அண்ணே வணக்கம்ணே,
இந்த டர்ரான பதிவோட பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் 4 ஆம் அத்யாயத்தையும் போட்டிருக்கேன்.படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்கண்ணா
நித்யானந்தா கைதான புதுசுல அவரது ஜாதகத்தை கணிச்சி பார்ட்டிக்கு சந்தேக சாவு நிச்சயம்னு ஒரு பலனை சொல்லியிருந்தேன். அதுக்கு இன்னைக்கும் கட்டுப்பட்டிருக்கேன். ஆனால் இந்த பதிவை எழுதற இந்த நேரத்துல அவரோட ஜாதகமோ,கிரகஸ்திதியோ என் மைண்ட்ல இல்லை. இருந்தாலும் அடிச்சி சொல்றேன் அவர் உயிருக்கு ஆபத்து இருக்கு. இதுக்குண்டான ப்ராக்டிக்கல் காரணங்களை பதிவோட கடைசில சொல்லியிருக்கேன். அதுக்கு முந்தி ஜோதிஷ அபிமானிகளோட சிந்தனைப்பசிக்கு தீனியா ஒரு அனலைஸ்.
நமக்கெல்லாருக்குமே ரொட்டீன் லைஃபுன்னு ஒன்னிருக்கு. அதை நமக்கு தர்ரதுக்கு கிரகங்கள் படற அவஸ்தை இருக்கே .. அதை வார்த்தைல வருணிக்க முடியாது. கோடையில பவர் சப்ளை தர மின்சார வாரியம் தவிக்கற தவிப்பை விட பல மடங்கு அதிகம் அந்த அவதி.
காரணம் என்னன்னா கிரகங்கள் மாறிக்கிட்டே இருக்கும். ஆனா நாம நம்ம ரொட்டீன் மார்ரதை விரும்பறதில்லை. விடாப்பிடியா அதை மெயின்டெய்ன் பண்ணவே பார்ப்போம்.
ரஜினி மட்டும் தன் ரொட்டீனுக்கு அடிமையாகி கண்டக்டராகவே இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்? ரஜினி சென்னைல தங்கியிருந்த அறையில 3 பேர் தங்கத்தான் அனுமதி. நம்மவரு நாலாவது பார்ட்டி. பில்டிங் ஓனர் மோசமானவர். திடீர் தணிக்கையெல்லாம் செய்வாரு. அப்படி தணிக்கை நடக்கறச்ச ரஜினி என்ன பண்ணனும் தெரியுமா? கழிவறைல போய் ஒளிஞ்சிக்கனும்.
இந்த மாதிரி எல்லாம் நாறி நலிஞ்சதாலதான் அவரு சூப்பர் ஸ்டாரா வளர்ந்தாரு. வளர்ச்சிக்கு முதல் இன்டிகேஷன் என்னடான்னா நம்ம ரொட்டீன் டிஸ்டர்ப் ஆகனும்.
ஆனால் நிறைய பேரு " என்னங்க வண்டி எப்படி ஓடுது"ன்னு கேட்டா " அட போ சாமி! வயித்தெறிச்சலை கிளப்பாதே.. பொழப்பா என்னுது"ன்னு ஆரம்பிச்சு அளக்க ஆரம்பிச்சுர்ராய்ங்க.
உங்க ஜாதகம் த்ரீ இன் ஒன். ஏடிஎம்மும் அதான். டெபிட் கார்டும் அதான். க்ரெடிட் கார்டும் அதான். நீங்க உங்க ஜாதகம் அனுமதிச்ச அளவுக்கு மட்டும் வாழ்க்கைய அனுபவிச்சிக்கிட்டிருக்கிற வரை அது ஏடிஎம். கோசாரத்துல கிரகங்கள் அனுகூலமா வரும்போது அது டெபிட் கார்டா வேலை செய்யது. நீங்க உங்க ஜாதகம் அனுமதிக்காத ஃபெசிலிட்டீஸை எல்லாம் அனுபவிக்க ஆரம்பிச்சுட்டிங்கன்னா அது க்ரெடிட் கார்டா மாறிருது.
