எப்படியோ போலிங் முடிஞ்சு ஓட்டிங் மெஷின்களுக்கு சீல் வைக்கிறதை எல்லாம் சூப்பர்வைஸ் பண்ணிட்டு ஷெட்டுக்கு வந்தோம். ஜகன் போலிங் ஏஜெண்ட்ஸையெல்லாம் தனியா கூப்டு என்கொய்ரி பண்ணிட்டு "முகேஷ் .. நாம ஜெயிக்கிறது நிச்சயம். எனக்கு எப்படி நல்ல பேரை வாங்கிதர்ரதுனு ப்ளான் பண்ணு"ன்னாரு. எனக்கும் நம்பிக்கையாவே இருந்தது. கவுண்டிங் ஆரம்பிக்க இன்னும் ஒருவாரம் இருந்தது.
வீட்டுக்கு வந்தேன் .அப்பா,"டேய்.. இனி உன்னால இந்த வீட்டுக்கு எந்த லாபமும் இல்லேனு கன்ஃபார்ம் ஆயிருச்சு. சரி பேரனையாவது பார்த்து திருப்திப்பட்டுக்கலாம்னு பார்த்தா அவனையும் சேத்துக்குள்ள இழுத்துவிட்டுட்ட. பாவம் அந்த மாயா பொண்ணு மேலுக்கு மூச்சுவாங்க ஊரெல்லாம் சுத்தி சுத்தி வருதே தவிர ஷி ஈஸ் டயர்ட் ரா.. எங்கயாச்சும் 4 நாள் கூட்டி போடா ஒரு மாறுதல் இருக்கட்டும் லைஃப்ல"ன்னாரு
ஸ்ரீராம் "டாடி.. எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் செர்ந்து ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுக்கப்போறோம்.அதுக்கு கோவா போறோம்"னான்.
"பார்த்து நைனா .. கேரக்டர்ஸுக்கு ட்ரஸ் உண்டா இல்லியா?"
மாயா வந்து என் கன்னத்துல இடிச்சு " தத் ..பையன் கிட்டே கேட்கிற கேள்விய பாரு. நீ ஜகனோட கதைய படம் பிடிக்க கண்ட புஸ்தவத்தை வரவழைச்சு படிச்சிட்டிருந்தேல்ல . அதையெல்லாம் ஸ்ரீராமும் படிச்சி அந்த ஷாட் இந்தஷாட்டுனு என்னென்னமோ உளர்ரான். ஷார்ட் ஃபிலிம் தானே அதுவும் ஹாண்டிகாம்ல தான் ஷூட் பண்ண போறாங்களாம்"னாள்
ஸ்ரீராமை பார்த்தேன் அரும்பு மீசை மட்டுமில்லேன்னா அப்படியே மாயாதான். ஆண் பிள்ளைக்கு அம்மா சாடை வந்தா நல்லதுல்லன்னு எங்கயோ படிச்சது ஞா வந்துது.
அந்த நினைவை துரத்திட்டு .."பட்ஜெட் போட்டியாடா ..கதை என்ன ? காசு எவ்ள ஆகும்? ஃப்ரெண்ட்ஸ் ஷேர் பண்ணிக்கிறாங்களா.இல்லே .."
"ஜஸ்ட் 35 தவுசண்ட்ஸ் டாடி. இத போய் என்னத்த ஷேர் பண்ணிக்கிறது.. நான் பார்த்துக்கறேன்னிட்டேன்"
அப்பாவுக்கு பயங்கர கடுப்பு "அப்பனுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கான் பாரு"ன்னாரு எரிச்சலா.
ஸ்ரீராம் மாயா பின்னாடி போய் நின்னுக்கிட்டு "டா.........டி"னு கெஞ்ச அப்பாவுக்கு தெரியாம நெஞ்சுல கை வச்சு நான் இருக்கேன்னு சைகை காட்டினதும் மாயாவோட கன்னத்துல பச்சக்குனு ஒரு முத்தம் பதிச்சுட்டு வெளிய ஓடினான்.
