Friday, April 30, 2010

காஃபி வித் ஹனுமான்


அண்ணே,
வணக்கம்ணே. இந்த விடுதலை தொடரை  ஆரம்பிச்ச பிறகு நடந்த ஒரு சில சம்பவங்கள் டர்ராக்கிருச்சு. இருந்தாலும் விடறதாயில்லை. இன்னைக்கு காஃபி வித் ஹனுமான் பதிவோட ராம நாம மகிமை என்ற தனிப்பதிவையும் போட்டிருக்கேன். தலைப்பு மேல க்ளிக்கி ஒரு ஓட்டம் ஓட்டிருங்க. எப்பவும் போல உங்கள் கருத்துக்களை தெரிவிங்க. அதைவிட முக்கியம் நம்ம முருகேசு என்னத்தையோ சொல்லவர்ரார் , அதை சொல்ல விடாம ஏதோ ஒரு ஷக்தி (ரஜினிஸ்டைலுங்கண்ணா) தடுக்குது. ஸோ நம்ம மனோசக்தியை செலுத்தி முருகேசுவை பலப்படுத்துவோம். ஜஸ்ட் பிரார்த்தனை பண்ணுவோம்னு நினைச்சு பண்ணுங்கண்ணா. ந.கி.பா.விடுதலை தொடரை நாளைக்கு தொடர்ரேங்கண்ணா
நேத்து  சாயந்திரம் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து கிட்டு சீரியஸா யோசிச்சிட்டிருந்தேன்.

" ஏதோ நம்ம வரைக்கும்  நவகிரகங்களோட பிடிலருந்து  நழுவி நிம்மதியா இருந்தோம். இந்த வித்தைய " யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"னு ப்ளாக்ல போஸ்ட் ஆரம்பிச்சோம். அதுக்கு முன்னாடி இங்கிலீஷ்ல போட் காஸ்ட் பண்ணப்பவே லேசா முரண்டு பிடிக்க ஆரம்பிச்சது. இந்த  விடுதலை சமாசாரத்தை  ஆரம்பிச்ச பிறகு எல்லாமே பஜ்னு ஆயிருச்சு. என்ன பண்ணலாம் பேசாம விட்டு தொலைச்சுரலாமா? "

- இப்படி சகட்டுமேனிக்கு சல்க் பண்ணிக்கிட்டிருந்த சமயம் திடீர்னு ஸ்வீட்டி ( என் மகள் வளர்க்கிற பாமரேனியன் நாய் குட்டி ) மண்டை தெறிக்க குலைக்க ஆரம்பிச்சுது. என்னங்கடா அக்கம் பக்கத்து பசங்க யாராச்சு கோல்,கொம்பை கொண்டு வந்து கேட்ல தட்டி கடுப்பேத்தறாங்களா?ன்னு போய் பார்த்தா அரையாள் உயரத்துக்கு ஒரு ஆண் குரங்கு சமீபத்தில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க  வாங்கிய ஆளுயர பேரல்  மேல உட்கார்ந்திருந்தது.

ஆகா நம்ம கையறு நிலைய கண்டுக்கிட்டு சார்ஜ் ஏத்திவிட்டுட்டு  போக ஆஞ்சனேயரே வந்துட்டாப்ல இருக்குன்னு குஜிலியாயி ஸ்வீட்டியை பக்கத்து போர்ஷனுக்குள்ள (பாழடைந்த)  தள்ளி கேட்டை போட்டேன். மேற்படி ஆ.கு பேரல் மேல இருந்து குதிச்சு தயங்கி நின்னது. நான் " வாங்க..சார்" னிட்டு உள்ளார வந்து பாய் தலையணையெல்லாம் எடுத்து சேர்ல அடுக்கி பர பரனு பெருக்கி , பூஜை அலமாரில இருக்கிற மஞ்ச தண்ணி எடுத்து அறையெல்லாம் தெளிச்சேன். வெளியவே தயங்கி நின்ன ஆ. குரங்குக்கு செகண்ட்ஸ்ல வாங்கின மர சேரை காட்டி" உட்காருங்க சார்" னேன்.

