Friday, September 4, 2009

"ஆந்திர முதல்வர் அர்ரகன்ட் ரவுடி ?"

Nakkeeran :
Come on ... dont make him as Mahatma... He is just another politician.. you must know his involvements in many murder cases... he is a arrogant rowdy first...

நக்கீரன் அவர்களே !
நான் அவரை பிறப்பிலேயே உத்தமர் என்று கூறவில்லை. சைக்காலஜிஸ்டுகள் கூறும் என்விரான்மென்டல் ஃபேக்டர்ஸை ஓவர் லுக் செய்து , தான் வாழ்ந்த நில சுவான் தார் பேக் க்ரவுண்டை மீறி, மாஃபியா என்விரான்மென்டை மீறி அவர் 2003ல் மேற்கொண்ட பாதயாத்திரை ஒன்று போதும். "மனம் திரும்புங்கள் பரலோக சாம்ராஜ்ஜியம் காத்திருக்கிறது" என்பார்களே அது போல் மனம் திரும்பி வந்தார்.

சந்திரபாபுவை போல் நம்பினோர் குடிகெடுக்கும் நரித்தனம் அவரிடம் இருந்ததில்லை. கொலை வழக்குகளில் அவர் பெயர் இருப்பதாய் கூறுவது தவறு. அவரது ஆதரவாளர்களில் சிலர் அப்படிப்பட்டவர்கள் இருக்கலாம் அவ்வளவே !

முதலில் அர்ரகன்ட் ரவுடி என்று கூறிய நீங்களே இப்போது அப்படியில்லை என்று மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளீர்கள் நன்றி.


யுக பிரபாவம் என்று ஒரு ஃபேக்டர் இருக்கிறது. உ.ம் கற்பு . ஒரு காலத்தில் அடுத்தவனை மனதால் நினைத்தாலே அவள் வேசி. பின்னொரு காலத்தில் பேசி பழகியிருக்கலாம் அதுக்கு மேல ஏதும் நடக்கலையே என்பது வழக்கம். இப்போதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னே எப்படியோ ஒழிஞ்சு போகட்டும் கல்யாணத்துக்கப்புறம் எப்படியிருக்கா ங்கறதுதான் முக்கியம்னு ஆகிப்போச்சு.

அதே போலத்தான் அரசியலும். ஏன் உங்க கலைஞரையே எடுத்துக்குங்களேன்.. தன் மகன் களுக்காக அவர் கட்டம் கட்டிய தலைவர்கள் எத்தனை எத்தனை பேர். ஒய்.எஸ்.ஆர் நினைத்திருந்தால் அவர் மகனை எம்.எல்.ஏ வாக்கி துணை முதல்வர் ஆக்கியிருக்கலாமே. சரி ஒழியட்டும் எம்.பி யாக ஜெயித்துவந்த மகனை மந்திரியாக்கியிருக்கலாமே.

அவர் மகாத்மா என்று நான் கூறவில்லையே. இப்போதிருக்கும் எத்தனையோ அரசியல்வாதிகளோடு ஒப்பிடும்போது அவர் லட்சம் மடங்கு மேலானவர். அவர் கனவுகள் வித்யாசமானவை. உதாரணத்துக்கு பாசன நீர் பற்றாக்குறை ‌பிரச்சினையை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு லட்சம் கோடி செலவில் அணைகள் கட்டும் பணியை செய்தபடியே , விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும் அளித்தார். ஷார்ட் டெர்ம் சொல்யூஷனோடு, லாங் டெர்ம் சொல்யூஷனுக்கும் ஒரே நேரத்தில் முயற்சித்த ஒரே அரசியல்வாதி அவர்தான். ஆரோக்ய ஸ்ரீ எடுத்துக்கொள்ளுங்கள் . குடும்பங்கள் ப்ரோக்கன் ஃபேமிலியாவதற்கும், அதில் வளரும் குழந்தைகள் கிரிமினல், மன நோயாளி ஆவதற்கும் உள்ள காரணங்களில் மெடிக்கல் க்ரைசிஸும் ஒன்று. ஏழை குடிமகனுக்கு இதய ஆப்பரேஷன் வரை தனியார் கார்ப்போரேட் மருத்துவமனைகளில் ஒரு நயா பைசா செலவில்லாது ஏற்பாடு செய்த மனிதன் அவர். சினிமாக்களில் " ம...னி...தன்..." என்று சினிமா காட்டும் சூப்பர் ஸ்டார்களோடு ஒப்பிட்டால் உண்மையான மனித தன்மை கொண்ட ஒரே மனிதன் டாக்டர் .ஒய்.எஸ்.ஆர்


