Friday, June 25, 2010

கலைஞருக்கு குடும்ப பைத்தியம்

அண்ணே வணக்கம். தலைப்ப பார்த்து ஏமாந்துராதிங்க. மனிதன் தன் பிரச்சினைகளை எப்படி ஃபேஸ் பண்ணனும்னு சின்ன க்ளாஸ் எடுத்திருக்கேன். தட்ஸ் ஆல் பை தி பை குடிக்கறத பத்தி மணிக்கணக்காங்கற
 தலைப்புல தனிப்பதிவும் போட்டிருக்கன். படிங்க. கமெண்ட் அடிங்க‌


பிரச்சினை இல்லாத மனுஷனே கிடையாது.எல்லாருக்கும் பிரச்சினை இருக்கு. ஆனா வீக் மைண்டட் சனம் " உலகமே புருனே சுல்தான் கணக்கா லைஃபை எஞ்ஜாய்    பண்றாப்லயும் தாங்கள் மட்டும் நாறிக்கிடக்கிறதாவும் நினைச்சுக்குவாய்ங்க. ஓரளவு கான்ஃபிடன்டா , கேல்குலேட்டடா, மெச்சூர்டா இருக்கிற பார்ட்டிங்க கூட பிரச்சினைன்னு வந்தா கலகலத்து போயிர்ராய்ங்க.

முக்கியமா பிரச்சினைன்னு வர்ரச்ச மனசுல வர்ர முத கேள்வி " எனக்கா இந்த பிரச்சினை?" கடவுள் என்ன திருமலா ரெஸ்டாரண்ட் சர்வரா மசாலா கேட்டவுகளுக்கு சாதாவும், சாதா கேட்டவுகளுக்கு ரவாவும் கொண்டு வந்து கொடுக்க.

நீங்க கடந்த பிறவியாலன உடம்பை உதிர்த்து ஆன்ம வடிவத்துல சுத்திக்கிட்டிருந்தப்ப ஸ்க்ரூட்டினி செய்து அந்த பிறவில எதெல்லாம் உங்களையும் கடவுளையும் பிரிச்சு வச்சதோ அதையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணி அந்த இழவெல்லாம் இல்லாத ஒரு வாழ்க்கைய வடிவமைச்சு  கடவுள் கிட்ட கொடுத்திங்க. கடவுளும் " பெஸ்ட் ஆஃப் லக்"  சொல்லி நீங்க கேட்ட வாழ்க்கைய கொடுத்து அனுப்பிட்டாரு.  நீங்க இன்டென்ட் போட்டப்ப உங்க நோக்கம் முக்தி. உடலெடுத்த பிறகு உங்க நோக்கம் புக்தி ( பொழப்பு). இதான் அசலான பிரச்சினை.

1991 லருந்து 2007 வரை ப்ரெட் ஹன்டரா வாழ்ந்தவன்ங்கற ஹோதால, 1986ல ருந்து ஆன்மீக எக்ஸ்பிரஸ்ல கழிவறை கிட்டயாச்சும் ஒண்டிக்கிட்டு பிரயாணம் பண்ணவன்ங்கற தாக்கத்ல  இது தொடர்பா சில டிப்ஸ் கொடுக்கத்தான் இந்த பதிவை போடறேன்.

(இதுல நான் குடுத்திருக்கிற டிப்ஸ் அத்தனையும் ரத்தினம்னு சொல்ல மாட்டேன். எனக்கு ஒர்க் அவுட் ஆச்சு. அம்புட்டுதேங்)

பிரச்சினைன்னு வந்ததும் "அய்யோ எனக்கா" ன்னு பொங்காதிங்க. நீங்க கேட்ட டீ இதான். இட் ஈஸ் யுவர் கப் ஆஃப் டீ. சுகங்கள்  நம்ம உடல் உள்ளங்களை ட்ரேஸ் பேப்பர் மாதிரி ஆக்கிருது. பிரச்சினைகள் தான் நம்ம உடல் உள்ளங்களை பலப்படுத்துது.

