உனக்கென்ன? அம்ருத சேவனம்
நித்ய யவ்வனம்..!
என்னைப்பார் உன் அகத்துக்காரன் போலே
விடமருந்தியே வாழ்கிறேன்.
அவனுக்காச்சும் அது தொண்டைக்குள் இறங்குவதை
தடுக்க நீ இருந்தாய்.
நான் இங்கிவர் பழிசொல் அருந்தி தவிக்கையில்
ஓடோடி வந்து நீ தடுக்க நானென்ன சிவனா?
நீதான் என் அகத்துக்காரியா? கோடானு கோடி
பிள்ளைகளில் ஒருவன் தானே
இத்துணை கோடி கோடி பிள்ளைகள் பெற்றும்
தீராத காமம் கொண்டு கணவனை பிரியாதிருக்கும் உனக்கு
காமாட்சி என்ற சொல்லாட்சி சாலப் பொருத்தமே
உனக்கென்ன? அம்ருத சேவனம்
நித்ய யவ்வனம்..!
என்னைப்பார் ஒவ்வொரு நாளும்
விலகிப்போகும் இளமை.
துரத்தி வரும் மரணம்.
சக்தியின் பிறப்பிடம் நீ
இருப்பிடம் நீ
நானோ சக்தி நின் ஆணை இதுவென்றறியும் முன்னே
சகலமும் இழந்து
அநீதி கண்டும் பொங்கவியலா
அசக்தனாய் இருக்கிறேன்.
மாதா உனை குறித்த மருமமெல்லாம்
மறு பரிசீலனை செய்தே
தருமத்தின் வடிவென்று வரித்தேன்
நீயோ வான் மேகமென உருமாறி
உன் மேல் சொல்மாரி பெய்த என் மேல் மக்கள்
அமில மழை தூவ அனுமதிக்கிறாய்.
உனக்கென்ன? அம்ருத சேவனம்
நித்ய யவ்வனம்..!
என்னைப்பார் நித்ய கண்டம்.. அற்பாயுசு.
கீழ் வானமாய் வெளுக்கும் தலை..
தொட்டாற்சிணுங்கியென சுருங்கும் தோல்
என் கூட்டால் உனக்கு அமுதனைய அந்தாதி கிட்டும்.
உன் கூட்டால் எனக்கு கிட்டியதென்ன?
என் கருமம் தொலைக்க நீ தந்த வறுமையும், சிறுமையும் தானே
வறுமை தொலைக்க முனைந்து
வெறுமை வாட்டுகிறது.
உனக்கென்ன? அம்ருத சேவனம்
நித்ய யவ்வனம்..!
(தொடரும்
உனக்கென்ன? ரஞ்சித சேவனம்
ReplyDeleteநித்ய யவ்வனம்..!
தம்பிக்கு எந்த ஊரு? கோயமுத்தூரா? குசும்பு தான்
ReplyDelete//தம்பிக்கு எந்த ஊரு? கோயமுத்தூரா? குசும்பு தான்//
ReplyDeleteஎப்படிங்க இப்படி எல்லாம் ..... கோயமுத்தூரேதான் .....