நேத்து கலைஞர் குடும்ப பைத்தியம்ங்கற தலைப்புல போட்ட பதிவோட தொடர்ச்சி இது. பெரிய ஓட்டல்கள்ள வெளிய ஒரு போர்டு வச்சு இன்றைய ஸ்பெஷல்னு ஹெட்டிங் போட்டு ரொட்டீன் ஐட்டத்தையே லிஸ்ட் அவுட் பண்ணி வச்சிருப்பாய்ங்க. அதைப்போல இந்த மினி போர்டை வச்சிருக்கேன். அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிச்சுருங்க.
பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்:9
குடிப்பதை பற்றி மணி கணக்காய் : 2
நேத்து கலைஞருக்கு குடும்ப பைத்தியம்ங்கற தலைப்புல ஒரு பதிவு போட்டிருந்தேன். அதை நீண்ட நெடுங்காலத்துக்கப்புறம் பிரபலமாக்கின புண்ணியாத்மாக்களுக்கு முப்பது நாளும் பவுர்ணமியாகட்டும். கிழக்கு திசைல இருந்து (ஜோதி?)லட்சுமி கடாட்சம் ஏற்படட்டும். மொக்கை போதும் மேட்டருக்கு வருவோம். கடந்த பதிவுல என்ன சொன்னேன்?
பிரச்சினைன்னு வந்தா அதனொட விளைவு என்ன? உங்க பிரச்சினையால போக கூடியது என்னனு பார்க்க சொன்னேன். போக கூடியது உசுரா? மசுரே போச்சுன்னு விட்டுருங்கன்னேன். அய்யோ நான் செத்துப்போயிட்டா என் குடும்பம் நடுத்தெருல நிக்குமேன்னு சொல்விங்க. உங்க குடும்ப முன்னேற்றத்துக்கு நீங்களே தடையா இருக்கிங்கன்னு சொன்னா உதைக்கவே வருவிங்க.ஆனால் உண்மை இதான்.
உங்க வீட்ல பசங்க ஸ்கூல்ல டூர் போறாங்கன்னு வைங்க. உங்க மிஸஸ் என்ன பண்றாய்ங்க. பையன் அ பெண்ணுக்கு தேவையான ஐட்டங்களையெல்லாம் யோசிச்சு யோசிச்சு பேக் பண்றாய்ங்க. பேதியானா அது நிக்க மாத்திரை, ஆய் வரலன்னா வர்ரதுக்கு மாத்திரைன்னு ஒவ்வொண்ணா ரோசிச்சு ரோசிச்சு பேக் பண்ணி வழியனுப்பறாய்ங்க.
இந்த உலகமும் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் தான். ஒரு தாய்தான் நம்மை எல்லாம் இங்கன அனுப்பியிருக்காய்ங்க. நமக்கு என்ன்னென்ன சந்தர்ப்பமெல்லாம் வரும், என்னென்னல்லாம் தேவைப்படும்னு கேல்க்குலேட் பண்ணி பேக் பண்ணி அனுப்பியிருக்காங்க. ஹ்யூமன் மதர் பேக் பண்ணதெல்லாம் ஸ்தூலமான விஷயங்கள். பையே காணாம போயிரலாம். சந்தர்ப்பமே வராம போயிரலாம். சந்தர்ப்பம் வந்தாலும் உங்க பேக்கிங்க்ல இருக்கிற சமாசாரம் உதவாம போயிரலாம்.
ஆனா நம்மை இந்த உலகத்துக்கு அனுப்பினது டிவைன் மதர். அவிக பேக்கிங் எல்லாம் சூட்சுமம். கல்வி மாதிரி, ஆன்மா மாதிரி தண்ணில நனையாது, நெருப்புல எரியாது, திருடர்களால் கொள்ளையிட முடியாது. இந்த பூமிக்கு வந்த ஒவ்வொரு உயிரும் தன்னிறைவு பெற்றதுன்னா நம்ப முடியலல்லியா?
