Sunday, June 20, 2010

கடவுள் ஒரு ட்ராகுலா

அண்ணே வணக்கம்ணே கடவுள் ஒரு ட்ராகுலான்னு தலைப்பு வச்சிருந்தாலும் இது பாபாவும் பா பா ப்ளாக் ஷீப்பும் தொடர்பதிவோட 7 ஆவது அத்யாயம். கூடவே சிரிக்க சிரிக்கங்கற தலைப்புல ஒரு நகைச்சுவை பதிவுக்கு ட்ரை பண்ணியிருக்கேன் .படிச்சுப்பாருங்க. உங்க கருத்தை தெரிவிக்க மறந்துராதிங்க‌

ஷிர்டி பாபா  மாதிரி அனேக  சாதுக்கள், சத்திய புருஷர்கள்  புண்ணிய புருஷர்களோட சரித்திரங்களை மானாவாரியா படிச்சிருந்த எனக்கு பாபா சரித்திரம் படிச்சதும் கன்ஃபார்ம் ஆனது என்னன்னா.. அவிக பித்தா இருந்திருக்காய்ங்க. இறையருள் ஒன்னே சொத்தா இருந்திருக்காய்ங்க. பணம்,காசுல்லாம் துச்சம்னு வாழ்ந்திருகாய்ங்க. பாபாவோட வாழ்க்கை வரலாறு என்னை ரொம்பவே இம்ப்ரெஸ் பண்ணுச்சு. இந்த சரித்திரத்தோட பவர் என்னன்னா.. அதுக்கு ஒரு உபகதை தேவையா இருக்கு.

நாலு பேருங்கற என்னோட பழைய பதிவு ஒன்னுல பரமேச்சுன்னு ஒரு கேரக்டரை பத்தி படிச்சிருப்பிங்க. அவிக குடும்பம் ரெம்ப நொந்து போயிருந்தப்பயே ஒரு ஜோசியனா நான் அவிகளுக்கு அறிமுகமாயிட்டன். சொல்லியுமிருக்கேன். ஆனா அந்த காலத்துலயே அவிக நினைக்கிறத நாம சொல்லனும்னு எதிர்பார்க்கிற பார்ட்டிங்க அவிக. அதனால நமக்கு செட் ஆகலை.

அவங்க எதிர் வீட்ல ஒரு சி.ஐ குடியிருந்தார். அவருக்கு ஜோசியம் சொல்லனும்னு பரமேச்சுவோட மூத்த பையன் என்னை கூட்டிட்டு போனான். நம்ம கிட்ட ஆர்டினரி,டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸு, உல்வா மாதிரி தர வாரியான ஜோசியம்லாம் கிடையாது. ரேஷன் ஷாப் க்யூல கேட்டாலும் அதே ஜோசியம் தான்.ஆயிரத்து ஒன்னு கொடுத்தாலும் அதே ஜோசியம்தான்.

அதென்னமோ சி.ஐக்கு சொன்ன ஜோசியம் அவிகளுக்கு ரெம்ப பிடிச்சிப்போனாப்ல இருக்கு பரமேச்சு அண்ட் கோ மறுபடி மறுபடி என்னை காண்டாக்ட் பண்ண ஆரம்பிச்சாய்ங்க.

முதல்ல மூத்த பையன் ஹோம் கார்டா அப்பாயிண்ட் ஆனான். (சி.ஐ. புண்ணியத்துல) .ஆட்டோகாரங்களுக்கு கிரோசின் ஆயில் விக்கிற ஸ்டோர் வச்சாய்ங்க. இவிக வண்டி மெல்ல பிக் அப் ஆச்சு.  வழக்கப்படி நான் கழண்டு கிட்டேன்.

ஓரளவுக்கு நல்லாவே முன்னுக்கு வந்து தலைகனத்துல ஆடிக்கிட்டிருந்த காலத்துல
மூத்தவன் வேற ஒரு சமாசாரத்துல நெருக்கமானான். மொதல்ல குடும்ப ஜோசியனா இருந்த  நான் மூத்தவனோட பர்சனல் ஜோசியனா அவதாரமெடுத்தேன்.

