அண்ணே வணக்கம்ணே ,
இந்த பதிவுல ஜெயகாந்தனை மட்டுமில்லே ஈழத்தமிழர்களையும் தொட்டிருக்கேன். மேலும் இன்னைக்கு பெண்கள் 9 வகை பதிவின் இறுதி பகுதியையும் போட்டிருக்கேன். அதையும் ஒரு ஓட்டு ஓட்டிருங்கண்ணா
தமிழ் கூறு நல்லுலகில் தெளிவான பேச்சுக்கும் எழுத்துக்கும் பஞ்சம் வந்துவிட்டதாக தோன்றுகின்றது. " நெஞ்சினிலே உறுதி வேண்டும். வாக்கினிலே தெளிவும் வேண்டும்" என்றான் பாரதி. இது ஏதோ பல சரக்கு பட்டியல் மாதிரி ஒரு பட்டியல்னு நினைச்சுராதிங்க. நெஞ்சுல உறுதி இருந்தாதான் வாக்குல தெளிவு இருக்கும் . அதனாலதான் பாரதி முதல்ல நெஞ்சுல உறுதிய கேட்டுட்டு அதுக்கப்புறம் வாக்கில் தெளிவை கேட்டாரு.
நெஞ்சுல உறுதி எப்ப வரும்?
அது ஜீன்லயும் இருக்கனும். இவன் வாழ்ந்த என்விரான்மென்டும், வாழ்க்கையும் அதுக்கு சூட்டபிளா இருக்கனும். இவன் வாழ்க்கைல இருந்தும், வாழ்க்கை வீசற சவால்கள்ள இருந்தும் தப்பி ஓடாம, அதை ஃபேஸ் பண்ணியிருக்கனும் தன் வாழ்க்கைய தானே வாழ்ந்திருக்கனும். ( நிறைய பேரு வாழ்க்கையால வாழப்படறாய்ங்கண்ணா) நெஞ்சுல உறுதியிருந்தாதான் பேச்சுல ,எழுத்துல தெளிவு வரும். அது இல்லைன்னா எத்தனாம் பெரிய படிப்பு படிச்சு கிழிச்சிருந்தாலும் எழுத்தும், பேச்சு சொதப்பிரும்.
நெஞ்சுறுதிங்கறது ஜீன்லயே இருக்கனுங்கறிங்க. என் ஜீன்ல அது இல்லிங்கண்ணானு ஜகா வாங்கிராதிங்க. புலிக்கு பிறந்தது பூனையாகுமானு கேட்ட பெரியவங்க.. சிப்பிக்குள் முத்து, சேற்றில் செந்தாமரைனும் சொல்லியிருக்காய்ங்க.
நான் வளர்ந்த என்விரான்மென்டே சரியில்லிங்கன்னு வருந்தாதிங்க. ராமன் வளர்ந்த என்விரான்மென்ட் என்ன? தசரதனுக்கு அஃபிஷியலா 3 பெண்டாட்டி. அன் அஃபிஷியலா 60,000 பெண்டாட்டி. ஆனால் ராமன் ஏக பத்தினி விரதனா வளரலையா?
பிரகலாதனோட என்விரான்மென்ட் என்ன? அவனோட டாடி இரண்யன் ஓம் நமோ இரண்யாய நமன்னு தான் ஜபிக்கனும்னு ஆர்டர் போட்டிருந்தான்.( இரண்யனுக்கு ஹிரன்யா வியாதிக்கும் எதுனா சம்பந்தம் இருக்குதுங்களாண்ணா) நாடே அப்படித்தான் ஜெபிச்சது. பிரகலாதன் உண்மையான் பக்தனா வளரலையா என்ன?
வாழ்க்கை சவால்களை வீசினப்ப நான் ஜகா வாங்கிட்டேங்க.. இப்ப போயி நெஞ்சுல எப்படி உறுதி வரும்னு கேட்காதிங்க.
சமீபத்துல மறைஞ்ச தெலுங்கு திரைப்பாடலாசிரியர் பாட்டெழுத வந்தப்ப அவருக்கு என்ன வயசுங்கறிங்க? ரிட்டையர்மென்ட் வயசு. அதுவரை அவர் ரிப்போர்ட்டராதான் குப்பை கொட்டிக்கிருந்தாரு..