Thevesh:
ஜுனியர் விகடன் படிப்பவர் களுக்குத்
தெரியும் இவர் இந்துமத அழிப்புக்கு
எவ்வளவு தூரம் சேவை ஆற்றியிருக்
கிறார் என்பது. இன்னொரு மதத்தை
அழிப்பவன் மஹாத்மா இல்லை.

இதை.. இந்த பிறர் கருத்துக்கு அடிமையாகும் தன்மையைத்தான் எடுப்பார் கைப்பிள்ளை என்பது வழக்கம். தேவேஷ் அவர்களே ! இந்து மதத்தை ஒய்.எஸ்.ஆர் அல்ல அவரது தாத்தா அல்ல ஏசுவே இரண்டாம் முறை உயிர்த்தெழுந்து வந்தாலும் அழிக்க முடியாது. முதலில் மெஜாரிட்டியாக இருப்பவர்கள் மைனாரிட்டிகளுக்குண்டான தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிவாருங்கள்.
இந்த மனப்போக்குதான் இலங்கை கலவரங்களுக்கும் காரணம். உங்களுக்கு தெரியாத ஓரிரண்டு விஷயங்களை கூறுகிறேன். ஆந்திரத்து கோவில்கள் அனைத்திற்கும் தீப,தூப, நைவேத்தியங்களுக்கும், மேற்படி போணியாகா கோவில் அய்யர் மாருக்கும் சம்பளம் போட்டு கொடுத்த இ.வா. ஒய்.எஸ்.ஆர்.

திருப்பதி கோவில் நகைகளை திருடிச்சென்று அடகு வைத்த அய்யரை கூட மரியாதையாக நடத்தும்படி சொன்னவர் அவர். நான் பாப்பாத்தி என்று சட்ட சபையில் கொக்கரித்த ஜெ. ஜெயேந்திரருக்கு காட்டிய மரியாதையை நாடறியும்
நல்லோரறிவர். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுவது தவறு.

முக்கியமாக ஜூ.வி.போன்றவை பார்ப்பனர் மேம்பாட்டுக்காகவே இந்து மதம் குறித்து முதலை கண்ணீர் வடிப்பது வழக்கம். ஒய்.எஸ்.ஆரின் மருமகன் தினகரன் தனமான பிரச்சாரகர் என்பது ஒன்றே உண்மை. உண்மையில் எந்த சங்கராச்சாரியும் கிழிக்காத வகையில் ஆந்திரமானிலத்தில் பட்டினியுடன், இருட்டில் கிடந்த கோவில்களுக்கு விளக்கேற்றி வைத்தவர் அவர்.

இன்று தமிழ்நாட்டில் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கும் 108 சேவை மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி கொண்டு வந்ததே. மிக மிக சிறப்பான திட்டம். நல்ல மனிதர்களை ஆண்டவன் நீண்ட நாள் வாழ வைப்பதில்லை, சீக்கிரம் அழைத்து கொள்கிறான். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

கவிதை(கள்):
இன்று தமிழ்நாட்டில் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கும் 108 சேவை மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி கொண்டு வந்ததே. மிக மிக சிறப்பான திட்டம். நல்ல மனிதர்களை ஆண்டவன் நீண்ட நாள் வாழ வைப்பதில்லை, சீக்கிரம் அழைத்து கொள்கிறான். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

