Wednesday, April 14, 2010

நியூஸ் ப்ரின்ட் மோசடி

1.ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா? குமுதம் ஸ்வாமி நித்யானந்தாவின் கட்டுரை தொடரை வெளியிட்டது கூட இந்த முறையில்தான் என்று குற்றம் சாட்டுகிறேன். இதை மறுக்க முடியுமா?

விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா?

ஒரு புறம் போலி டாக்டர்கள்,கார்ப்போரேட் மருத்துவமனைகள் எப்படியெல்லாம் மக்கள் உயிருக்கு உலை வைத்தன என்ற செய்திகளை விஸ்தாரமாக வெளியிட்டபடியே அதே மனிதர்கள்,அதே நிறுவனங்களின் விளம்பரங்களையும் வெளியிடுவது ஏன்? நெகட்டிவ் செய்திகள் வெளிவந்ததால் அவற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த  அவர்கள் விளம்பரம் தந்தனரா? அல்லது மேற்படி நெகட்டிவ் கட்டுரைகள்  விளம்பர வேட்டைக்கு நீங்கள் வைத்த இரையா?


3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை கண்ட்ரோல் ரேட்டில் தருகிறது. ஆனால் எந்த பத்திரிக்கையும் நியூஸ் ப்ரின்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. கண்ட்ரோல் ரேட்டில் அரசு தந்த காகிதங்கள் என்னவாகின்றன? ப்ளாக்ல வித்துர்ரிங்களா? இது அரசுப்பணத்தை கொள்ளையடிப்பதாகாதா? காஸ்ட்லி பேப்பர்ல பத்திரிக்கை போடற கெப்பாசிட்டி இருந்தும் சப்சிடிக்காக நாக்கை தொங்க போடறது நியாயமா? வாலண்டரியா " பாருப்பா எங்களுக்கு வசதியிருக்கு. சப்சிடி ரேட்ல நியூஸ் ப்ரிண்ட் வேணாம். எங்க கோட்டாவை ரத்து பண்ணி உண்மையிலேயே அவசியமுள்ள சின்ன பத்திரிக்கைகளுக்கு தாங்கனு சொல்லலாமே


4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைகளுக்கு வேலை செய்கிறார்களோ அத்தனை மடங்கு சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா? இது உண்மையானால் இது கொத்தடிமை சட்டத்துக்கு விரோதமல்லவா? குறைந்த பட்ச கூலியை அமல் படுத்தாதிருப்பது சட்ட விரோதமல்லவா? பின்னே என்ன மயித்துக்கு கொத்தடிமைகள் பத்தி செய்தி வெளியிடறிங்க?


5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு குறித்த விவரம் என்ன? இதையெல்லாம் கணக்குல காட்டறிங்களா? பத்திரிகையோட  சோப் இலவசம். நிரோத் இலவசம்னு தர்ரிங்க. அந்த கம்பெனியோட விளம்பரத்தையும் அதே இஷ்யூல வெளியிடறிங்க. காசுக்கு பதில் பொருளா தந்துர்ராங்களா? அந்த பொருளோட தரம் என்ன ? பேட்ச் நெம்பர் என்ன ? காலாவதியான பொருளை இப்படி அள்ளிவிட்டுர்ராங்களா? இதையெல்லாம் சரி பார்க்கறது யாரு? மேலும் தமிழ் நாட்டுக்கு ஒரு விலை வெளி நாட்டுக்கு ஐம் சாரி வெளி மானிலத்துக்கு ஒரு விலைனு வைக்கிறிங்க? இது ரைட் டு ஈக்வாலிட்டிக்கு விரோதமில்லையா?



6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த அறிவிப்பை தாங்கள் வெளியிடுவதற்கு முன் அனுப்பப்பட்ட படைப்புகளை இப்போ கேட்டா  திருப்பி அனுப்புவிங்களா? உங்க முதுகுல இவ்ள அழுக்கை வச்சிக்கிட்டு அரசு அமைப்புகளோட ஜவாப் தாரி தனத்தை விமர்சிக்கற தகுதி உங்களுக்கு இருக்கா?



7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா? ஒரு பிரபல பெண் எழுத்தாளர்  கான்வென்ட்ல இருந்து கான்வென்ட் யூனிஃபார்மோட பத்திரிக்கை ஆஃபீஸ் வந்து கதைய கொடுத்ததா எழுதியிருக்காய்ங்க. அப்படி ஒரு கெட்டப்ல வந்து கதைய கொடுத்தாதான்  பிரசுரத்துக்கான சான்ஸ் அதிகரிக்குமா?


8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. சில நாள் கழிச்சு கட்டுரை தொடர் நின்னு போய்  கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்? பேரம் குதிர்ந்ததா? இல்லை பேரத்தை எதிர்பார்த்துதான் க.தொடரே போட்டிங்களா? விளம்பரம்ங்கறது நிறுவனங்கள், பிரபலங்கள் தங்களுக்கு தேவை
அவசியம் ஏற்பட்ட போது தருவதா இருக்கனும். ஆனால் நீங்களே அந்த ஸ்பெஷல், இந்த ஸ்பெஷல்னு அக்கேஷனை க்ரியேட் பண்ணி மேற்படி விளம்பரங்கள் தொடர்பான ஐட்டம்ஸ் போட்டு வித்து காசாக்குறிங்க. இதுலருந்து என்னடா புரியுதுன்னா உங்க பத்திரிக்கைகள்ள தர்ர விளம்பரங்கள் மேற்படி நிறுவங்கள்,பிரபலங்களோட நோக்கத்தை (சேல்ஸ் ப்ரமோஷன் , கம்யூனிகேஷன்) நிறைவேத்தறதில்லை.


9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண‌ பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே..பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திர‌னோட காசு வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா? வயதுவந்தவர்களுக்கு மட்டும்ங்கற மாதிரி பிராமணர்களுக்கு மட்டும்னு ஒரே ஒரு பத்திரிக்கைய நடத்த முடியுமா?


10.உங்கள் வலை தளத்தில் contact என்பதை மட்டும் ஒளித்து வைத்துள்ளீர்களே அது ஏன்? தப்பித்தவறி அதை கண்டுபிடித்து வேறு ஏதேனும் விஷயமாக மெயில் அனுப்புபவர்களுக்கு அவர்களின் மெயில் ஐடியை பிக் அப் பண்ணிக்கிட்டு
உங்கள் விளம்பரத்தை தான் அனுப்புகிறீர்களே தவிர பதில் தருவதில்லையே இதுதான் பத்திரிக்கை தர்மமா?

4 comments:

  1. யூர்கன் க்ருகியர் அவர்களே,
    வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  2. பாலாஜி கண்ணன் அவர்களே,
    நன்றி. இன்னும் என்னென்ன எழுதினா நல்லாருக்கும்னு ஏதாவது சஜஸ்ட் பண்ணுங்களேன்

    ReplyDelete