என்.டி.ஆர் இந்தியாவின் இரும்பு பெண்மணின்னு புகழப்படற இந்திரா அம்மையாரை எதிர்த்து கட்சி ஆரம்பிச்சப்ப அவர் வயசு என்னங்கறிங்க? தாத்தா வயசு. அதுவரை அவரு ஹிப்பாக்ரடிக்கா, ரொட்டீனாதான் வாழ்ந்துக்கிட்டிருந்தாரு.
ஒய்.எஸ்.ஆர் 33 வயசுல மானில காங்கிரஸ் கட்சி தலைவராயிட்டாரு. 2003 வரை அவர் ஒரு க்ரூப் லீடர். எவன் சி.எம் ஆனாலும், எவன் மானில காங்கிரஸ் கட்சி தலைவரானாலும் அவனோட ஒத்து வராம கோஷ்டி அரசியல் பண்ணிக்கிட்டிருந்தார். 54 வயசுல அவர்ல ஒரு மாற்றம் வந்தது. நெஞ்சுல உறுதி பிறந்தது. பாதயாத்திரை துவக்கினார். அதுக்கு முன்னாடி ஒய்.எஸ்.ஆர் பேச்சு அதே கரகரப்பு, அதே காரத்தோட வந்தாலும் ருச்சதில்லை. பாதயாத்திரைக்கு அப்புறம் அவரோட மைண்ட் செட்டே மாறிப்போச்சு. ஒட்டு மொத்த கட்சிக்கு (சில கிழவாடிகளை தவிர) ஒரே முகமா மாறினார். மக்கள் ஆதரவும்,திறமையும் இருந்தும் , தில்லி பாதுஷாக்களோட ( இப்போ பேகமா பீவியா?)ஆதரவோட 55வயசுல சி.எம்.ஆனார்..
பெட்டர் லேட் தென் நெவர் பாஸு..!
என் வாழ்க்கைய நான் வாழவே இல்லை தலைவா.. வாழ்க்கையால வாழப்பட்டேன்னு வருத்தப்படாதிங்க.
நூத்துக்கு 99% பேரோட வாழ்க்கை இப்படித்தான் கழிஞ்சு போயிருது. தவறான பாதைல எவ்ள காலம், எவ்ள தூரம் பயணம் பண்ணோங்கறது முக்கியமில்லை .படக்குனு ஒரு யு டர்ன் அடிங்க.
நெஞ்சுல உறுதி வரணும்னா வாழ்க்கை ஒரு சவாலை வீசினப்ப சிந்திச்சிருக்கனும், சிந்திச்சு அதை ஏத்துக்கிட்டிருக்கனும். வெற்றியோ தோல்வியோ எதிர்பட்டப்ப அதுக்கு நான் தான் பொறுப்புனு ஏத்துக்கிட்டிருக்கனும். அதை அனலைஸ் பண்ணியிருக்கனும். டூ அண்ட் டோன்ட்ஸ் பட்டியலை தயாரிச்சிருக்கனும். இனி ஒரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம்னு டிசைட் பண்ணியிருக்கனும்.
இப்படியெல்லாம் வாழ்ந்திருந்தா சைக்கிள் ஓட்டக்கத்துக்கறச்ச ஒரு கட்டத்துல படக்குனு பேலன்ஸ் கிடைக்குமே அது போல வாழ்க்கைங்கற வண்டிய ஓட்டறதுக்கு பேலன்ஸ் கிடைச்சுருக்கும்.
அப்படி வண்டிய ஓட்டியிருந்தா முட்டி பெயர்ந்திருந்தாலும், கை கால் முறிஞ்சிருந்தாலும், பள்ளத்துல விழுந்திருந்தாலும் நெஞ்சுல உறுதி கூடியிருக்கும்.
எண்ணித்துணிக கருமம்னாரு வள்ளுவர். மொதல்ல மைண்ட்ல ஸ்கெச் பண்ணனும் வேலைக்காகுமா ஆகாதானு பார்க்கனும். காஞ்ச மாடு கம்பங்கொல்லைல விழுந்த மாதிரி விழுந்தா கட்டி வச்சு அடி பின்னிருவாய்ங்க.
