எந்த மாற்றத்துக்கும், கண்டுபிடிப்புக்கும்,புரட்சிக்கும் செக்ஸே காரணம் என்றால் உதைக்கவே வந்துவிடுவீர்கள். ஆனால் என்ன செய்ய துரதிர்ஷ்டவசமாக இதுதான் உண்மை.
1984 முதல் கன்னி வேட்டையை ஆரம்பித்த நான் 1986க்கெல்லாம் ஓரளவு சலிப்பை உணர ஆரம்பித்தேன். மறுபடி மறுபடி அந்த ஐந்து நிமிடத்துக்கான பொய்கள். ஷிட்.
அப்போ எனக்கு வயசு 19 தான். என்னங்கடா அது வாழ்க்கைன்னா இதானா? லைஃப்ல இன்னம் எத்தனையோ சாதிக்ககூடியது, சாதிக்க வேண்டியது இன்னம் எத்தனையோ இருக்கு.ஆனால் அந்த அஞ்சு நிமிச சமாச்சாரத்துக்காக லைஃப் ரிஸ்கெல்லாம் எடுக்க வேண்டியிருக்கு.
இதுக்கெல்லாம் ஒரு ஏற்பாடு இருந்தா எவ்ள நல்லா இருக்கும்னு தோணும். ஆனால் இப்போ மாதிரி விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கேட்டு குரல் கொடுக்குமத்தனை தில் அப்போ கிடையாது.
பய புள்ளைங்க சதா தெருமுனைல சைட் அடிச்சிக்கிட்டு, பெட்டை நாய் பின்னாடி ஆண் நாய் மாதிரி முகர்ந்துகிட்டு போறதும், டீக்கடைல டீ,சிகரட்டோட தங்கள் வீர தீர சாகசங்களை அளந்துவிடறதும் கடுப்பை தந்தது. இதே ப்ராஸஸ் என் வாழ்க்கைலயும் 2 வருஷம் இருந்தது நிஜம் தான்."கை" மணி மாதிரி ஆட்களுக்கு மட்டுமில்லாம பல ஜூரிகளுக்கும் நான் தான் ரோல் மாடல். இருந்தும் சலிச்சு போச்சு.
இதையெல்லாம் ஒழிச்சு கட்ட கண்ணாலம் தான் சொல்யூஷன். அதுக்கு வேலை வேணம், கை நிறைய சம்பளம் வேணம். வேலைல வச்சிருக்கிற தாயோளிகளுக்கே வேலையில்லை. இதுல நமக்கு அரசாங்கம் என்னாத்த வேலை கொடுக்கும்னு யோசிச்சப்பதான் இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு முதல் பொறி தட்டுச்சு.
அந்த திட்டத்தைப் பற்றியும், அதன் அமலுக்கு நான் செய்த முயற்சிகள் பற்றியும் புதிய தகவல்களை இப்பதிவில் பகிர்ந்து கொள்ள முனைகிறேன்.
புதிய வரவுகளின் கவனத்திற்கு என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்
இந்த திட்டத்தை ஆட்சியாளர்கள் & பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல 1986 முதல் சிறுக சிறுக லட்சக் கணக்கில் சொந்தப் பணத்தை செலவழித்து உழைத்து வந்தேன். சமீப காலமாக நான் தட்டியவை கதவுகள் அல்லவென்பதையும்,அவை என்றுமே திறந்து கொள்ளா என புரிந்து கொண்டு அடக்கி வாசிக்கிறேன். என்றாலும் வாய்ப்பு வரும்போதெல்லாம் பாதிரியார் கணக்காய் ஆ.இ பற்றி பேசியும்,எழுதியும் வருகிறேன்.
அரசு ஊழியர் வயிற்றில் பிறந்தேன் .அரசு மருத்துவமனையில் பிறந்தேன். அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்தேன். (அரசுக்கு பணம் ஏது? ஒரு ஏழை இன்று 50 காசு தீப்பெட்டி வாங்கினால் அதில் 10 காசு எக்சைஸ் வரி அரசுக்கு போகிறது.) இதுல ஒரு தமாசு பாருங்க. கோட்டீஸ்வரன் வரி கட்டாம அரசாங்கத்தை ஏய்க்க வாய்ப்பிருக்கே தவிர ஏழை எளிய மக்கள் வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்பே இல்லை.
