Sunday, September 20, 2009

அப்துல் கலாமின் மனைவி

உலகமே போற்றும் மனிதரை விமர்சிப்பது ஒரு மனோ வியாதி என்று சைக்காலஜி சொல்கிறது. ஆனால் நான் சைக்காலஜியையோ, என் சமகாலத்தவர்களையோ கருத்தில் வைத்து எழுதுவதில்லை. நாளை ஒருவன் வரப்போகிறான். அவன் மனதில் கடந்த நூற்றாண்டுகளின் வாசனை கூட இருக்காது. அவன் இன்றைய எழுத்துக்களையும் பேச்சுக்களையும் எடை போட இருக்கிறான். வைர முத்து சொன்னது போல் "பிணங்களை கூட தோண்டி எடுத்து தூக்கிலிடப்போகிறான்.

இன்று நாம் உடன் கட்டையேறுதல், விதவைக்கு மொட்டை போடுதல் இத்யாதியை எப்படி காட்டுமிராண்டி தனம் என்று கொதிக்கிறோமோ.. அதே போல் இன்றைய நமது முற்போக்கான (?) எழுத்துக்களை நாளை வரப்போகிறவன் காட்டுமிராண்டித்தனம் என்று காட்டுக்கூச்சல் போடப்போகிறான். இன்று நாம் யார் பிரதமர், யார் முதல்வர், யார் என்ன ஜாதி, செய்தித்துறை மந்திரியில் சின்ன வீடு எந்த ஜாதி, அவர்கள் வீட்டு ட்ரைவர் என்ன ஜாதி, மாவட்ட பி.ஆர்.ஓ யார் என்றெல்லாம் கணக்கு போட்டு எழுதுகிறோமே..இந்த எழுத்துக்களை , இவை அச்சான காகிதங்களை கறைபடிந்த கேர்ஃப்ரீயை விட கேவலமாக தூக்கி போட்டு எரிக்கப்போகிறார்கள். நாலு பேரில் நாராயணா என்று கோசம் போட என்னால் முடியாது. எனவே ஒரு புதிய விவாதத்தை துவக்கி வைக்கிறேன்.

சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி கலாமை அமெரிக்க அதிகாரிகள் சோதனை போட்டதை பத்திரிக்கைகள் தீவிரமாக விமர்சித்து எழுதியிருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த விசயத்தில் மக்கள் வழியே என் வழி. கலாமே அல்ல சித்தூர் பழைய பஸ் ஸ்டாண்டில் திராட்சை விற்கும் சலாமுக்கு இந்த நிலை ஏற்பட்டாலும் நான் கண்டிப்பேன்.


அதே சமயம் நான் அறிவிக்கிறேன் பதவி சுகத்துக்கு குலாம்(அடிமை) அப்துல் கலாம். நான் மற்றெந்த அரசியல்வாதியையும்(இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை கண்டு கொள்ளாதவர்களை கூட பெரிதாய் விமர்சித்ததில்லை. காரணம் அவர்கள் புலிகள்.(தமிழ் புலிகள் அல்ல) மக்கள் ரத்தம் குடிக்கும் புலிகள். நான் கவலைப்படுவது கலாம் போன்ற பசுத்தோல் போர்த்த புலிகளைப் பற்றித்தான்.

பதவி சுகத்துக்கு குலாம் அப்துல் கலாம் என்பதை நான் என்றோ அறிவேன். ஆனால் உலகம் அவரை ஆதர்ச புருஷராக கொண்டாடியது. இதற்கு பார்ப்பன ஆதிக்கம் மிக்க மீடியாவும் ஒரு காரணம். மைனாரிட்டி வர்கத்தை சேர்ந்த கலாமுக்கு உரிய முக்கியத்துவம் தராவிட்டால் தம் சுயமுகம் வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்திலும்,குற்ற மனப்பான்மையிலும் சற்று அதிகமாகவே முக்கியத்துவம் தரப்பட்டு விட்டது.