ஒரு உதாரணம் மூலம் இதை விளக்கறேன். ஒரு ஃபேமிலி. கணவன் மனைவி. ஏழெட்டு பசங்க. ரெண்டாவது பெண் குழந்தை. கடைசில பெண் குழந்தை. மொதல்ல மத்தில எல்லாம் ஆண்கள். அப்பாவுக்கு சொந்த வெல்ல மண்டி. காலைல 6 மணிக்கு போனா ராத்திரி 10 மணிக்குத்தான் வருவாரு. பெரிய பையன் தன் ஃப்ரெண்ட் ஒருத்தனோட வலைல விழுந்து சினிமா,சிவாஜின்னு பணத்தை வேட்டு விட்டுக்கிட்டிருந்தான். ஃப்ரெண்ட் இவன் தங்கைக்கு வலை வீசினான். சிக்கினாள். சீரழிஞ்சாள். திடீர்னு அப்பா செத்துப்போயிட்டாரு.
என்ன ஆயிருச்சு? ஒன்னும் ஆகலை. அந்த பெண்ணுக்கு அபார்ஷன் பண்ணி வட நாட்டுப்பக்கமா கண்ணாலம் கட்டி அனுப்பிட்டாய்ங்க. பையன் வெல்ல மண்டி நடத்தற அளவுக்கு வசதி போறாம தூள் வெல்ல பிசினஸ் ஆரம்பிச்சு தூள் கிளப்பினான்.மத்த பசங்க படிப்பை கன்டின்யூ பண்ண முடியாம ஒருத்தன் மெடிக்கல் ஷாப்ல வேலைக்கு சேர்ந்தான். ஒருத்தன் பார் அண்ட் ரெஸ்டாரண்ட்ல வேலைக்கு சேர்ந்தான். மத்த பசங்க வெல்டிங் ஷாப்ல சேர்ந்தாய்ங்க. வேலை கத்துக்கிட்டு சொந்தமா வெல்டிங் ஷாப் வச்சாய்ங்க. நல்லாவே கொழிச்சாய்ங்க. கண்ணாலம் கட்டினாங்க. தங்கச்சிக்கு கண்ணாலம் கட்டி வச்சாய்ங்க. ஒரு ரவுண்டு முடிஞ்சது. அவிங்க அப்பா இல்லைன்னு எதுவும் நிக்கலை.
(இன்னைய தேதிக்கு பெரிய பையன் இல்லை. ஹார்ட் அட்டாக். தங்கை விதவையாயிட்டா. பார்ல வேலை செய்தவன் ஆல்க்கஹாலிக்காயிட்டான். வெல்டிங் ஷாப் வச்ச பசங்க பரஸ்பர தகராறுல பிரிஞ்சு போய் கடை வச்சு நஷ்டப்பட்டாய்ங்க
விதவையாயிட்ட தங்கச்சி நல்ல ரெப்புட்டேஷன் உள்ல ஒரு தனியார் ஸ்கூல்ல நல்ல சம்பளத்துக்கு வேலை செய்யறாள். அண்ணன் தம்பிங்க ஒருத்தனுக்கு தெரியாத ஒருத்தன் தங்கச்சிக்கிட்டே கையேந்தி வயித்த ரொப்பிக்கிறாய்ங்க. இதுக்கெல்லாம் காரணம் அவிக ஈகோ. அகங்காரம். அவிக அப்பா இருந்திருந்தாலும் இதேதான் நடந்திருக்கும். சனம் போஸ்ட் கார்ட் மாதிரி ஆண்டவன் அட்ரசை ப்ரிண்ட் பண்ணி அனுப்பிட்டான். அவிக சேர வேண்டிய அட்ரசுக்கு சேர்ந்தே தீருவாய்ங்க. நீங்க இருந்தாலும்,இறந்தாலும் அவிக சேர வேண்டிய அட்ரசுக்கு சேர்ந்தே தீருவாய்ங்க. இன்னம் சொல்லப்போனா நீங்க இல்லன்னா அவிகளுக்குள்ள மறைஞ்சிருக்கிற/அதாவது இயற்கை மறைச்சு வச்சிருக்கிற டேலண்ட் திறமையெல்லாம் நயாகரா நீர் வீழ்ச்சி மாதிரி கொட்டும். சாதாரணமா அஞ்சடி தாண்டறவன் புலி துரத்தினா பத்தடி தாண்டுவான் . தெரியும்ல )
அடுத்து உங்க பிரச்சினையால போக கூடியது மானமா? மானத்துக்கான டெஃபனிஷனெல்லாம் மாறிக்கிட்டே இருக்கும்னும் சொன்னேன்.
