இதென்னடா மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுன்னு எரிச்சலாயிராதிங்க.கேயாஸ் தியரி தெரியுமில்லை. இந்த உலகத்துல எந்த ஒரு சின்ன சம்பவமும் ஒரு பெரிய சம்பவத்தோட லின்க் ஆகியிருக்கும். அப்படித்தான் ராஜீவ் மரணத்துக்கும் போபால் விஷ வாயு கசிவுக்கும் ஒரு லிங்க் இருக்கு. அதை கடைசில சொல்லியிருக்கேன். அதுக்கு மின்னாடி கொதிப்பை சாவதானப்படுத்திக்க கொஞ்சம் போல மொக்கை.
போபால் விஷ வாயுவும் பூபால் பீடியும் :
போபால் விஷ வாயு கசிவை பத்தி சனம் கிழி கிழின்னு கிழிச்சிருப்பாய்ங்க. இந்த மாதிரி மேட்டர்லல்லாம் இறங்கனும்னா விமர்சிக்கனும்னா கொஞ்சம் டர்ரு தான்.காரணம் என்னடான்னா சனம் உயிரோட இருந்தா என்னைக்கோ ஒரு நா மாற்றம் வரும், பொற்காலம் வரும்னு வழி மேல விழி வச்சு இருக்கலாம். இந்த பன்னாடைங்க பாடையே கட்டிட்ட பொறவு ஸ்வர்ண யுகம் வந்தென்னா தகர யுகம் வந்தென்ன?
எனக்கு ஒரு சந்தேகம்ணா இவிக கொள்ளையடிக்க வாச்சும், இவிகளுக்கு ஓட்டுப்போடு கஜானா சாவிய கையில கொடுக்கவாச்சும் சனம் இருக்கனுமில்லையா. எல்லாத்தயும் கொன்னுட்டா யாரை ஆளுவாய்ங்க.ஒரு விஷயத்தை அதுல ஆட்சியாளருக செய்த விஷமத்தை விமர்சிக்கனும்னா நமக்கு 9 இடமும் குளிர்ந்து இருக்கனும். அப்பத்தான் நக்கல் நக்கலா போட்டு தாக்கலாம்.
ஆனால் போபால் விஷயத்துல ஒவ்வொரு செல்லும் ஒரு நெருப்பு பொறியா மாறி இருக்க வாய்ல நல்ல வார்த்தையா வருங்கறிங்க. பூபால் பீடிப்புகை சுற்றுச்சூழலை பாதிக்குமாம்.கான்சர் வந்துருமாம் அதனால பீடிக்கட்டு மேல விட்டலாச்சாரியா படம் மாதிரி மண்டையோடோட படம் போடனுமாம். பொது இடத்துல புகைக்க கூடாதாம்.
ஆனால் யூனியன் கார்பைட் கம்பெனி விட்ட புகையால சனம் கொத்து கொத்தா செத்து விழுந்தாய்ங்க. பல லட்சக்கணக்கான மக்கள், கர்பிணிகள்,கருவிலான சிசுக்கள் பாதிக்கப்பாட்டாய்ங்க. ஓவரியிலான முட்டைக்கருக்கள், விந்தணுக்கள் கூட பாதிக்கப்பட்டுருச்சு. இதுக்கெல்லாம் காரணமான ஆண்டர்சனை அன்றைய பிரதமர் ராஜீவ், பிரதமர் அலுவலகம் ,மத்திய அரசு ,மானில அரசு, எஸ்.பி,கலெக்டர்ல இருந்து எல்லாருமா கூட்டு சேர்ந்து சேஃபா வழி அனுப்பி வச்சிருக்காய்ங்க.