நெஞ்சினிலே உறுதின்னா கல்லுளி மங்கத்தனமில்லை. சபலப்படாம இருக்கிறது. சஞ்சலப்படாம, சலசலப்புக்கு அஞ்சாம இருக்கிறது.மனசுல ஒரு எண்ணம் /ஒரு கோரிக்கை எழுந்தா அது தாகமா? மோகமா? ஆசையா ? நப்பாசையா? லட்சியமா? ஜொள்ளானு அனலைஸ் பண்ணனும். லட்சியம்தானு கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டா அதை அடையறதுல இருந்து பின் ஊசி எதுவும் வாங்காம வீர சுதந்திரம் வேண்டி நின்றார் மாதிரி நிக்கனும்.
ஆமா லட்சியம்னா என்ன? 6 இலக்க சம்பளம், பெஞ்ச் காரு, ஊர்ல இருக்கிறவளையெல்லாம் பெண்டாளறதா? நோ.
இந்த பூமி மேல இருக்கிற எல்லா உயிருக்கும் ஆதி ஒரு அமீபா. அந்த ஒரு செல் அங்கஜீவிலருந்துதான் நாமெல்லாம் வந்திருக்கம். உடல்கள் தான் வேறே. உயிர் ஒன்னுதான். நம்ம மைண்ட்ஸ், எண்ணங்கள், லைஃப் எல்லாம் பிணைஞ்சிருக்கு. இணைஞ்சிருக்கு. உங்கள்ள யாரோ ஒருத்தர் தற்கொலை பண்ணிக்கிட்டா அது என் தற்கொலை என்ற காட்சி அரங்கேற்றத்துக்காக காலம் சேகரிச்ச முதல் செட் ப்ராப்பர்ட்டி. அது என் வாழ்க்கைல அரங்கேற ரொம்ப நாள் பிடிக்காது.
"வானம் அழுதாக்கா இந்த பூமியே சிரிக்கும்
அது போல் சில பேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்"னு வாலி பாட்டெழுதியிருப்பாரு.
மழை மேகம் தனக்குள்ள இருக்கிற மழை நீரை கொட்டித்தான் ஆகனும். டீட்டெய்ன் பண்ணிக்க அதிகாரமில்லை. அதைப்போல ஒவ்வொரு இதயத்துலயும் ஈரமிருக்கு. வெளிக்காட்டப்படாத கோபத்தை போலவே வெளிப்படாத கருணை,இரக்கமும் மனோவியாதிகளை ஏற்படுத்தும்.
வாலி எழுதினதை படிச்சுட்டு டர்ராயிராதிங்க. வாலி ஏதோ பைசாவுக்காக, அந்த சிச்சுவேஷனுக்காக எதுகை மோனைக்காக எழுதின வரிதான் இது.
"பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை" னு வைரமுத்து எழுதியிருப்பாரு. அதை பாருங்க.
என் ஸ்டைல்ல சொன்னா இது அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம். நெஞ்சுல தேக்கிருங்க. அது தேக்கா இறுகும்.
ஜெயகாந்தன் தலை சிறந்த எழுத்தாளர் பாவம் கைச்செலவுக்கு பணமில்லாமயோ தாளி நான் ஒருத்தன் சப்போர்ட் பண்ணி என்னாயிரப்போவுதுங்கற எண்ணத்துலயோ அன்னைக்கு இலங்கைக்கு போன இந்திய அமைதிப்படையை ஆதரிச்சு பேசினாரு. அவரோட வாழ்க்கை புத்தகத்துல இருந்து அந்த பக்கத்தை கிழிச்செறிஞ்சிட முடியுமா? முடியாது. அன்னைய தேதிக்கு ஜெயகாந்தனோட மனசாட்சி க்ளியரா கூட இருந்திருக்கலாம். ஆனால் இன்னைக்கு?
ஒரு சவால் எதிர்பட்டப்போ நீங்க ஒரு முடிவு எடுத்தாகனுங்கற நிலைமை வர்ரப்போ பர்ட்டிகுலர் டேட்டை பேஸ் பண்னி சிந்திக்காதிங்க. பத்து வருஷத்துக்கப்புறம் இதனோட பாதிப்பு எப்படியிருக்கும்னு யோசிங்க.
நிகழ்காலம் எதிர்காலத்தை சூல் கொண்டிருக்கு. அதனாலதான் அது ஆமையா நகர்ர மாதிரி ஒரு ஃபீலிங் வரும். அதை அரேபியன் ஹார்ஸ் மாதிரி ஓட விட்டா எதிர்காலம் அபார்ட் ஆயிருங்கற புரிஞ்சிக்கிடுங்க.