என்னதான் நாடு முன்னேறினாலும் அச்சில் வந்ததெல்லம் உண்மை என்று நம்பும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள். (ஒரு வழக்கில் ஆந்திரஹை கோர்ட்டு நீதிபதி முன்பு பத்திரிக்கை கட்டிங்குகளை ஆதாரமாக சம்ர்ப்பித்தபோது அவர் ரூபாய் செலவழித்தால் எந்த செய்தி வேண்டுமானாலும் பத்திரிக்கையில் வெளிவரும் என்பது எங்களுக்கு தெரியும் என்று சொன்னாராம்.)

சமீபத்தில் கூட இண்டியா டுடே க்ரூப்பை சேர்ந்த மெயில் டுடே என்ற பத்திரிக்கை எங்கள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.இறந்த துக்கம் தாளாது இறந்தவர்களின் இறப்புகள் கற்பிதம் என்று செய்தி வெளியிட்டு புயலை கிளப்பியது. அதற்கு எந்த நாய் மகன் இந்த யோசனை தந்தானோ? அவன் எந்த நாய் மகனின் கைக்கூலியாக செயல்பட்டானோ தெரியாது.

எனவே பத்திரிக்கைகளில் கலாம் பற்றி பத்திரிக்கைகளில் படித்தவற்றை மறந்து விட்டு (தற்காலிகமாகவேனும்) இந்த பதிவை படியுங்கள்.நிற்க..கலாம் கதைக்கு வருவோம். அரசுத்துறை நிறுவனங்கள்,அவற்றில் நிலவும் சிகப்பு நாடாத்தனம்.ஊழல் குறித்து அறியாதவர்கள் இல்லை. ஒரு அரசுத்துறை நிறுவனத்தில் யாதொரு முரண்பாடும் இல்லாது நீண்ட காலம் பணியாற்றியதை கொண்டே கலாமின் ஜாதகத்தை கணித்துவிடலாம்.

சரி ஒழியட்டும் இவர் உந்துதலில் அரசு செய்த அணுகுண்டு வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவித்தவர்கள் மறக்க முடியுமா? இதையும் மேரா பாரத் மகான் கோஷங்கள் மழுப்பிவிட்டன.

இதுகூட போகட்டும்..நான் எளிமையானவன்,அறிவுஜீவி என்று சொல்லிக்கொள்ளும் கலாம் ஜனாதிபதி மாளிகையின் பிரம்மாண்டத்தை நேரில் பார்த்ததுமே என்ன செய்திருக்க வேண்டும்? இதெல்லாம் சரிப்பட்டு வராது ..எனக்கு ஏதாவது அரசு வீட்டை ஒதுக்கி கொடுங்கள் என்று கேட்டிருக்கவேன்டும். செய்தாரா இல்லை.(ஒரே ஒரு அறையை உபயோகித்துக்கொண்டாராம். பஸ் நிலையத்து நாற்றம் பார்த்து பயணிகள் மூக்கைப்பொத்திக்கொண்டால் புரிந்து கொள்ளலாம் . மேயரே அந்த வேலையை செய்தால். மற்ற 1999 அறைகளை கலாம் உபயோகிக்காத மாத்திரத்தில் அரசுப்பணம் மிச்சமாகிவிட்டதா ? ஏன் தம் பதவி காலத்திலேயே அதை ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலாகமாற்ற அடம்பிடித்திருக்கலாமே.)


அதுவும் ஒழியட்டும் அந்த மாளிகையின் வியர்த்த செலவுகளையாவது பாதிக்கு குறைத்திருக்க வேண்டாமா? கு.ப. அதை மாறுபட்ட,ஆக்கப்பூர்வமான வழிகளில் உபயோகித்திருக்கலாமே. இன்று கணக்கெடுக்க சொல்லுங்கள் ஜ.மாளிகையில் கலாமை சந்தித்த பிர‌முகர்களை..இதில் வயிறு நிறைந்தவர்கள் எத்தனை பேர்? பார்ப்பன அ.ஜீவிகள் எத்தனை பேர்,ஆளும்,அதிகார வர்க முதலைகள் எத்தனை பேர்?

