இன்றைய இதர நறுக் சுருக் பதிவுகளுக்கு இங்கே அழுத்துங்கள்
மனுஷ்ய புத்திரன் ஆத்திகராக இருப்பதோ, நாத்திகராக இருப்பதோ அவருடைய சொந்த விஷயம். ஆத்திகனை நாத்திகனாகச்சொல்லவோ, நாத்திகனை ஆத்திகனாக சொல்லவோ நான் தயாராக இல்லை. என்னை பொருத்தவரை இரண்டுமே போற்றத்தக்கதுதான்.. ஆனால் அது உச்ச நிலையில் இருக்க வேண்டும். கடவுளை தாண்டி வந்திருக்க வேண்டும்.
ஆத்திகன் கடவுள் இருக்கிறார் என்று அரற்றுவதாலோ, நாத்திகன் கடவுள் இல்லை என்று அரற்றுவதாலோ யாருக்கும் எந்த பலனும் கிடையாது (அவர்கள் உட்பட) ஆத்திகன் " கடவுள் இருக்கிறார். சரி. இந்த மனிதர்கள் எல்லாம் யார்? என் இறைவனின் மக்கள் தானே.. என் சகோதர சகோதரிகள் தானே என்ற எண்ணத்துடன் தன் ப்ரக்ஞையை மேனோக்கி உயர்த்திக்கொண்டு சக மனிதனை நாடி சென்றால் அந்த ஆத்திகத்துக்கு ஹேட்ஸ் ஆஃப் !
நாத்திகன் " தூத்தேறி இருக்கிறானா இல்லையானு தெரியாத கடவுளை பத்தி இத்தீனி டிஸ்கஷன் என்னத்துக்கு. கண்ணு முன்னே இருக்கிற சக மனிதனை பாருங்கடா"ன்னு
மானுடம் காக்க களம் கண்டால் அந்த நாத்திகத்துக்கும் ஹேட்ஸ் ஆஃப். இதான் நம்ம ஸ்டாண்டு.
ஆனந்த விகடனில் " நான் மனுஷ்ய புத்திரனானது எப்படி?" ன்னு ம.புத்திரர் எழுதியிருக்காரு. அதுல அவர் ஆத்திகத்துல துவங்கி நாத்திகத்துக்கு நகர்ந்து மறுபடி ஆத்திகத்துக்கே வந்திருக்கிறதை கவனிக்க முடிஞ்சது. அதை பகிர்ந்துக்கத்தான் இந்தபதிவு.
மனுஷ்யபுத்திரன் தெரிவித்துள்ள கருத்துக்களும் அவற்றின் மீதான என் கருத்துகளும்
//என்னுடைய கடவுள்,மதம் சார்ந்த நம்பிக்கைகள் தகரத்தொடங்கின//
ஆக இளமைல கடவுள்,மதம் சார்ந்த நம்பிக்கைகள் கொண்டவராகவே இருந்திருக்கிறார்.
//கடவுள் இருக்கும் உலகில் இவ்வளவு மனிதர்கள் இவ்வளவு துயரத்தை அடைய வேண்டியது இல்லை என்று தோன்றியது.//
இது ஆன்மீகத்தின் முதற்படியில் எந்த ஒரு சிந்திக்க தெரிந்த மனிதனுக்கும் தோன்றக்கூடிய எண்ணமே. ஆன்மீகத்தில் படிப்படியாக முன்னேற முன்னேறத்தான் துப்பு துலங்கும். மறை பொருள் விளங்கும் ( மறைங்கற வார்த்தையை வேதம்ங்கற அர்த்தத்துல போடலிங்க..மறைஞ்சிருக்கிறங்கற அர்த்தத்துல தான் போட்டிருக்கன்)
துயரத்துக்கும் இறைவனுக்கும் எந்த தொடர்புமில்லை என்ற நிஜம் போக போகத்தான் புரியும்.