லட்சியத்தோட சிறப்பு என்னன்னா நீங்க அதை அடையாமலே போயிட்டா கூட உங்க வாழ்க்கை ஒரு தோல்வி கிடையாது.
ஆசை, நப்பாசை,பேராசை இதெல்லாம் அடைஞ்சே உட்டாலும் ஜெயிச்சுட்டதா மட்டும் மார் தட்டிக்க முடியாது. ஏன்னா பின்னாடியே க்யூல அதைவிட பெரிய ஆசை நின்னிருக்கும். வெற்றிக்கு பின்னால தோல்விகள் க்யூ கட்டியிருக்கும்.
தோல்வியே வெற்றியின் முதல்படி - இது பழமொழி.
வெற்றியே தோல்வியின் ஆரம்பம் - இது புது மொழி
வெற்றி உங்களை தனிமைப்படுத்திரும். தனிமை மரணத்துக்கு சமம். என்.டி.ஆர் உயிரோட இருந்த காலத்துல சந்திரபாபுவுக்கு எவ்ரி கான்ஸ்டிடியுவன்ஸிலயும் 100 பேரோட பேரு,பேக் கிரவுண்டு தெரியும். பா.ஜ.க வோட 2% ஓட்டை வச்சு 2% வித்யாசத்துல ஜெயிச்சாரு .. வெற்றி அவரை தனிமைப்படுத்திருச்சு. எஸ்.பிக்களையும், கலெக்டர்களையும் நம்ப ஆரம்பிச்சாரு.. கட்சிக்காரன் வெம்ப ஆரம்பிச்சான். 6 வருஷமா பாபு தேம்பிக்கிட்டே இருக்காரு.
வாழ்க்கைங்கறதே ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி கடைசில எதையும் பிடிக்க முடியாம போயிர்ரதானாம்..
ஸ்ரீ ஸ்ரீன்னு ஒரு கவிஞர். பயங்கர லாலா பார்ட்டி. ஃபிகர் சோக்கு. வி.டி எல்லாம் இருந்ததா அவரே சொல்லியிருக்காரு. வத்தல் பாடி. சோடாபுட்டிகண்ணாடி. லெஃப்டிஸ்ட் பாவங்களுடையவர். அரசாங்கத்துக்கெதிரா பட்டைய கிளப்பிக்கிட்டிருந்தாரு. அப்ப யாரோ கொஞ்சம் அடக்கி வாசிங்க தலை..பிரச்சினையாயிர போவுதுங்கறாங்க. அதுக்கு அவரு என்ன சொன்னாரு தெரியுமா?
ஜெயில்ல போட்டா சோத்து பிரச்சினை போச்
தூக்குல போட்டா வாழ்க்கை பிரச்சினையே போச்
இதான் நெஞ்சுல உறுதின்னா.. நெஞ்சுறுதியை அடிஷ்னல் க்வாலிட்டியாவோ, லக்ஸரி ப்ராடக்டாவோ நினைச்சுராதிங்க தலைவா ! தந்தில நியூஸ் படிக்கறிங்கல்ல. " தாய் வீடு சென்ற மனைவி திரும்பாததால் கணவன் தற்கொலை" "டிவி பார்க்காதே என்று தந்தை கண்டித்ததால் மாணவி தற்கொலை" இதுக்கெல்லாம் காரணம் உறுதி கொண்ட நெஞ்சு இல்லாததுதான். நெஞ்சுறுதிங்கறது எசன்ஷியல் ப்ராடக்ட்.
நெஞ்சுல உறுதியில்லாம வாலறுந்த காத்தாடியா கோபுரத்தையெல்லாம் தொட்டுட்டு வந்தாலும் படக்குனு குப்பை மேட்ல எச்சில் இலை மேல வந்து விழ வேண்டி வந்துரும்.
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காம வாழனும்னா நெஞ்சுல உறுதி இருக்கனும்.
நீ உனக்கா வாழ்ந்து ஜெயிச்சாலும் தோல்விதான்
ஊருக்காக வாழ்ந்து தோத்தாலும் வெற்றிதான்..
