Saturday, September 5, 2009

ஒய்.எஸ்.ஆரை கொன்ற சென்னை ஏவியேஷன்

ஒய்.எஸ்.ஆரை கொன்ற சென்னை ஏவியேஷன்


ரகு நந்தன் என்ற பதிவர் ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மரணத்தால் தர்ம நியாயங்கள் செத்துப்போகவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். அது மரணமாக இருந்தால் பரவாயில்லை. ஒரு வகையில் சென்னை ஏவியேஷன் காரர்கள் கொலை செய்துள்ளார்கள்

Now you can see the openions of Sri Ragunandan and my clearification :

//ஆனால் எனது கேள்வி எல்லாம் ஹெலிகொப்ரர் வெடித்தது ஒரு மெக்கானிக் கையில் இருக்கும் போது, அதுவும் இந்த ஹெலிகொப்ரரின் நிலை மோசமானது என ஆரம்பத்தில் அறிக்கையே வந்தது, தர்மத்தின் கையில் பழிபோடுகிறீர்கள்.//
ஐயா !
நீங்கள் நக்கீரன் பரபரப்புக்காக வெளியிட்ட இணைய‌‍ செய்தியை அடிப்படையாக கொண்டு இந்த பாயிண்டை சொல்கிறீர்கள். உண்மை நிலை வேறு. நக்கீரன் செய்தி டுபாக்கூர் செய்தி.

வேண்டுமானால் சேட்டிலைட் போனை வைத்துக்கொள்ள செய்யாததை வேண்டுமானால் மனித தவறாக கூறலாம். பாவம் பைலட் சென்னை ஏவியேஷனை தொடர்பு கொண்டு ஐயா நாலாபுறமும் மேகம் சூழ்ந்திருக்கிறது நான் 1,500 மீட்டர் உயரத்தில் பறக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இந்த உயரத்தில் விமானங்கள் தான் பறக்கலாமாம். சாதாரணமாக ஹெலிகாப்டர்கள் 500 மீட்டர் உயரத்தில் தான் பறக்க வேண்டுமாம். சென்னை ஏவியேஷன் அதிகாரிகள் ரெஸ்பாண்ட் ஆகாததை அடுத்து அவர் வடக்கு/தெற்கு திசைகளை ( ஐதராபாத் திரும்ப வேண்டுமானாலும்/ சித்தூர் நோக்கி வரவேண்டுமானாலும் இந்த திசைகளில் தான் பயணித்திருக்க வேண்டுமாம் விட்டு கிழக்காக திருப்பியுள்ளார்.

மேலும் நமது அதிகாரிகள் எந்த அளவுக்கு பணிவானவர்கள் என்றால் வானிலை,பாதுகாப்பு விஷயங்களில் கூட தலைவர்களின் பேச்சுக்கு மறு பேச்சு பேசமாட்டார்கள். சீஃப் செக்யூரிட்டி ஆஃபீசர் என்றால் அவரை நியமித்தது அரசு. அரசு என்றால் மக்கள். அவர் சம்பளம் வாங்குவது மக்களின் வரிப்பண‌த்தில்.அவர் பணி தம்மிடம் ஒப்படைத்த தலைவரின் உயிரை காப்பாற்றுவது. வானிலை சரியில்லை என்றால் பிரயாணம் கூடாது என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் கூற வேண்டும். இந்த கோயான் கள் தலை சொறியத்தான் லாயக்கு.

நான் பைலட்டாக‌யிருந்தால் வானிலை சரியில்லாத போது பயணம் செய்யவேண்டும் என்று ஒரு தலைவர் கூறியிருந்தால் ஹெலிகாப்டர் சாவியை வீசியெறிந்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டிருப்பேன்.

அல்லது நானே சீஃப் செக்யூரிட்டி ஆஃபீசராக இருந்திருந்தால் துப்பாக்கி முனையிலாவது கேம்ப் ஆஃபீசிற்கோ, தலைமை செயலகத்துக்கோ கொண்டு சேர்த்திருப்பேன்.