அரசுக்கு வரி கட்டி அந்த வரிப்பணம் மூலமா என்னை போஷிச்ச அந்த ஏழை எளிய மக்களோட வாழ்க்கை நிலை பத்தி பெரிசா எனக்கு எதுவும் தெரியாது. இருந்தாலும் அவர்களோட வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி வரணும்னு நினைப்பேன். ஒரு வித நன்றியுணர்ச்சியோட இருந்தேன்.
1967 முதல் 19990 மார்ச் வரை இ ந் நிலை அதற்கு பின் நேரிடையாக மக்கள் என்னை போஷிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் தாம் என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற்றமைக்காக கட்டணம் செலுத்தினாலும் ஜோதிடத்திற்கான பேட்டன்ட் ரைட்,காப்பி ரைட் எங்கிட்டே ஏது?
யாரோ ரிஷிகள்,மகரிஷிகள் நவகிரகங்களோடு கேட் வாக் செய்து கண்டறிந்து வடிவமைத்து வைத்த விஞ்ஞான செல்வம் ஜோதிடம். அவர்கள் மனிதகுல மேன்மைக்காக வைத்துச்சென்ற ஜோதிட செல்வத்தை விற்க எனக்கேது உரிமை?
இதுவே அல்லாது "இன்ன பிற காரணங்களாலும்" 1986ல் நானும், என் வயது யூத்தும் எதிர்கொண்டு தவித்துக்கொண்டிருந்த ஐந்து நிமிட பலான பிரச்சினைக்கு தீர்வு காணும் உந்துதலில் நாட்டின் ஒட்டு மொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வாக பிறந்த என் சிந்தனைக்கு 11 வருடம் உழைச்சு ஒரு இறுதி வடிவம் கொடுத்து புதிய இந்தியாவை கட்டி எழுப்ப ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை தீட்டினேன். 1997 முதலே ஆள்வோரின் அலுவலக கதவுகளை தட்ட ஆரம்பித்தேன். ( வித் ஆல் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன் )
இந்த இடத்தில் பதிவின் டெம்போ (அப்படி ஒன்றிருந்தால்) குறைந்தாலும் பரவாயில்லை என்று சின்ன விஷயம் சொல்கிறேன். இதுவரை இந்த பதிவை படித்தவர்களில் பாதி பேராவது "ஓகோ ..பார்ட்டிக்கு சொந்த பிரச்சினை எதுவுமில்லே போலிருக்கு அதனாலதான் இப்படியெல்லாம் ஜல்லியடிச்சிருக்கு"னு நினைப்பாங்க.
1986லருந்து 1991 வரை வேணம்னா இந்த தியரி கரெக்டா இருக்கலாம். ஆனால் 1991ல கல்யாணமாயிருச்சு. அதுலயும் லவ் மேரேஜ். இன்டர் காஸ்ட் மேரேஜ். 1992ல பெண் குழந்தையும் பிறந்துருச்சு. அறிமுகப்படலத்துல சொன்னாப்ல பல நிறுவனங்களில் சில காலம் வேலை செய்த பார்ட்டி. ஜாப் கியாரண்டி யெல்லாம் கிடையாது.ஆறு வருசத்துல தேச முன்னேற்றம் , ஒட்டுமொத்த சுபிட்சம் எல்லாம் ஆவியாயிருக்கனும்.
ஆனால் அந்த 6 வருட அனுபவங்கள் அதுவரை தியரிட்டிகலா மட்டுமெ தெரிஞ்சு வச்சிருந்து ஏழ்மை, பசி,பட்டினி, சுரண்டல் இத்யாதியை த்ரீ டி எஃபெக்டில் காட்டியது. ஆப்பரேஷன் இந்தியா 2000 என்பது ஏதோ தொலை தூர லட்சியமாக இருந்தது போய் லக்சரியாக இருந்தது போய் எசன்ஷியல் ப்ராடக்டா மாறிருச்சு.