ஊருக்காக வாழறதுன்னா உடனே கட்சி,கொடி, மா நாடுன்னு கற்பனை குதிரைய தட்டிவிட்டுராதிங்க. சின்னதா சின்ன சின்னதா சக மனுசனுக்கு உதவி செய்தா போதும். சக மனிதனுக்காக, பிரதிபலனை எதிர்பார்க்காம உன் நேரத்தை செலவழி, உன் புத்திய செலவழி, மனோபலத்தை செலவழி..மனசு விரியும். அதுல உறுதி கூடும்.
ஆந்திராபக்கம் ஏதோ ஒரு ஊர்ல ஒரு கிளி பெருமாள் கோவிலுக்குள்ள நுழைஞ்சது 5 மணி நேரம் அன்னாகாரம் இல்லாம பெருமாள் சிலை மேலயே உட்கார்ந்துக்கிட்டிருந்தது. படக்குனு உயிரை விட்டுது.
இன்னைக்கு ( உங்க கணக்குக்கு நேத்தைக்கு) அந்த கிளிக்கு சிலை வச்சு , தனி கோவிலே கட்டிட்டாய்ங்க. இதே மாதிரி ஒரு கோவில்ல பன்றி, இன்னொரு கோவில்ல குரங்கெல்லாம் கோவிலை வலம் வந்து விழுந்து செத்ததை லைவ்லயே பார்த்தேன். இதுக்கெல்லாமும் கோவில் கட்டிக்கிட்டிருக்கு சனம். இதுல எல்லாம் லாஜிக் இருக்கா? இல்லை. அதெல்லாம் அஞ்சறிவுள்ள ஜீவன் . படைச்சவனுக்கு நன்றி தெரிவிக்க இப்படி ஒரு வழிய தேர்ந்தெடுத்தாப்ல இருக்கு.
ஆறறிவு படைச்ச நீங்களும் உடனே கோவிலுக்கு போய் சுத்த ஆரம்பிச்சுராதிங்க. மக்கள் சேவையே மகேசன் சேவை. நீங்க என்ன செய்தாலும் நான் தப்பு பண்ணலை. என் நோக்கத்துல சுய நலம் இல்லே, என்னோட இந்த செயலால நாட்டுல பசியோ சுரண்டலோ அதிகரிக்கப்போறதில்லனு உறுதிப்படுத்திக்கிட்ட செயலை மட்டும் செய்ங்க.
"ஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை"ங்கறதும் சினிமா பாட்டுத்தான்.
"ஒன்றே செய்வார் நன்றே செய்வார் உள்ளத்தில் நிலவும்(?) அமைதி" இதுவும் சினிமா பாட்டுத்தான்.
ஒன்றே செய்ய நன்றே செய்ய தேவை நெஞ்சில் உறுதி. எல்லாம் அனுகூலமா இருக்கும்போது அலட்டறவன் முட்டாள். எல்லாமே பிரதிகூலமா மாறிட்டாலும் அலட்டிக்காதவன் ஞானி. உறுதி கொண்ட நெஞ்சில்தான் ஞானம் பிறக்கும்.
ஜோதிஷத்தை பத்தி, நவகிரக பாதிப்புகளுக்கு பரிகாரங்களை பத்தி நூற்றுக்கணக்கான பதிவுகள் போட்டிருக்கேன். இந்த பதிவுக்கு முத்தாய்ப்பா ஒரு ஜோதிஷ முத்து.
நவகிரகங்களுக்கு பார்வதி தேவி ஒரு சாபமிட்டாய்ங்களாம். " எவனொருவன் ஒரு லட்சியத்தை கை கொண்டு அதற்காகவே வாழறானோ அவன் விஷயத்துல நீங்க தோத்துப்போயிருவிங்க"
தெளிவான பேச்சும் எழுத்தும் அருகி வர காரணம் தமிழர்கள் முட்டாள்கள் ஆகிவிட்டார்கள் என்பதால் அல்ல. பாசாங்கும், பொய் புரட்டும் அதிகரித்துவிட்டன. வேடதாரிகள் தம் பொய் வேடத்தையே நிஜம் என்று நம்பும் நிலைக்கு வந்துவிட்டார்கள். சுய நலத்தால் அவர்கள் நெஞ்சு பஞ்சு கணக்காய் மாறிவிட்டது. அதனால் தான் அது திக்கெட்டும் பறக்குது.
