எங்க ஊரு எம்.எல்.ஏ வோட ஆதரவாளர்கள் உதவியோட பாபா ஸ்தோத்ர நாமாவளிய லட்சம் பிரதி அச்சிட்டு சனத்துக்கு ஃப்ரீ ஆஃப் காஸ்ட் கொடுக்கனும்னு நினைச்சு கோதாவுல இறங்கினேன்.முதல் ஆயிரம் ப்ரிண்ட் ஆகறப்பயே சீன் ரிவர்ஸ் ஆகி பேப்பர் காஸ்ட் ப்ரிண்டிங் காஸ்ட் எல்லாம் ஊத்திக்கிச்சு. டர்ராயிட்டு மண்டைய பிடிச்சிக்கிட்டேன். பாபாவுக்கும் நமக்கும் ஒரு ட்ராக்ல நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்துச்சே எங்க தப்பு பண்ணிட்டோம்னு யோசிச்சிட்டிருந்தப்ப மறந்தே போயிருந்த பல சமாசாரங்க ஞா வந்தது.
அட.. இதையெல்லாம் வச்சி ஒரு தொடர்பதிவு போட்டா என்னனு ஆரம்பிச்சதுதான் இந்த பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும். இந்த தலைப்புல பாபா எல்லாருக்கும் தெரிஞ்சவரு. சப் கா மாலிக் ஏக் னிட்டு சொன்ன பார்ட்டி. வெட்டி மடிஞ்சிக்கிட்டிருந்த இந்து முஸ்லீம்கள் பரஸ்பர வேறுபாடுகளை துறந்து கை கோர்த்து நிக்க ஒரு களம் அமைச்சுக்கொடுத்து தானே அந்த களமான ஆளு.
இதுலயும் வில்லங்கம் பண்ற பார்ட்டிங்க இருக்கத்தான் செய்றாய்ங்க. சமீபத்துல ஒரு ஐயரு பாபா கடவுளா?ன்னு ஒரு புஸ்தவம் போட்டு சமஸ்கிருதம் எல்லாம் கலந்து சிக்கலா பேட்டியெல்லாம் கொடுத்துக்கிட்டிருந்தாரு. முஸ்லீம்கள் சிலர் பாபா வழி தவறிப்போன முஸ்லீம்னு சொல்றவங்களும் இருக்காய்ங்க. அது வேற கதை.
பதிவோட தலைப்புல இருக்கிற பாபா ஓகே. அதென்னா பாபா ப்ளாக் ஷீப்புன்னு ஆரும் கேட்கலை. நானே சொல்றேன். ப்ளாக் ஷீப்புன்னா கருப்பு ஆடுன்னு அர்த்தம். ஒரு சினிமால சிவாஜி சம்சாரம் நம்ம குழந்தைகள்ள ஒன்னு உங்களுக்கு பிறந்ததில்லைன்னு சொல்ட்டு செத்துருவாய்ங்க. சிவாஜி ஹூ ஈஸ் தி ப்ளாக் ஷீப்புன்னு பாடுவார். ப்ளாக் ஷீப்னா தப்பான ஆளுன்னு அர்த்தம் வச்சிக்கலாம்.
ஆனால் நான் தலைப்புல வேறுமனே ப்ளாக் ஷீப்புன்னு வைக்கலை. பா ஸ்பேஸ் பா ப்ளாக் ஷீப்புன்னு வச்சேன். இது குழந்தைங்க பாடற ரைமோட முத வரி. பாபாவை புரிஞ்சிக்கனும்னா நீங்க குழந்தையா மாறனும். நீங்க அதிர்ஷ்ட சாலியா இருந்தா பாபா உங்களுக்கு கடந்த பிறவில உங்களுக்கு கடன் பட்டிருந்தா குழந்தையா மாறுவிங்க.