"ஹூம்.. 35 ஆயிரம் ரூபாய் வட்டம் எனக்கு. முத்தம் உனக்கான்னேன் மாயா தன் முகத்துல பெருமை பொங்க சரி சரி இன்னைக்காவது எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம் எங்கயும் போயிராதிங்க"ன்னிட்டு பந்தி பாயை விரிச்சா.
ஸ்ரீராம் தன் ஃப்ரெண்ட்சோட கோவா போனான். நானும் ,மாயாவும் சென்னை போய் தங்கிட்டு வந்தோம். ஸ்ரீதர் இன்னும் போல வயசானாப்ல இருந்தார். பி.ஆர் மாறவே இல்லை. அடுத்த மாசம் மகளுக்கு கல்யாணம்னு பத்திரிக்கை கொடுத்தார்.
. ஒய்.எஸ்.ஆர் அப்பார்ட்மென்ட் விஷயத்துல டம்ப் ஆகிக்கிடந்த என் பணத்தை ரிலீஸ் பண்ணச்சொல்லி G.O இஷ்யூ பண்ணிட்டாருனு ஜகன் போன் பண்ணி சொன்னார் . அடுத்து கட்டப்போற புது அப்பார்ட்மென்ட்சை பாலியல் தொழிலாளிகளுக்கு ஆஃபர் பண்ணப்போறதா சொன்னேன். ஜகன் "யப்பா ! இதெல்லாம் ஃபோன்ல டிசைட் பண்ற விஷயம் இல்லே. நேர்ல பேசலாம் .உன் வேலையையெல்லாம் முடிச்சிக்கிட்டு ஊர் வந்து சேரு.நேர்ல பேசலாம்"னாரு
கலெக்டரே வீடு தேடி வந்து அப்பாக்கிட்டே செக்கை கொடுத்துட்டு போக அவரு அக்கவுண்ட்ல போட்டுட்டு ஃபோன்ல சேதி சொன்னாரு.
மாயா நான் சேர்மன் பதவில உட்கார்ந்துட்டா என்னெல்லாம் தேவைப்படும்னு பெரிசா லிஸ்ட் ஒன்னை போட்டுக்கிட்டு வாங்கி குவிச்சா. எல்லாத்தயும் லாரி சர்வீஸ்ல போட்டு அனுப்பிக்கிட்டே இருந்தா. நகர தூதனோட எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் ஆமுதாலா முரளி "சார் இந்த நாலு நாள்ள அடுத்த இஷ்யூவுக்கு ஐட்டங்க எழுதினதை விட லாரி சர்வீஸ் டெலிவரி சலான்ல கை.எ போட்டதுதான் ஜாஸ்தி"னுசலிச்சிக்கிட்டான்னா பார்த்துக்கங்களேன்.
கவுண்டிங்குக்கு முந்தின நாள் சித்தூர் வந்தோம். கவுண்டிங் முடிஞ்சு என் வெற்றியை அறிவிச்சாங்க. நல்ல நாளா பார்த்து ஜகன் முன்னிலைல நகராட்சி சேர்மனா பதவி ஏத்துக்கிட்டேன்.
நகராட்சியோட நிர்வாகம் பிடிபடவே 6 மாசமாயிருச்சு. ஆறு மாச காலம் என் சேம்பர்ல சி.சி கேமராவ பொருத்தி ஊழியர்கள்ள இருந்து , விஐபிக்கள்,பொதுமக்கள் சந்திப்புகளை எல்லாம் ரெக்கார்ட் பண்ண வச்சேன். மொத்ததையும் போட்டு பார்த்து குறிப்பெடுத்து தர துடியா ஒரு பொண்ணை அப்பாயிண்ட் பண்ணிக்கிட்டோம். மாயா சூப்பர்விஷன்ல 500 பக்கத்துல டாக்குமென்டேஷன் நடந்து கைக்கு வந்தது. அதையெல்லாம் பேஸ் பண்ணிக்கிட்டு ஒரு அஜெண்டா தயார் பண்ணி ஜகன் கிட்டே டிஸ்கஸ் பண்ணேன்.
