யாராச்சும் வில்லங்கம் பண்ணா அகராதி பிடிச்ச பயங்கறாய்ங்க. ஏன்? அகராதின்னாலே அகராதி பிடிச்சதுதான். பகம் என்ற சொல்லுக்கு யோனி என்றும் ஒரு பொருள் உண்டாம். அப்போ பகவான் என்றால் என்ன பொருள்? பொருள் விளங்காத சொற்களுக்கு பொருள் தர்ரதே அகராதியோட வேலைன்னா பொருள் விளங்காத சொற்களையெல்லாம் இவிக ஏன் உபயோகிச்சாய்ங்கன்னு ஒரு சந்தேகம் வருது. எந்த மொழிய வேணம்னா பாருங்க அதுல ரெடு பிரிவு இருக்கு. ஒன்னு பண்டிதர்களுக்கானது. அடுத்தது பாமரர்களுக்கானது. பச்சையா சொன்னா உயர்சாதிக்காரவுகளுது ஒரு மொழி. அவர்களால ஒடுக்கப்பட்டவுகளோடது ஒரு மொழி. பண்டித மொழி எப்பயுமே நிலத்தில கால் பாவாத சமாசாரங்களை பேசும். ஒடுக்கப்பட்டவுகளோட மொழி மண், மனிதனோட பிரச்சினைகளை பேசும்.
சரி வெடி வச்சாச்சு. வெடி சிரிப்புக்கு வழி பண்ணவேணாமா அதான் நம்ம பங்குக்கு வலையுலக அகராதி
ப்ளாக் :
பத்திரிக்கை என்ற காதலியின் மடியில் இடம் கிடைக்காதவர்கள் அனுபவிக்கும் சுய இன்பம்
ப்ளாகர்:
பல நேரம் தன் சொந்த ப்ளாகிலும் சில நேரம் அடுத்தவர் ப்ளாகிலும் அசிங்கம் பண்ணுபவர்
பதிவு:
கூட்டம் சேர்க்க காட்டப்படும் செப்படி வித்தை (ஓவரா போனா செருப்படியும் கிடைக்கும்)
மறுமொழி இடுவோர்:
ப்ளாகரின் உழைப்பில் பெயர் தேடுவோர்
பார்ப்பனீயம்:
கடந்த காலத்தை மறைத்து நிகழ்காலத்தை மட்டும் பூதக்கண்ணாடியில் காட்டுவது
பெரியாரியம்:
நிகழ்கால வாய்ப்புகளை பயன்படுத்தி எதிர்காலத்தை பேசாது கடந்த காலத்தை மட்டுமே பேசி மாய்வது
பிரபல பதிவர்:
தனக்கென்று ஒரு கூட்டத்தை வைத்திருப்பவர்
ஈழம்:
புதுப்பட விமர்சனம் போல் பதிவுக்கு விஷயம் கிடைக்காத போதெல்லாம் கை கொடுப்பது
ராஜ பக்ஸே:
தமிழின துரோகங்களை , புலிகளின் தவறுகளை அழிக்க உதவும் ரப்பர் கட்டி
வலைப்பக்கத்தை பார்க்க அழைப்பு:
எத்தனை நாள் தான் என்னுத நானே பார்த்து இம்சை படறது நீங்களும் வந்து பாருங்களேன்
பதிவுக்கு ஓட்டு:
பரஸ்பர ஒப்பந்தம். எனக்கு நீ போடு உனக்கு நான் போடறேன்
ப்ளாக் :
ReplyDeleteபத்திரிக்கை என்ற காதலியின் மடியில் இடம் கிடைக்காதவர்கள் அனுபவிக்கும் சுய இன்பம்
******
சந்தேகமே இல்லை நீங்க சாருவோட ஆளுதான்.
:)
"பதிவுக்கு ஓட்டு:
ReplyDeleteபரஸ்பர ஒப்பந்தம். எனக்கு நீ போடு உனக்கு நான் போடறேன்"
:-)
தலை. சபாஷ். சரியான தகவல்கள்.
ReplyDeleteunga deel enaku pidichi iurkuthu
ReplyDeletehttp://athiradenews.blogspot.com/
விமானத்தில் செல்பவரா நீங்கள் ? எச்சரிக்கை வீடியோ
// கோவி.கண்ணன் said...
ReplyDeleteப்ளாக் :
பத்திரிக்கை என்ற காதலியின் மடியில் இடம் கிடைக்காதவர்கள் அனுபவிக்கும் சுய இன்பம்
******
சந்தேகமே இல்லை நீங்க சாருவோட ஆளுதான்.
:)
//
இலக்கியத்தனமா எழுதுனதுனாலதானே அப்படி சொன்னிங்க கோவியார்??
