அண்ணே வணக்கம்ணே,
பிரச்சினைகள் சாரி தீர்வுகள் இந்த பதிவுலயும் தொடருது. கூடவே பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் தொடர்பதிவோட 11 ஆம் அத்யாயத்தை போட்டிருக்கேன். படிங்க . கமெண்ட் (ல) அடிங்க. ஓகே ?
பிரச்சினை இல்லாத மனிதன் கிடையாது. ( நாடுகள் கூட கிடையாது). பிரச்சினை என்பது கடந்த கால சோம்பல், சுகானுபவங்களின்,பொறுப்பின்மை, தள்ளிப்
போடுதல்களின் விளைவு தான். ஆனால் பிரச்சினை வந்ததும். இதையெல்லாம் வசதியா மறந்துர்ரம். செல்ஃப் பிட்டி வந்துருது. (எனக்கு மட்டும் ஏன் இப்படி?)
பிரச்சினைங்கறது அப்பா அம்மா பேரு தெரியாத அனாதை குழந்தை இல்லை. அது பிறக்க ஒரு தாய்,ஒரு தந்தை நிச்சயம் தேவை. மேற்படி பெற்றோருக்கு கு.க பண்றது எப்படின்னு கடந்த சில பதிவுகள்ள பேசிக்கிட்டிருக்கோம்.
பிரச்சினைகளை பெத்துப்போடற காரணங்கள் அசங்க்யாகம். (கணக்கில்லாதவை). ஒரு ப்யூட்டி என்னன்னா சிங்கிள் காரணத்தால எப்பயும் பிரச்சினை பொறந்து வராது. சிங்கிள் டபுளானாதான் பிரச்சினை. பிரச்சினைகள் வர்ரது சகஜம். ஆனால் அதை டேக்கிள் பண்றதுல இருக்கிற டிஃபரன்ஸால தான் பல வாழ்க்கைகள் தற்கொலை அ தோல்வியில முடியுது.
பிரச்சினையை ஸ்டடி பண்றதுலயும், தீர்வை யோசிக்கிறதுலயும், தீர்வை அமல் படுத்தறதுலயும் மன்ஷனுக்கு மன்ஷன் வித்யாசம் இருக்கு. இந்த வித்யாசத்துக்கு காரணம் பல அம்சங்களை பொறுத்திருக்கு. அந்த அம்சங்கள் வருமாறு (மீண்டும்)
1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்:
5.குடும்ப அமைப்பு:
6.பொருளாதார காரணங்கள்:
7.சாதீய காரணங்கள்:
8.ஜோதிட காரணங்கள்: லக்னாதிபதியே 6,8,12 ல மாட்டிக்கிறது, நீசமாயிர்ரது, அஸ்தங்கதமாறது, செவ்வாய், சர்ப்ப தோஷங்கள், சனி,செவ்வாய் சேர்க்கை,பித்ரு சாபம், மாத்ரு சாபம், ஸ்த்ரீ சாபம்,
9.வாஸ்து ரீதியிலான காரணங்கள்:
10.கர்ம வினைகள்:
11.தேவதா சாபங்கள்:
12.தர்காதீத காரணங்கள்:
இந்த தொடர்பதிவுல இந்த காரணங்களையெல்லாம் பட்டியலிட்டு பைசல் பண்ணிக்கிட்டு வர்ரோம். லேட்டஸ்டா உணவு காரணங்களை பார்த்தோம். இப்போ என்விரான்மென்டல் காரணங்களை பார்ப்போம்.
என்விரான்மென்ட்டுன்னா பேச்சுத்தமிழ்ல அக்கம்பக்கம்னு சொல்லிரலாம். விவரமா சொல்லனும்னா உங்க பெற்றோர்,குடும்பம், தெரு,பள்ளி, பள்ளித்தோழர்கள் எல்லாத்தயும் பட்டியலிட வேண்டி வரும். உங்க குண நலன் கள் மோல்ட் ஆறது இவிகளை வச்சுத்தான். முக்கியமா செக்ஸ் குறித்த உங்க புரிதல், விழிப்பு தான் உங்க கேரக்டரை டிசைட் பண்ணுது.