கெட்டு கீரை வழியா போக இருக்கிறவனுக்கு நம்மை வார்த்தை ருசுக்குமா என்ன? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். என்னென்னமோ ஆட்டம் போட்டு நாய் மேல ஏறி கோலம் வந்த் நொந்து   நூடுல்ஸா போயிட்டாய்ங்க. சபிக்கப்பட்ட குடும்பங்கள்ங்கற என்னோட பதிவை படிச்சிங்கன்னா ஒரு ஐடியா வரும். அந்த கண்டிஷனுக்கு அவிக குடும்பம் வந்துருச்சு. எத்தை தின்னா பித்தம் தெளியும்ங்கற ஸ்டேஜு. ஜோசியம்,பரிகாரம்லாம் வேலை செய்யாத நிலை.  அப்போ நான் பாபாவோட சரித்திரத்தை கொடுத்து இதை படிங்க நிலைமை மாறும்னு கொடுத்தேன். இதை கொடுத்த வருசம் 2003ன்னு  நினைக்கிறேன். அந்த விஷயத்தை நானே மறந்துட்டன்.

இந்த தொடரை எழுத ஆரம்பிச்ச பிறகுதான் பாபா சரித்திரத்தை அவிகளுக்கு கொடுத்ததே ஞா வந்தது. கொடுத்ததென்னவோ கொடுத்துட்டன். படிக்க வேண்டியது அவிக தானே. வர வர மாமி கழுதைப்போலானாள்ங்கற மாதிரி நாயடி பேயடி. மேற்படி பந்தா ,கிந்தால்லாம் போய் சகலத்தையும் வித்து தொலைச்சு இப்ப அடியை பிடிடா பரதப்பட்டான்னு காலம் ஓடுது.

அந்த திமிர் பிடிச்ச சனம் நிச்சயம் படிச்சிருக்காது. அதுக்குண்டான பலன் 7 வருஷமா பூலோக நரகம். அதுக்கொரு விடிவுகாலம் பிறக்கத்தான் எனக்குள்ள இந்த ஞா வந்திருக்கு. கூடிய சீக்கிரம் இதை அந்த சனத்துக்கு கன்வே பண்றேன். பாபா சரித்திரத்தை படிக்க சொல்றேன். அதுக்கு பின்னாடி என்ன நடந்துச்சுன்னும் சொல்றேன். இது பாபா பவர் நெகட்டிவ்ல வேலை செய்த அனுபவம்.

பாசிட்டிவா வேலை செய்த அனுபவத்தை கூட சொல்லனும்லியா?

நான் வெறும் விளம்பரங்கள் மேல டிப்பெண்ட் ஆகி ஒரு ஃபோர்ட் நைட்லி நடத்திக்கிட்டிருக்கிற விஷயம் உங்களுக்கு தெரியும். சித்தம் போக்கு சிவன் போக்கு மாதிரி ஒரு தாட்டி டபுள் டெமி, ஒரு தாட்டி சிங்கிள் டெமி, ஒரு தாட்டி ஏ3 ன்னு வித விதமான சைஸ்ல பேப்பரை போடறது வழக்கம்.

அப்பப்போ பேப்பரையே பாக்கெட் புக்காக்கி போடறதும் உண்டு. அப்படி  ஒரு தாட்டி "மினி ஜோதிட போதினின்னு ஒரு புக் போட்டோம். இதுல பாபாவோட கணக்கில்லாத அற்புதங்கள்ள ஒரே ஒரு அற்புதத்தை அதுவும் உதாரணம் காட்ட உபயோகிச் சிருந்தேன். அது வருமாறு:

பாபாவோட பக்தர் ஒருத்தருக்கு திடீர்னு வயித்து போக்கு ஆரம்பமாயிருது. உடனே பாபா வேர்கடலைய வறுத்து பொடி செய்து  கொடுக்கச்சொல்றாரு. வயித்துப்போக்கு நின்னுருது.

இன்னொருதரம் அதே பக்தருக்கு அதே பிரச்சினை வந்துருது. உடனே அவர் பாபா தான் சொல்லியிருக்காரேன்னு வேர்கடலைய வறுத்து பொடி செய்து  சாப்பிடறார். வ.போக்கு அதிகரிச்சு சாக பிழைக்க  ஆயிர்ராரு.  அப்புறம் விஷயம் தெரிஞ்சு பாபா காப்பாத்தறாரு.

இந்த சம்பவத்துல வேர்கடலைய பஞ்சாங்கம்+ ஜோதிட கிரந்த விதிகளுக்கும், நல்ல ஜோதிடரை பாபாவுக்கு ஒப்பிட்டு எழுதியிருந்தேன்.  வழக்கமா நாம போடற பேப்பர்/பாக்கெட் புக் எல்லாமே ஒன்னு அ ரெண்டாயிரம் போடுவம். தட்ஸால். இதை 2000 பிரதி போட்டதா ஞா.