உங்க வீட்டுக்கோ எங்க வீட்டுக்கோ ஆத்திரம் அவசரத்துக்கு ஒரு கான்ஸ்டபிள் ஃப்ரெண்டு யூனிஃபார்ம்ல வந்து போயிட்டாலே அக்கம் பக்கம் கேட்கிறவங்களுக்கு பதில் சொல்லி மாளாது.லஞ்ச ஒழிப்பு ரெய்டுல சிக்கினவங்க அந்த வழக்குலருந்து வெளிவர என்ன செய்றாய்ங்க தெரியுமா? கணக்குல வராத சொத்துக்கெல்லாம் கணக்கு கேட்டா " என் அக்கா, தங்கச்சி, மனைவி,மகள் எல்லாம் பலான தொழில் செய்து சம்பாதிச்சு என் கிட்ட கொடுத்துவச்சாய்ங்கன்னு அஃபிடவிட் தராங்களாம். உங்க பிரச்சினையோட விளைவா இது மாதிரி ஒரு மானக்கேடு வந்துருமான்னு யோசிங்க. வராதுல்ல .. விட்டுத்தள்ளுங்க.
என் மகளுக்கு ஏழெட்டு வயசு இருக்கும்போது இன்டர் நெட்டுக்கு கூட்டிப்போவேன். அரை மணி நேரத்துக்கொரு தம் போடலன்னா வேலைக்காகாதே. அந்த நேரத்துல மகளுக்கு கூகுல் இமேஜஸ், பெயிண்ட் அ பவர் பாயிண்ட் ஓப்பன் பண்ணி கொடுத்துட்டு வெளிய வந்துருவேன். இப்படியாக அவளுக்கு கம்ப்யூட்டர், இன்டர் நெட் மேல ருசி வந்துருச்சு.
நான் போற அதே நெட் சென்டர்ல ரூ 300 க்கு மேல அக்கவுண்ட் வச்சி தீபாவளீ கொண்டாடிட்டா. நெட் காரன் தயங்கி தயங்கி விஷயத்தை சொன்னான். அப்பல்லாம் ரெம்ப கஷ்ட ஜீவனம். மேற்படி 300 ரூ பணம் 3 லட்சம் மாதிரி. எப்பவோ வந்த 20,000 ரூ காசுல வாங்கின செல் ஃபோனை அடகு வச்சி 1 மணி நேரத்துல செட்டில் பண்ணென். செல்ஃபோன் வந்த புதுசு. அது அடிச்சா காசுதான். (பார்ட்டி வருவாய்ங்க)
இருந்தாலு அடகு வச்சு செட்டில் பண்ணியாச்சு.
நம்ம சூப்பர் ஸ்டார் மகள் கோடிக்கணக்குல கடனாளியாயிட்டதாவும் அந்தம்மாவோட லவ்வர் தான் செட்டில் பண்ணதாவும் படிச்சோம். இதுலருந்து என்ன தெரியுது மானம்ங்கறது நாமா க்ரியேட் பண்ணிக்கிற சமாச்சாரம் தான். வேணாம்னா விட்டுரலாம்.