கடந்த பதிவுல சொன்ன ஆசனப்பருவம் எட் ஸெட் ரா ஞா வருதா? ஒரு சிறுவனுக்கு செக்ஸ் குறித்த ஞானம் மறுக்கப்படும்போது, அவனோட ஆர்வம் தடுக்கப்படும்போது அவன் மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிர்ரான்.
இந்த மாதிரி கிராக்கிங்க தான் ஹோமோக்களா, தின்னிப்பண்டாரங்களா(வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு) , வாய் பேச்சில் வீரர்களா, கோழைகளா, ஹிப்பாக்கிரட்ஸா, ஹென் பெக்டா( பெண்டாட்டிக்கு சரண்டர்), கஞ்சனுங்களா (ஹும் 'பலான ' சுகத்துக்கே வாய்ப்பில்லை இதுல இதெல்லாம் எதுக்கு தண்டச்செலவுங்கற ஃபீலிங்) , ஊதாரிகளா(ஹூம் .. பலான சுகத்துக்குத்தான் செலவழிக்க முடியலை. இப்படின்னா செலவழிப்பமேங்கற ஃபீலிங்) , வன் முறையாளர்களா,கிரிமினல்ஸா, (உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் வன்முறையா மாறுது) சேடிஸ்டுகளா, மசாக்கிஸ்டுகளா, ( புதைத்து வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் இப்படி வெளிப்படும்), சுய இன்ப பிரியர்களா , இம்பொடன்ட்ஸ், துரித ஸ்கலித அன்பர்களா, அம்மா கோண்டுகளா (பெண்டாட்டிக்குத்தான் இவன் பவிசு தெரிஞ்சு போச்சே இன்னும் என்னென்னவோவா மாறிர்ராங்க.
அதிர்ஷ்டவசமா நமக்கு இந்த இழவெல்லாம் நடக்கலை. அதுக்கு காரணம் என் அப்பா ,அம்மா, குடும்ப பின்னணி. முக்கியமா சதீஷுங்கற பால்ய ஸ்னேகிதன். என்னதான் துடுக்கானவன், அனுபவங்களுக்கு துடிக்கிறவன், தில்லுதுரைன்னாலும் ஓப்பன் டாக்கெல்லாம் கிடையாது. ரெம்ப ஷை (கூச்சம்) . அதை போக்கினவன் சதீஷுதான். நான் யார்க்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாம பொத்தி வச்சிருந்த மேட்டரெல்லாம் ஒன்னுமே இல்லை போல அவன் பட்டவர்த்தனமா பேசுவான். இன்னைக்கு இந்த ரேஞ்சுல செக்ஸ் பத்தி விவரமா , தில்லா எழுத ஃபௌண்டேசன் சதீசுதான். நிற்க
எட்டாங்கிளாஸ் படிக்கறச்ச சென்னைலருந்து ஒரு பெண் வந்து புதுசா சேர்ந்தது. எங்க வீட்டண்டை யாரோ ஒண்டு குடித்தனத்து தூரத்து உறவுக்காரங்க கார்டியன் ஷிப்ல அங்கனயே ஒரு ரூம் எடுத்துக்கிட்டு படிச்சிக்கிட்டிருந்தா.
அப்போ பழனின்னு கொட்டை போட்ட கேஸு ( ஏழாம் வகுப்புல சப்ளிமெண்ட்ல கூட குண்டு போட்டு டீட்டெயின் ஆன பார்ட்டி) ஒருத்தன் இருந்தான் . ஸ்டெப் கட் . டைட் ஃபிட்ல ஹாஃப் பேண்ட். அவன் புதியவளை மடக்க எங்க வீட்டுக்கு வந்துருவான். என் தோள் மேல கை போட்டுக்கிட்டு ஸ்டைலா அவ வீட்டுப்பக்கம் போவான். அவள் கோலம் கீலம் போட்டுக்கிட்டிருந்தா அடிக்குரல்ல " சரசு கோலம் ரெம்ப நறுவிசா இருக்கு"ன்னு கமெண்ட் அடிப்பான். அவள் "பொறுக்கி"ம்பா.