பீகார் சட்டமன்ற கலைப்பு விவகாரம் ஒன்று போதுமே கலாம் பதவி சுகத்துக்கு குலாம் என்பதை நிரூபிக்க.எம்.பி.க்கள் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினார்கள்..தொகுதி நிதியில் விளையாடினார்கள் .கலாம் கழட்டியது என்ன? குற்றச்சாட்டுகளுக்கு ஆளான எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கு.ப.உண்ணாவிரதம் இருப்பேன் என்று மிரட்டவாவது செய்தாரா? இல்லை.
சரி ஒழியட்டும் வந்த மாதிரியே போயிருந்தாலும் மன்னித்திருக்கலாம். போகும்போது ஆந்திரத்து தந்திர பாபு(அச்சுப்பிழையல்ல) மீண்டும் போட்டியிட கோரியபொது வெற்றி நிச்சயம் என்றால் ஓ.கே என்று வாயை விட்டார்..பின் ஜ.மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிட்டு மேலுதட்டில் பட்ட மண்ணை துடைத்துக் கொள்ள வேண்டி வந்தது.

என்ன ஒரு ஆறுதல் என்றால் இன்றைய ஜனாதிபதி போல் கலாம் மணமானவர் அல்ல. கலாமின் மனைவி குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியிருக்கவில்லை தட்ஸ் ஆல்.

22 comments:

  1. சித்தூர் முருகேசன் அய்யா,

    நீங்கள் எப்போது ரெளடி ரெட்டியை மாகாத்மா காந்தி லெவலுக்கு உயர்த்த் வைத்து பேசினீங்களோ அப்போதே புரிந்து விட்டது உங்களுக்கு அறிவு சிறிதும் கிடையாது என்று,சோசிய அறிவு உட்பட.ஆகையால், இந்த பதிவில் கூட நீங்கள் ரெட்டிகாருவை போற்றி,விஞ்ஞானி கலாமை இகழ்ந்து கீழ்த்தரத்தின் எல்லைக்கே சென்று விட்டது ஆச்சர்யத்தை அளிக்கவில்லை.

    பாலா

    ReplyDelete
  2. Perfect Mr.Chittoor Murugesan...

    YSR is Mahatma.. he never killed an Ant also... he never stopped / Killed his opposition members..

    but Mr.Kalam is the worst person you have ever seen...

    and you are talking about media... the same media is portraiting Mr.Reddy as Mahatma in AP.. so why can't we apply the same logic mentioned in your post (giving money to media)...

    very good Mr. Rowdy Reddy's Follower...

    ReplyDelete
  3. பார்ப்பனர்களின் அட்டூழியங்களை பிராமணரான அக்னிஹோத்ரம் ராமானுஜ தத்தச்சாரியாரே "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலில் புட்டு புட்டு வைத்து விட்டாரே, நீங்கள் படித்தீர்களா தலை ?

    ReplyDelete
  4. இப்டி ஒரு கேடுகெட்ட அரசியல் பதிவு எழுதி என்னத்த சாதிக்க போறீங்க சித்தூர் முருகேசன்?

    வலையுலகம் மிக கேவலமான உங்கள் போன்றோரின் வாந்திகளுக்கும் இடம் தருது. அதையும் நாலு பேரு படிக்க வேண்டியிருக்கு. தலைப்புக்கும் நீங்க பதிவுல ஏதோ ஒரு போதை தலைக்கேறி எடுத்துருக்க அருவருப்பான வாந்திக்கும் என்ன சம்பந்தம் இருக்கு.

    உங்களையெல்லாம் திருத்த யாராலும் முடியாது. த்தூ

    ReplyDelete
  5. hope everyone ll avoid ur blog, kevalamana pathivu;

    ReplyDelete
  6. உங்களுக்கு உலகத்துல NTR தவிர்த்து அனைவரும் கிறுக்கனுக தான்..

    எழுதறக்கு ஒரு பிளாக் இருக்குத்துன்னு கண்ட கருமாந்தரத்தையும் எழுதறீங்க எல்லோரும்..

    //கலாம் ஜனாதிபதி மாளிகையின் பிரம்மாண்டத்தை நேரில் பார்த்ததுமே என்ன செய்திருக்க வேண்டும்? இதெல்லாம் சரிப்பட்டு வராது ..எனக்கு ஏதாவது அரசு வீட்டை ஒதுக்கி கொடுங்கள் என்று கேட்டிருக்கவேன்டும்//

    எப்படி சார் இப்படி எல்லாம் யோசிக்கறீங்க? ரூம் போட்டு யோசிப்பீங்களா?

