Tuesday, June 22, 2010

"பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் :8 "

பாபாவோட சரித்திரத்துக்கு உள்ள பவர் என்னன்னு (பாசிட்டிவ், நெகட்டிவ்) கடந்த பதிவுல பார்த்தோம். பாபா  என் மேல நம்பிக்கை வச்சு தன் பக்தர்களை எனக்கு எண்டார்ஸ் பண்ண கூத்தை இந்த அத்யாயத்துல பார்க்கலாம்.  தொழில் முறை  ஜோதிடன்னு  பெருமையா சொல்லிக்கிட்டாலும்  நம்ம ஆஃபீஸ்ல கூட்டம் ஒன்னும்  நெறியாது. ஒரு க்ரூப் வெளிய போய் இன்னொரு க்ரூப் வர்ரதுக்குள்ள டீக்கடைல டீ,தம்மு, சாக்ரடீஸ் மாதிரி பேச்சு. மறுபடி வந்து உட்கார்ந்தா தான் செகண்ட் இன்னிங்ஸ். சில சமயம் லஞ்ச் அவரே வந்துரும். மதியம் தூக்கம். மறுபடி சாயந்திரம்தான் பிராக்டீஸு. மத்த சோசியருங்களுக்கு பணம் வர்ர நேரம் வந்துட்டா க்ளையண்ட்ஸ் வந்துருவாய்ங்க. நம்ம கேஸ்ல க்ளையண்டுக்கு பிரச்சினை தீர்ர நேரம் வந்தாதான் நம்ம கிட்ட வருவாய்ங்க.

எனக்கு  என்னவோ சீரியசா, சைண்டிஃபிக்கா கணக்கு போட்டு பலன் சொல்றதாத்தான் நினைப்பு. ஆனால் வர்ரவங்க  ஆத்தா கனவுல சொன்னா. அவள் சொன்னதை நீங்க அப்படியே சொல்றிங்க. நேத்து என் கனவுல முகமெல்லாம் சேப்பா சாயம் பூசிக்கிட்டு சின்னப்பையன் வந்தான். (பால ஆஞ்சனேயர்?) - இப்படி என்னென்னமோ சென்டிமென்ட்
வசனமெல்லாம்   சொல்வாய்ங்க. நான் கடந்த காலத்தை சொல்ல அதை அவிக ஆமொதிக்கறச்ச எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கும் (த பார்ரா சோசியத்துல இவ்ளோ விசயம் கீதான்னு).

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா என்னைத்தேடிவர்ரவங்க போர்டை பார்த்து வர்ரதோ, குருட்டுத்தனமா வர்ரதோல்லாம் நடக்காது. எதோ ஒரு சக்தி அவிகளை தள்ளி விட்டாத்தான் வரமுடியும்.

நான் ஷீர்டி போய் வந்த பொறவு ஒவ்வொரு வியாழக்கிழமையும் யாரோ ஒரு பாபா பக்தர் என்னை என் ஆஃபீசுக்கு வர்ரதும் தீர்வோட திரும்பி போறதும் நடக்க ஆரம்பிச்சது.

நான் என்னவோ பாபாவுக்கும் எனக்கும் 1998 ஜனவரிக்கு மேலத்தான் தொடர்பு ஏற்பட்டதா நினைச்சு எழுத  ஆரம்பிச்சேன். ஆனால் 1997லயே இந்த லிங்க் ஆரம்பிச்சத இப்பத்தான் கெஸ் பண்ண முடியுது.  மினி வேன் நிறைய சாமான்களோட பாகாலா போன நான் ரெண்டு மூட்டை சாமான் , பாய் சுருட்டலோட சித்தூர் வந்தேன். அப்போ நான் ஏறக்குறைய வெளியூர் காரன் கணக்கு. அப்போ ஒரு கமர்ஷியல் ஆர்டிஸ்ட் அறிமுகமானான். பேரு புஷ்பா . சுமாரான ஆர்டிஸ்டுதான். ஆனால் பாபா படம் வரையறதுல ஸ்பெஷலிஸ்ட்னு பேரு.

அப்போ ஆஃபீஸ் போடற அளவுக்கு வசதியெல்லாம் கிடையாது (சோத்துக்கே லாட்டரி) . அதனால புஷ்பாவோட கடைலயே ஒரு பக்கமா சோசியம் சொல்லிக்கறாப்ல அரேஞ்ஜ்மென்ட். 

