நான் படம் பார்த்தே பல வருஷமாகுது.இதுல சினிமால வர்ர காமெடியெல்லாம் ட்ராஜெடியா இருக்கிறதையும் உயர் சாதிக்காரவுக தலித் மக்களை இழிவு படுத்தவே பயன் பட்டிருக்கிறதையும் எப்படி தெரிஞ்சிக்கிட்டேனு நீங்க கேள்வி கேட்கலாம். சினிமா பார்க்கிறதை 1998லயே நிப்பாட்டிட்டன். அதுக்கப்புறம் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணிரலாம். அதெல்லாம் நான் பண்ண தியாகமாவோ பெண்டாட்டி,மகள், நண்பர்கள் செய்த சதியா, கொலைமுயற்சியா சொல்லலாம்.
இருந்தாலும் இந்த காமெடி ட்ராஜிடிகள் எனக்கு தெரிய வர காரணம் வீட்டுல டிவி டிவினு ஒன்னிருக்கில்லை. இந்த இடியட் பாக்ஸ்தான்.தாளி செல்ஃபோன் ஜாமர் மாதிரி டிவி ஜாமர் கண்டுபிடிச்சா இந்த ட்ராஜெடியெல்லாம் ஓஞ்சு போயிரும்.
வடிவேலு காமெடியெல்லாம் ஓரளவுக்கு சிரிக்கிற மாதிரி இருந்தாலும் தெரிஞ்சோ தெரியாமயோ அவர் அடிக்கடி யூஸ் பண்ற வார்த்தை..சண்டாள பாவிகளா. சண்டாளன்னா என்ன? ஜோசியத்துல கூட சாதி இருக்கு. குரு பிராமணன். சனி ? சண்டாளன். அதாவது தலித். குரு சனியோட( ராகு /கேதுவும் இந்தலிஸ்ட்ல உண்டு) சேர்ந்தா அது குரு சண்டாள யோகம்னு சொல்லியிருக்கு.
ஒரு சாதியோட பேரையே வசவா பழக்கி வச்சிருக்காய்ங்கன்னா இந்த நாட்ல உயர் சாதிக்காரவுகளோட கொடி என்னமா பறந்திருக்கனும் பாருங்க.
(யாராச்சும் வேலை நேரத்துல நாலு பேர் இழுத்து போட்டு செய்ய எவனாச்சும் பட்டும் படாம தொட்டும் தொடாம நின்னா " என்னடா நண்டு பிடிக்க போன பார்ப்பான் மாதிரிம்பாங்க. ஆனால் இந்த சொலவடைல கூட பாருங்க பலான சாதிக்காரன் தான் நண்டு பிடிக்கனும். பார்ப்பான்னா அவன் உடலுழைப்புக்கு தகுதியில்லாதவங்கற அர்த்தம் தான் இருக்கு)
மனித கழிவை மனிதன் சுமக்கிற மனிதம் செத்த காரியம் இன்னமும் இருக்கு. ஏதோ விஞ்ஞான முன்னேற்றம் காரணமா நவீன கழிவறைகள் வந்திருக்கு. அதை அந்தந்த வீட்டு குடும்ப தலைவியோ ,தலைவனோ கூட சுத்தம் பண்றாய்ங்க. அதுக்கான கரைசல்கள் பத்தின விளம்பரத்துல கம்மோட நம்ம மூஞ்சியொட கொண்டுவந்து வச்ச மாதிரி க்ளோசப்லயெல்லாம் காட்றாய்ங்க. ஆனால் இன்னைக்கும் ( பக்காவா வேணம்னா நேத்து முந்தா நேத்துனு வச்சிக்கங்க) கழிவறைய சுத்தம் பண்ற தொழிலை அசூயையா பார்த்தாலும் பரவாயில்லை அதை சோர்ஸ் ஆஃப் காமெடியா கூட காட்டறாய்ங்கன்னா இவிக தைரியம் தான் என்ன? தலித் மக்களோட தூக்கம் தான் என்ன?