    அவர் அளவிற்கு எளிமையாக இருந்தாலும் அவர் பதவிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து தான் ஆக வேண்டும். இனி அவரை ஒரு பிளாட்டில் போய் இருக்க சொல்றீங்களா!

    அடுத்த நாட்டுல இருந்து யாராவது வந்தால் அவர்களையும் எங்க ஜனாதிபதி ரொம்ப எளிமை அதனால அவரு இங்க தான் இருப்பாரு! வேணும்னா இங்கே வந்து பாருங்கண்ணா சொல்ல முடியும்?

    நல்லா சொல்றாங்கய்யா டீடைலு...

    //ஏன் தம் பதவி காலத்திலேயே அதை ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலாகமாற்ற அடம்பிடித்திருக்கலாமே.//

    அவ்வ்வ்வ்வ்வ்வ் முடியல ..சத்தியமா!

    ReplyDelete
  7. இந்த கருமத்த முழுசா வேற படிச்சிட்டு
    பின்னுஉட்டம் வேற ...
    ம்..ஹூம்....
    காலக்கொடுமைடா மோனி...

    ReplyDelete
  8. சூப்பர் தலைவா உங்க சர்ப்ப தோஷம் பதிவை படிச்சி டர்ஜ் ஆகி கிடந்தேன், இந்த பதிவை படித்தவுடன் சர்ப்ப தோஷ பதிவே தேவலாம் போல... ஆனால் நீங்கள் சொன்னதிலும் சில உண்மைகள் உண்டு, கலாம் பல இடங்களில் சலாம் போட்டிருக்கிறார்... அதுக்காக கலாமை இம்புட்டு கேவலப்படுத்தியிருக்க கூடாது... ஆமா உங்க 'மகாத்மா'ரெட்டி காரு பையன் ஜெகன் மகாத்மா ரெட்டி முதல்வர் ஆயி(ய்)டுவாரா?

    ReplyDelete
  9. fucker... Enjoy your freedom of expression ..

    ReplyDelete
  10. இது வரை இப்படி கேடு கேட்ட ஒரு பதிவை நான் கண்டது இல்லை. வரும் சந்ததி மட்டும் அல்ல இன்றைய சந்ததியும் இந்த தலைப்பை மலத்தை பார்ப்பது போல் தான் பார்க்க நேரிடும்.

    ReplyDelete
  11. josiya kaaran ularuvathaiyellam oru poruttaaka eduththu kolla koodathu.

    ReplyDelete
  12. கவிதை(கள்) அவர்களே !
    உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். பிரச்சினையில் இருந்துதான் பிரச்சினைகளுக்கான தீர்வும் கிடைக்கும். அதிகப்படி மாம்பழம் உண்டு மந்தம் தட்டிப்போனால் அதற்கு வைத்தியம் மாங்கொட்டையை சுட்டு உண்பதுதான். பார்ப்பன கூட்டம் செய்த அட்டூழியத்தை விவரித்ததோடு, அவற்றிற்கு எதிராக போராடிய பார்ப்பன மேதைகளும் உண்டு. உ.ம் பாரதியார்.

    பி.கு: தாங்கள் குறிப்பிட்டுள்ள நூலை நான் படிக்கவில்லை.

    ReplyDelete
  13. ரெட்டி.............?
    கலாம் ...................?

    ...... நீங்க.............?