க்ளாஸ்ல நான் சட்டாம்பிள்ளைங்கறதால பழனி "த பாரு நீ என்ன பண்றயோ ஏது பண்றயோ, அவளுக்கு என்ன சொல்வியோ எப்படி சொல்வியோ எனக்கு தெரியாது. அவள் என்னை லவ் பண்ணனும்"னிட்டான். பழனி ஜி.டி. நாயுடு வேலைகள் எல்லாம் நிறைய செய்வான். ரேடியோவை டேப்ல பாட வைக்கிறது டேப்பை ரேடியோல பாட வைக்கிறது. அதுலெல்லாம் நமக்கு மோஜு சாஸ்தி.
நானும் முடிஞ்ச வரை அவளை கன்வின்ஸ் பண்ணேன். பழனி பத்தி பேசி பேசி அவளுக்கும் எனக்கும் இடையில ஃப்ரெண்ட் ஷிப் ஏற்பட்டு போச்சு. நோட்ஸு வாங்க கொடுக்க எங்க வீட்டுக்கு வருவாள். எங்கப்பா ( மாவட்ட கருவூல அதிகாரி) . குடும்ப உறுப்பினர்கள் கிட்டே வெகண்டையா பேசினாலும் விசிட்டர்ஸ இம்ப்ரெஸ் பண்றதுல புலி. அவள் வீட்டு வாசல்ல நின்னு என் பேரை சொல்லி கூப்டா
" வாங்க" ..னு கூப்டு உட்கார வச்சுட்டு " த பாருபா யாரோ ஒரு பொண்ணு வந்து கேட்டுது உட்கார வச்சிருக்கேன்"னு எனக்கு இன்ஃபார்ம் பண்ணுவாரு.
இந்த சம்பவம் நடக்கிறச்ச எனக்கு 14 வயசு. வருஷம் 1980. இந்த என்விரான்மென்ட் யாருக்கு கிடைச்சிருந்தாலும் அவிக என்னைப்போலத்தான் சிந்திப்பாய்ங்க. எழுதுவாய்ங்கனு சொல்லவும் வேணுமா என்ன?
முந்தானை முடிச்சு படம் வந்தப்ப ( 1984?) "ஆராரோ " பாட்டுக்கப்புறம் பாக்கியராஜ் ஏன் குளிக்க போறாருன்னு எங்கம்மா கேட்க அதை மாத்ரு பூதம் கணக்கா அனலைஸ் பண்ணி சொன்னென்னா நம்ப முடியாது.
ஒரு தரம் எங்க சின்ன அண்ணனோட (பத்து வயசு பெரியவன்) லவர் ஒருத்தி அவனை மாட்டிவிட (விளையாட்டுக்குத்தான்.. எனக்கு மேட்டர் தெரியாதுங்கற தைரியத்துல) அவன் பாக்கெட்ல இருந்து காம சூத்ரா ஐட்டத்தை எடுத்து காட்டி "பார்த்தயா உங்க அண்ணன் எந்த அளவுக்கு கெட்டுப்போயிருக்கா"னு சொல்ல " ஹூம் இன்னம் வளரனும்.. நானெல்லாம் ஒன்லி டுடே தான்" னு சொல்ல .........
இந்த மாதிரி ஒரு என்விரான்மென்ட் கிடைச்சும் அடலசன்ட் ஏஜ்ல 1984 டு 1986 அதுலயே மூழ்கி கிடந்தேன். அந்த 2 வருஷம் திரும்ப கிடைக்குமா கிடைக்காது.