க்ரெடிட் கார்டு பத்தி தெரியும்ல.. ஏதோ ஆத்திரம் அவசரத்துக்கு அறிவுப்பூர்வமா யூஸ் பண்ணா ஓகே. அதை விட்டுட்டு சகட்டுமேனிக்கு உபயோகிச்சிங்கன்னா வட்டிக்கு வட்டி, வசூலுக்கு லோக்கல் குண்டாஸ்.
நம்ம நித்யாவையே எடுத்துக்கங்க. அவர் பிறந்திருக்கிற ஜாதகத்துக்கு அவருக்கு கிடைச்ச ரொட்டீனே லட்சம் மடங்கு அதிகம். (ஜாதகம் க்ரெடிட் கார்டா மாறிருச்சு) .இதுல தங்க கடத்தல், மணி லாண்டரிங், ஹவாலா, அஜால் குஜால் வேலைங்கள்ளருந்து மான் தோல் பர்ச்சேஸ் வரை புகுந்து விளையாட்டிட்டாரு.
குண்டாஸ் வசூலுக்கு வந்தாப்ல கிரகம் காராகிருகத்துக்கு (ஜெயிலுக்கு) கொண்டு போயிருச்சு. ஜெயிலுக்கு போனா நிறைய தோசங்கள் குறைஞ்சுரும்னு ஒரு ஐதீகம். நானும் இதை ரெகக்னைஸ் பண்ணியிருக்கேன். ஜெயிலுக்கே இல்லை. ஆஸ்பத்திரி,போலீஸ் ஸ்டேஷன்,கோர்ட்,சுடுகாடு இங்கெல்லாம் போனாலும் பல தோசங்கள் குறையுது.
நித்யானந்தா கடந்த காலத்துல தன்னோட கிரகங்கள் அனுமதிக்காத ஃபெசிலிட்டீஸ்,லக்சரீஸ் எல்லாம் அனுபவிச்சு ஓவர் ட்ராஃபட் சாஸ்தியாயிருச்சு. இந்த ஓவர் ட்ராஃப்ட வசூல் பண்ணத்தான் கிரகம் அல்லாட வச்சுருச்சு.
நீங்க இடம் மாறினா 25% தோஷம் குறையும், இடம் மாறி/ஊர் மாறி குடும்பத்தை +உங்க சர்க்கிளை பிரிஞ்சிங்கன்னா 50% தோஷம் குறையும் . கோர்ட்டு இத்யாதி பத்தி ஏற்கெனவே சொல்லிட்டன். இப்படியாக நித்யானந்தா கிரக பலனோட ஓவர் ட்ராஃப்டை ஓரளவுக்கு அடைச்சுட்டாரு.
இப்ப அவரு ஃப்ரீஆயிட்டாரு. தன் ரொட்டீனுக்கு வந்துட்டாரு. பெயில் சேங்ஷனான மறு நொடிலருந்து அவரோட வே ஆஃப் திங்கிங்கே மாறிட்டிருக்கும். வாலை அவுத்து விட ஆரம்பிச்சுருப்பாரு.
ஒரு மனுஷன் எதை இழந்தாவது காப்பாத்திக்கவேண்டிய விசயம் சுதந்திரம். எதுக்காகவும் இழக்ககூடாத விசயம் சுதந்திரம். சொந்த தொழில்ல இருக்கிறவுக சுதந்திரத்தை இழக்க சம்மதிக்காததே அவிகளுக்கு பெரிய ட்ரா பேக். ஜாதகப்படி சின்ன சின்ன ஏற்ற இறக்கம் வந்தாலும் கதை கந்தலாயிருது. ஆனால் பிறர்கிட்டே வேலை பார்க்கிறவுக ,சுமாரான ஜாதகத்துல பிறந்திருந்தா கூட ஓரளவுக்காச்சும் குப்பை கொட்ட காரணம் அவிக அவிகளோட சுதந்திரத்தை இழந்துட்டதுதான்.