    மிக பேஜாரான பதிவு இது.... என்னத்த சொல்றது..... தங்களது அறிவு வியப்பை தருகிறது! ;)

    ReplyDelete
  14. கவிதை , ஜோசியம்னு என்னன்னவோ எழுதிபார்த்தாரு ,

    ஒருத்தரும் கண்டுக்கலை , ஏன் இந்த அருமையான கவிதைக்கு யாரும் பின்னூட்டமிடவில்லை என கெஞ்சி பார்த்தார் ,

    உடனே இப்படி ஒரு பதிவை எழுதிபார்த்தால் பின்னூட்ட பிச்சை கிடக்குமே என எழுதுகிறார் ,

    உங்க ஜோசிய அறிவை பயன்படுத்தி சனிபெயச்சியால் உங்களுக்கு பின்னீட்டம் வருமா என கணியுங்கள்

    ReplyDelete
  15. //இது வரை இப்படி கேடு கேட்ட ஒரு பதிவை நான் கண்டது இல்லை. வரும் சந்ததி மட்டும் அல்ல இன்றைய சந்ததியும் இந்த தலைப்பை மலத்தை பார்ப்பது போல் தான் பார்க்க நேரிடு//

    ரிவோல்ட்,

    என்னதான் சித்தூர் முருகேசனின் பதிவுகள் கேவலமானவை என்றாலும் நீங்கள் சொல்வது கொஞ்சம் ஓவர்.

    நீங்கள் தமிழ் ஓவியாவின் கட் அண்ட் பேஸ்ட் பதிவுகள்,கோவி.கண்ணனின் பதிவுகள் மற்றும் தோழர் ஏகலைவன்,தோழர் மதிமாறனின் பதிவுகள் எல்லாம் படித்தது கிடையாது போலிருக்கிறது.அவைகளவிடவா முருகேசனின் பதிவுகள் கீழ்த்தரமாகப் போய்விட்டன.

    ReplyDelete
  16. வீரபாண்டியன் அய்யா,

    கீழ்த்தரமான பதிவர்கள் லிஸ்டுல முக்கியமான இரண்டு பேரை விட்டு விட்டீர்களே.

    பின்ன நவீனமா ஏதோ இருக்கும் ஜந்துக்களான,நக்சல் தீவிரவாத பதிவர்கள் இருவர். "வலையுலக ஓ என் ஜி சி பெரியார்" என்ற பட்டம் வாங்கிய வெளியே மிதக்கும் அய்யாவும்,காட்டாமணக்கு என்ற குப்பை பெயரில் எழுதும் பதிவர்களைவிட கீழ்த்தரமான பதிவர்கள் உலகத்திலேயே இருக்க முடியாது.இவர்கள் முன்னால் கோவி.மு.கண்ணன் போன்றவர்கள் வெறும் லாலிபாப் சாப்பிடும் பாப்பாக்கள்.

    பாலா

    ReplyDelete
  17. பராரி அவர்களே !
    ஜோசியக்காரன் சொல்வதை எல்லாம் பொருட்டாக எடுத்துக்கொள்ளகூடாது என்று அசால்ட்டாக கூறிவிட்டீர்கள். நானொரு ஜோதிடனாக கூறுவதை அப்படி ட்ரீட் செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் கலாம் பற்றிய என்கருத்துக்களுக்கும் ஜோதிடத்துக்கும் என்ன தொடர்பு ? கலாம் பற்றிய என் கருத்தை மறுக்கவோ, ஏற்கவோ உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் நான் ஒரு ஜோதிடன் என்ற ஒரே காரணத்தால் என் கருத்தை அலட்சியப்படுத்தும்படி கூற தங்களுக்கு உரிமை இல்லை என்று எண்ணுகிறேன்.
    பி.கு: ஆனால் இந்த பதிவை ஏற்கெனவே 344 பேரு படிச்சுட்டாங்கண்ணா..அவிங்களை படிச்சத மறந்துரச்சொல்லி ஒரு அறிக்கை கொடுங்கணா

    ReplyDelete
  18. பாலா & வீரபாண்டியன் அவர்களே !
    தங்கள் மறுமொழியிலிருந்து தமிழ் ஓவியா,கோவி.கண்ணன்,தோழர் ஏகலைவன்,தோழர் மதிமாறன் ஆகியோர் இன்னும் பட்டவர்த்தனமான உண்மைகளை போட்டு உடைப்பவர்கள் என்பதை புரிந்து கொண்டேன். இன்னும் என்னில் ஹிப்பாக்ரடிக் சிந்தனைகள் இருப்பதை உணர்கிறேன்.