ஏழ்மை எனக்குள்ள இருந்த மென்மையான உணர்வுகளை, கருணை காலிபண்ணிர முயற்சி பண்ணப்ப என் மனசுல இருந்த மென்மையான உணர்வுகளை காப்பாத்திக்கவாவது ஏதாச்சும் செய்யனுங்கற நிலை வந்துருச்சு. இதையெல்லாம் படிச்சுட்டு "ஆகா முருகேசன்! ரியலி யுவார் கிரேட்"னு கமெண்ட் போட துடிக்காதிங்க.
என்னைவிட இழி நிலையில் வறுமையின் கோரைகளில் சிக்கி தவித்தாலும்
மனிதத் தன்மையை இழந்துவிடாத மனிதர்கள் இந்த நாட்டில் இன்னும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடையில் ஒருங்கிணைப்பு இல்லை.
அவரவர் ஒவ்வொரு பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள். இதனால் அவர்களின் உழைப்பு தற்காலிகமாகவேனும் ஓரளவேனும் சமூகத்துக்கு நன்மையை செய்தாலும் லாங் ரன்னில் பார்க்கும் போது கடலில் பெய்த மழையாகிவிடுகிறது. அவர்கள் அனைவருக்கும் நான் கூற விரும்புவது ஒன்றே ..
இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகளும் ஒரே ஒரு பிரச்சினையின் விளைவுகளே..
அந்த ஒரு பிரச்சினை எது என்பதை விளக்குகிறேன். அந்த ஒரு பிரச்சினை மீது மனித குல ஆர்வலர்கள் தம் பார்வையை குவித்து ஆப்பரேஷன் இந்தியா 2000 க்காக குரல் கொடுத்தால் தூள் கிளப்பிவிடலாம்.
ஒரு தனிமனிதனின் வருவாயைக் கொண்டு அவன் செழிப்பை கணக்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தேசீய வருவாயை கொண்டு அதன் செல்வ செழிப்பை கணக்கிடுகிறார்கள்.முதலில் தேசீயவருவாய் என்றால் என்ன?ஒரு வருடத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அளிக்கப்பட்ட சேவைகளின் மதிப்பே தேசீயவருவாய். ஆக நாடு முன்னேற செல்வச்செழிப்பை பெற அதன் தேசீய வருமானம் (நேஷ்னல் இன்கம்) பெருக வேண்டும்.
ஆனால் ஒரு நாடு உண்மையான முன்னேற்றத்தை அடைய இது மட்டும் போதாது.
கையோடு கையாய் தனிமனித வருவாயும் ஸ்தூலமாக பெருக வேண்டும். தனிமனித வருவாய் என்றால் என்ன?
தேசீய வருவாயை, மக்கள் தொகையால் வகுத்தால் கிடைக்கும் தொகையே தனி மனித வருவாய்.(அதாவது ரஜினி காந்தின் வருவாயையும், அவர் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்யும் ரசிகனின் வருவாயையும் கூட்டி இரண்டால் வகுத்து விடுகிறார்கள். பச்சையாக சொன்னால் ரஜினி வருமானத்தை அவன் ரசிகனுக்கு பங்கு போடுகிறார்கள். அதாவது வெறும் காகிதத்தில்.
ஆனால் ரஜினியின் வருவாயில் அவர் ரசிகனுக்கு பங்கு கிடைக்குமா ? ப்ர்ர்ர்ர்ர்ர்
அதனால் தான் பிரதமரும்,நிதி மந்திரியும் தனிமனித வருவாய் உயர்ந்துவிட்டதாக கூவினாலும் ஏழ்மை ஆண்,பெண்களின் தன் மானத்தை ,மானத்தை எரித்துக் கொண்டே இருக்கிறது.
தனிமனித வருவாய் உண்மையில் பெருக என்ன செய்யவேண்டும்?
நாட்டு மக்களுக்கு நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு கிடைக்க வேண்டும். அப்போதுதான் நேஷ்னல் இன் கம் உயர உயர தனிமனித வருவாயும் ஸ்தூலமாக உயரும்.