1987 டிசம்பர் 7 ஆம் தேதி அரெஸ்ட் பண்ண பார்ட்டிய அன்னைக்கே ரிலீஸ் பண்ணி சிறப்பு விமானத்துல ஏத்தி விட்டிருக்காய்ங்க . இந்தியாவுல ரூ500 ரொக்க ஜாமீன் கொடுக்க முடியாம எத்தனை லட்சம் சனம் ஜெயில்ல கிடக்கு தெரியுமா? அந்த காலத்துல சைக்கிள் பெல் கப்பை திருடி மாட்டிக்கிட்டா கூட மறு நாள் ஏரியா கவுன்சிலர் வந்து பேசினா தான் விடுவாய்ங்க. ஆனால் மனித உயிர்களை களவாண்ட ஆண்டர்சனை ஃப்ளைட் ஏத்தி விட்டிருக்காய்ங்க.
முன்னாள் தேர்தல் கமிஷ்னர் ஜி.வி.ஜி.கிருஷ்ண முர்த்தி இன்னொரு குண்டை போட்டிருக்கார்.
"அமெரிக்க கீழ் கோர்ட்டுகளில் இந்த வழக்கில் தோல்வி ஏற்பட்ட பிறகு வழக்கறிஞர் குழுவுக்கு நான் தலைமை வகித்தேன். ரூ.470 மில்லியன் டாலர் போபால் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடாக வழங்க சுப்ரீம் கோர்ட் ரெஜிஸ்ட் ரார் பெயரில், பார்லெமென்ட் ஸ்ட்ரீட்டில் உள்ள ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது அந்த பணம் என்ன ஆனதென்றே தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் போய் சேரவில்லை "
ஆதாரம்: ஏபிஎன் டிவி, ஆந்திர ஜோதி நாளிதழ்
"கொடுப்பதழுக்கறுப்பான் சுற்றம் " என்று துவங்கும் குறள் தெரியுமாண்ணே. யாராச்சும் யாருக்காச்சும் கொடுக்கறத தடுத்தா தடுத்தவனோட சொந்தக்காரவுக எல்லாம் சோறு, துணியில்லாம சாவாய்ங்களாம்.
ராஜீவோட சாவை ஒரு செகண்ட் நினைச்சுப்பாருங்க.
அவரு பண்ணினதுக்கு அது தண்டனைனா... இப்ப நடத்து முடிச்ச கொடுமைக்கு...
ReplyDeleteகொடுப்பதழுக்கறுப்பான் சுற்றம் ...
ReplyDeleteஉங்கள் உணர்வுகளோடு ஒன்று படுகிறேன் தோழர் ...
நியோ அவர்களே,
ReplyDeleteமிக்க நன்றி.
ராச ராச சோழன்,
ReplyDeleteஅவருக்கு தண்டனை கிடைச்சுருச்சுன்னு எப்படி முடிக்கலாம். வைரமுத்துவோட ஒரு கவிதை எனக்கு ரெம்ப பிடிக்கும். (இப்ப அவர் கலைஞருக்கு போடற சால்ரா பிடிக்கலன்னாலும்) "காலம் உங்கள் பிணங்களையும் தோண்டி எடுத்து தூக்கில் போடும்" ஒரு காலம் வரும் அப்ப ராஜீவ் காந்தி மட்டுமில்லை.. மகாத்மா காந்தி கூட குற்றவாளி கூண்டுல ஏறி நிக்க வேண்டியதுதான்.
இப்ப நடந்ததுக்கு? காலம் பதில் சொல்லும். தர்மம் வெல்லும்
ராஜிவ் இருந்த கொஞ்ச காலத்தில கொஞ்ச நஞ்ச அட்டூழியம் செய்யல போல இருக்கு.
ReplyDeleteபரிதி நிலவன் அவர்களே,
ReplyDeleteராஜீவ் ஒரு தாட்டி லட்சத்தீவுல இருந்தாராம். அப்ப திடீர்னு கேரளா பாயசம் சாப்டனும்னு தோணுச்சாம். ஒடனே யுத்த விமானத்தை கேரளாவுக்கு அனுப்பி பாயாசம் வரவச்சு கொடுத்தாய்ங்களாம்