கவிதை(கள்) அவர்களே !
108 சேவை குறித்து நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. இத்துடன் அறுவை சிகிச்சைக்கு பின்னான மருத்துவ சேவைகள் நிமித்தம், மருத்துவ பரிசோதனைகள் நிமித்தம் (முக்கியமாய் கர்பிணிகள்) 104 சேவையும் வெற்றி கரமாக நடந்து வருகிறது. ஆரோக்கிய ஸ்ரீ என்பது இரண்டு மூன்று லட்ச ரூபாய் செலவு பிடிக்கும் ஆப்பரேஷன் களையும் ஏழைகளுக்கு கார்ப்போரேட் மருத்துவமனைகளில் இலவசமாக செய்வதாகும் . இப்படி ஒன்றல்ல இரண்டல்ல எதை சொல்ல எதை விட‌

ஹெலிக்கொப்டர் விபத்தில் ஒருவன் செத்த உடனே தர்ம நியாயத்தில் நம்பிக்கை போய்விட்டது என்கிறீர்கள். ஈழத்தமிழர் இந்தியாவின் சதியால் இறந்த போது தர்ம நியாயம் வாழ்ந்து கொண்டிருந்ததாக்கும்?

ரகு ந‌ந்தன் அவர்களே !
ஈழத்தமிழர்கள் சங்கதியில் மட்டும் நான் வருந்தவில்லை என்று நினைக்கிறீர்களா என்ன? அவர்களின் தலையெழுத்து கடைசியாய் தமிழக ஓட்டர்கள் கையில் வந்து நின்றது. மோசம் போயிட்டிங்களே ! அந்த கடல் கடந்த தமிழர்களை கை விட்டுட்டிங்களே நீங்க மட்டும் காங். கட்சி வேட்பாளர்கள் எல்லாரையும் டிப்பாசிட் இழக்க வச்சுருந்தா இந்திரா காந்தி ராணுவத்தை அனுப்பி பங்களா தேஷ் ஏற்படுத்தியதை போல் அடுத்த அரசு மட்டுமல்ல,ஒரு வேளை மன்மோகன் சர்க்காரே தொடர்ந்திருந்தால் அது கூட ராணுவத்தை அனுப்பியிருக்கும் தமிழ் ஈழம் ஏற்பட்டிருக்கும்.அப்போ கோட்டை விட்டுட்டு இப்போ இப்படி துச்சமா பேசறது அசிங்கம்ங்க !

ஆனால் ஒய்.எஸ் ஆர் விஷயத்துல அவரை காப்பாத்த ஒரே ஒரு வாய்ப்பு கூட இல்லாமே போயிருச்சு. 8.35.க்கு புறப்பாடு , 9.35 க்கு தகவல் தொடர்பு கட். அந்த நிமிடமே க்ராஷ் ஆகி ,ஸ்மாஷ் ஆகி.. வேணாம்ங்க எங்க சோகம் உங்களுக்கு புரியலை.. விட்ருவம்

7 comments:

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவண்
    உலவு.காம்

    ReplyDelete
  2. நான் தர்ம நியாயங்கள் செத்து விட்டது என்று சொல்லவில்லை. நல்லவர்களை ஆண்டவன் சீக்கிரம் அழைத்து கொள்கிறான் என்று தான் சொன்னேன். நீங்கள் தான் தலைப்பு என்னத்த தர்மம் என்னத்த நியாயம் என்று போட்டிருக்கிறீர்கள். என்ன தலை ரொம்பவும் குழம்பி போயிருக்கிறீர்களா.