எல்லாருக்கும் தான் பிரச்சினை வருது ஆனால் எல்லாரும் தங்கள் பிரச்சினைகளை பத்தி புலம்பறதில்லை. ஆனால் பலருக்கு புலம்பறதே வேலையா இருக்கு. இதுக்கு என்ன காரணம்னா அவிக எல்லா பிரச்சினைகளையும் போட்டு ஒரே நேரத்துல குழப்பிக்கிறதுதான். பைபிள் " நீங்கள் கவலைப்படுவதால் உங்கள் சரீரம் ஒரு அங்குலம் கூட வளர்வதில்லை"ன்னு சொல்லுது. மெடிக்கலா பார்த்தா பிரச்சினை குறித்த கவலையால பி.பி,அல்சர்,டென்சன்,ஷூகர் இப்படி பல  நோய்கள் வர்ரதா சொல்றாய்ங்க.

எல்லாத்துக்கும் கால நேரம்னு ஒன்னிருக்குல்ல. தினசரி கவலைப்படறதுக்குன்னு ஒரு நேரத்தை ஒதுக்கிருங்க. அந்த நேரத்துல கவலைப்பட்டு அதுக்கான விமோசனம்/ தீர்வு என்னன்னும் யோசிச்சிருங்க. யோசனைய அமல் படுத்த ஆரம்பிச்சுருங்க. அதை அமல் படுத்த முடியலையேன்னு புதுசா ஒரு கவலைய/பிரச்சினைய ஏற்படுத்திக்காதிங்க. யோசனைய அப்ளை பண்ணனுங்கற முடிவு  நல்லதுதான். உங்க தீர்வை பார்ட் பார்ட்டா பிரிச்சுக்கங்க. தவணைல அப்ளை பண்ணுங்க. தினசரி கவலைப்படறதுக்குனு அலாட் பண்ண நேரத்துலயே  உங்க தீர்வோட அமல் லட்சணத்தை பத்தி ஆய்வு நடத்துங்க. சில காலத்துல பிரச்சினை தீர்ந்துட்டு போகுது.

பிரச்சினை எங்கன ஆரம்பிக்குதுன்னா " நெனச்சது ஒன்னு நடக்கறது ஒன்னு"ங்கற நிலைமையாலத்தான். ஏன் முன் கூட்டி நினைப்பானேன்.. அது நடக்கலைன்னு ஏன் வருந்துவானேன்.

நினைக்கிறது தப்பில்லை. தப்பா நினைக்கிறதுதான் தப்பு. தப்பா நினைக்கிறதுன்னா என்ன? நம்மை பத்தி நாமே ஓவர் எஸ்டிமேட் பண்ணிக்கிறது. இன்னைக்கு பத்து ரூபா வந்ததுன்ன உடனே மாசத்துக்கு 300 ரூபான்னு. வருசத்துக்கு 3,600 ரூபான்னு கணக்கு போட்டுர்ரது. ஏன் மறு நாளே யாராச்சும் மூத்த  தலையோட தலை தொங்கி போய் ஒரு வாரம் பொழப்பு நடக்காம போயிரவும் வாய்ப்பு இருக்கில்லா.

ப்ளாக் அண்ட் வைட் டிவி வாங்கினதும் அடுத்த மாசம் கலர் டிவி அடுத்த மாசம் ப்ளாஸ்மா டிவின்னு தாவறது. ஏன் லோ ஓல்ட்டேஜோ ,ஹை ஓல்ட்டேஜோ வந்து டிவில புகை வந்துரலாமில்லயா?

தெலுங்குல " கீடெஞ்ச்சி மேலெஞ்ச்சு"ன்னு சொல்வாய்ங்க. அதாவது ஒரு வேலைய செய்ய நினைக்கும்போது அது கெட்டுப்போனா என்ன பண்றதுன்னு ஸ்கெச் பண்ணிக்கிட்டதுக்கப்புறமாத்தான்  அது சக்ஸஸ் ஆனா என்ன பண்றதுன்னு ரோசிக்கனுமாம்.

நாம அப்படியா நினைக்கிறோம். இல்லையே. "உன்னைப்போல் பிறரை நினை"ன்னு சொல்லியிருக்காய்ங்க. ஆனால் அப்படி சொன்னவங்களுக்கு தெரியாது நாம நமக்கு கூட நல்லது பண்ணிக்கிறதில்லைன்னு.