ஜகன் " த பாருப்பா இன்னைக்கு எனக்கு என்ன வயசுங்கறே .. 55 ஆகுது. நான் கவர்ன்மென்ட் சர்வீஸ்ல இருந்திருந்தா ரிட்டையராகவேண்டிய வயசு. நான் சவாரி பண்ணிக்கிட்டிருந்த புலி மேல நீ ஏறிட்ட. நான் கொஞ்சம் அக்கடானு இருக்கலாம்னு இருக்கேன்.எனக்குள்ளயும் சில கேள்விகள் இருக்கு. அப்பார்ட்மென்ட் கட்டி தேவடியாளுங்களுக்கெல்லாம் கொடுக்கிற அளவுக்கு எனக்கு வசதியில்லேப்பா. சின்னதா ஷீர்டி சாய்பாபாவுக்கு ஒரு கோவில் கட்டலாம்னு இருக்கேன். இந்த நகராட்சி நிர்வாகத்தை எல்லாம் நீ பாரு. அடுத்த தேர்தலுக்குள்ள தொகுதி சீரமைப்பு வரப்போவுது. தவனம்பள்ளி,அரகொண்டா எல்லாம் போய் குடிபாலா என்.ஆர் பேட்டை எல்லாம் சேரப்போவுதாம். நான் அந்த ஏரியா மேல கான்சன்ட்ரேட் பண்றேன்"னிட்டார்
நான் சேர்மனானதுல மாயாவுக்குத்தான் ஏக பெருமை. வீட்டு நிர்வாகத்துக்கு ஃபுல் டைம் ஒர்க்கர்ஸை அப்பாயிண்ட் பண்ணிட்டா. கடை கண்ணிக்கு போய்வர ஒரு பையன். துணி துவைச்சி,பாத்திரம் கழுவ ஒரு வேலைக்காரி, ஏற்கெனவே இருந்த சமையல் காரம்மாவுக்கு அரைச்சி,இடிச்சி கொடுக்க ஒரு அசிஸ்டன்டுனு போட்டு விட்டுட்டா. என் விசிட்டர்ஸை டீல் பண்றதுலயும், நகர தூதா மேனேஜ்மென்ட்லயும்தான் அவளுக்கு இன்டரஸ்ட்டுனு ஆயிருச்சு.
ஸ்ரீராம் ஏதோ கம்ப்யூட்டர் க்ளாஸ் போறேன்னு கதை பண்ணிக்கிட்டிருந்தான்.இந்த இடைவெளில அப்பா முன்னாள் அரசு ஊழியர்கள் சங்கம் ஏற்பாடு பண்ண நார்த் இண்டியா டூருக்கு போறதா சொல்லி கிளம்பிட்டார். வீட்ல பாட்டி ,நான் ,மாயா மூணு பேர்தான்.
நகராட்சி நிர்வாகத்தை சீர்திருத்த நான் ப்ரிப்பேர் பண்ண அஜெண்டாவை டிஸ்கஸ் பண்ண ஜகன் ஆர்வம் காட்டாததால மாயாகிட்டயே டிஸ்கஸ் பண்றதுனு முடிவு பண்ணிட்டேன்.
"மாயா இங்கே வா "
"வந்தேன்"
"இப்ப நீ என் மனைவிங்கற விஷயத்தை மறந்துரு"
"அய்யய்யோ .. மறுபடி பேய் முருங்கை மரம் ஏறிருச்சா. இப்ப என்ன பக்கத்து வீட்டு ஆன்டியா நடிக்கனுமா?"