வந்ததுக்கு நான் அசிங்கம் பண்ணிட்டு போயிட்டேன் தலைவா... :-)
ReplyDeleteகோ.வி.கண்ணன் அவர்களே,
ReplyDeleteஎன் ஜாதகத்துல லக்னத்துல குரு உச்சம்.கெட்டதை நினைக்கமாட்டேன். நினைச்சாலும் செய்யமாட்டேன். அப்படியே செய்தாலும் அது சம்பந்தப்பட்டவுகளுக்கு நல்லதாவே முடியும். நான் ஜஸ்ட் ஒரு சீண்டலுக்கும், சுய மதிப்பீட்டுக்கும் வழிவகுக்கும்னுதான் அப்படியொரு அகராதிய போட்டேனே தவிர 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்ல ஒரு சில ஆயிரம், ஒரு சில லட்சம் சர்க்குலேஷன் கொண்ட டு டே ந்யூஸ் பேப்பர் டுமாரோ வேஸ்ட் பேப்பருங்கற பத்திரிக்கைகளை விட சிரஞ்சீவத்வம் படைச்ச வலையுலகத்தையும், பதிவுகளையும் குறை சொல்வேனா (சொம்மா உளுவுளா காட்டிக்கு போட்டதுங்கண்ணா)
N_Hanson0821 அவர்களே,
ReplyDeleteபத்திரிக்கைகள் சிங்கமும் இல்லை. ப்ளாக் நாயுமில்லை. உங்களுக்கு ஏனிந்த தாழ்வு மனப்பான்மை. இங்கே நம்ம எழுத்துக்களுக்கு மரணமே இல்லை.
சின்னப்பயல் அவர்களே,
ReplyDeleteகோ.வி.கண்ணன் அவர்களுக்கு கொடுத்துள்ள மறுமொழிய பாருங்க. இந்த பதிவுக்கான ஓட்டுக்கான பொருள் ஒரு தாய்குலம் கொடுத்தது. என்னை நோக்கி வீசின சாணி உருண்டை இது. அப்படி பரஸ்பரம் ஓட்டுப்போடற (போட வைக்கிற) கெப்பாசிட்டி இருந்திருந்தா என் பதிவுகள் பிரபலமாகி ரெண்டு மாசமாவுதுங்களே.
பீர் முகமது அவர்களே,
ReplyDeleteவருகைக்கும்,மறுமொழிக்கும்,பாராட்டுக்கும் நன்றி
தமிழ் மதுரம் அவர்களே,
ReplyDeleteவருகைக்கும்,மறுமொழிக்கும்,பாராட்டுக்கும் நன்றி
ரோஸ் விக் அவர்களே,
ReplyDeleteபுகழ்ச்சில வஞ்சபுகழ்ச்சினு ஒன்னிருக்கு. இதுக்கு எதிர்பதமான விமர்சனம் தான் என் அகராதி.(இகழுதற்போல் புகழ்தல்)
ரோஸ் விக் அவர்களே,
ReplyDeleteஇது சிங்கத்தின் குகை. இங்கனயே மூச்சா,விட்டை எல்லாம் உண்டு. அதனால யாரோ வந்து அசிங்கம் பண்ற கேள்வியெல்லாம் கிடையாது
உங்களின் இந்த பதிவு மல்லாக்க படுத்து கொண்டு எச்சில் துப்புவது போல் இருக்கிறது... வார்த்தைகள் மனதினை காயப்படுத்துகிறது
ReplyDeleteராச ராச சோழன் அவர்களே,
ReplyDeleteஇதை இப்படியும் சொல்லலாமே.. சுய சோதனை/ஆத்ம பரிசோதனை
பதிவுலகில் நடப்பதை அப்படியே சுருங்க கூறியுள்ளது பாரட்டதக்கது...
ReplyDeleteஎனது நண்பனுக்கு பதிவுலகை அறிமுகபடுத்திய ஒருவாரத்தில் அவரது கருத்தை அறிய கேட்டது :
பதிவுலகம் பைத்தியங்களின் கூடாரம் என்பதே :)
பாஸ்கரன் சுப்பிரமணியன் அவர்களே,
ReplyDeleteபைத்தியங்கள் என்றால் எந்த தயாரிப்புமின்றி ஸ்பான்டேனியஸா ரெஸ்பாண்ட் ஆறவன்னு அர்த்தம். பதிவன்பர்கள் கூட அப்படித்தான் ரெஸ்பாண்ட் ஆகறாய்ங்க. நல்லாவே பண்ணியிருக்கிங்க அறிமுகம் ..பாராட்டுக்கள்