அது  வந்து ராமர் படத்து முன்னாடி நின்னு கை கூப்பிட்டு சேரை தூர இழுத்து ஏறி உட்கார்ந்தது. காஃபி சாப்டுங்கன்னிட்டு ஃப்ளாஸ்க்ல இருந்து காஃபிய சரிச்சு கொடுத்தேன். கொஞ்சம் போல சாப்டுட்டு "க்கும்"னு தொண்டைய கனைச்சுக்குச்சு. கணீர் குரல்ல பேச ஆரம்பிச்சது.

"ஏம்பா .. ஒன்னாலே எனக்கு எங்கருந்தெல்லாம் பிரஷர் தெரியுமா?  உனக்கு கொடுத்திருக்கிற நாலெட்ஜெல்லாம் சாஃப்ட் வேரோட எவால்யூஷன் காப்பி மாதிரி . ஏதோ பர்சனலுக்கு யூஸ் பண்ணா பரவாயில்லை நீ பாட்டுக்கு ராமானுஜர் கோபுரம் ஏறி கூவினாப்பல ப்ளாக்ல போட்டு உடைக்கிறே"

"நினைச்சேன். என்னடா எல்லாம் ஏறு மாறா நடக்குதே ஜேஜிங்க எங்கனா  கோச்சிக்கிச்சோனு நினைச்சேன்..சரியா போச்சு"

"த பாரு உடனே நீ இந்த சீரியலை நிப்பாட்டனும் "

" என்னசார் இது அ நியாயமா இருக்கு. கடவுளுக்கு இந்த படைப்பே ஒரு லீலை ஜஸ்ட் ஒரு விளையாட்டுனு சொல்றாங்க.  விளையாட்டாவே இருந்தாலும் அதுக்குனு ஒரு விதியிருக்கனுமில்லையா. அந்த விதி ரெண்டு கட்சிக்கும் தெரிஞ்சிருக்கனுமில்லையா. ரூல்ஸை நீங்களே ரகசியமா  வச்சிக்கிட்டு ப்ளே ரூல்ஸே தெரியாத எங்களை நாயடி ,பேயடி அடிக்கிறது நியாயமா ? ஏதோ நானா கெஸ் பண்ண சில ரூல்ஸை சனத்துக்கு சொல்ல பார்த்தா அதுக்கு கூட தடையா? ஏன் ? ஒய் ? க்யோன்? எந்துக்கு?"

"பாத்திரமறிந்து பிச்சையிடுன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமோ?"

"தெரியும் சார். ஓஷோ சொல்வாரு. ஞானம் கிட்டின பிறகு ஞானிக்குள்ள ஒரு அதை பகிரனுங்கற துடிப்பு வருமாம். அந்த துடிப்பு தூண்டி விடறப்போ .. நம்ம முன்னே நீட்டப்பட்ட பாத்திரம் ஸ்டீலா, அலுமினியமானெல்லாம் பார்க்க முடியறதில்ல சார்.. இருக்கிறதையெல்லாம் ஊறி வர்ரதையெல்லாம் கொட்டி தீர்த்துரனும்னு தான் தோணுதே தவிர.."

"ஏம்பா நீ போட்டு உடைச்சிக்கிட்டிருக்கியே இதெல்லாம் தேவரகசியம்பா . தேவலோகமே கொந்தளிச்சு கிடக்கு"

"அட போங்க சார்.. எங்க கண்ட் ரில கூட அப்படித்தான் உதவாக்க்கரை ஃபைலையெல்லாம் சீக்ரெட் சீக்ரெட்டுனு இறுக்கிப்பிடிச்சாங்க.அப்புறம்தான் தெரிஞ்சது ரகசியங்கறது நம்மாளுங்களை பொருத்தவரைதான் பாக்,சீனா காரனுக்கெல்லாம் அது பர்த் டே சூட் மாதிரின்னு"

"அப்போ ரகசியமே கூடாதுங்கறயா?"