இந்த டுபாகூர்களின் ஜால்ரா தனத்தால் ஒரு பெட்டர் சாய்ஸை மக்கள் இழந்து விட்டனர்.// ஆனால் அதே ஹெலிகொப்ரர்கள் குண்டு வீச்சு விமானங்கள், ராடார்கள் அப்பாவித் தமிழர் (ஒரே நாளில் 20,000) தலையில் குண்டு போட்டபோது மட்டும் ஏன் தர்ம நியாயம்ம் பற்றி சிந்திக்கவில்லை. அதுவும் ‘புண்ணிய பூமி’ இந்தியா கொடுத்த கெலிகொப்டர், ராடார்கள் மிக நன்றாக வேலை செய்ததே!!!!//

அது நம் தமிழினத்தின் தலையெழுத்து. தமிழினத்தலைவர்கள் தொடை நடுங்கிகளாக, பதவி பிரியர்களாக, சுய நல பிசாசுகளாக இருக்கும் வரை கெலிகாப்டர்கள் என்ன துடைப்ப குச்சிகள் கூட குறி தவறாது பாய்ந்து தமிழனை கொல்லும்

//(துச்சமாக பேசுவது அசிங்கமா?//

நீங்கள் இரண்டு விஷயங்களையும் போட்டு குழம்பி/குழப்புகிறீர்கள். ஒய்.எஸ்.ஆரின் இழப்பு அதன் தீவிரம் பாதிக்கவிருப்பது முதற்கண் எங்களை (ஆந்திரம் வாழ் தமிழர்கள் )


ஏதோ வயிற்றெரிச்சலை சற்றே ஆற வைக்க ஒரு அவுட் லெட்டுக்காக தான் மேற்படி பதிவை எழுதினேன். பதிவிலான விஷயம் மனித அடிப்படையிலானது. அதில் ஈழத்தமிழர்கள் விசயத்தை ப்ரஸ்தாபிக்கலாம் . ஆனால் போகிறபோக்கில் இதுக்கு என்ன சொல்றிங்க என்று வினவியிருக்கலாம்.

மரணம் என்பது இழப்புதான். அது ஒரு தலைவரின் மரணமானாலும் சரி ஒரு சாமானியனின் மரணமானாலும் சரி. மரணத்திலோ , மரணம் ஏற்படுத்தும் இழப்பிலோ பேதமில்லை. இல்லை. இல்லவே இல்லை.

//. இந்தியாவில் எனக்கு வாக்குரிமை இல்லைங்க)//

அய்யா தனிமரம் தோப்பாகாது. உங்களுக்கு இந்தியாவில் வாக்குரிமை இருந்திருந்தால் காங். திமுக வேட்பாளர்களுக்கு எதிராகவே போட்டிருப்பீர்கள் இல்லை என்று கூறவில்லை. மற்றவர்கள் நிலை என்ன ? கோழி பிரியாணி, சில்லறை, சாராயம் தானே வேலை செய்தது

//அதுமட்டுமல்ல 25 நாடுகள் கொண்டுவந்த ஐ.நா மனித உரிமை விசாரனையை, கியூபா, சீனா, லிபியா போன்ற புண்ணிய பூமிகளுடன் கைகோர்த்து கவிழ்த்து ஸ்ரீலங்காவை பாராட்டும்படி முடிவைக் கொண்டுவந்ததை என்ன வகையில் சொல்லாம்?//

கடைந்தெடுத்த கயவாளித்தனம் எனலாம்.

இதற்குத்தான் நான் ஆரம்பம் முதலே பாராளுமன்ற ஜன நாயக முறையை எதிர்த்து வருகிறேன். ஜனாதிபதி ஜன நாயகம் அமலுக்கு வரவேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறேன். மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவனுக்கு இது போன்ற கேணத்தனமான முடிவுகளை எடுக்கவேண்டிய தலை எழுத்து இராது என்பது என் கருத்து.