ஆன்மீகத்துல நாம பண்ற ஜபம், தியானம்,யோகம் எல்லாத்துக்கும் முடிவு என்னன்னா மறுபடி குழந்தையா மார்ரதுதான் (குழந்தைத்தனமா இல்லே). ஒரு குழந்தை குடிகாரன்,கூத்திக்கள்ளன், நித்ய தரித்திரனான தன் அப்பா சாயங்காலம் வரச்சே ஒனக்கு லேப் டாப் வாங்கிட்டு வரேன்னு சொன்னா அந்த குழந்தை எப்படி கேள்வியே கேட்காம நம்பி காத்திருக்கோ அப்படி ஒரு நம்பிக்கை, காத்திருத்தலை பெறுவதுதான் ஆன்மீகத்தின் இலக்கு. புரிஞ்சுதுங்களா (நன்றி: ஓஷோ).
சரி கடந்த பதிவுல சீட்டுக்கச்சேரில பாபா செய்த அற்புதத்துக்கு வருவோம். ஷீர்டி போன க்ரூப்ல தசரதன்னு ஒரு ஃப்ரெண்டு. டபுள் பி.ஜி. ப்ரைவேட் காலேஜ்ல லெக்சரர்.அன் மேரீட் .எதிர்காலத்துல சகலமும் கைவிட்ட சந்தர்ப்பங்களில் எனக்கு புத்துயிர் கொடுக்கப்போற பார்ட்டி. சீட்டுக்கச்சேரில பாவம் தசரதன் தொடர்தோல்வியடைஞ்சு வேகமா பணத்தை இழந்துக்கிட்டிருந்தார். (பெரும்பணமெல்லாம் இல்லை. பணமா பிரச்சினை? ஈகோ,பிறருடைய பரிதாப பார்வை எட்ஸெட்ரா)
நம்ம ஜாதகமே பலவீனர்கள் பக்கம் நின்னு போராடறதுதானே. உடனே அருள் வாக்கு கொடுத்தேன். (கணக்கு போடாம)இதுவரை எத்தனை தடவை தசரதன் தோத்திருந்தாலும் சரி நான் வந்துட்டனில்லை. இந்த ஆட்டத்துல தசரதன் வின்.
இந்த ட்ரிப்புக்கு மூலகாரணமான பார்ட்டிக்கும் எனக்கும் மத்தில இருக்கிற உறவு. ஃப்ரெண்ட் ஆர் எ ஃபோம்பாங்களே அந்த மாதிரி .அவரு ஒரு வேளை வின் ஆகலன்னா? ன்னிட்டு ரேக்க ஆரம்பிச்சாரு .
நான் "ரயிலிறங்கினதும் பத்து பேருக்கு நான் சொன்னது நடக்கலன்னு நான் சொல்வேன். ஒரு வேளை வின் ஆயிட்டா?"ன்னு கொக்கி போட்டேன்.
"எங்க சாமி ( நம்ம நிக் நேம் இது) பவர் ஃபுல் அவர் சொன்னது நடந்ததுன்னு பத்து பேருக்கு சொல்றோம்."னு அவரு கமிட் ஆனாரு.
தசரதனுக்கு பர்ஸுலருந்து விபூதி எடுத்து வச்சு விட்டேன். தசரதன் வின். ( தசரதன் வின் ஆறவரை நான் அனுபவிச்ச அன் செர்ட்டனிட்டியயும் பாபாவோட நான் வச்சிக்கிட்ட டீலையும் வார்த்தைல சொல்ல முடியாது. )
எனி ஹவ் ட்ரெயின் இறங்கி வேனை பிடிச்சு ஷீர்டி போனோம் . அவரோ சமாதிய தரிசிச்சோம். பாபாவோட சரித்திரம் காலிகோ பைண்ட் புஸ்தவம் வாங்கினேன். சித்தூர் வரதுக்குள்ள முழுக்க படிச்சுட்டன்.
இந்த மாதிரி சாதுக்கள், சத்திய புருஷர்கள் புண்ணிய புருஷர்களோட சரித்திரங்களை மானாவாரியா படிச்சிருந்த எனக்கு பாபா சரித்திரம் படிச்சதும் கன்ஃபார்ம் ஆனது என்னன்னா..
(மீதி அடுத்த பதிவில்)
No comments:
Post a Comment