"இருக்கனும். எதுக்கு இருக்கனுமோ அதுக்குத்தான் இருக்கனும். ஒருத்தனை விட்டு லட்சுமி  போற காலம் வரதுக்கு முன்னே என்ன நடக்கும்? அதே லட்சுமி வர்ரதுக்கு முந்தி என்ன நடக்கும், அவன் சாகறதுக்கு முன்னாடி என்ன நடக்கும் இந்த மாதிரி சமாசாரமெல்லாம் என் மைண்ட்ல ஸ்டோர் ஆகியிருக்கு. அதையெல்லாம் ரகசியம்னு பூட்டி வச்சிக்கிட்டா வேஸ்டு. இப்போ மரணத்தை எப்படி தள்ளி போடமுடியும்னு கூட சில குன்செல்லாம் கண்டுபிடிச்சு வச்சிருக்கேன்.அதை போட்டு உடைச்சேனா? இல்லையே. யாராச்சும் ஆவிசு என்னனு பார்த்து சொல்லு சாமின்னா ..யோவ் சாகனும்னா சந்திராஷ்டமத்துல கூட செத்து போயிரலாம்.. பிழைச்சு வரனும்னா அஷ்டமத்துல சனி+செவ்வாய் சேர்ந்துவந்தாலும் பிழைக்கலாம் இதெல்லாம் கடவுளோட ஜூரிஸ்டிக்ஷன் நான் என்டர் ஆகமாட்டேன்னு கழட்டி விட்டுர்ரன் இல்லியா? பார்ப்பாரவுக கண்டதுக்கு சீக்ரெட் மெயிண்டெயின் பண்ணதாலதான். சூத்திரனுங்க போடா பொங்கின்னிட்டு விலகிப்போயிட்டாய்ங்க"

 "அப்போ நீ இந்த தொடர்பதிவை நிறுத்தமாட்டே.அப்படித்தானே"

"தலைவா! நான் ஹெச்.ஜி .வெல்ஸ் ரேஞ்சுல உலக அரசாங்கத்தை கனவு காண்ற பார்ட்டி. கடவுள் தான் பி.எம். கிரகங்கள் தான் மந்திரிங்க. மக்களுக்கு உணவு,உடை,இருப்பிடம், செக்ஸை தர்ர பொறுப்புள்ள சுக்கிர கிரகம் வருஷத்துக்கு 8 மாசம் அனுகூலமா இருக்கு.ஆனால் சனத்துக்கு இதெல்லாம் கிடைக்குதா இல்லே. எவனோ மத்தில அடிச்சிக்கிட்டு போயிர்ரான். தமிழ் நாட்ல அரசாங்கம் தர்ர இலவச  தொலைக்காட்சியையே எடுத்துக்கங்க. அந்த சனத்துக்கு சுக்கிர பலம் போதாமதான் இத்தனை காலம் டி.வி வாங்காம,வாங்க முடியாம இருந்தாங்க. ஆனா அரசாங்கம்  அவிகளுக்கு அதை கொடுத்துருச்சி. ஏதோ கொஞ்சம் நஞ்சம் சுக்கிர பலத்தை வச்சு ஓரளவு நிம்மதியா வாழ்ந்துக்கிட்டிருந்த சனம் பாழாப்போன டிவில வர்ர சீரியலுங்களை பார்த்து தலையை கெடுத்துக்கிட்டு, விளம்பரங்களை பார்த்து ஆசைகளை வளர்த்துக்கிட்டு மனசை கெடுத்துக்கிட்டு நாசமா போறாங்க.வேணம்னா ஒரு சர்வே எடுக்க சொல்லுங்க கலர் டிவி வர்ரதுக்கு முந்தி அவிக செக்ஸ் லைஃப் எப்படி இருந்தது. வந்த பிறகு எப்படியிருக்கு பார்க்க சொல்லுங்க.   நான் ஏதோ டைரக்டா கவர்ன்மென்ட்ஸை காண்டாக் பண்ணி நதிகளை இணைச்சு சுபிட்சத்தை கொண்டுவந்து அது மூலமா மக்களோட வாழ்க்கையை பெட்டராக்கனும்னு நினைசேன். முடியலை. ஸோ அப்போ மேக்ரோ லெவல்ல செய்ததை இப்போ மைக்ரோ லெவல்ல செய்யறேன். இதை கூட தடுத்தா எப்படி தலைவா?"

