஹெல்ப் ஃபுல். ( என்ன.. அண்ணன் தம்பிகதான் ஒரு வருசம் ஒரு வருசம் காத்திருந்தா இந்த நாய்க்கு சங்குதான். சொத்தை வித்து  நாமளே சுருட்டிரலாம்னு இருந்தாய்ங்க)

1986ல ராம நாம ஜெபம் ஆரம்பிச்சேன். அதேவருசத்துல ஆசுகவியானேன். சந்தம், ரித்தம் எதுகை மோனை அந்த காலத்து கார்ப்பரேஷன் குழாய் மாதிரி கொட்டும்.

உ.ம்:
கன்னியுன்னை எந்தனுள்ள நாளும் எண்ணி ஏங்குது
கனவில் கூட உனை கண்டே என்னுடலும் தூங்குது
உன்னை எண்ணி எண்ணி எந்தனுயிர் தேயுது
உன் பெயரே என் காதில் தேனாறாய் பாயுது
வானொலியில் கேட்கும் குரல் உனதாக மாறுது
வாணலியில் காய்களை போல் என் இதயம் வதங்குது

(இந்த சரக்கெல்லாம் கால வெள்ளத்துல அடிச்சிக்கிட்டு போயிருச்சுங்கண்ணா. ஏழுமலையான் மேல மட்டும் ஆயிரத்துக்கு மேல இந்த ப்ராண்ட்ல எழுதினென். ஏதோ ஆராய்ச்சிக்குன்னு தி.தி.தேவஸ்தானத்துக்கு அனுப்பினேன். அதை தேவஸ்தானம் சார்பா நடத்தின டாக்டர் ராகவாச்சாரி சூப்பரு கண்ணா இதை அச்சிட உதவி கேட்டு தேவஸ்தானத்தை அப்ரோச் பண்ணுன்னு அதுக்குண்டான அப்ளிகேசனை கூட அனுப்பினாரு. தேவஸ்தானம் கை தூக்கிட்டது வேற கதை. ஏதோ மூட்ல அந்த ஸ்க்ரிப்டை ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன்+ பணத்தை பத்தி இப்ப எழுதற சமாசாரத்தையும் ஒரு தொடராக்கி அனுப்பினேன். அவிக டஸ்ட் பின்ஸுக்கு ரெம்ப பசி போல ஜீரணம் பண்ணிருச்சிங்க

என்ன..ஒரு ரியாக்சனுன்னா அவிக ஸ்டைல்ல பணத்தை பத்தி ஒரு தொடரை ஆரம்பிச்சாய்ங்க. அதை அப்படியே டெவலப் பண்ணி நாணயம் விகடன்னு ஒரு புஸ்தவமே ஆரம்பிச்சிட்டாய்ங்க. இதெல்லாம் தனிக்கதை.

மேட்டருக்கு வரேன்.

ஆஞ்சனேயர்,ராமரோட கோர்த்துக்கிட்டதால முந்தின ரெண்டு வருஷத்துல கச்சா முச்சானு மேஞ்சதால நாறிப்போயி காட்பாடியாகிப்போன பாடி ஒரு கண்ட் ரோலுக்கு வந்துருச்சு. செக்ஸுவல் தாட்ஸை டைவர்ட் பண்றதுக்காக படிச்ச புஸ்தவங்க புது புது சன்னல்களை மட்டுமில்லை வாசல்களையே திறந்துவச்சிருச்சு.

1986ல போட்டியிடவே முடியாது போயிட்ட கல்லூரி தேர்தல்கள்ள 1987ல போட்டியிட்டு  எந்த பின்னணியும் இல்லாம எந்த சிண்டிகேட்லயும் இல்லாம ஜஸ்ட் ஒரு ஸ்பீச் உபயத்துல 468 ஓட்டு வாங்கினேன்.( மூணு வோட்ல தோத்துப்போனது வேற விசயம்)

சேர்மன் வேட்பாளர் தோத்துப்போக நான் தான் காரணம்னு நினைச்ச ஒரு வருங்கால யூத் லீடர் என் மேல அட்டாக் பண்ண வந்தாரு. அப்போ கூட கழுத்துல ஆஞ்சனேயர் டாலர் இருக்கிற வரை சமாளிச்சேன். அது அறுந்து விழுந்ததும் டர்ராகி முழிக்க மொத்து மொத்துன்னு மொத்திட்டானுவ.