7 comments:

  1. <<<
    வானிலை சரியில்லை என்றால் பிரயாணம் கூடாது என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் கூற வேண்டும். இந்த கோயான் கள் தலை சொறியத்தான் லாயக்கு
    >>>

    வருத்தமான உண்மை.

    நல்ல மனிதரை இழந்து விட்டோம். :(

    ReplyDelete
  2. // மேலும் நமது அதிகாரிகள் எந்த அளவுக்கு பணிவானவர்கள் என்றால் வானிலை,பாதுகாப்பு விஷயங்களில் கூட தலைவர்களின் பேச்சுக்கு மறு பேச்சு பேசமாட்டார்கள். //

    அதிகாரிகள், இவர்களுக்கு எதிராக பேசினால் என்றால், அது அவர்களுக்கு நல்லது என்றாலும், அடுத்த நிமிடம் பதவியில் இருக்க முடியாதே. அதிகாரி சொல்வதை கேட்கவேண்டும். பின் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்ற பண்பு இந்த காலத்து அரசியல்வாதிகளிடம் இல்லை. மேலும், ஜூவியில் படித்த ஒரு செய்தி... முதல்வரின் புது ஹெலி சர்வீஸ் முடிந்து ஒன்றரை மணி நேரம் ஆகும் என்றும், முதல்வர் தான் இந்த ஹெலியில் போகலாம் என்று சொன்னதாகவும் போட்டு இருக்கின்றார்கள். இதுவும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய விசயம்தானே?

    ReplyDelete
  3. //ஒய்.எஸ்.ஆரை கொன்ற சென்னை ஏவியேஷன்//
    வலைப்பதிவுகள் கண்காணிகப்படும் சூழலில் ,இப்படி தலைப்பு வைப்பது நல்லதல்ல.

    ReplyDelete
  4. ஜோ அவர்களே !
    தங்கள் அறிவுரைக்கு நன்றி. ஆனால் நான் ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதுவதில்லை. அப்படியே வம்படியாக என்னை உரசிப்பார்க்க முன் வந்தால் பொது நல நோக்கில் இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற திட்டம் தீட்டி , அந்த திட்டத்தை அரசுகளுக்கு அனுப்பி அவை ஊறப்போட, இந்த சமாச்சாரத்தை ஹை கோர்ட்டு ,சுப்ரீம் கோர்ட்டுக்களுக்கு நான் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இப்படியாவது ஒரு சந்தர்ப்பம் வாய்த்து கூண்டில் ஏற்றினால் இவர்களின் வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளம் ஏற்றுவேன்

    ReplyDelete
  5. ராகவன் நைஜீரியா அவர்களே !
    இந்த தமிழ் பத்திரிக்கைகள் தரும் ஆந்திர செய்திகளை நம்பவே நம்பாதீர்கள். பரபரப்புக்காக எதையோ ஒன்றை கொளுத்திப்போட்டு சர்க்குலேஷனை கூட்டிக்கொள்வதே இவர்கள் நோக்கம். இன்று மாலை வெளிவந்த தமிழ் முரசு ஒய்.எஸ்.ஆர் மரணத்துக்கு அவர் பயணம் செய்த கெலிகாப்டர் மீது நடந்த ராக்கெட் வீச்சே காரணம் என்று குண்டு போட்டுள்ளதை பாருங்கள்!
    இவர்களின் நோக்கம் உள்ளவாறு புரியும். தமிழக விஷயங்களில் இப்படி செய்தி போட்டால் மறு நாள் வெளிவரவேண்டிய பேப்பர் ப்ரிண்ட் ஆகாது என்று இப்படி ஆந்திர விசயத்தில் ஆட்டம் போடுகிறார்கள்

    ReplyDelete
  6. ரகுநந்தன்September 6, 2009 at 8:27 AM

    முருகேசன் அண்ணாச்சி,

    ஊங்கள் பதிலுக்கு மீண்டும் நன்றி.
    உங்கள் பதில்கள் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகின்றன.
    முதலில் நான் சொல்லவந்த ஒரிஜினல் கருத்தை இந்திய வோட்டு அரசியலுடன் கலந்து சிதைத்துவிட்டீர்கள். ஆனாலும் அதுவும் நன்மைக்கே.