"மானம் பெரிதென்று வாழும் மனிதர் தம்மை மான் என்று சொல்வதில்லையா"ன்னு பாட்டெழுதின பார்ட்டியாகட்டும், அதுக்கு வாயசைச்ச பார்ட்டியாகட்டும் எப்படியெல்லாம் மானமிழந்து வாழ்ந்தாங்கன்னு தனியே சொல்ல தேவையில்லை. மானம்ங்கறது லக்சரி. உசுருங்கறது எசன்ஷியல்.
உசுரு போகுதுன்னு பயந்தாலும் அதுல சின்ன லாஜிக் இருக்கு. ஆனா மானம் போகுதுன்னு பயப்படறதுல லாஜிக்கே இல்லை. யாரோ நாலு பேர் சிரிப்பாய்ங்கன்னு நீங்க அழறிங்க. யார் அந்த நாலு பேரு. உங்களாட்டம் ரத்தம்,சதை,கோழைத்தனம், தயக்கம்,மயக்கம் கொண்ட உங்களை போன்ற மனிதர்கள் தானே..
எல்லா வீட்லயும் மண்ணடுப்புத்தான்னு சொல்வாய்ங்க. கேஸ் அடுப்புத்தான். வீட்டுக்கு வீடு வாசப்படிம்பாய்ங்க. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? பிரச்சினைங்கறது எல்லாத்துக்கும் பொதுதான். சாமானிய மக்களோட நிலைதான் இதுன்னுல்ல. வி.ஐ.பி, வி.வி.ஐ.பிங்க பொழப்பும் இதான்.
கலைஞரோட வாழ்க்கைலருந்து அந்த 13 வருசத்தை நீக்க முடியுமா? சர்க்காரிய கமிஷனை நீக்க முடியுமா? இல்லை ஈழத்தமிழர்களை கைவிட்ட பச்சை துரோக அத்யாயத்தைத்தான் நீக்க முடியுமா? இவர் பண்ண பாவங்களையெல்லாம் தலைல சுமந்துக்கிட்டிருக்கிற மு.க.முத்துவைத்தான் இவர் வாழ்க்கைலருந்து நீக்க முடியுமா?
எம்.ஜி.ஆருன்னா ஷக்திமான் ரேஞ்சுல பில்டப் தர்ராய்ங்க. அவரு உசுரோட இருக்கிறப்பவே அவரோட கட்சி பார்லிமென்ட் எலக்சன்ல ஊத்திக்கிச்சு. ஒரே ஒருத்தர் ஜெயிச்சார். அவரும் டி.எம்.கேல போய் சேர்ந்துட்டாரு. (ஏ.வி.பி ஆசைத்தம்பி?)
உங்களுக்கு ஒரு பிரச்சினை வந்ததும் அந்த பிரச்சினை எத்தனை புராண புருசங்க, சரித்திர புருசங்க, வி.ஐ.பி, வி.வி.ஐ.பிங்களுக்கெல்லாம் வந்திருக்குனு பாருங்க. அப்படியே நீங்க அறிஞ்ச சர்க்கிள்ஸ்ல யாருக்கெல்லாம் வந்திருக்குனு பாருங்க. அவிகல்லாம் எந்தெந்த வகைல உங்களை விட உசந்தவங்கனு பாருங்க. ஆட்டோ மேட்டிக்கா உங்க மனசு ஃபேன் காத்துல காஃபி மாறி ஆறி போயிரும்.
அடுத்த ஸ்டெப் என்னன்னா? உங்களுக்கு வந்த பிரச்சினை அவிகளுக்கு வந்தப்ப அவிக எப்படியெல்லாம் துடிச்சாய்ங்க,பதைச்சாய்ங்க, அலறி புடைச்சாய்ங்கனு ரோசிச்சு பாருங்க.. மனசு ஐஸ் காஃபி மாதிரி ஆயிரும்.
