Sunday, September 6, 2009

சென்னை ஏவியேஷனுக்கு நோட்டீஸ்

ஓய்.எஸ்.ஆரை கொன்ற சென்னை ஏவியேஷன் அதிகாரிகள் என்ற எனது கடந்த பதிவை ஒரு தரம் படித்து விட்டால் (இதுவரை படிக்காதவர்கள்) நல்லது.

ஒய்.எஸ்.ஆர் ஹெலி க்ராஷ் விஷயத்தில் லேட்டஸ்ட்:
வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டுகோள். மத்திய உள்துறை மந்திரி உடனடி ஒப்புதல்
மற்றொரு கமிட்டி நியமனம். 60 நாட்களுக்குள் ரிப்போர்ட் தர உத்தரவு

ஆந்திர முதல்வர் ஹெலிகாப்டர் விபத்தை விசாரிக்க மானில அரசு சிறப்பு அதிகாரங்களுடன் ஒரு உயர் நிலை கமிட்டியை நியமித்துள்ளது. அந்த கமிட்டி ஹைதராபாத், சென்னை ஏவியேஷன் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கு

இந்த நாட்டின் அதிகார வர்கம் எந்தளவுக்கு பொறுப்பற்று போயிருக்கிறது என்றால் 1.செப். 2ஆம் தேதி காலை 8.35 மணிக்கு ஹைதராபாதில் வழியனுப்பியதோடு சரி. முதல்வரை கைகழுவி விட்டனர்.
2.புதிய ஹெலிகாப்டர் வாங்கியும் அதை உபயோக படுத்தாது , பழைய ஹெலிகாப்டரை உபயோகிக்க வேண்டிய அவசியம் என்ன ?
3.ஒரு முதல்வரை அனாதையாக அனுப்பிவிட்டு குண்டி தேய்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். விதிகளின் படி மேற்படி ஹெலிகாப்டர் செல்லும் வழிகளில் எமர்ஜென்ஸி லேண்டிங்குக்கு தேவையான ஏற்பாடுகளைசெய்ய வேண்டும் . இவர்கள் ?
4.ஹெலிகாப்டரில் செட்டிலைட் போன் இல்லாததற்கு யார் பொறுப்பு
5.காலை 10.30 க்கு சித்தூர் சேர வேண்டிய ஹெலிகாப்டர் சேர்ந்ததா இல்லையா என்பதைகூட அறிந்து கொள்ள முயலாது என்னத்தைகிழித்தானுங்க‌
6.சித்துரிலிருந்து பெண் மந்திரி கல்லா அருணகுமாரி முதல்வரின் தனிச்செயலருக்கு போன்போட்டு வந்து சேரலை என்று சொல்லும் வரை ஐதராபாத் அதிகாரிகளுக்கு விஷயமே தெரியாது
7. காலை 10.35 க்கு தகவல் தெரிந்து இவர்கள் கர்னூல்,சித்தூர், நெல்லூர் மாவட்ட எஸ்.பிக்களுக்கு கொடுத்த ஆணை என்னவென்றால் ஹெலிகாப்டர் எங்காவது லேண்ட் ஆகியுள்ளதா என்று தேடிப்பார்க்கனுமாம்.
8.இதுக்கும் காரணம் இருக்கு அதுல எல்.இ.டி (விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் அல்லதுவிமானத்தை கண்டு பிடிக்க உதவியாக சிக்னல் அனுப்பும் கருவி)இருக்கு. க்ராஷ் ஆகியிருந்தா சிக்னல் வந்திருக்கும். வரலைங்கறதால சேஃபா லேண்ட் ஆகியிருக்கும்னு கதை விட்டானுங்க.ராத்திரியில் பறக்கும் சுகாய் விமானம் அதே பகுதியை பல முறை வ‌ட்டமிட்டும் சிக்னலும் வரலை ..ரும் வரலை.
9.இதுல இதை விட வெட்க கேடு நிதி ம‌ந்திரி ரோசய்யா வனப்பகுதி மக்கள் காட்டுக்குள்ள போய் தேடனும்னு போட்டாரு பாருங்க ஒரு போடு. அப்போ நேரம் மாலை 4.30இருக்கும். ஒன்னரை மணி நேரத்துல இருட்டி போகும். ஆனால் இவர் மக்களை தேடச்சொல்றார்.

சரி விஷயத்துக்கு வரேன். இப்போ இந்த விபத்தை பற்றி விசாரிக்க உயர் நிலைகமிட்டி போட்டிருக்காங்க . ஹைதராபாத், சென்னை ஏவியேஷன் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் போயிருக்கு.
முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டர் பைலட் 1,500 மீட்டர் உயரத்துக்கு மேல பறக்க அனுமதி கேட்டு தகவல் கொடுத்தப்ப டூட்டில இருந்த பார்ட்டி யாரு, அவர் குடிச்சிட்டிருந்தது கோக்கா, பெப்சியா, தின்னது பப்ஸா , பீட்ஸாவா ங்கரதை கூட நோண்டி நுங்கெடுக்க போறாங்க

No comments:

Post a Comment