Friday, September 11, 2009

வன்கொடுமை வழக்குகளில் பாதி டுபாகூர்

வன்கொடுமை வழக்குகளில் பாதி டுபாகூர்தான். ஆம் சமுதாயத்தில் உயர் சாதி, கீழ் சாதி என்றிருப்பதைபோல் தலித்திலும் இரண்டு சாதி ஏற்பட்டுவிட்டது. பிரியாணி சாப்பிட்டு பீடாவுக்கு போராடும்சாதி ஒன்று. கஞ்சிக்கு இல்லாது தத்தளிக்கும் சாதி ஒன்று. இதில் பிரியாணிக்கு பின் பீடாவுக்கு போராடும் சாதி வன் கொடுமை வழக்குகளை ஒரு அஸ்திரமாக உபயோகிப்பது தொடர்ந்து வருகிறது.

இவன் என்ன அட்டூழியம் வேண்டுமானாலும் செய்யலாம். அதிகாரி நடவடிக்கைக்கு இறங்கினாலோ, எச்சரித்தாலோ உடனே வன் கொடுமை வாக்கு. இது போன்ற டுபாகூர் வழக்குகளால் புலி வருது கதையாய் வன் கொடுமை வழக்கு என்றாலே சந்தேகத்துடன் பாருக்கும் நிலை வந்துவிடும். இதனால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டு கோர்ட்டுக்கு வரும் நபருக்கும் நீதி மறுக்கப்பட்டு விடும் ஆபத்தும் உள்ளது.

என்னை பொறுத்தவரை சாதி வேறுபாடு என்பது அருவறுப்பூட்டும் செயல். என் சாதிக்காரர்கள் அனைவருமே குலத்தை கெடுக்க வந்த கோடாரிப்பாம்பு என்று தான் என்னை குறிப்பிடுவார்கள். ஆனால் அனலைசைசேஷன் என்று வரும்போது இந்த அலகையும் எடுத்துக்கொள்ள வேண்டியதாய் உள்ளது. நான் வாழும் சித்தூர் ஒன்றும் குக்கிராமம் அல்ல. நான் வாழும் இந்த காலம் ஏதும் கிமுவோ, 10 அ 15 ஆம் நூற்றாண்டோ அல்ல. இருந்தாலும் தலித்துகளின் நிலையில் பெரிதாக ஏதும் மாற்றமில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் , சில குடும்பங்கள் கரையேறினாலும், உயர் வகுப்பு மக்கள் செய்யும் அதே தவறுகளை தாமும் செய்து ஷெட் ஆகிவிடுகிறார்கள்.(திவால்) ஒரு தலித் வாழ்வில் ஒரு படி மேலேறியதும் அடுத்த படியில் உள்ள உயர் சாதியினருடன் கைகுலுக்க முயல்கிறானே தவிர தன்னை விட கீழ் நிலையில் உள்ள தன் சகோதரனை கை தூக்கி விடுவதில்லை. எங்கள் மாவட்ட எம்.எல்.ஏ ஒருவர் எஸ்.சி. அவரது பி.ஏ. ஒரு பிராமணர். தலித் கைக்கு அரசியல் அதிகாரம் கிட்டினாலும் அதை அனுபவிப்பதென்னவோ ஒரு ஐயர் தான்.

ஈதிப்படியிருக்க. மேற்படி S.C எம்.எல்.ஏ கதையையே எடுத்துக்கொள்வோம். அவரை போன்றே உயர் வகுப்பை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ உள்ளார்.அவ்ர் தந்தை ஒரு அரசியல்வாதி. அவரது கணவர் பெரிய தொழிலதிபர். யாதவர்கள் தலைமுறை தலைமுறையாய் மேச்சல் காடாக உபயோகித்துவந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை உருட்டி மிரட்டி வாங்கி விட்டார். வருடம் ஒரு புது தொழிற்சாலை கட்டிவருகிறார். கடந்த ஆட்சியிலும் மந்திரி. இந்த ஆட்சியிலும் மந்திரி. கட்சி டிக்கெட் வீடு தேடி வந்தது. மேற்சொன்ன எஸ்.சி. பெண்மணி விஷயத்தில் மந்திரி பதவி நை. உதவி சபா நாயகராய் போட்டார்கள். இந்த தேர்தலின் போது தில்லி வரை போய் புலி வேஷம் போட்டுத்தான் டிக்கெட் வாங்க முடிந்தது.அதற்காக எஸ்,சி,உத்தமர், ஓ.சி.அதமர் என்று கூறவில்லை. எல்லாம் ஒரேகுட்டையில் ஊறின மட்டைதான். ஆனால் டிக்கெட்,பதவி என்று வரும்போது பாராபட்சம் வந்து விட முதல் காரணம் சாதி. அட பாவிகளா !