பிரச்சினை எங்கே ஆரம்பமாகுது? நீங்க நெனைக்கிறது ஒன்னு, நடக்கிறது ஒன்னா இருக்கிறப்ப பிரச்சினை ஆரம்பமாகுதுன்னு சொல்லியிருந்தேன். நீங்க நினைக்கிறதும், நடக்கிறதும் ஒன்னாயிருக்க என்ன பண்ணனும்?
உங்க ஜட்ஜிங் கெப்பாசிட்டியை அதிகரிச்சுக்கனும்.அடுத்தவன் ஒரு முயற்சில இறங்கறச்ச இன்னா மாரி கரீக்டா ஜட்ஜ்மெண்ட் கொடுக்கறிங்க. (இது உருப்படாது) ஆனால் உங்க விஷயத்துல மட்டும் உங்க கஸ்ஸிங் புஸ்ஸாயிருதே ஏன்? என்ன காரணம்?
உங்க மேல உங்களுக்கு இருக்கிற அட்டாச் மெண்ட் தான் இதுக்கு காரணம். எல்லாரையும் கடிக்கிற நாய் உங்களையும் கடிக்கத்தான் செய்யும். ஆனால் உங்க மேல உங்களுக்கிருக்கிற அட்டாச்மெண்ட், ஈகோவா மாறி " நாயா ஹ.. என்னையா கடிக்குமா'னு அது ஆசனத்துல விரலை விட்டா அது கடிக்காம விடுமா என்ன?
உங்களை நீங்க தாலாட்டிக்கிறதை விட்டுரனும் . உங்களை விட்டு விலகி நின்னு ரோசிக்கனும்.
என்னுது கடக லக்னம், லக்னாதிபதி சந்திரன், அவரு 15 நாள் வளர்வார். 15 நாள் தேய்வாரு. அவரு வளரும்போது சுபர், தேயும்போது பாபர். இதனால என்னோட வாழ்க்கைல இரண்டு வித வாழ்க்கை முறைகள், இரண்டு வித சிந்தனா போக்கு, இரண்டு வித பேச்சு, இரண்டு வித செயல்பாடுகள் டூ இன் ஒன்னா பேக் ஆகியிருக்கிறத குன்ஸா உணர முடிஞ்சது .
இது ரொம்ப சுவாரசியமா இருந்ததால இந்த இரட்டைத்தன்மையை தீர்கமா கவனிக்க ஆரம்பிச்சேன். நான் கவனிச்சது இந்த இரட்டைத்தன்மையைத்தான் ஆனால் இது டேரா போட்டிருக்கிறது மனசுக்குள்ளத்தானே. மனசுங்கற டேப்பு விசித்திரமானது. நீங்க அதை கவனிக்க ஆரம்பிச்சா பாஸ் பட்டன் அமுக்கின மாதிரி தேங்கிரும். இல்லன்னா கூவம் மாதிரி ஓட ஆரம்பிச்சுரும்.
வளர் பிறைல என்னோட ப்ளஸ் பாயிண்ட்ஸ புரிஞ்சிக்கிட்டேன். தேய் பிறைல என் மைனஸ் பாயிண்ட்ஸை புரிஞ்சிக்கிட்டேன். ஆக மொத்தத்துல என்ன நான் அறிஞ்சிக்கிட்டேன்.
"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்"(கண்ணதாசன் தானே?)
நீங்களும் உங்களை அறிஞ்சிக்கங்க. இருப்பை வச்சித்தான் செலவு பண்ணனும். உங்க கெப்பாசிட்டிய வச்சுத்தான் பிரச்சினையை ஃபேஸ் பண்ணனும். பிரச்சினைகள்ள ரெண்டு விதம். தானா வர்ரது சிலது. நாமா வெத்தலை பாக்கு வச்சி கூப்பிடறது சிலது.
இதுகளை அடுத்த பதிவுல பிரிச்சு மேய்வோம்.
super concept.
ReplyDeleteG