அந்த சமயம் ராஜரிஷிங்கற பத்திரிக்கைல நான் எழுதின  தொடர் கட்டுரை வெளிவந்திருந்தது. அதையெல்லாம் மென்ஷன் பண்ணி தமிழ் தெலுங்குல ஆயில் பெயிண்ட்ல போர்டெல்லாம் எழுதி நல்லா தான் ஆரம்பிச்சது.

எங்க ஊரு எம்.எல்.ஏ சி.கே பாபு ஷிர்டி பாபாவுக்கு கட்டமஞ்சில ஒரு கோவில் கட்டியிருந்தாரு. கட்டின புதுசுல  அந்த கோவில் வெளிப்புற சுவத்துல பாபா படத்தை புஷ்பா தான் வரைஞ்சிருந்தானாம். அதுக்கப்புறம்தான் தொழில் சூடுபிடிச்சதுன்னு அப்பப்ப சொல்வான். தன் பையனுக்கு கூட சாயின்னு பேரு வச்சிருந்தான்.அவ்ளோ பக்தி(?)

சாலை அகலப்படுத்தல் காரணமா மேற்படி கோவிலோட சுவரு இடிக்கப்பட்டுருச்சு.
மேப்பிங்கை உள்ளாற தள்ளி சுவர் கட்டி முடிச்சு பாபா படம் போடறதுக்காக இவனுக்கு ஆள் வந்தது. இவன் லாலா பார்ட்டியாகி பகல்ல தண்ணி போட்டு மதியத்துல தூங்க வீட்டுக்குப்போக ஆரம்பிச்ச  புதுசு. டைம் கீப் அப் பண்ண முடியாம தவிச்சிட்டிருந்தான். நான் அப்பப்போ ஞா படுத்திக்கிட்டே இருந்தேன்.

பார்ட்டி அசையற மாதிரி காணோம். யாரோ வந்து சொன்னாய்ங்க. வேற ஒரு ஆர்ட்டிஸ்ட் கமிட் ஆயிட்டான். க்ராஃப் எல்லாம் போட்டாச்சு. குழாயடில ஒரு குடத்துல தண்ணி குதிச்சிக்கிட்டிருக்கிற நேரம் இன்னொருத்தி வந்து அதை இடிச்சு கீழ தள்ளிட்டு தன் குடத்தை வைப்பாளே அது மாதிரி புஷ்பா புறப்பட்டு போய் நான் தான் வரைவேன்னு வாதம் பண்ணி, அழுது,ஆர்பாட்டம் பண்ணி வ்ரைய ஆரம்பிச்சான்.

நான் ரொம்பவே ரேஷ்னலா திங்க் பண்ணி "த பாரு அப்போ உனக்கு நல்ல நேரம் துவங்கியிருக்கும். அந்த  நேரம் பார்த்து பாபா படம் வரைய வாய்ப்பு வந்திருக்கும். உன் நல்ல நேரம் காரணமா தொழில் சூடு பிடிச்சிருக்கும். நீ பாபா படம் போட்டதாலதான் சூடு பிடிச்சதுன்னு நினைச்சிக்கிட்டிருக்கே. உன் எண்ணம் தப்பு.  அந்த ஆஃபர் உனக்குத்தான் முதல்ல வந்தது. நீ நெக்லெக்ட் பண்ணே. இப்போ எவனோ கமிட் ஆகி க்ராஃப் எல்லாம் போட்டுட்டான். இப்ப போயி நீ பூர்ரது  நல்லதில்லை. இதை உன் பாபா கூட சப்போர்ட் பண்ண மாட்டாரு"ன்னு சொன்னேன். பார்ட்டி கேட்டுக்கற மாதிரி இல்லை.

அலைஞ்சு பறை சாற்றி சாதிச்சான். சின்ன வயசுல எங்கம்மா கத்துக் கொடுத்தாய்ங்க."சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்"னு. நான் ஒன்னும் ஓவியன் கிடையாதுதான். ஆனால் ஒரு ஆர்ட்டை பார்த்ததுமே அதை வரைஞ்சவன் கத்துக்குட்டியா, கலைக்குட்டியான்னு சொல்லிருவன். இதுல புஷ்பா வரையறப்பல்லாம் பார்த்து பார்த்து  அவன் ஹேங்  ஓவர்லயோ,குடிக்க போற அவசரத்துலயோ ஏதாச்சும் தப்பு பண்ணிட்டா இதம்பதமா சொல்லி திருத்தற ரேஞ்சுக்கு வந்திருந்தேன்.  ஓரளவு கலர் சென்ஸ்,  கலரிங்கை வச்சு மேடு பள்ளம் காட்டறது,  எங்கே வெளிச்சம் வரனும் , எங்கே இருட்டு வரணும் இத்யாதி குன்செல்லாம் கத்திருந்தேன்.