// மனித இருப்பை தவிர ,மனித வாழ்க்கையின் அப்பால் எதுவும் இல்லை//
இது ஆபத்தை கண்டு நெருப்பு கோழி தன் தலையை மணலில் புதைத்துக் கொண்டதை ஒத்திருக்கிறது. மனித இருப்பு மட்டும் இருப்பதா இருந்திருந்தா தமிழ் நாட்ல சன், கலைஞர் டிவி மட்டும் தான் இருந்திருக்கும். மத்த டிவியெல்லாம் ஊத்தி மூடியிருப்பாய்ங்க. பத்திரிக்கைகள்ள முரசொலி மட்டும்தான் இருந்திருக்கும்.
மத்த பத்திரிக்கையெல்லாம் எப்பயோ செத்திருக்கும். மனித இருப்பினூடே ஏதேதோ சக்திகள் ஊடாடுகின்றன.
மனித இருப்பை தவிர பலதும் இருக்கு முன்னோர் நினைவலைகள், பேச்சொலிகள், அவர்தம் அதிர்வுகள், அவர் தம் மூச்சுக்கள், அலறல்கள்,ஓலங்கள், சிரிப்பொலிகள் இப்படி பலதும் பலதும் இருக்கு. சம காலர்களை தீண்டுது, தூண்டுது . இவை மட்டும் இல்லைன்னா முப்பது நாளும் பவுர்ணமி மாதிரி ரஜினி வருசா வருசம் சிவாஜியே எடுத்துக்கிட்டிருந்திருப்பாரு.
மனித இருப்பை தவிர எதுவுமில்லைன்னா காமராஜர் ஒரு மாணவன் கிட்டே தோத்திருக்கமாட்டாரு, ஜெயாவை ஒரு மெடிக்கல் ஷாப் காரர் ஜெயிச்சிருக்க முடியாது.
// மனித வாழ்க்கையின் அப்பால் எதுவும் இல்லை//
மனித வாழ்க்கையின் அப்பால் எதுவும் இல்லைங்கறது உண்மையா இருந்தா இப்பால் (அதாங்க நம்ம வாழ்க்கைல) ஏன் இத்தனை தனித்தன்மைகள். (ரேகை, ஐரீஷ் சாஃப்ட் வேர் எல்லாம் ஸ்தூல விஷயம்) .
இன்னைக்கிருக்கிற டெக்னாலஜிய வச்சி ஹெச்.ஜி.வெல்ஸ் சொன்னாப்ல எல்லா நாடுகளும் சேர்ந்து உலக அரசு ஒன்ன ஸ்தாபிச்சு முயற்சி பண்ணினா, எல்லா நாடுகளும் தங்கள் ராணுவ செலவுகள்ள பாதிய குறைச்சா போதும் ஒரே ஒரு வருஷத்துல உலக குடிமக்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை கொடுத்து ஃபுட்,க்ளாதிங்,ஷெல்ட்டர்,செக்ஸுக்கு ஏற்பாடு பண்ணிரலாம். யூனிஃபார்மிட்டிய கொண்டுவரலாம். வேணாம்னு கடவுள் தடுத்தாரா? இல்லையே.
ஒரே அரசு பள்ளில ஒரே க்ளாஸ்ல 70 பேர் ஒரே யூனிஃபார்ம் போட்டு, ஒரே பாடத்தை, ஒரே ஆசிரியர்கள் நடத்த படிக்கிறாய்ங்க. ஆனாலும் ஒருத்தனும் இன்னொருத்தனை போல இல்லை. ஒருத்தன் கலெக்டராகிறான். இன்னொருத்தன் பில் கலெக்டராகிறான்.
ஒரே தாய்,தகப்பனுக்கு பிறந்த பல ஆண்கள் ஒரே பெண்ணை வச்சிருந்தாலும் ஒரே வீட்ல வாழ்ந்தாலும்அந்த பல ஆணுக்கும் பல கேரக்டர் எப்படி அமையுது. ஒவ்வொருத்தன் பிறப்புக்கு முன்னேயும் என்னமோ இருக்கு, அது இவனை செலுத்துது. இவன் இறப்புக்கு பின்னே என்னமோ காத்திருக்கு அது இவனை இழுக்குது. இங்கே உள்ள ஒவ்வொரு உயிருக்கும் உள்ள அஜெண்டா வேற . மனித வாழ்க்கைக்கு அப்பால்,இப்பால் எப்பாலயும் மஸ்தா கீதுங்கோ.. சுஸ்தாயிராம விழிப்புணர்ச்சியோட தொடர்ந்து வாழ்ந்தா உண்மை புரியும். சத்தியம் தெரியும்.