புதுசு நவதான்னு தமிழ் தெலுங்குல முதல்ல 8 பக்கம் அப்பாறம் 16 பக்கத்துல பத்திரிக்கையே நடத்திட்டேன். எங்க லெக்சரர்ஸ் எழுதிக்கொடுத்த சமாசாரங்களை அவிக மனசு கோணாம அவிக அனுமதியோட எடிட் பண்ணி வெளியிட்டேன்.பெங்களூர் போய் சுஜாதாவை பேட்டியெடுத்து வெளியிட்டேன்னா பார்த்துக்கங்க.

அப்பாவுக்கிருந்த குட்வில் காரணமா அவர் மேல இருந்த மரியாதைல மாவட்ட கருவூல அலுவலகத்துல முதியோர் பென்சன் ,விதவைகள் பென்சனுக்கு எம்.ஓ எழுதற வேலை கிடைச்சது. அங்கேதான் உனக்கு 22 எனக்கு 32ல வர்ர மாயாவ சந்திச்சேன். அந்த டிபார்ட்மென்ட்ல நடந்த, நடந்துக்கிட்டிருந்த பெரிய்யா ஊழலை கண்டுபிடிச்சேன்.ஏழை சனத்துக்கு அனுகூலமா  ரூல்ஸெல்லாம் மாத்த வச்சேன்.மந்திரி மக்கள் பிரச்சினைகளுக்கு   ஸ்பாட் சொல்யூஷனுக்கு கூட்டம் நடத்தினப்போ மேற்படி டிப்பார்ட்மென்டுக்கு நான் தான் இன்சார்ஜா இருந்தேன்னா பார்த்துக்கங்க.

அங்கே பெண் ஊழியர்கள் அதிகம். எல்லா ஏஜ் க்ரூப்லயும்/சோஷியல் ஸ்டேட்டஸ்லயும்  இருப்பாய்ங்க.அப்போ நமக்கென்ன 22 வயசுதானே. அறியா புள்ளைன்னோ இல்லை பையன் துடியா இருக்கான்னோ எல்லாருமே நல்லா பழகுவாய்ங்க. அவிகளை கவர் பண்ண நியூமராலஜிய வச்சு பீலா விடறது வழக்கம். (இத்தனைக்கும் அது தொடர்பா  ஒரு புஸ்தவம் கூட படிச்சது கிடையாது. எல்லாமே கெஸ் பண்ணி சொல்றதுதான்.ஆனால் பச்சக்குனு பொருந்தும்.) அப்பறமா தான் தெரிஞ்சிக்கிட்டேன்.. ராம நாமத்தை ஜெபிச்சு ஜெபிச்சு வாக்பலிதமே ஏற்பட்டுப்போச்சுன்னு.

1989 வர்ரதுக்குள்ள சிம்பிள் லிவிங் ஹை திங்கிங் , கோ பேக் டு தி நேச்சர், ஹீரோ ஈஸ் ஒன் வூ லே டவுன் ஹிஸ் லைஃப் ஃபார் ஹிஸ் பீப்புள் மாதிரி கொட்டேஷனெல்லாம் என் மனசுல ஃபெவிக்கால் போட்ட மாதிரி ஒட்டிக்கிச்சு. என்னடா ஒரு லூப் ஹோல்ன்னா இதையெல்லாம் பேச்சலர் லைஃப்லயும் அப்ளை பண்ண முடியும்ங்கற யோசனை வரலை. ( வயசு அப்படிங்கண்ணா)  இதனால லவ். லவ் மேரேஜு, ஊருசனம் புண்ணியம் கட்டி பிரிச்சுப் போடறதுங்கற அத்யாயம்லாம் நடந்துருச்சு.