"தத்.. உனக்கு மெனோஃபஸ் ஸ்டார்ட் ஆயிருச்சுனு நினைக்கிறேன். சதா சர்வ காலம் அதே நினைப்பா"
"யாருக்கு? எனக்கு? இந்த பேச்சை யார் சொல்றது .."
"மாயா ! இப்ப உன்னை ஒரு சாதாரண குடும்பத்தலைவியா நினைச்சுக்க உன் பார்வைல நகராட்சி நிர்வாகம் எப்படியிருக்கனும்னு நினைப்பே.. அதை சொல்லு"
"தண்ணி பிரச்சினை ரொம்ப முக்கியம்"
"அதுக்கு த்ரீ பாயிண்ட் ப்ரோக்ராம் ஒன்னு வச்சிருக்கேன். முத பாயிண்ட் ரிப்பேர்ல இருக்கிற போர் ,மோட்டர் ,பைப் லைன் எல்லாத்தயும் பக்காவா ரெடி பண்ணப்போறேன்.அடுத்து பைப் லைன் இல்லாத ஏரியாவுக்கு ட்ராக்டர் மூலமா வாட்டர் சப்ளை பண்றோம். அதுக்கு ட்ராக்டர் வாடகை,டீசல்,ட்ரைவர் பத்தானு செலவு பிச்சிக்கிட்டு போவுது.அதுக்கு பதிலா எந்த பாயிண்ட்ஸ்லருந்து தண்ணி கொண்டு வரோமோ அங்கேருந்து பைப் லைன் போட்டுரலாம்னு ப்ளான். இது ஒர்க் அவுட்டாகனும்னா காசு வேணும். காசு இருந்துட்டா போதாது சிக்கனமா , சீக்கிரமா வேலை முடியனும். லேட்டாக லேட்டாக டபுள் எக்ஸ்பெண்டிச்சராயிரும். பேரு கெட்டுப்போகும். இல்லாத ஊருக்கு போகாத வழிய சொல்றானு காய்ச்சுவாங்க"
"ஒன்னு பண்ணலாமே காண்ட்ராக் விடறேனு வை.. அவன் ஒருமார்ஜினை வச்சுக்கிட்டு சப் காண்ட் ராக்ட் விடறான். சப் காண்ட் ராக்டர் கூலிக்காரங்களை பிடிச்சு வேலை செய்யறான். இதனாலதான் செலவு கூடுது. பில்டிங்க் ஒர்க்கர்ஸ் அசோசியேஷன் ஏற்கெனவே பலம்மா இருக்கு. அரசாங்கம் இலவசமா வீடெல்லாம் கொடுத்திருக்கு. ப்ளம்பர்ஸ் அசோசியெஷன் ஒன்னும் ஃபார்ம் பண்ணி இவிக ரெண்டு அசோசியேஷனுக்கும் இந்த வெஞ்சரை கொடுத்துட்டா என்ன?"
"சூப்பர் ஐடியா கண்ணு. இதே பிரச்சினைக்கு இன்னொரு கோணத்துல யோசிச்சேன்.அதான் சிக்கனம். இதை ஊக்கப்படுத்த வீட்டுக்கு ஒரு குக்கரும், மாசத்துக்கு தலைக்கு 4 சீயக்காய் தூள் பொட்டலமும் தரப்போறேன்."
"என்னது குக்கர்,சீயக்காய் தூளா? அதுக்கும் தண்ணிய சிக்கனமா பயன் படுத்தறதுக்கும் என்ன சம்பந்தம்?"