உன்னைப்போல் பிறரை நினைன்னு ஒரு மொள்ளமாரிக்கு எப்படி சொல்றது. அவன் தன்னைப்போல பிறரும் மொ.மா.ன்னு நினைச்சிருவானே!  என்னமோ போங்க. பிரச்சினைக்கு தீர்வு சொல்றதுல இத்தனை பிரச்சினை வரும்னு நினைக்கவே இல்லை.

ஆங் என்ன சொல்ல வந்தேன்..நினைக்கிறது ஒன்னு நடக்கிறது ஒன்னுங்கறதால தான் பிரச்சினை வருது. ஸோ ஒன்னு நினைக்கவே நினைக்காதிங்க. (அது முடியாத காரியம்)

அதானால இருக்கிற எல்லா ஆப்ஷனையும் ஒரு ஓட்டம் ஓட்டி பார்த்துருங்க. ஒரு காரியத்தால வர்ர பிரச்சினைகள்ளயே பெரிய பிரச்சினை எது உசுரு போறது. உசுரே போயிட்ட பிறகு என்ன பிரச்சினை?

அடுத்த பெரும் பிரச்சினை மானம். மானம் போறதுன்னா என்ன?  மானத்துக்குண்டான டெஃபனிஷன் என்ன? இடம்,பொருள், ஏவல், கால ,தேச ,வர்த்தமானங்களை பொறுத்து மாறிட்டே இருக்கும்.

கோபிகையரோட புடவைகளை கிருஷ்ணன் உருவினா அது மான பிரச்சினை இல்லை. அதுக்கு கிருஷ்ண லீலான்னு பேரு

திரவுபதியோட புடவைய துச்சாதனன் உருவினா அது மான பிரச்சினை. உடனே கிருஷ்ணர் இருக்கிற வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு பெட்டி பெட்டியா சேலைகளை கொண்டுவந்து நூல் கட்டி விடுவாரு

பிரச்சினைன்னு வந்தா அதனால உசுரு போயிருமான்னு பாருங்க. பைத்தியம் பிடிச்சுருமான்னு பாருங்க. உசுரு  போகாது,  பைத்தியம் பிடிக்காதுன்னு கன்ஃபர்ம் ஆச்சுன்னா கூல் கூல்.

இல்லிங்கண்ணா உசுரு போயிரும் போல இருக்கு, பைத்தியம் பிடிச்சுரும்போல இருக்குங்கறிங்களா? டபுள் கூல்

தாளி உசுரே போன பிறகு  நகம் வெட்ட தேவையில்லை, ஹேர் கட், ஷேவ் தேவையில்லை. ஒரு மசுரும் தேவையில்லை.

பைத்தியம் பிடிச்சுரும்போல இருக்கா? (உங்க மைண்ட் வீக்கா இருக்குனு அர்த்தம்) தாளி பிடிச்சுட்டு போகட்டுமே. கலைஞருக்கு குடும்ப பைத்தியம், ஜெயலலிதாவுக்கு தோழிப்பைத்தியம், சோனியாவுக்கு ராகுல் பைத்தியம், ராகுலுக்கு சொந்தக்கால் பைத்தியம். நாம எல்லாருமே பைத்தியங்கதான் சதவீதத்துலதான் வித்யாசம்.

(இன்னொரு சந்தர்ப்பத்துல தொடர்ந்து பேசுவம்)

1 comment:

  1. //கோபிகையரோட புடவைகளை கிருஷ்ணன் உருவினா அது மான பிரச்சினை இல்லை. அதுக்கு கிருஷ்ண லீலான்னு பேரு

    திரவுபதியோட புடவைய துச்சாதனன் உருவினா அது மான பிரச்சினை. உடனே கிருஷ்ணர் இருக்கிற வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு பெட்டி பெட்டியா சேலைகளை கொண்டுவந்து நூல் கட்டி விடுவாரு//

    பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் நோக்கம் ஒண்ணுதான் போல...

    நம்ம தமிழ் சினிமாவுல கூட வில்லன் first title போட்ட வுடனே ஹீரோயினோட செய்ய நினைகிறத ஹீரோ -நு சொல்லிட்டு இருக்கறவன் கடசியா செய்யவான்...சுபம் -நு End டைட்டில் போட்டுவாணுக.....
    உலகம் புரியல .....

    ReplyDelete