ஆனால் ஒரே பார்ட்டி மினி ஜோதிட போதினிய 5000 காப்பீஸ் ஸ்பான்சர் பண்றதா ப்ரப்போஸ் பண்ணி ஸ்பான்சர் பண்ணதோட நியூஸ்  பேப்பர்ஸ்லயும் வச்சு விட்டாரு. இன்னைக்கு நாளைக்கு கூட அந்த பாக்கெட் புக்கை பார்த்துட்டு வர்ர க்ளையண்ட்ஸ் அதிகம்னா பார்த்துக்கங்க.

பாபாவோட சரித்திரத்துல ஒரு துணுக்கை எடுத்து போட்டதுக்கே இந்த பலன். இப்போ பாபா சத நாமாவளியை  ஒரு லட்சம் காப்பீஸ் போடறதா கமிட் பண்ணி செய்துக்கிட்டிருக்கேன். என்ன ஆகப்போகுதோ தெரியலை.

அது சரிப்பா எப்பயோ 1999ல ஷீர்டி போனே.. 20010ல சத நாமாவளி ஒரு லட்சம் பிரதி  போடப்போறே. இதுக்கு பிரதியா என்னமோ அற்புதம் நடக்கப்போவுதுன்னும் ஜொள் விடறே.  இந்த ப்ராசஸ்க்கு ஏன் இவ்ள காலம் பிடிச்சதுன்னு நீங்க  கேட்கலாம்

இந்த ஆன்மீக விஷயத்துல ஆரும் சொல்லாத மேட்டர் ஒன்னு சொல்றேன். உங்க அனுபவத்தை மறுமொழில சொல்லுங்க.

கடவுளை உண்மையா வணங்கறவங்களுக்கு என்னென்னமோ கிடைக்கும்னு சொல்றாய்ங்க. உண்மைதான் கிடைக்கும்தான். ஆனால் இதுக்கெல்லாம் பயங்கர விதிகள் இருக்கு.

உங்க பிரார்த்தனைக்கு உடனடி லாட்டரித்தனமா பலன் கிடைச்சா நீங்க வணங்கின சாமி உங்களுக்கு போன ஜன்மத்துல ஏதோ சில்லறை பாக்கி வச்சிருந்ததுன்னு அர்த்தம். படக்குனு எதையோ ஒன்னை கொடுத்து ருணத்தை தீர்த்துக்கிருச்சுன்னு அர்த்தம். இது மறுபடி மறுபடி நடக்காது.

ஆனால் நீங்க வணங்கற தெய்வம் உங்களுக்கு நிறையவே கடன் பட்டிருக்குன்னு வைங்க. பெருந்தொகைய நமக்கு பாக்கி வச்சிருக்கிற கடன் காரன்ங்கறவன் எப்பவும் கடனை எகிற அடிக்கத்தான் பார்ப்பான். அப்படி சாமி கூட உங்களுக்கு நிறைய்ய போக்கு காட்டும்.

அய்யயோ இந்த சாமிய கும்பிட ஆரம்பிச்ச பிறகுதாம்பா எனக்கு கஷ்டமே ஆரம்பிச்சுச்சுன்னு கூட சொல்ல வைக்கும்.

அப்படியும் விடாப்பிடியா கும்பிடற பார்ட்டிக்கு சாமியால என்ன கொடுக்க முடியும்? தன் கிட்டே இருக்கிறதை தான் கொடுக்க முடியும். சாமி கிட்டே என்ன இருக்கு?

சாமிக்கு பேர் கிடையாது . எனவே உங்க பேர் நாசமாகும். சாமிக்கு அப்பா,அம்மா கிடையாது. அதனால் உங்களுக்கும் அப்பா அம்மா இல்லாம போயிருவாங்க. ஸ்தூலமாவோ அ சைக்கலாஜிக்கலாவோ. சாமிக்கு உருவம் கிடையாது. அதனால உங்க ரூபமே குரூபமாயிரும்.

மேலும் சாமிங்கறது எங்கனயோ ஆகாசத்துல, சொர்கத்துல இல்லை. நீங்க பண்ற ஜபம் தபம் இத்யாதியால உங்க சங்கல்பத்தால தனக்குத்தானே உருவெடுத்து வருது.
ஒரு தாய் ஸ்தூல உடம்புல  சாதாரண குழந்தைய தாங்கும்போதே  நரக வேதனைய அனுபவிக்கிறா.