"இருக்கு கண்ணு .தலைக்கு ஷாம்பூ போட்டா ஒரு பக்கெட் தண்ணி அதனோட குழகுழப்பை போக்கவே சரியா போயிருது. அதனால் ஷாம்பூவுக்கு பதில் சீயக்காய் தரப்போறேன். அதுவும் இலவசமா. அதே மாதிரி குக்கர்ல குக் பண்றதால் சத்துக்கள் வீணாறதில்லை. ஃப்யூயலும் மிச்சமாகும்"
"எல்லாருக்கும் குடுத்தா நகராட்சி திவாலாயிருமே"
"அஸ்கு புஸ்கு எல்லாத்துக்கும் கொடுக்க நான் என்ன இ.வாயனா. வரிபாக்கி இருக்க கூடாது கண்டிஷன் நெம்பர் ஒன். மழை நீர் தேக்க தொட்டி கட்டியிருக்கனும் நெம்பர் டூ. "
" ஐடியா என்னவோ நல்லாருக்குப்பா .இதெல்லாம் நகராட்சி நிர்வாகம் மூலமா ஒழுங்கா செய்யமுடியுமானு"
"அதுக்கெல்லாம் ஆல்ட்டர் நேட்டிவ் யோசிச்சாச்சு கண்ணு.. இப்பத்தான் செல்ஃப் ஹெல்ப் க்ரூப்ஸ் இருக்கில்லை. இந்த பொறுப்பை அவிகளுக்கு தரப்போறேன்"
"வெரி குட்.அப்போ நிர்வாகத்தை சீர்திருத்தற மாதிரி யோசனையே இல்லியா?"
"ஏன் இல்லாம .. நான் பார்த்தவரை எல்லா பார்ட்டியும் லாலா போடுதுங்க. அதை நிறுத்த கவுன்சலிங் கொடுக்கனும். பெண் ஊழியர்களை பொறுத்தவரை வீட்டு வேலைலயே அலண்டு போய் கொட்டாவி விடத்தான் ஆஃபீசுக்கேவராங்க. அவிகளுக்கு ஒரு ஆல்ட்டர் நேட்டிவ் ப்ளான் பண்ணியிருக்கேன்"
"அதென்னப்பா"
"நகராட்சி ஊழியர்களுக்காக செல்ஃப் ஹெல்ப் க்ரூப்ஸ் மூலமா கேண்டீன் வசதி பண்ண ப்ளான் பண்ணியிருக்கேன்.மேற்படி விமன் எம்ப்ளாயிஸ் விருப்பம் தெரிவிச்சா அவிக வீடுகளுக்கே தினசரி லஞ்ச் டோர் டெலிவரி தரோம்"
"இதெல்லாம் ஒழுங்கா நடக்குமான்னு?"
"நடக்க வைக்கனும். இல்லாட்டி ஜகன் கிட்டே முகத்தை கூட காட்டமுடியாது. சரி ஒரு குடும்பதலைவியா ந. நிர்வாகத்துகிட்டே வேறென்ன எதிர்பார்க்கிறே?"
"வேற என்ன? தெருவிளக்கு, சேனிட்டேஷன் ,முக்கியமா பப்ளிக் யூரினல்ஸ் ."
"ஓகே சேங்ஷன்ட். இன்னும் வேற ஏதாவது?"
"முடிஞ்சவரை சனம் உங்களை தேடிவராம செய்ங்கப்பா."
"வாரத்துல ஒரு நாள் ஆன்லைன்ல இருக்கிறாப்ல .. ஒரு நாள் ஃபோன்லைன்ல அவெய்லபிளா இருந்தா போவுது. எந்த பிரச்சினைன்னாலும் ஃபோன்பண்ணா போதும், பை போஸ்ட் சொன்னா போதும் வேலையாயிரும்னு நம்பிக்கைய வரவச்சுட்டா சனம் ஏன் வரப்போகுது?"
"இந்த வீட்டு வரி தண்ணி வரி கூட டோர் ஸ்டெப்ஸ்ல வசூலிக்கிறாப்ல பண்ணேன்"
"இப்படி வச்சிக்கலாம். எல்லாருக்கும் இது கன்வினன்டா இருக்கும்னு சொல்லமுடியாது. ஃபோன் பண்ணி கூப்டா டோர் ஸ்டெப்ஸ்ல கலெக்ட் பண்ணீக்கிறாப்ல செய்ஞ்சுருவம். இன்னும் வேற ஏதாவது?"