ஏதோ ஒரு படத்துல ( மலையாள படத்துல பிட்டு கணக்கா பிட்டாவே பார்க்கிறதால படம் பேர் எல்லாம் தெரியாதுங்கண்ணா) வடிவேலு துபாய் போய் வந்து அலட்டிக்கிட்டிருப்பாரு. அவரு பார்த்திபன் கிட்டே மாஃப் காட்ட அவர் ரிவர்ஸ் ஆகி குத்து மதிப்பா கக்கூஸ் தான் கழுவிட்டிருந்திருப்பானு நினைக்கிறாராம்.வடிவேலு அதை அங்கீகரிச்சிர்ராராம்.
அங்கன இருந்து இதே கான்செப்ட்ல ட்ராக் ஓடுது. ஏன்யா எல்லாரும் பேண்டு கிட்டே இருந்தா எவனோ ஒருத்தன் கழுவித்தானே ஆகனும். ( பத்தாம் கிளாஸ் படிக்கறச்சன்னு நினைக்கிறேன் நகராட்சி ஸ்ட்ரைக் நடந்தப்ப அண்ணன் நாலு குடம் தண்ணி ஊத்த பின்புற வழியா ( இதை சுஜாதா தன் கதைகள்ள ஒட்டன் சந்தும்பாரு. எங்க பக்கம்லாம் ஒட்டருன்னா கடைக்கால் போடறதை தொழிலா கொண்டவுக) போய் கழுவி விட்டிருக்கேன்.)
இன்னொரு படத்துல கோவை சரளா பன்னி மேய்க்கிறவுகளாம். ரெம்ப மாடர்ன் கேர்ளா பில்ட் அப் பண்ணி லவ் பண்ணுவாங்களாம். நல்லா எழுதறாங்கய்யா ட்ராக்கு !
பிரசவ சமயத்துல கர்பிணிக்கு அங்கன சிரைக்கிறது கூட ஒருத்தன் செய்துட்டுதான் இருந்தான். (இப்ப ஹேர் ரிமூவர்ஸ் இருக்குனு வைங்க) . இதென்ன கேவலமா? கேவலம் பார்த்து எவனும் செய்யவரலேன்னா பிரசவத்துல பீய்ச்சியடிக்கிற திரவமெல்லாம் ரோமங்கள்ள படிஞ்சு சிடுக்கு சிடுக்கா ஆயிரும். அதுக்குனு இதையும் சோர்ஸ் ஆஃப் ஜோக் ஆக்கிர போறாய்ங்க.
எவனோ கால் கழுவினானா ? கழுவிட்டு கையை கழுவினானான்னு தெரியாத அய்யரு பிளாஸ்டிக் கவரும், போஸ்டரும், ஓட்டல் சோறுமா தின்னுட்டு மனித மலத்தை விட நாத்தத்தோட வத்த மாடு போடற சாணியையும், மூத்திரத்தையும் சேர்த்து பிசைஞ்சு பஞ்சாமிருதத்தை தயாரிச்சு கொடுத்தா அதை பிரசாதமா ஏத்துக்கறிங்க.வெறுமனே கழிவறைய துடைப்பத்தாலயோ ப்ரஷ்ஷாலயோ கழுவி சுத்தம் பண்றவனை மட்டும் ஏத்துக்கிடமாட்டிங்களா? அவனை பார்த்திபன் மாதிரி க்ரோட் மனிதாபிமானிகள் எல்லாம் கிண்டலடிப்பாய்ங்க அதை நீங்க ரசிப்பிங்களா?
இந்த சமாசாரத்துல என்ன ஒரு ஆறுதல்னா ஒரு படத்துல விவேக் அய்யர் கழிவறை சுத்திகரிக்க வந்த நகர சுத்தி தொழிலாளியா வரார். இன்னொரு படத்துல நிஜம் லட்சுமி அய்யரோட அருமந்த புத்திரி ஐஸ்வர்யா கழிவறை சுத்தம் செய்யும் தொழிலாளியா வராய்ங்க. குறைஞ்ச பட்சம் அந்த பாத்திரத்துல நடிக்கறச்சயாவது யுகம் யுகமா தலித் மக்கள் அனுபவிச்ச நரக வேதனைய உணர்ந்திருந்தா சரி. உணர்ந்தா மட்டும் போதாது தங்கள் உணர்வை பேச்சா எழுத்தா கொட்டி தங்கள் இனத்தோட பார்வையில மாற்றத்தை கொண்டு வந்தாதான் சரி.
No comments:
Post a Comment