உயிர்களின் தலையாய பிரச்சினை செக்ஸ். அதை ஒருத்தன் எப்படி ஃபேஸ் பண்றானோ அதை பொருத்துதான் அவனோட கேரக்டர் மோல்ட் ஆகுது. உ.ம் சரோஜா தேவி புஸ்தவம், ஸ்வப்ன ஸ்கலிதம்னு வாழறவன் கனவு காண்றவனா மாறிர்ரான். சுய இன்பத்துல இறங்குறவன் ட்யூயல் காம்ப்ளெக்ஸுடையவனா, இரட்டை வேடக்காரனா, எஸ்கேப்பிஸ்டா, ஹிப்பாக்கிரட்டா ஆயிர்ரான். விலைமகளை தேடிப்போறவன் ஸ்ட் ரெயிட் ஃபார்வேர்டா இருப்பான். அக்கம் பக்கம் ஆன்ட்டிகளை பார்க்கிறவன் கிரிமினலா , நம்பிக்கை துரோகியா மாறுவான். இப்படி எத்தனையோ சொல்லலாம்.
உங்க பாலை (ஆணா,பெண்ணா) நிர்ணயிக்கிற அதே ஜீன் தான் உங்க கேரக்டரையும் நிர்ணயிக்குது. நீங்க அடலசன்ட் ஏஜ்ல செக்ஸை எப்படி ஃபேஸ் பண்றிங்களோ அதை பொருத்து உங்க கேரக்டரே மாறிரும். உங்க கேரக்டரை பொறுத்து உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் மாறிரும். அதுகளை நீங்க டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறிரும். புரியுதா?
இனியாச்சு செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகளை , தவறான புரிதல்களை, ஹிப்பக்கிரசியை விட்டொழிச்சு நேருக்கு நேரா மோதுங்க. உங்க கேரக்டர் மாறும், பிரச்சினைகள் மாறும் ( இப்போ கீற பிரச்சினையெல்லாம் ஃபணால் ஆயிரும் கண்ணு) , புதுசா பிரச்சினைகள் வந்தாலும் அதுகளை டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறும். வே ஆஃப் திங்கிங் மாறும். நல்ல தீர்வுகள் கிடைக்கும். ஓகேவா உடுங்க ஜூட்...........
//உயிர்களின் தலையாய பிரச்சினை செக்ஸ். அதை ஒருத்தன் எப்படி ஃபேஸ் பண்றானோ அதை பொருத்துதான் அவனோட கேரக்டர் மோல்ட் ஆகுது. உ.ம் சரோஜா தேவி புஸ்தவம், ஸ்வப்ன ஸ்கலிதம்னு வாழறவன் கனவு காண்றவனா மாறிர்ரான். சுய இன்பத்துல இறங்குறவன் ட்யூயல் காம்ப்ளெக்ஸுடையவனா, இரட்டை வேடக்காரனா, எஸ்கேப்பிஸ்டா, ஹிப்பாக்கிரட்டா ஆயிர்ரான். விலைமகளை தேடிப்போறவன் ஸ்ட் ரெயிட் ஃபார்வேர்டா இருப்பான். அக்கம் பக்கம் ஆன்ட்டிகளை பார்க்கிறவன் கிரிமினலா , நம்பிக்கை துரோகியா மாறுவான். இப்படி எத்தனையோ சொல்லலாம்.//
ReplyDeleteதலைவா ...நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை .....
நான் கூட செக்ஸ்ச பத்தின அனுபவங்களை எழுதலாமுனு ஒரு காலத்துல நெனச்சேன் ....
நம்ம சமுதாய கலாச்சார குமுட்டைகள் நாம சொல்லியா கேக்க போறாங்க என்ற நெனைப்பில் எழுத வில்லை ......
நீங்க அருமையா உண்மை நிகழ்வுகளை எழுதரீங்க...........