    ஒரு நல்ல தலைவனுடன் ஹெலிகொப்டர் நொறுங்கியதால் தர்ம நியாயம் செத்துப்போய் விட்டது எனும் பொருள்படவே நீங்கள் எழுதியிருந்தீர்கள். அதற்கு நான் சொன்னதெல்லாம் அவ்வாறாயின் ஈழத்துமக்களின் தலைகளில் ‘புண்ணிய பூமி’ கொடுத்த ஹெலிகொப்டர்கள், அதிவேக குண்டு வீச்சு விமானக்கள் குண்டு போடும் போது தர்ம நியாயங்கள் செத்துப்போனதா? இல்லை ‘புண்ணிய பூமியின் புண்ணியாத்மாக்கள்’ தொழில் நுட்பம் நன்றாக வேலை செய்த்தா? திருட்டு நாய் கருணாநிதி சோனியாவின் சேலைக்குள் படுத்தாலும் ‘தர்ம நியாயங்கள்’ சாகக்கூடாதல்லவா? இத்தர்ம நியாயங்களை’ காக்கும் கடவுள் எங்கே சென்றான்?
    ஒரு வேளை நீங்கள் சொல்வது போல ‘யம’ கண்டத்தில் புறப்படாமல், நல்ல காலம் பார்த்து குண்டு வீச போனார்களோ? ஈழத்தமிழர் இப்போதெல்லாம் யமகண்டம் பார்ப்பதில்லையாம். ஹெலிகொப்டர் வான்ல் வரும் நேரம், இந்தியத்தூதர் யாழ்ப்பாணம் போகும் நேரம், சிவசங்கர மேனன், நாராயணன், ‘சொக்கத்தங்கம்’ சோனியா ஈழத்தமிழருக்கு பரிந்து பேசும் நேரம் எல்லாமே உண்மையில் ‘யமகண்டம்’ என்கிறார்கள் அவர்கள்.

    நான் நக்கீரன் படிப்பதில்லை. ரீடிஃப்.கொம் இல் வந்த முதல் செய்தி அவ்வாறிருந்தது.

    1500 மீட்டர் உயரத்தில் விமானங்கள் மட்டுமே பறக்கலாம் என்பது விதியாயின் அது விமானிக்க்கு தெரியாமல் ஏவியேஷனிடம் கேட்பாராயின் அவர் விமானியாக இருப்பதற்கு தகுதி இல்லாதவர் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? ஏவியேஷன் அவ்வாறு மோசமான வானிலையிலும் அவருக்கு அனுமதி கொடுத்ததும் தவறு.
    ஏன் தரமற்ற விமானிகளும் தரமற்ற கட்டுப்பாட்டாளர்களும் சேவையில் இருக்கிறார்கள் என சிந்தித்த பொழுது, ஆம்...தரமானவர்கள் ஈழத்தில் குண்டு போடச் சென்று விட்டனர் என்ற உண்மை உறைத்தது.

    அனுராதபுர வானுர்தி நிலைய தாக்குதல்களின் போது இரண்டு இந்திய விமான கட்டுப்பாட்டாளர்களும், சில தொழில்நுட்பவியலாலர்களும் காயமடைந்தது நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அண்ணாச்சி.
    மேலும் குண்டு வீச்சு விமானங்கள் இந்திய அல்லது பாகிஸ்தானிய விமானிகளால் பைலெட் பண்ணப்படுவது ஈழ மக்கள் அறிந்ததே! இருக்கும் நல்ல பைலெட்டுகளையும் ஏவியேசன் காரரையும் தமிழன் தலையில் குண்டு பாட அனுப்பிவிட்டு ஐயோ தர்மம் செத்துவிட்டது என கதை விடக்கூடாது.