ஒரு சாதகன் தன் சூக்கும கருப்பைல தெய்வத்தை கருக்கொள்ளனும்னா என்னமா அவதிபடனும்னு பாருங்க. மேலும் கடவுளோட இருப்பை அங்கீகரிச்சு , இன்வைட் பணிட்டா அவரு சட்டமா வந்து உட்கார்ந்துருவாரு. அவருக்கு உண்டானதை நீங்க செய்தே ஆகனும்.(ஜபம்,தபம்,பூசை,புனஸ்காரம்) அவரு சகட்டுமேனிக்கு கண்ட கண்ட வேஷத்துல வருவாரு.என்னென்னமோ கோரிக்கையையெல்லாம் முன் வைப்பாரு எல்லாத்தயும் நிறைவேத்தனும். ஆடி மாசம் போவட்டும், அம்மாவுக்கு ஒடம்பு பெட்டராகட்டும்னெல்லாம் பெண்டிங்ல வச்சா பல்பு தான்.

உண்மையான நம்பிக்கையோட சாதனைல இறங்கிறவனோட உடல்,உள்ளம், புத்தி, செல்வம், நற்பெயர்,  நட்பு, உறவு, சகலத்தையும் தின்னுதான் கடவுள் அவனுக்குள்ள கருக்கொள்றார்.

அந்த சக்தியோட இயல்பு ஏறக்குறைய ட்ராகுலா மாதிரி இருக்கும். ட்ராகுலா ரத்தத்தை குடிக்கும். இந்த சக்தி உங்க சாதனையை இன்னும் இன்னும்னு தீவிரப்படுத்த தோதா சூழலை மாத்திக்கிட்டே இருக்கும்.

உ.ம் பணம் தான் உங்க சாதனையை மந்தப்படுத்துதுன்னா பணமெல்லாம் காலி. பெண்டாட்டி மோகம் தான் உங்க சாதனையை மந்தப்படுத்துதுன்னா பெண்டாட்டி காலி அ டைவர்ஸு

விவேகானந்தரு ஒரு பாயிண்ட் சொல்லியிருக்காரு. நீ ஒரு கொள்கைய நம்பி சொல்றியா ? சொல்லு ! சொல்லிக்கிட்டே இரு .. 14 வருஷம் அதையே சொல்லிக்கிட்டிருந்தா அந்த வார்த்தைகளுக்கு மந்திர சக்தி  வரும். பேச்சு செயலாகும்.

ஆன்மீகத்துல எந்த விதையும் வீணாப்போறதில்லை. நீ போடற உரம், பாய்ச்சற தண்ணியோட அளவுக்கு முளைச்சே தீரும். யத்பாவம் தத்பவதி.. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறுகிறாய்.

பாபா எப்படி பிச்சையெடுத்து,தனக்கு  பிச்சை கொடுத்தவங்களோட கருமத்தை எல்லாம் வாங்கி அனுபவிச்சபடி   ஒரு சமஸ்தானத்தை நிர்வகிச்சாரோ அப்படி நானும் வாழ்ந்திருக்கேன்.

உஞ்ச விருத்தி பண்ணி வயித்த கழுவின (வயலோரத்தில் சிதறிக்கிடக்கும் தானியங்களை சேகரித்து அதை மட்டும் உண்ணுதல்) அந்த  காலத்து  பிராமணனை விட புனிதமா   நான் வாழ்ந்த காலம் ஒன்றுண்டு.

அதுக்கெல்லாம் காரண பூதர்கள் எத்தனையோ மகான்கள். "எந்தரோ மகானுபாவுலு.. அந்தரிக்கி வந்தனமு" . அந்த மகான்கள்ள ஷீரடி பாபாவும் ஒருத்தர்.

(தொடரும்

2 comments:

  1. சார் ,தலைப்பை மாத்தி கொடுத்திடீங்கனு நெனைக்கிறேன் , இந்த பதிவுக்கு பேருதானே
    சிரிக்க சிரிக்க..

    ReplyDelete
  2. தனிக்காட்டு ராஜா அவர்களே,
    ஆனாலும் இப்படி வாரக்கூடாது. குசும்புக்கு சந்தோஷத்தால் திகைத்தேனே தவிர‌
    பகைக்கவில்லை.

    ReplyDelete