    ReplyDelete
  3. //ஈழத்தமிழர்கள் சங்கதியில் மட்டும் நான் வருந்தவில்லை என்று நினைக்கிறீர்களா என்ன? அவர்களின் தலையெழுத்து கடைசியாய் தமிழக ஓட்டர்கள் கையில் வந்து நின்றது. மோசம் போயிட்டிங்களே ! அந்த கடல் கடந்த தமிழர்களை கை விட்டுட்டிங்களே நீங்க மட்டும் காங். கட்சி வேட்பாளர்கள் எல்லாரையும் டிப்பாசிட் இழக்க வச்சுருந்தா இந்திரா காந்தி ராணுவத்தை அனுப்பி பங்களா தேஷ் ஏற்படுத்தியதை போல் அடுத்த அரசு மட்டுமல்ல,ஒரு வேளை மன்மோகன் சர்க்காரே தொடர்ந்திருந்தால் அது கூட ராணுவத்தை அனுப்பியிருக்கும் தமிழ் ஈழம் ஏற்பட்டிருக்கும்.அப்போ கோட்டை விட்டுட்டு இப்போ இப்படி துச்சமா பேசறது அசிங்கம்ங்க !///


    முருகேசன் லு .... நீங்க சொன்னதுலயே இதான் சரி.

    ReplyDelete
  4. கவிதை(கள்)அவர்களே !
    என் பதிவு மீதான மறு மொழிகளுக்கான என் மறுமொழிகளையே ஒரு பதிவாக போட்டேன். தங்கள் மறுமொழிக்கு கீழ் உள்ள எனது கருத்துக்கள் மட்டுமே உங்களுக்கானவை. மற்றவை பிறருக்கானவை. தவறாக புரிந்துகொண்டு நொந்துள்ளதாக தெரிகிறது.மன்னிக்கவும்

    இந்தமறுமொழிவாயிலாக மற்றொரு ரத்தினம்:
    ஒய்.எஸ்.ஆர் துவக்கிய அணைகள் மொத்தம் 84 . ஒதுக்கப்பட்டுள்ள தொகை 1லட்சத்து 76 ஆயிரம் கோடிகள். மொத்தமாக ஒரு கோடிஏக்கர் நிலத்துக்கு பாசன நீர் வழங்க உத்தேசம்

    ReplyDelete
  5. ரகுநந்தன்September 5, 2009 at 7:23 AM

    உங்கள் பதிலுக்கு நன்றி முருகேசன்,
    ஆனால் எனது கேள்வி எல்லாம் ஹெலிகொப்ரர் வெடித்தது ஒரு மெக்கானிக் கையில் இருக்கும் போது, அதுவும் இந்த ஹெலிகொப்ரரின் நிலை மோசமானது என ஆரம்பத்தில் அறிக்கையே வந்தது, தர்மத்தின் கையில் பழிபோடுகிறீர்கள். ஆனால் அதே ஹெலிகொப்ரர்கள் குண்டு வீச்சு விமானங்கள், ராடார்கள் அப்பாவித் தமிழர் (ஒரே நாளில் 20,000) தலையில் குண்டு போட்டபோது மட்டும் ஏன் தர்ம நியாயம்ம் பற்றி சிந்திக்கவில்லை. அதுவும் ‘புண்ணிய பூமி’ இந்தியா கொடுத்த கெலிகொப்டர், ராடார்கள் மிக நன்றாக வேலை செய்ததே!!!!
    (துச்சமாக பேசுவது அசிங்கமா? இந்தியாவில் எனக்கு வாக்குரிமை இல்லைங்க)அதுமட்டுமல்ல 25 நாடுகள் கொண்டுவந்த ஐ.நா மனித உரிமை விசாரனையை, கியூபா, சீனா, லிபியா போன்ற புண்ணிய பூமிகளுடன் கைகோர்த்து கவிழ்த்து ஸ்ரீலங்காவை பாராட்டும்படி முடிவைக் கொண்டுவந்ததை என்ன வகையில் சொல்லாம்?

    ReplyDelete
  6. நமக்குள் எதற்கு மன்னிப்பெல்லாம் தலை, நான் தான் தவறாக புரிந்து கொண்டுள்ளேன்

    ReplyDelete
  7. கவிதை(கள்) அவர்களே !
    தங்களின் அன்புக்கு நான் அடிமை
    தமிழ் பண்புக்கு நான் அடிமை
    சொந்த கூட்டத்தில் நான் அடிமை

    ReplyDelete