    பி.கு:
    மேற்சொன்ன பதிவர்களோடு தாங்கள் குறிப்பிட்ட "நக்சல் தீவிரவாத பதிவர்கள் இருவர். "வலையுலக ஓ என் ஜி சி பெரியார்" காட்டாமணக்கு ஆகியோரின் பதிவுகளையும் தேடிப்பிடித்து படிக்க முடிவு செய்துள்ளேன். மறு மொழிக்கு நன்றி

    ReplyDelete
  19. /உண்மைகளை போட்டு உடைப்பவர்கள்//

    சித்தூர் எஸ்.முருகேசன் அய்யா,

    ஆ அது எப்படி கரெக்டா சொல்லிட்டீங்க.சோசியக்காரர் ஆயிற்றே;அதனால் தான் ஷெர்லக் ஹோல்ம்ஸ் மாறி கண்டுப்புடுச்சிட்டீங்க;வாழ்த்துக்கள்.

    ஆமாங்கய்யா,இவுர்களெல்லாம் உண்மையை உடைத்து,சின்னாபின்ன்மாக்கி பொய்யை நிலை நிறுத்தும் வேலையை சளைக்காம செய்யறவங்க;சமூகத்தை சீரழிக்கும் நக்சல்,மற்றும் திராவிட தீவிரவாத பற்று உடையவர்கள்.குண்டு வைப்பது,கொலை,கொள்ளை போன்ற செயல்களை நியாயப்ப்டுத்துபவர்கள்.போன வாரம் கூடப் பாருங்க;ஜார்கண்டுல இவனுகளின் சிஷ்ய நக்சல் கும்பல் ஒரு எழு வயது சிறுமியை சுட்டுத் தள்ளியது.மொத்தத்தில, உங்க கணிப்பு படி இவனுங்கெல்லாம் உத்தம புருஷர்கள்.ஆமாம் நாங்க தான் சுட்டோம் என்று உண்மையை போட்டு உடைப்பாங்க.ஆனால்,நீங்க சொன்னபடி ஹிப்பொக்ரடிக் சிந்தனை உடையவ்ர்கள் அல்ல;வெறும் கீழ்த்தரமான ஹிப்போக்ரைட்ஸ்.


    பாலா

    ReplyDelete
  20. பாலா அவர்களே !
    உங்கள் வயது என்ன தெரியவில்லை. இந்த உலகத்தில் 100 சதம் உண்மையும் இல்லை. 100 சதம் பொய்யுமில்லை. 100 சதம் நல்லவர்களும் இல்லை, 100 சதம் கெட்டவர்களும் இல்லை.

    அதிலும் அந்த நிலை 24 மணி நேரம் ,365 நாட்களுக்கு தொடரவும் தொடராது. இதை புரிந்து கொண்டால் மனிதர்களை, அவர்களது கருத்துக்களை இத்தனை காட்டமாக விமர்சிக்கமாட்டீர்கள்.

    நீங்கள் மகாத்மா என்று கொண்டாடும் காந்தி கூட அதமமாக நடந்து கொண்ட சந்தர்பங்கள் உண்டு. உம்: சுபாஷ் சந்திரபோசுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி அவர் வெற்றி தன் வெற்றி என்று அறிவித்தது. அதையும் மீறி போஸ் ஜெயித்தார். பின்பு சரி ஒழியட்டும் என்று ராஜினாமா செய்துவிட்டார்.

    நான் கொலையையோ, என் கவுண்டரையோ, ஆதரிப்பவன் அல்ல. மனிதனில் அடியாழத்தில் இன்னும் ஈரம் இருக்கிறது. துன்பத்தில் வாழ்வதால் தான் சமுதாயத்துக்கு துன்பம் விளைவிக்கிறான். அவன் துன்பம் துடைக்கப்பட்டுவிட்டால் இது மாறும் என்று தான் புதிய இந்தியாவுக்காக திட்டம் தீட்டி போராடி வருகிறேன்.

    ReplyDelete
  21. அப்துல் கலாமின் மனைவியைப் பற்றி கொஞ்சம் விவரமாக எழுதினால் நன்றாக இருக்கும்;ஏனெனில் என்னிடமிருக்கும் விஷ(ய)(ம)த்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்..!

    ReplyDelete