//.....................என்று தோன்றிய ஒரு நாள் காலையில் " மனுஷ்ய புத்திரன் என்று பெயர் மாற்றிக்கொண்டு //
சரி. கடவுளை கழட்டி விட்டு மனுஷ்யர்களோட உலகத்துல குதிச்சுட்டார். இது நாத்திகத்தின் உச்சம் . வாழ்க வளர்க மனுஷ்ய புத்திரன் என்று பெயர் மாற்றிக்கொண்ட் ......வாசகர் கடிதம் எழுதியதாக கூறும் மனுஷ்ய புத்திரன் கட்டுரையின் இறுதியில் தான் தமது வெற்றிகள் வீழ்ச்சிகள் அனைத்திலும் இருந்து கற்றுக்கொண்டது எல்லாம் ஒன்றே ஒன்றுதாங்கிற முத்தாய்ப்போட என்ன சொல்ல வராருனு பார்ப்போம்
//நாம் யாரும் எப்போதும் முழுமையாக கைவிடப்பட்டவர்கள் அல்ல.//
இது தான் ஆன்மீகத்தின் சாரம். கை கொடுப்பது சக மனிதர்கள் மட்டுமல்ல. அவர்களை நம் பால் உந்தி தள்ள எத்தனையோ சக்திகள் வேலை செய்கின்றன. நானும் ஆரம்ப காலத்தில் எனக்கு உதவினவர்கள் எல்லாம் மகாத்மாக்கள். நான் சாகிற வரை அவிக காலுக்கு செருப்பா உழைக்கனும்னெல்லாம் உ.வசப்பட்டதுண்டு. ஆனால் அந்த கால கட்டம் கடந்து போன பிற்பாடு அவிக சாதாரணர்களா, எனக்கு சமாதி கட்ட பார்த்த சமூகத்தின் ஒரு பாகமாவே தரிசனம் அளித்ததும் உண்டு. இந்த அனுபவங்களுக்கு பிற்பாடுதான் புரிஞ்சிக்கிட்டேன். இங்கே மனிதர்கள் மட்டுமில்லே அவிகள செலுத்தற பல்வேறு சக்திகள் உண்டுன்னு
// எந்த இருளிலும் விடிவதற்கு சற்று நேரமே இருக்கிறது என்பதை நான் அறிந்து வந்திருக்கிறேன்.//
இந்த அறிவு ஏன் எல்லாருக்கும் அவெய்லபிளா இருக்கிறதில்லை? தாய் வீட்டுக்கு போன மனைவி குடும்பம் நடத்த வராத இருட்டுக்கே பயந்து அந்த கணவன் ஏன் தற்கொலை செய்துக்கறாரு. அந்த இருட்டு விடிய சற்று நேரமே இருக்குங்கற அறிவு ஏன் அவருக்கில்லாம போயிருச்சு?
// கொஞ்சம் மனவலிமையும் ,கொஞ்சம் காத்திருக்கவும் முடிந்தால் நாம் விடுபடவே முடியாத துர்கனவு என்று நினைத்த விஷயங்களில் இருந்தும் விடுபடுவோம்.//
இந்த மனவலிமையும், காத்திருக்க முடிதலும் தான் எத்தனை பேருக்கு சாத்தியமாகியிருக்கு. இவற்றை வெறுமனே மனிதர்களின் இருப்பு மட்டும் தந்துரும்னா நானும் மனுஷ்ய புத்திரன் மாதிரியே கன்ஃபெஸ் பண்ணியிருப்பேன். ஆனா அடுத்ததா மனுஷ்ய புத்திரன் சொல்ற "விடுபடவே முடியாத துர்கனவு"லருந்து வெளிப்பட (ஜஸ்ட் 20 வருசம் தலைவா!) எனக்கு எத்தனையோ சக்திகள் உதவுச்சு.
அதனாலதான் மனுஷ்யபுத்திரனோட கருத்துக்களோட என்னால ஒத்துப்போக முடியலை.