இவன் உச்சி வெயில்ல சாரத்து மேல ஏறி வரைய ஆரம்பிச்சான். நான் டப்பா பிடிச்சிக்கிட்டிருந்தேன். (பெயிண்ட் டப்பாங்கண்ணா)  நான் என்னதான் முன் ஜாக்கிரதை முத்தண்ணா கணக்கா உஷார் படுத்திக்கிட்டே இருந்தாலும்  எம்.எல்.ஏ தன்னோட பூஜை அறைல வச்சிருக்கிற ஃபோட்டோவை மாடலுக்கு கொடுத்திருந்தும்  புஷ்பா சொதப்பித்தள்ளிட்டான். விதியில்லாம ஃபோட்டோவ என் கிட்ட கொடுத்து எங்க தப்பாயிருச்சு பாரு சாமீன்னான்.  இங்கன இருந்து பார்த்தா ஒன்னும் சொல்ல முடியாது. நான் கீழே போயி பார்க்கிறேன்னு ஃபோட்டோவோட இறங்கி வந்தேன்.

கையில பாபாவோட ஸ்டீல்  ஃப்ரேம் போட்ட படம். சுவத்துல புஷ்பா சொதப்பிட்ட படம்.  ரெண்டையும் பொறுமையா மேச் பண்ணி  பார்த்து பாயிண்ட்ஸ் நோட் பண்ணிக்கிட்டிருக்கேன். கையில இருக்கிற  பாபா படத்து மேல எம்.எல்.ஏ சாரோட உருவம் நிழலாடுது. நான் என்.டி.ஆர் ஃபேன். அவரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. எல்லா எலக்சன்லயும் அவருக்கு விரோதமா வேலை செய்திருக்கேன். அவரைபத்தி எத்தனையோ கதைகள். கற்பனைகள் செலாவணில இருக்கு. முதுகெலும்புக்குள்ள காத்து புகுந்தாப்ல ஒரு ஃபீலிங். இருந்தாலும் " அதை " சட்டை பண்ணிக்காம புஷ்பாவுக்கு கரெக்ஷன்ஸ் சொல்லிக்கிட்டிருந்தேன். எம்.எல்.ஏ சார் " தா ஒரு நிமிஷம் படத்தை கொடுப்பா" ன்னாரு. நான் அப்பத்தான் அவரை பார்த்தாப்ல சீன் போட்டு படத்தை கொடுத்தேன். ஒரு நிமிஷம் ரெண்டையும் பார்த்துட்டு ஃபோட்டோவ திருப்பி கொடுத்துட்டு போய்ட்டாரு.

பாபா அன்னைக்கே எங்க எம்.எல்.ஏவுக்கும் எனக்கும் ஒரு முடிச்சு போட்டுட்டாருன்னு நினைக்கிறேன்.  அந்த முடிச்சோட விளைவு தான் கடந்த வியாழக்கிழமை சி.கே பாபுவோட ஆதரவாளர்களோட ஸ்பான்சர்ஷிப்ல  நான் அச்சிட்ட  ஷிர்டி பாபாவோட சத நாமாவளி பாக்கெட் சைஸ் புத்தகத்தை சி.கே ரிலீஸ் பண்ணாருன்னு நினைக்கிறேன்.


பாபா அன்னைக்கு முடிச்சு போட்டது உண்மை இல்லேன்னா சந்திரபாபு ஏன் என்.டி.ஆருக்கு ஆப்பு வைக்கனும். என்.டி.ஆர் ஏன் சாகனும்? என் ஐடியல் ஹி யான என்.டி.ஆரை கொன்ன  சந்திரபாபுவ பழி வாங்கற உத்தேசத்துல அவரை வில்லங்கத்துல சிக்க வைக்கவே  நான் ஏன் அண்ணாருக்கு  ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை அனுப்பி வைக்கனும். அவரோட பி.ஏக்கள் ஏன் அதை குண்டி கீழ போட்டு சூடுபடுத்திக்கிட்டே 3 வருஷம் கழிக்கனும்.  நான் ஏன் அவரை தினசரிகள்ளயும், லோக்கல் டிவிலயும்  கிழி கிழின்னு கிழிக்கனும்.

