Tuesday, April 13, 2010

மரணம் Vs செக்ஸ்

மகாத்மாவின் ராவுகள் என்ற கடந்த பதிவில் மரணப்படுக்கையில் இருந்த தந்தையின் அருகில் இருந்த மகாத்மாவுக்கு செக்ஸ் குறித்த எண்ணம் இயல்பான ஒன்றே என்று கூறியிருந்தேன். இந்த உண்மையை ஸ்தாபிக்க ஒரு சில விஷயங்களும் சொன்ன மாதிரிதான் ஞா.அதை கொஞ்சம் விஸ்தாரமா பிரஸ்தாபிக்க உத்தேசம்.

எலக்ட் ரானிக்ஸ் உபகரணங்களில் ஆன் ஆஃப் ஸ்விட்ச் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அதே மாதிரி ஒவ்வொரு உயிரிலும் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற இன்ஸ்டிங்ட் இருப்பதை போலவே தன் உயிரை மாய்த்து கொள்ள வேண்டும் என்ற இன்ஸ்டிங்டும் இருக்குமாம்.

மான் புலியை விட வேகமாக ஓட வல்லது. ஆனால் எப்படி புலியிடம் சிக்குது தெரியுமா ? இப்ப  மேற்படி சீனை  அப்படியே ஓட்டி பாருங்க.மான் முன்னாடி ஓடுது.புலி அதை துரத்துது. மானோட நோக்கமெல்லாம் என்னவா இருக்கனும் ? எப்படியாவது தப்பிக்கிறதாதான் இருக்கனும். ஆனா உள்ளுக்குள்ள மேற்படி புலிய அதாவது தன்னை துரத்திவர்ர மரணத்தை ஒரு தடவை பார்க்கனும்னு தோணுமாம். சர்வைவிங் இன்ஸ்டிங்டை டையிங் இன்ஸ்டிங்ட் ஓவர் டேக் பண்ண ஒரு செகண் அந்த மான் நின்னு திரும்பி பார்க்குமாம். அந்த புலியோட கண்கள்ள இருந்து வர்ர காந்தியை (Gandhi இல்லிங்கண்ணா Kanthi ) பார்த்து இன்னொரு செகண்ட் நிக்குமாம். உடனே புலி  மானை டக்குனு அடிச்சுருமாம்.

இதான் டையிங் இன்ஸ்டிங்ட். பென்னகரத்துல ஓட்டர்ஸ் காசு வாங்கிகிட்டு ஓட்டு போட்டது கூட இந்த மாதிரி டையிங் இன்ஸ்டிங்டாலதான் போல.உடம்பெல்லாம் மூளையா இருக்கிற  குற்றவாளிங்க கூட , பக்காவா ப்ளான் போட்டு குற்றத்தை செய்யற பார்ன் கிரிமினல்ஸ் கூட எப்டி மாட்டிக்கிறாங்க தெரியுமா ? உள்ளூற அவிகளுக்குள்ள மாட்டிக்கனும்னு ஒரு இன்ஸ்டிங்ட் இருக்குமாம். அவிகளுக்கே தெரியாம தங்களோட கிரைம் நடவடிக்கைல பின்னாடி தேடி வரப்போற போலீஸ் ஆஃபீசருக்கு தேவையான் க்ளூஸை கொடுத்துக்கிட்டே போவாங்களாம்.

இதான் டையிங் டிசைர். சரி கண்ணா இதுக்கும் செக்ஸுக்கும் என்ன சம்பந்தம்ங்கறிங்க அப்படிதானே? வரேன் வரேன். அந்த  பாயிண்டுக்குத்தான் வரேன்.

மனிதர்கள் எந்த செயல்ல இறங்கினாலும் அதுக்கு அவிகளை ப்ரவோக் பண்ற இச்சைகள் ரெண்டே ரெண்டுதானு சைக்கிரியாட்ரிஸ்டுங்க சொல்றாங்க.

ஒன்னு கொல்லனுங்கற இச்சை. ரெண்டாவது கொல்லப்படனுங்கற இச்சை. சரி இந்த இச்சைக்கு காரணம் என்ன?

இந்த விஷயத்துல சைக்கிரியாட்ரிஸ்டுங்க இந்த பாயிண்டுக்கு மேல போக முயற்சிக்கல . முயன்றவங்க மேலே போகலை.

ஆனால் நான் இதுக்கு பின்னாடி இருக்கிற முன் கதையை ஓரளவு கெஸ் பண்ணி வச்சிருக்கேன்.



நம்ம உயிர்களுக்கெல்லாம் மூல உயிர் எது தெரியுமா? அமீபா. ஒரு செல் அங்கஜீவி. ஒரே செல்தான் இருக்கும். ( நம்ம உடல் பல்லாயிர கோடி கணக்கான செல்ஸ் இருக்கு) அமீபா கொழுத்து அதுக்குள்ள இருந்த ஒரு செல் தன்னையே பிரதியெடுத்துக்கிட்டு ரெண்டு செல்லா பிரிஞ்சுதாம். இப்படி ஒன்னு ரெண்டாகி,ரெண்டு நாலாகி பரவறச்ச செல் காப்பியிங்ல சில எர்ரர் வந்து புது ஜீவராசிகள் ஏற்பட்டுதாம். ஆண்,பெண் பால் வேறுபாடு எல்லாம் கூட அப்புறமா தோன்றியதுதான்.