"நான் சொல்றதே உனக்கு புரியமாட்டேங்குது. ஆஃப்டர் ஆல் நீ  ஒரு தனிமனிதன். உன்னால எப்படி இத்தனை கோடி மக்களோட வாழ்க்கைய மாத்தமுடியும்?
எப்படியோ அந்த பிரமைல இருந்து ரிலீவ் ஆனேனு சந்தோஷப்படா இப்போ மைக்ரோ லெவல்ல போறேன்னுட்டு இயற்கை மர்மங்களையெல்லாம் போட்டு உடைக்க ஆரம்பிச்சுட்டே"

"பாஸ்! நான் பாட்டுக்கு கண்டவ பின்னாடி ஓடி நாசமா போயிருப்பேன். என் வாழ்க்கைய ஒடைச்சு திருப்பினிங்க. உங்க சான்னித்யத்துக்காக ராம நாமம் ஜெபிக்க ஆரம்பிச்சேன். யத்பாவம் தத்பவதிங்கற மாதிரி நானே ஒரு குட்டி ராமனாயிட்டேன். அவரோட ராமராஜ்ஜியத்தை மறுபடி இங்கே ஸ்தாபிக்கனும்னு டிசைட் ஆயிட்டேன். அந்த முயற்சில மேக்ரோ லெவல்ல ஆப்பரேஷன் இந்தியா 2000 மைக்ரோ லெவல்ல மணி சீக்ரெட்ஸ், நவகிரக பாதிப்பிலிருந்து விடுதலைய தொடர்ந்துக்கிட்டிருக்கேன். இங்கே நான் தனியில்லே. ஒரு புழு பூச்சிக்கு விளையற துன்பம் கூட என்னையும் சேர்ந்து பாதிக்குது. இந்த முயற்சிகள் பின்னாடி பொது நலம் போலவே சுய நலமும் சேர்ந்திருக்கு. இது ஜஸ்ட் சர்வைவல் இன்ஸ்டிக்ட் தலைவா.. ராமராஜ்ஜியம் வேணாங்கறிங்களா?"

"ராமன்,கிருஷ்ணன் எல்லாம் கால வெள்ளத்துல அடிச்சுக்கிட்டு போற துரும்பு. அந்தந்த காலகட்டத்துல அதது தானா நடக்குமே தவிர நீ வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கின மாத்திரத்துல நடந்துராது. "

"அஸ்கு புஸ்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? உன் எண்ணத்தை பொருத்து  உன் குடும்பம், உன் சர்க்கிள், நீ வாழற சமூகம், நாடு ராஜாவோட மனசு எல்லாமே மாறும்னிருக்காரு"

"தானா மாறும்னு சொல்லியிருக்காரே தவிர சாதகனால  மாத்த முடியும்னு சொல்லலியே."

"இது அநியாயம் சார் .. ராவணன் சீதைய தூக்கிட்டு போயிட்டான். அவனே கொண்டு வந்து ஒப்படைக்கட்டும்னு வெயிட்டிங்லயா இருந்திங்க."

