Thursday, June 3, 2010

தினகரனில் என் திட்டம் பிரசுரம்

ஆமாங்கண்ணே தமிழின் நெம்பர் ஒன் நாளிதழான தினகரன் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை அமல் படுத்த தேவையான  நிதியை திரட்ட நான் தீட்டிய எகானமி பேக்கேஜை தினகரன் ஒரு எழுத்து வரி கூட மாத்தாம பிரசுரிச்சிருக்கு. மக்கள் மத்தில எதிர்ப்பு கிளம்பாம மக்களுக்கு பாரமா மாறாம அரசு தன்  நிதி ஆதாரத்தை பெருக்க நான் கொடுத்த யோசனைகளின் தொகுப்பு தான் எக்கானமி பேக்கேஜ்.  இந்த பிரசுரம்  எப்படி சாத்தியமாச்சுன்னா தினகரன் வெப்சைட்ல சிட்டிசன் ஜர்னலிஸ்டுனு ஒரு ஆப்ஷன் கொடுத்திருந்தாய்ங்க. தமிழ்ல சொன்னா " நீங்களும் பத்திரிக்கையாளராகலாம்"

இந்த ஆப்ஷன்ல ஒரே நாள்ள அஞ்சு ஐட்டத்தை தட்டி விட்டேன். நாலு பிரசுரமாச்சு. அதுல ஒன்னுதான் எகானமி பேக்கேஜ். டாஸ்மாக் மேல ஆதாரப்படாம மானில அரசு காசு புரட்ட கண்ணான திட்டம்னு முன்னுரை கொடுத்திருந்தேன். அதை கூட நீக்காம போட்டிருக்கிறதுதான் விசித்திரம்.

மேற்படி ஐட்டத்தை படிக்க இங்கே அழுத்துங்க.

No comments:

Post a Comment