"வேறன்னா.. நகராட்சி ஆஃபீஸே நாத்தமடிக்குது. அதை மாத்தேன் பார்ப்போம்"
"மாத்திரலாம். வேற "
"ஹும்.. வெஜிட்டபிள் மார்க்கெட், ஃபிஷ் மார்க்கெட், ஸ்லாட்டர் ஹவுஸ் எல்லாம் ரொம்ப கோராமையா இருக்கு "
"பாத்துக்கலாம். இதெல்லாம் ஜி.ஹெச் இருக்கிற ஏரியாவுல இருக்கறதால ஆம்புலன்ஸ் போக கூட வழியில்லாம இருக்கு. மொத்தத்தையும் அடிச்சு தூக்கிட்டு
பேஸ்மென்ட்ல பார்க்கிங் , கோல்ட் ஸ்டோரேஜ் வசதியோட புதுசாவே கட்டணும்.இன்னும் ஏதாவது இருக்கா?"
"பஸ் ஸ்டாண்டுப்பா ..குண்டும் குழியுமா, நிக்க நிழலில்லே,குடிக்க தண்ணியில்லே ,பிக் பாக்கெட் பயமிருக்கு,ஈவ் டீசிங் இருக்கு, இல்லீகல் எலிமென்ட்ஸ் நிறைய இருக்காங்க"
"ஓகே ..நாம என்னதான் எல்லாத்தயும் சரி பண்ணாலும் ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் அதிகமா இருக்கிறதால எல்லாமே நாஸ்தியாயிரும் இதுக்கு ஒரு வழி பண்ணா நல்லாருக்கும்"
"அவுட் ஸ்கர்ட்ஸ்ல இருக்கிற எவனும் நகராட்சி எல்லைக்குள்ள வரக்கூடாதுன்னிரப்போறியா?"
"அப்படியில்லே லேசா ஸ்ட்ரெயின் கொடுத்தா போதும்.. அன் நெசசரியா வரவனெல்லாம் ப்ரேக் ஆயிருவான். ஹார்ட் ஆஃப் தி டவுனை ஐடென்டிஃபை பண்ணி நாலு மெயின் ரோட்டையும் க்ரில் போட்டு ப்ளாக் பண்ணி ஃபோர்வீலர்ஸ், டூ வீலர்ஸுக்கெல்லாம் அங்கயே பார்க்கிங்க் ஏற்பாடு பண்ணி ஒரு ரூபா பார்க்கிங்க் ஃபீ கலெக்ட் பண்ணா எப்படி இருக்கும்?"
" நல்லாதான் இருக்கும். ஆனால் ஜனங்க கோ ஆப்பரேட் பண்ணனுமே"
" பண்ணுவாங்க . அதுக்கு முன்னாடி சனத்துக்கு நிர்வாகம்னா என்ன? நிர்வாகம் திறமையா செயல்படா என்னென்ன வசதியெல்லாம் கிடைக்கும்னு டேஸ்ட் காட்டனும். "
"முதல்ல புல்லை காட்டி வாய திறக்க வச்சு கடிவாளம் மாட்டறேங்கற.."
"யெஸ். மாயா.. இன்னொரு பிரச்சினை இருக்கு. இந்த நகராட்சி நிர்வாகத்துல ல்ஞ்சம் தலைவிரிச்சாடுது. இன்னொரு சோகம் என்னடான்னா எவனுக்குமே வேலைல இன்டரஸ்டே கிடையாது. லஞ்சம் கொடுத்தாலும் அதே இழவுதான், கொடுக்கலன்னாலும் அதே இழவுதான் .இவிகளை என்ன பண்றதுன்னே புரியலை"
"சரி பார்ப்போம். ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ் மெண்ட்"
No comments:
Post a Comment