இதுல கூட ஆஞ்சனேயர் படம் என் கிட்ட இருக்கிற வரை என் மேல தூசு கூட படியலை. குப்பம் டு சித்தூர் வர்ரச்ச டீ சாப்பிட பலமனேர்ல இறங்கினேன். பஸ் விட்டது சவாரி. ஆஞ்சனேயர் பஸ்ஸோட போயிட்டாரு. சனம் விளையாடிக்கிருச்சு.

என்ன முருகேசு..ஷீரடி பாபா பத்தி சொல்றேன்னிட்டு முருகேசு பாபாவ பத்தி சொல்லிட்டே போறிங்கன்னு சலிச்சிக்கிராதிங்க. 12 வருஷ ஆன்மீகவாழ்வை ஒரு ஓட்டு ஓட்டிரலாம். தெய்வம் எப்பல்லாம் கை கொடுத்தது. எப்பல்லாம் கை விட்டுருச்சுங்கற மேட்டரையும்  அது ஏன் அப்படி நடந்ததுங்கறதையும் அனலைஸ் பண்ணி ஆன்மீகத்துல இருக்கிறவுகளுக்கு ஆன்மீகத்தை பத்தி ஒரு ஐடியா கொடுக்கலாமேன்னு சபலப்பட்டேன்.

ஓகே கடவுளோட கேரக்டரைசேஷன் பத்தின என் அனுபவ சாரமான ஒரு கவிதைக்கான தொடுப்பை ( கள்ள உறவை இல்லிங்கோ.. லின்கு லின்கு இங்கே தந்து சூ காட்டிட்டு கதைக்கு போயிர்ரன். (கடந்த பதிவுலயே தரேன்னு தரமுடியாம போயிருச்சு.. டென்சன்ல தலைவலியே வந்திருக்கும் . அவிக இங்கே அழுத்துங்க.

மேட்டருக்கு வந்துருவம். ஷிர்டிக்கு போயே ஆகணும். போகலைன்னா வடிவேலு ஜில்லா ஜில்லாவா மானத்தை வாங்கிருவான். இது பொசிஷன். சில்லறை புரளவே வாய்ப்பில்லை. புரண்டாலும் ஆயிரம் கமிட்மெண்டு.

இந்த மாதிரி ஒரு கையறு நிலைல மறு நாள்  ரெண்டு பார்ட்டிக்கு ரெண்டு வட்டிக்கு பத்தாயிரம் கொடுத்திருந்தேனே அதுல ஒரு  பார்ட்டி வந்து  ஒரு ஆஃபர் கொடுத்துச்சு. ஒரு அமவுண்ட் வந்திருக்கு. இது வந்தா ஷிர்டிக்கு வர்ரேன்னு வேண்டிக்கிட்டேன். வந்த அமவுண்டை போட்டு புரட்டினா தான் நான் நாலு காசு பார்க்க முடியும்.  உனக்கு தர வேண்டிய  காசை கொடுத்துட்டேன்னா எனக்கு துண்டு விழும். வேணம்னா நீயும் ஷீர்டி வா போக்குவரத்து உன் கணக்கு. மேல் செலவெல்லாம் என் கணக்கு.

இந்த சந்தர்ப்பத்துலதான் எனக்கு திருமலா போனப்ப ஷிர்டி பாபாவோட படம் வாங்க வேண்டி வந்தது ஞா வந்தது.  உடம்புல அப்படியே 12 வோல்ட் கரண்ட் பாய்ஞ்ச மாதிரி ஒரு எஃபெக்ட். மொத்தத்துல பாபா சாமியோ இல்லையோ.. சாமிங்களோட டீலிங் உள்ள பார்ட்டின்னு கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன்.

கரும்பு திங்க கூலியா? உடனே அந்த பார்ட்டிக்கு சம்மதம் சொல்லிட்டேன். ரெண்டு பேர் போறதா ப்ளான் பண்ண ட்ரிப் ஒரு க்ரூப்பே போற மாதிரி ஷேப் அப் ஆயிருச்சு. அந்த க்ரூப்ல வடிவேலுக்கும்  இடம். சரிங்கண்ணா மிச்சத்தை அடுத்த பதிவுல பார்ப்போம்.

No comments:

Post a Comment