இவிக ஜாதகத்துல இருக்கிற தோசத்துல பாதி இவிகளை வச்சி வேலை வாங்கற முதலாளிக்கு வேலை செய்ய ஆரம்பிச்சுரும். டெசிஷன் மேக்கிங் பண்றவுக மேல தான் கிரகம் வேலை செய்யும். பிறருடைய வேலைய செய்யறவுக மேல அவ்வளவா வேலை செய்யாது. இது என் கண்டுபிடிப்பு.
இன்னொரு ரகசியம் என்னன்னா ஜாதகத்துல எட்டாவது இடம் தான் தலைமறைவு, மரணம், சிறைப்படுதல் எல்லாத்தயும் காட்டுது. நித்யானந்தாவுக்கு எட்டாவது இடம் கெட்டுத்தான் தலைமறைவானார். சிறைப்பட்டார். இப்போ மீடியா வெளிச்சத்துக்கு வந்துட்டார், ரொட்டீனுக்கு திரும்பிட்டார். ஸோ அவரோட எட்டாமிடத்து தோசங்கள் மரணம்ங்கற வடிவத்துல வெடிக்க வாய்ப்பிருக்கு
ஆக நித்யானந்தா தன் சுதந்திரத்தை மீள பெற்றுவிட்டதால , ரொட்டீனுக்கு வந்துட்டதால அவரோட கிரக தோசங்கள் எல்லாம் முழு வீச்சுல வேலை செய்து அவரு உயிருக்கே உலை வைக்க ஆரம்பிச்சுரும்.
இந்த லைஃப் த்ரெட்டுக்கு என்ன காரணங்கள்னு ப்ராக்டிக்கலா பார்த்தா:
1.எலிக்கு அறுவடை காலத்துல 60 பெண்டாட்டி. சாமியாரு வெளிய இருக்கிறச்ச 60ஆயிரம் பக்தாள். அதுவும் பெரிய இடத்து சகவாசம்.இந்த அழகுல உள்ளாற போய் வந்தா? எல்லாரும் கழண்டுகிட்டு போகத்தான் பார்ப்பாய்ங்க. விலகியிருக்கத்தான் நினைபாய்ங்க. நித்யாவோ அவிகளை தொடர்பு கொள்ள பார்ப்பாரு. விசாரணை அதிகாரிகளை ரொம்ப மட்டமா எடை போட்டுரக்கூடாது. "விட்டு" ப்பிடிக்கவே பெயிலுக்கு விட்டுக்கொடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கு. அட அவிகளை மீறித்தான் பெயில் வாங்கிட்டாருன்னே வைங்களேன். அவிக சொம்மா விட்டுருவாய்ங்களா? ஒரு கண் போட்டுத்தான் வைப்பாய்ங்க. நித்யா கொஞ்ச நாள் அடக்கி வாசிச்சுட்டு மெள்ள மெள்ள வாலை அவுத்து விட ஆரம்பிப்பாரு. அப்ப மாட்டலாம்னு வலை விரிச்சு காத்துக்கிட்டிருப்பாய்ங்க. நித்யா மாட்டறத நித்யாவ விட அவரால லாபமடைஞ்சவுங்க (நித்யா மூலமா மணி லாண்டரிங் - கருப்பு பணத்தை வெள்ளையாக்கிறது- ஹவாலான்னு வாலை ரெம்பவே அவுத்து விட்டாப்ல தகவல்கள் வந்ததை ஞா படுத்திக்கங்க.).
ஆடின காலும், பேசின வாயும் சொம்மா இருக்குமா என்ன? இவரு மறுபடி ஆரம்பிக்கலாம்னு பெரிய இடங்களை காண்டாக்ட் பண்ணலாம். அட பண்ணலேன்னா கூட பண்ணுவாருன்னு பெரிய இடங்க நினைச்சு நடுங்கலாம்.