சாமியார்ங்க கால்ல விழுந்துருது. ஓடிப்போற ஃபைனான்ஸ் கம்பெனிங்க கவுண்டர் முன்னாடி முண்டியடிக்குது. மனசு வீக்காயிருச்சு. அதனாலதான் இப்போ தமிழன் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் மணிகள் உருள்றதில்லை. பதர்கள் தாம் பறக்குது.
ஈழ பிரச்சினையையே எடுத்துக்கங்க. அல்லாரும் யாரையோ ஒருத்தரை காரணமாக்கி திட்டி தீர்க்கறதுல இருக்காய்ங்களே தவிர கன்ஸ்ட்ரக்டிவா என்ன பண்ணாய்ங்கனு பார்த்தா பூஜ்ஜியம்.
இவிக இப்படி திட்டி தீர்க்கிறதால ராஜ பக்சே ஜாதகத்துல இருக்கிற தோஷமெல்லாம் பஞ்சா பறந்து போயிட்டிருக்கு. உணர்ச்சி வழி பேச்சாலயோ எழுத்தாலயோ அங்கே நாதியத்து கிடக்கிற சனத்துக்கு இந்த பேச்சுக்களாலயோ எழுத்துக்களாலயோ ஒரு இழவும் கிடைக்கபோறதில்லை.
எங்க ஊர் சினிமா ப்ரொட்யூசர் ஷண்முகம் செட்டியார் சித்தூர் நாகய்யாவுக்கு கடன் கொடுத்தாராம். நாகய்யா பணத்தை திருப்பலை. ஷ. செட்டியார் நாகய்யா மேல கேஸ் போட்டார். கோர்ட் வாய்தாவுக்கு போவார். எப்படி தெரியுமா? சித்தூர் டு மெட்ராஸ் தன் கார்ல போவார். நாகய்யா வீட்ல ஹால்ட். அங்கனயே குளிச்சு, டிஃபன் சாப்பிட்டு நாகய்யா கார்ல கோர்ட்டுக்கு போவார். விவகாரம் விவகாரமாவே இருக்கட்டும். மத்த விசயங்கள்ள அதை ஏன் போட்டு குழப்பனும்.
ராஜபக்சே ஏதோ சினிமாவுக்கு விழா எடுக்கிறார்னா எடுக்கட்டும். காரியம் பெருசா வீரியம் பெருசான்னா காரியம் தான் பெருசு. இந்தியால இருக்கிற சூப்பர்ஸ்டார் எல்லாம் ஆளுக்கொரு கண்டிஷன் போட்டு ( ஈழத்தமிழர்கள் நல்வாழ்வை கருதி) இதை நிறைவேத்துங்க வரோம்னு காரியத்தை சாதிச்சிருக்கலாம். அவ்ளோ பெரிய விழா நடக்கறச்ச உலக மீடியா இலங்கைல குவியும் .. காயலான் கடைக்கு போற வயசுல இருக்கிற கலைஞருக்கு புகழ் மாலை சாத்தி கோரிக்கை வைக்கிறாய்ங்க. அதே இழவை ஏதேனும் செய்யக்கூடிய கண்டிஷன்ல இருக்கிற ராஜபக்சேக்கு அதே இழவு மாலைய சாத்தி ஈழத்தமிழர்களுக்காக எதையாச்சும் சாதிச்சிருக்கலாம்.
அதை விட்டுட்டு " டா............ஆய் எவனும் போகக்கூடாது. போனா நடக்கிறதே வேறனு அலப்பறை பண்ணோம். யாராச்சும் யதார்த்தத்தை சொன்னா உடனே சாதிய வச்சு கிழி கிழினு கிழிச்சோம். இந்த மாதிரி சந்தர்ப்பத்துல வாக்குல பேச்சுல எப்படி தெளிவு வரும்.
எண்ணம் போல் மனம். மனம் போல் வாழ்வு. உறுதி கொண்ட நெஞ்சில் தான் சரியான எண்ணம் பிறக்கிறது. எண்ணம் தான் செயலாய் மாறுகிறது. எண்ணம் இருண்ட நெஞ்சில் தீபமாகவேண்டும். ஒரு தீபம் ஓராயிரம் தீபங்களை ஏற்ற எண்ணம் பேச்சாகவும் எழுத்தாகவும் மாறி சீறி புறப்பட வேண்டும்.
ஆயிரம் பூக்கள் மலரட்டும் புதிய சிந்தனைகள் சிதறட்டும்.
No comments:
Post a Comment