Wednesday, September 16, 2009

வரவு எவ்வழி செலவு அவ்வழி


நாய் விற்ற காசு குரைக்காது என்பார்கள் அது தவறு. நிச்சயம் குரைக்கிறது. அதாவது பணம் எந்த வழியில் வந்ததோ அதே வழியில் போய் விடுகிறது. என்ன ஒரு லிட்டிகேஷன் என்றால் வந்த வழியே போனது என்பதை உணர 10 சதம் ஜோதிட அறிவு தேவைப்படுகிறது.

சுக்கிரனும் வெள்ளியும்:
என் நண்பன்..........அவர்களுக்கு வெள்ளி வியாபாரம். வெள்ளியே அல்ல தங்கம் கூட நீங்க வாங்கினா ஒரு ரேட்டு வித்தா ஒரு ரேட்டு. அதிலயும் வெள்ளி விஷயத்துல வித்யாசம் ஜாஸ்தி. அதிலயும் தங்கம் வாங்குறவனை விட வெள்ளி வாங்கறவன் நொந்த பார்ட்டி. அதிலயும் தங்கம் விக்கிறவனை விட வெள்ளி விக்க வர்ரவன் நொந்து நூடுல்ஸான பார்ட்டி என்பதை நினைவில் வைக்கவும். வீட்டின் பெண் ஜனத்தொகை, மனைவி ,வெள்ளி இவை யாவும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாய் தோன்றினாலும் இந்த மூன்றுக்கும் சுக்கிர கிரகமே அதிபதி. சத்யா குடும்பத்தினர் ஊரான் வீட்டு வெள்ளியை வாங்கி விற்று கொழுத்தார்கள்

சத்யாவின் அப்பாவுக்கு 2 மனைவி. ஒரு மனைவிக்கு பக்கவாதம். இரண்டு தங்கைகள் விதவைகள். இவனுக்கு கல்யாணமே ஆகலே. இப்போ வயசு 50. 3 வருசத்துக்கு முன்னாடி இவன் தம்பி திருட்டு நகை வாங்கி வித்து மாட்டிக்கிட்டான். சத்யாவும் அகல கால் வச்சு பண நெருக்கடில இருந்தான். ரெண்டும் சேர்த்து அழுத்தவே ஊரை விட்டே ஓடிப்போயிட்டான். (சோத்துக்கே லாட்டரி/சோத்துக்கு சுக்கிரன் அதிபதி , சென்னை மா நகரை கால் ந்டையாவே சுத்தினான் /வாகனத்துக்கு அதிபதி சுக்கிரன், வீடுவாசலுக்கும் சுக்கிரன் அதிபதி வீடு வாசலை விட்டு ஓடிப்போய் நாயடிப்பட்டான்.

எப்படியோ ஊர் திரும்பினான். துளிர்த்தான். என்ன மீண்டும் பழைய குருடி கதவை திருடி. வெள்ளில சம்பாதிக்க சம்பாதிக்க இன்னொரு அக்கா புருசன் தராசுல‌ அடி வாங்கி போயிட்டான். இப்போ பெட் ரூமை அலங்கரிக்கறதும், ப்ரிட்ஜ்,கேஸு வாங்கறதுமா இருக்கான். இதுக்கெல்லாத்துக்கும் சுக்கிரந்தான் அதிபதி. இப்போ சத்யாவுக்கு ஷுகர். (ஷுகர் வந்தவனுக்கு அந்த ஆர்வம் ,பொட்டன்ஷியாலிட்டி குறைஞ்சுரும் இல்லியா. சுக்கிரனுடைய முக்கிய காரகத்துவம் செக்ஸ். அதுவே போச்.

இந்த மாதிரி எல்லா பன்னாடை பயல்களும், அலிகிரி நாய்களும் எந்த வழில சம்பாதிக்குதோ அதே வழில தான் இழக்குதுங்க. நியாயமா சம்பாதிச்சாலே இந்த விதி பொருந்துது. இதுல ஊரை அடிச்சு உலைல போடற சொறி நாய்ங்க கதி என்னாக போகுதோ..

எங்க ஊர்ல அப்படிதான் ஒரு நாய் புலி வேஷம் போட்டுக்கிட்டு இருக்கு. எல்லாம் நில விவகாரம்தான். இதுக்கு அதிபதி செவ்வாய். செவ்வாய் கத்திக்குத்து,ரத்தக்களறி, வெடிகுண்டு, துப்பாக்கிக்கெல்லாம் அதிபதி. வொர்க் அவுட் ஆனபிறகு சிறப்பு பதிவு ஒன்னு போட்ருவம்

No comments:

Post a Comment