மெல்ல மெல்ல எனக்குள்ள இருந்த காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வுகள் மங்கி ஒய்.எஸ்.ஆர்ல என்.டி.ஆரை பார்க்கிற ரேஞ்சுக்கு நான் ஏன் வரணும்?  2004 தேர்தல்லயாவது தெ.தேசத்தை வீட்டுக்கு அனுப்புங்கன்னு பாம்லெட் போட்டு சி.கே.பாப்வை இன்டைரக்டா சப்போர்ட் பண்ணேன். ஆனால் 2009 எலக்சன்ல அதிரடியா களம் இறங்கி தொகுதி மொத்தம் சுத்தி வந்து பிரச்சாரம் செய்தேன். இதெல்லாம் பாபாவோட திருவிளையாடல்தான்னு நான்  நினைக்கிறேன். இதையெல்லாம் பாபா ஒரு  குன்ஸா  சொல்ல முயற்சி பண்ணியிருக்காரு. நான் தான் அதை கரெக்டா டீ கோட் பண்ணிக்கல போல.

நான் ஷீர்டி போய் வந்த பொறவு ஒவ்வொரு வியாழக்கிழமையும் யாரோ ஒரு பாபா பக்தர் என்னை என் ஆஃபீசுக்கு வர்ரதும் தீர்வோட திரும்பி போறதும் நடக்க ஆரம்பிச்சது. அதாவது பாபா தன் பக்தர்களை எனக்கு என்டார்ஸ் பண்ண ஆரம்பிச்சாருன்னு சொல்ல ஆரம்பிச்சு ஒரு வருஷம் முன்னாடி போய் பாபா படத்துல எம்.எல்.ஏ உருவம் நிழலாடின சம்பவத்தையும் 2004,2009 தேர்தல்கள்ள அவருக்கு ஆதரவா பிரச்சாரம் செய்ததையும் சொன்னேன்.  சி.கேவும் பாபாவோட பக்தர்தான். திடீர்னு அவரை ஒரு கொலைவழக்குல தொடர்பு படுத்தி சந்திரபாபுவோட அரசு பந்தாட ஆரம்பிச்சது.

அன்னைய தேதிக்கு சி.கே.பாபு மேல  எனக்கு  எந்தவித பிரத்யேக அக்கறையோ சிம்பத்தியோ  கிடையாது. பாஸ்டுக்கும் அன்னைய தேதிக்கும் என்ன ஒரு வித்யாசம்னா 1999 தேர்தல்ல சந்திரபாபு பசைபோட்ட மாதிரி ஷேடோ பார்ட்டி அது இதுன்னு போலீஸை அவர் பின்னாடியே போட்டும் ஜெயிச்சு வந்துட்டாரு. எனி ஹவ்  உண்மையான பப்ளிக் சப்போர்ட் இருக்கிற ஆளுன்னு ஒரு அபிப்ராயம் வந்தது. அதுக்கு முன்னாடி தெ.தேசம் சர்க்கிள்ள சி.கே ஜெயிச்சப்பல்லாம் ரிக்கிங் நடந்துருச்சுப்பா, கள்ள ஓட்டு போட்டுட்டாங்கப்பா  என்று நடக்கும் பிரச்சாரத்தை நானும் நம்பி வந்தேன்.

சி.கே பாபு அரெஸ்ட் ஆன ராத்திரி எனக்கு சிவராத்திரியாயிருச்சு. ஏனோ மறுபடி மறுபடி அவருக்கு உதவனும் , அவருக்கு உதவனும்ங்கற எண்ணம் மறுபடி மறுபடி உதயமாச்சு.

விடியல்ல தான்  ஞானோதயம் ஆச்சு. ஓஹோ பாபா சி.கே பாபுவுக்கு உதவச்சொல்லி எண்டார்ஸ் பண்றாரு...  ப்ரெட் ஹண்டரான நான் சர்வ சக்தி வாய்ந்த ஒரு  மானில அரசுக்கு எதிரா ,ஒரு எம்.எல்.ஏவுக்கு எந்த விதமா உதவ முடியும்னு அப்ப யோசிக்கல.

ரஜினி காந்த் சொல்வாரே ஆண்டவன் சொல்றான். அருணாச்சலம் செய்றான்னு அந்த கதை. அவருக்கு எப்படி உதவ முடிஞ்சது. அதுக்கு பிரதிபலனா  பாபா எப்படி எனக்கு உதவினார்ங்கற சங்கதியெல்லாம் அடுத்த அத்யாயத்துல சொல்றேன்.

No comments:

Post a Comment