"ஷிட்! அது வேற காலம், வேற யுகம். வேற தர்மம். இது வேற காலம்,வேற யுகம் வேற தர்மம்"

"தேவ லோகத்துல எமர்ஜென்சி ஏதாச்சும் டிக்ளேர் பண்ணியிருக்காங்களா சார்"

" எமர்ஜென்சி மட்டுமில்லே,  ஷஃப்ளிங் கூட நடக்கப்போவுது. அதோட உனக்கென்ன வேலை.  நீ பை.தனமா முன் யோசனை இல்லாம டிஸ்க்ளோஸ் பண்ற விஷயங்க படக்கூடாதவன் கண்ணுல பட்டுட்டா என்னாகறது? ஒவ்வொருத்தனை வதம் பண்ண கடவுள் தான் அவதாரம் எடுத்து வரனும்.."

"அ..சொம்மா டகுல் விடறிங்க. நான் இதுவரை எழுதின விஷயங்களை டோட்டலா படிச்சவுகளே ஜஸ்ட் பிலோ 600 தான். இதுல எத்தனை பேருக்கு புரிய போவுது.புரிஞ்சவங்கள்ள எத்தனை பேரு ஃபாலோ பண்ணப்போறாங்க"

"ஒரு அணைல ஏற்படற  சின்ன கசிவு தான் அந்த அணையையே அடிச்சுட்டு போயிரும்"

"ராம ராஜ்ஜியம்லாம் இப்பத்துல கிடையாதா பாஸ்?"

"வரும் எல்லாம் வரும். காத்திருக்கனும்"

"எவ்ள காலம் பாஸ்?"

"உன் எழுத்து இந்த சனத்தை சென்றடையற காலம் வரைக்கும்"

"அட்றா சக்கைன்னானாம் அப்ப நான் சரியான ரூட்ல தான் போய்க்கிட்டிருக்கேன்"

"என்ன போட்டு வாங்கறியா? "

"நான் எங்கே போட்டு வாங்கினேன் பாஸ்.. நீங்க தானே கொட்டிட்டிங்க"

"என்னை வணங்கி வணங்கி என் லட்சணமெல்லாம் உனக்கும் வந்துட்டாப்ல இருக்கு.தேவ லோகத்துல எல்லாரும்  என்னை பிடிச்சு ஏர்ராங்க . நீ இருக்கிற தைரியத்துல தான் இவன் இந்த ஆட்டம் போடறான். நீ விலகிக்க .. நாங்க பார்த்துக்கறோங்கறாங்க"

"விலகிருங்க தலைவா ..இந்த ஒதகாத வெறும்பயலுக்காக நீங்க ஏன் அகுடாவறிங்க"

"எங்க விலகறது? உன் மைண்ட்ல தான் ஒரு ட்ராக்ல ராம நாமம் போயிட்டே இருக்கே"

"அப்போ  நீங்களே விலக நினைச்சாலும் விலக முடியாதுங்கறிங்க "

"ஆமாப்பா அதான் சோகம்"

"அப்ப சரி இன்னைக்கு ராம நாம மகிமைனு ஒரு தனிப்பதிவு போட்டு தாக்கறேன்"

"அய்யய்யோ இவன் இம்சை தாங்க முடியலியே ராமா.."ன்னிட்டு அந்த ஆ.குரங்கு ஓடியே போயிருச்சு.

பி.கு: இந்த உரையாடல் கற்பனைதான். ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடறமாதிரி எத்தனையோ சம்பவங்களை ஆஞ்சனேயர் என் லைஃப்ல நடத்தி காட்டியிருக்காரு. அதெல்லாம் அந்தந்த சந்தர்ப்பம் வரப்போ சொல்றேன்.

2 comments:

  1. வணக்கம் ஸர் என் பெயர் .அருணாச்சலம் உங்களுடாய எல்லா காட்டுடைகளை நான் படித்தேன்.. மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  2. அருணாச்சலம் அவர்களே,
    நன்றி. நான் எழுதறதையெல்லாம் படிச்சுட்டு சனம் கல்லால அடிக்கப்போறாய்ங்கனு நினைச்சேன். ஏதோ உங்களை மாதிரி நல்ல மன்சாலு சப்போர்ட் பண்றதுல ரொம்ப சந்தோஷம்

    ReplyDelete