சரி.எதையோ சொல்ல வந்து ரொம்பவே சுற்றி வளைத்துவிட்டேன். நேற்று நடந்த ஒரு சம்பவத்தை தொடர்ந்து நகராட்சி வைஸ் சேர்மன் மீது வன் கொடுமை வழக்கு பதிவு செய்ய ஆயத்தங்கள் நடந்து வருவதாக தகவல். சம்பவத்தை அடுத்த பாராவில் சொல்கிறேன். நியாயத்தை நீங்களே சொல்லுங்கள்.

லட்சுமய்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)ஒரு எஸ்.சி.துணை கருவூல அதிகாரி. சித்தூர் மாவட்டத்தில் பணி புரிகிறார். நகராட்சி ஊழியர்கள் மானில அளவில் தங்களுக்கு சம்பளம் கருவூலம் மூலமாக வழங்கப்பட வேண்டுமென்று பல காலமாய் போராடி வந்தனர். ( அதுவரை நகராட்சி பொது நிதி, கிராண்ட் போதுமான அளவு வந்தாலன்றி சம்பளம் தரப்படாது. மானிலமெங்கும் நகராட்சிகள் நலிந்த நிலையில் உள்ள நிலையில் 6 மாத சம்பளம் ஒரே தவணையில் வழங்கப்பட்டதும் உண்டும் அதற்கு முன்னான 6 மாதம் ஊழியர்கள் பிச்சை எடுக்காத குறையாய் காலத்தை தள்ள வேண்டியதுதான்)

மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ஆர் 2009 ஏப்ரலில் இதை ஏற்றுக்கொண்டு அரசு ஆணை வெளியிட்டார். இதற்கான விதிகள் குறித்த குழப்பத்தில் ஏப்ரல்,மே,ஜூன் மாத சம்பளம் ஜூன் மாதம் தான் மொத்தமாக வழங்கப்பட்டது. ஜூலை மாதமும் பிரச்சினை இல்லை.ஆகஸ்டுமாத சம்பளம் தொடர்பான பில் கருவூலம் சென்றது. மேற்படி அதிகாரி எதையோ எதிர்பார்த்து நொட்டை விட்டபடி சுற்றியடித்திருக்கிறார். நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பாலோர் எஸ்.சி வகுப்பைசேர்ந்தவர்கள்தான் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். ஏதோ ஒண்ணு ரெண்டு தேதிகளில் சம்பளம் கிடைக்கும் என்றுதான் பல வருடம் போராடினார்கள். முதல்வர் ரெண்டாம் தேதி காணாமல் போனார். மூன்றாம் தேதி இறந்தார். ஒருவாரம் துக்கதினம். எல்லாம் போனாலும்... நேற்று கூட சம்பளம் தொடர்பாக இழுத்தடித்துள்ளார். நகராட்சி ஊழியர்கள் கடுமையாக பேசியுள்ளனர்.


உடனே மேற்படி லட்சுமய்யா " சீ சீ..அந்த பெரிய மனுஷன் (சி.எம்.) போறவன் சும்மா போய் சேராம இந்த குப்பைகளை எங்க தலை மேல கவிழ்த்துட்டு போயிட்டான்" என்று சீறியுள்ளார்.
நகராட்சி காங் வசம் உள்ளது. காங் வசம் என்பதை விட எம்.எல்.ஏ வசம் உள்ளது. எம்.எல்.ஏ வுக்கு ஒய்.எஸ்.ஆர் கடவுள் மாதிரி. இன்னிலையில் இந்த பேச்சு ஊழியர்கள் மூலம் எம்.எல்.ஏ காதுக்கு போனதோ அல்லது வைஸ் சேர்மனே கிளம்பினாரோ தெரியாது. சேர்மன், கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் , யூனியன் தலைவர்கள் அனைவ்ரும் சென்று லட்சுமய்யாவை வாங்கு வாங்கு என்று வாங்கியுள்ளனர். (வாய் பேச்சில்தான்) இதற்கு வன் கொடுமை வழக்கு போட லட்சுமய்யா தரப்பு முடிவு செய்துள்ளதாய் தகவல். இது பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்.

No comments:

Post a Comment