பெயிலுங்கறது பெரிய சாதனை ஒன்னும் கிடையாது. இன்னம் சொல்லப்போனா நித்யாவோட லைஃபுக்கு அதான் சேஃப். நித்யாவை போட்டு பிசைய ஆரம்பிச்சால் அவர் எல்லாத்தயும் கக்க ஆரம்பிச்சுருவாரேன்னு பெரிய பெரிய சக்தியெல்லாம் இந்த பெயிலுக்கு ஒர்க் அவுட் பண்ணியிருக்கலாம். இதெல்லாம் நித்யா மேல லவ்வுல பண்ணியிருக்க மாட்டாய்ங்க. கஸ்டடில இருந்தா ஆபத்து வெளிய வந்தா முடிச்சுரலாங்கற எண்ணத்துல தான் உதவி பண்ணியிருப்பாய்ங்க.
பலர் நித்யா பேர் மேல/அதாவது ஆசிரமத்து பேர்ல சொத்துக்களை எழுதி வச்சிருக்கலாம். (வருமான வரியை ஏய்க்க)
இப்ப நடந்து போன சம்பவத்தை அமுக்க (அதாங்க ரஞ்சிதா ராசலீலை சிடி ரிலீஸ்) எத்தனை கோடிகள் வாய்க்கரிசியா போடப்பட்டதோ? குந்தி தின்றால் குன்றும் மாளுமில்லயா? இது விசயமா நித்யா ஊரார் தன் ஆசிரமத்துக்குன்னு (உளுவுளா காட்டிக்கு கொடுத்த) கொடுத்த சில சொத்துக்களை விற்றிருக்கலாம். அல்லது அவிக திரும்ப கேட்டு வர இவர் கொடுக்க மறுக்கலாம். இது விசயமாவும் நித்யா மேல அட்டாக் நடக்கலாம்.
நித்யா கூட சில சொத்துக்களை சிலர் பேர்ல எழுதி வச்சிருக்கலாம். ஒரு ஆளோட கை ஓடுங்குதுன்னா சனம் அற்ற குளத்து அறுனீர் பறவைகளா மார்ரது சகஜம். பினாமிக்கள் சாமி கதை க்ளோஸ் இதை நாமே அமுக்கிர வேண்டியதுதான்னு முடிவு கட்டியிருக்கலாம். நித்யா அந்த சொத்துக்களை மீட்க முயற்சி பண்ணலாம். முடியாத பட்சத்துல அவிகளை போட்டுத்தள்ள நித்யா அண்ட் கோ முயலலாம். எக்ஸ் பார்ட்டிங்க முந்திக்கலாம்.
இதெல்லாம் நித்யாவோட உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய ப்ராக்டிக்கல் சாத்தியக்கூறுகள்
உங்கள் பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன். நம்ப முடியாதவைகளாக இருந்தாலும் சுவராசியமாக இருக்கிறது! சிலசமயம் எழுத்தில் சிறிது கோபம் தெரிக்கிறது... அது எழுத்தின் வீரியத்தை குறைத்துவிடும் என்பது என் கருத்து.
ReplyDeleteநிறைய எழுதுங்கள்!! வாழ்த்துக்கள்!!
எஸ்.ஏ .சரவணகுமார்,
ReplyDeleteநம்பிக்கை என்பது நம் கடந்த கால அனுபவத்தை பொறுத்தது. இத்தரை கொய்யா பிஞ்சு நாமிதிற் சிற்றெறும்பு. கோபம் என்றீர்கள். எனக்கு கோபமே வராது. இர்ரிடேஷன் என்று வேண்டுமானால் கூறுங்கள். அது கூட 100க்கு 99 சதம் குறைந்துவிட்டது ( மரத்து விட்டது) 1 சதம் இருக்கிறது. அதையும் கடாசிரலாம்.
தொடர்ந்து படிப்பதோடு நன்றாகவும் அப்சர்வ் செய்திருக்கிறீர்கள். நன்றி