அதுலயும் இறைவன் அருளால விடுபடவே முடியாத துர்கனவு என்று நினைத்த விஷயங்களில் இருந்து விடுபட்டு வந்த பிறகு இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறது நல்லதில்லை, விடுபடவே முடியாத துர்கனவுகளில் சிக்கித்தவிக்கும் பின்னவருக்கு இது தவறான வழிகாட்டுதலாயிரக்கூடாதுங்கற ஆதங்கத்துல தான் இப்படி ஒரு பதிவை போட்டேங்கண்ணா.
வில்லங்கமாக்கிராதிங்கண்ணா
பல்வேறு அமானுஷ சக்திகளின் துணையுடன் விடுபடவே முடியாத துர்கனவிலிருந்து விடுபட்டு வந்த பிறகு இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறது என்னோட பார்வைல இரட்டை வேடம்தான்.
தங்களுடைய வார்த்தைகள் சமயங்களில் கொஞ்சம் எல்லைகளை மீறினாலும் பெரிய பெரிய சமாச்சாரங்களையும் ஜஸ்ட் லைக் தட் என்கிற மாதிரி அசால்ட்டாகச் சொல்லிச் செல்லும் உங்கள் நடையை மிகவே ரசிக்க முடிகிறது. அதிலும் நாடு முன்னேறுவதற்கான நல்ல பல திட்டங்களையும் விளையாட்டுப்போக்கிலேயே முன்வைத்துவிட்டு எந்தவித பிரதிபலனையும் பார்க்காமல் சொல்லுகின்ற நேர்மையும் எனக்குப் பிடிக்கிறது.விருப்பப்பட்டால் என்னுடைய எழுத்துக்களுக்கு...http://amudhavan.blogspot.com
ReplyDeleteஎன்னங்க சொல்ல வர்றீங்க? மனுஷ்ய புத்ரன் existentialism பேசுறார், அப்புறம் conditionality பேசுறார். இதெல்லாம் உங்க அகராதிக்குள்ள இல்லைன்னாப் பரவா இல்ல, ஆனா கடவுளெ ஏனுங்க அறியாமைக்குள்ள ஒளிக்கிறீங்க? இதுதான் நீங்க தெளிஞ்ச ஆன்மீகமா?
ReplyDeleteஇரட்டை வேடம் என்ற சொல்லை தவிர்த்து இருக்கலாம்.....எல்லோருமே தினம் பல வேடம் போடுகிறோம் ....
ReplyDeleteயார் மீது அதித அன்புடன் இருக்கிரோமோ ...அவர்கள் மீது தான் அதித வெறுப்பு கொள்கிறோம் என்று ஓஷோ சொன்னதை படித்த போது முதலில் அது உளறல் போல தோன்றியது .....பின் ஆழமாக (12km) சிந்தித்து பார்த்ததில் அது உண்மை என்று தோன்றியது .....
நமக்கு கூட ஒரு சில சமயம் ரொம்ப உயர்வாக தெரியும் மனிதர்கள் ...சில நேரத்தில் ரொம்ப தாழ்வாக தெரிவது உண்டு ....
மனிதர்கள்(நாம்) வெறும் பிம்பத்தை உண்டு வாழ பழகி விட்டோம்.....உண்மை என்ற உணவை கையில் எடுத்தாலே கை நடுங்குகிறது .....
முகமூடியை பற்றி விமர்சனம் செய்து என்ன பயன் ...கலர் கலராக முகமூடிகளை தினமும் நாம் சந்திக்கிறோம் .......
இதுவரை தானே தன் முதுகை பார்த்து விமர்சனம் செய்த ஒரு மனிதனை தான் நான் தேடி கொண்டுள்ளேன் ......
[ஒரு வேலை saloon -ல போய் பார்த்தா கிடைப்பாங்களோ?]
மற்ற படி ..உங்கள் விளக்கம் மிக மிக அருமை ...........
அமுதவன் அவர்களே,
ReplyDeleteமோதிர கையால (மோதக) குட்டுன்னா இதான் போலும். வரவுக்கும், மறுமொழிக்கும், பாராட்டுக்கும் நன்றி. தங்கள் எழுத்துக்களை அவ்வப்போது மேய்வதுண்டு. ஆனால் தங்கள் எழுத்துக்கள் டூ டென்ஸ் சாரி.