ஒரே செல்லா, ஒரே உயிரா இருந்தப்ப இன் செக்யூரிட்டி கிடையாது, தனிமை உணர்வு கிடையாது,கம்யூனிகேஷன் பிராப்ளம் இல்லை.எந்த ஒரு கவலையுமில்லே.
இந்த ஆழமான உணர்வும்,  மறுபடி ஓருடல் ஓருயிரா மாறனுங்கற துடிப்பும்   செல் காப்பியிங் மூலமா உடலுக்கு உடல்,உயிருக்கு உயிர் ட்ரான்ஸ்ஃபர் ஆயிட்டே வந்தது.

மறுபடி ஓருடல் ஓருயிரா மாற என்ன செய்யனும்?  உயிர்கள் எப்படி  ஒன்னு சேர முடியும்.அதான் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடல்ங்கற சிறைல அடைப்பட்டிருக்கே..ஆங் ! எல்லா உயிர்களும் தங்கள் உடல்களை உதிர்த்திடனும். அதாவது சாகனும். அப்படி செத்தா உயிர்கள் சுதந்திரம் பெறும். ஒன்னுக்கொன்னு தொடர்பு கொள்ள முடியும் .இணைய முடியும்.

இதெல்லாம் மனிதர்களோட,உயிர்களோட அடி மனசுல இருக்கிற வர்ணனாதீதமான உணர்வு. இந்த உணர்வுதான் கொல்லனும்,கொல்லப்படனுங்கற இச்சைய தருது.

இந்த இரண்டு இச்சையுமே செக்ஸ்ல நிறைவேறுது. அதனாலதான் செக்ஸுங்கறது மரணத்துக்கான ஷார்ட் கட்டா இருக்கிறதாலதான் காந்திக்கு தன் அப்பாவோட கடைசி கணங்கள்ள செக்ஸ் ஞா வந்திருக்கு. ஒரு வகைல இது தற்கொலை முயற்சி மாதிரி. செக்ஸ்ல இறங்கி வீரியத்தை வெளியேற்றும்போது ஏற்படற ப்ளாக் அவுட் ஒரு குட்டிமரணம் போன்றதுங்கற விஷயத்தை ஞா படுத்திக்கங்க.

ஆண் தன்னால் தாங்கிக்க முடியாத துரோகத்துக்கோ,தோல்விக்கோ இலக்காகும்போது ஆட்டோமெட்டிக்கா செக்ஸுல இறங்கிர்ரான்.இதுவும் ஒரு தற்கொலை மாதிரிதான்.

மரணத்துக்கு சிம்பலா இருக்ககூடிய எதுவுமே மனிதனை செக்ஸுக்கு தூண்டுது. உ.ம் இருட்டு (கூட்டத்துல பவர் கட்டானப்போ சில ஆண்கள் பக்கத்துல இருக்கிற பெண் மேல கை போடவும் இதான் காரணம். இருட்டு அவனுக்கு மரணத்தை ஞா படுத்திருது. ஒரு பக்கம் அது ஏற்படுத்தற அச்சத்தை தனியே  சமாளிக்க அச்சம். துணை தேடறான். மறு பக்கம் "தாளி என்னாத்த மரணம் ஒரு தாட்டி பார்த்துர வேண்டியதுதானு  ஒரு துடிப்பும் ஏற்படுது  . ஒரு வேளை செக்ஸ் கிடைச்சா குட்டி மரணத்தை சந்திக்கவும் செய்யறான்.

மரணத்துக்கு சிம்பலா இருந்துக்கிட்டு செக்ஸுக்கு தூண்டற இன்னபிற விஷயங்கள்:
வறுமை, தனிமை, முதுமை, டிஸ்டன்ஸ் ( தன்னவர்களிடமிருந்து), காலம் ( தன்னவர்களை அடைய ஆகும் நேரம்,காலம்) ,ரெஃப்யூசல்/ரிஜெக்சன்

இப்போ புரியுதுங்களா காந்தியோட மனசுல தன் அப்பா மேல லாரி லாரியா அஃபெக்சன் இருந்திருக்கு. அதனாலதான் மரணம் குறித்த நினைவுகள் அவர் மனசை ஆக்கிரமிச்சுருக்கு. மரண பயம்தான், மரணத்தை சந்திக்கனுங்கற துடிப்புதான் செக்ஸை நோக்கி துரத்தியிருக்கு. இது இயல்பான விஷயம். இதை போய் பஞ்சமா பாதகமா பாவிச்சு பிரம்மச்சரியம் அது இதுனு தன்னை இம்சை பண்ணிக்கிட்டு சனத்தையும் இம்சை பண்ணியிருக்காரு தாத்தா.

அன்னைக்கே இந்த தியரிய யாராவது தாத்தாவுக்கு தலைல அடிச்சு சொல்லியிருந்தா இன்னம் உன்னதமான காந்தி இந்தியாவுக்கு கிடைச்சிருப்பாரு.

பெட்டர் லேட் தேன் நெவர்.இதை படிக்கிற உங்கள்ள இருந்து ஒரு காந்தி புறப்படட்டும்

3 comments:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  2. SAE அவர்களே,
    டோன்ட் ட்ரஸ்ட் தி அப்வியஸ். வெளிபப்டையாக தெரிவதை நம்பாதே என்ற கொட்டேஷனை சுஜாதா கதைகளில் நிறைய படித்திருப்பீர்கள். நம்ப முடியாததாக இருப்பதே நிஜம்.

    ReplyDelete