    கப்பல் அக்சிடன்ட் ஒன்று நடக்கலாம். அப்போது ஹாபர்மாஸ்டர் போன்ற கட்டுப்பாட்டாளர்களை குறை சொல்வார்கள் இருந்து பாருங்கள். ஏனெனில் நல்ல மாலுமிகளை இந்திய தமிழ் மீனவரைச் சுட்டுக்கொல்ல அனுப்பிவிட்டனரே?

    ReplyDelete
  7. ரகு நந்தன் அவர்களே !
    நான் சரியாக புரிந்து கொண்டு சரியாக பதில் கொடுத்து வருகிறேன். நீங்கள் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் உ.வ படுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என் உடலிலும் அதே ரத்தம் தானே ஓடுகிறது. கொதிக்கத்தான் செய்கிறது. என்ன செய்ய ?

    ஓட்டு அரசியலை வலிந்து நான் திணிக்க வில்லை. அது ஒரு நல்ல சந்தர்ப்பம். அதை நழுவ விட்டார்கள் என்றுதான் கூறினேன். நீங்களே கூறுங்கள் என்ன செய்யலாம். நான் தயார்.

    தூங்குப‌வனை எழுப்பிவிடலாம் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியுமா? சோனியா, கலைஞர் முட்டாள்களா ?

    கல்கி இதழ் ஒன்றில் தராசு பதிலளிக்கிறார். தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவதையும் எழுதுவதையும் தடுக்க க்ளியர் கட் சட்டம் வேண்டுமாம். இந்த பஞ்சக்கச்சங்களை என்ன செய்ய ?

    ஆரம்பத்திலிருந்து ஒய்.எஸ்.ஆர் மரணத்தையும், ஈழத்தமிழர்கள் மீதான அழித்தொழிப்பையும் சேர்த்தே பார்த்து அதிகமாய் உ.வ. படுகிறீர்கள்.

    ஆந்திரர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் கொல்லப்பட்டால் அது தான் தெலுங்கு பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தி. ஆனால் தமிழகத்தில் ? முக்கால் வாசி மீடியா பார்ப்பனர் கையில். அவர்களோ துபாஷிகளாக மாறி வாழ்ந்தவர்கள். ஆள் காட்டிகள். இன்னும் என்ன நடக்கும் ?

    ஈழத்தமிழர்கள் விஷயத்தில் உங்களுக்கு உள்ள அதே உணர்ச்சிகள் எனக்கும் உள்ளன. அதை நீங்கள் வெளிப்படுத்தும் ஆவேசத்தில் தர்ம நியாயங்கள் செத்துருமா என்றும், ஈழத்தமிழர் விஷயத்தில் சாகலியா என்றும் கேட்கிறீர்கள்.

    //1500 மீட்டர் உயரத்தில் விமானங்கள் மட்டுமே பறக்கலாம் என்பது விதியாயின் அது விமானிக்க்கு தெரியாமல் ஏவியேஷனிடம் கேட்பாராயின் அவர் விமானியாக இருப்பதற்கு தகுதி இல்லாதவர்//


    விதி என்ற ஒன்றிருந்தால்விதி விலக்கு என்று ஒன்றுண்டு. எங்கள் ஊர் அரசு பஸ்களில் கண்ணாடி இருக்கும். அதை உடைத்தால் கைது,அபராதம் உண்டு. இது விதி.
    அதே பஸ்ஸில் விபத்து நேரத்திலெந்த கண்ணாடியையும் உடைக்கலாம் என்று எழுதி போட்டிருப்பான்.

    நாலு புறமும் மேகங்கள் சூழ்ந்து கொண்ட நிலையில் அந்த பைலட் கேட்டதில் தவறில்லை. அதை அனுமதிக்கவோ/ மறுக்கவோ கூட சமயமில்லாது பீட்ஸா சாப்பிட்ட சென்னை ஏவியேஷன் காரர்களை என்ன சொல்ல

    ReplyDelete