ஆனால் இப்போதைய நிலை என்ன ? தேசீய வருவாயை அதிகரிப்பதில் ஜஸ்ட் ஒரு நூறு கார்ப்போரேட் கம்பெனிகள் ஆற்றும் பங்கும், ஒட்டு மொத்த ஜனத்தொகை ஆற்றும் பங்கும் ஏறக்குறைய சமமாக இருக்கும்.
எத்தினி புங்கனூர் சேர்ந்தா ஒரு பெங்களூருங்கற மாதிரி எத்தனை லட்சம் சன்,கலைஞர் டிவி பார்வையாளர்கள் சேர்ந்து உழைச்சா சன்,கலைஞர் டிவி வருவாயை ஈட்ட முடியும் ?
விதைப்பை பொறுத்துதான் அறுப்பும் இருக்கும். விதைப்புல ஆற்றிய பங்கை பொறுத்துதான் அறுப்புல பங்கு கிடைக்கும்.
ஆக நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகளில் மக்களுக்கு சமப் பங்கு கிடைத்தால் தான் தேசீய வருமானத்தில் குடிமக்களுக்கு உண்மையான பங்கு கிடைக்கும். இல்லாவிட்டால் காகிதப்பங்கு தான்.
உற்பத்தி நடவடிக்கைகளில் சமப்பங்கு சாத்தியமா?
"முயன்றால் முடியாததில்லை", "மனமிருந்தால் மார்கமுண்டு". "ஃபைண்ட் எ வில் தி வில் ஃபைண்ட் தி வே " இதெல்லாம் இன்றைய பிராமணர்கள் கூலிக்கு மாரடித்து ஓதும் வேத (வெத்து) மந்திரங்கள் அல்ல. மனித குலத்தின் மிக நீண்ட வாழ்வனுபவத்தின் சாரங்கள்.
எனவே தான் சொல்கிறேன். உற்பத்தி நடவடிக்கைகளில் சமப்பங்கு சாத்தியமே
உற்பத்திக்கு அத்யாவசியமானவற்றை உற்பத்தி காரணிகள் என்கிறார்கள்:உற்பத்தி காரணிகள் 4. அவை நிலம்,உழைப்பு ,முதலீடு,நிர்வாகம் ஆகியனவாகும்.அதாவது உற்பத்தியை துவங்க நிலம் வேண்டும்.உழைப்பு வேண்டும். முதலீடு வேண்டும். இந்த மூன்றையும் வைத்து உற்பத்தி நடவடிக்கைகளை முடுக்கி விட ஒரு நிர்வாகம் வேண்டும்.இந்த நான்கும் இருந்தால்தான் உற்பத்தி சாத்தியம். தேசீய வருமானம் உயர்வதும் சாத்தியம்.
நாட்டில் பல நூற்றாண்டுகளாய் நிலவி வரும் சாதி அமைப்பினால்,சமூகம் இரண்டாக பிளவு பட்டுள்ளது. எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஒரு வர்கம் ஆளும் வர்கமாக உள்ளது. மெஜாரிட்டி மக்கள் அடங்கிய வர்கம் ஆளப்படும் வர்கமாக உள்ளது. உற்பத்திக் காரணிகளில் நிலம்,முதலீடு,நிர்வாகம் மூன்றுமே ஆளும் வர்கத்தின் கையில் சிக்கி உள்ளது. ஆளப்படும் வர்கமோ வெறும் கூலிப் பட்டாளமாக நலிந்து வருகிறது.
நிலத்தை முதல் வைத்தவனுக்கு வாடகை,முதலீடு வைத்தவனுக்கு வட்டி,நிர்வாகம் செய்தவனுக்கு லாபம் கிடைக்கும்.உடலுழைப்பை தந்தவனுக்கு என்ன கிடைக்கும் வெறுமனே கூலி கிடைக்கும். தட்ஸ் ஆல்.
எந்த வர்கம் எதை முதலீடு செய்தாலும் தேசீய உற்பத்தி என்னவோ பெருகும்.தேசீயவருமானம் எனன்வோ உயரும்.
ஆனால் வெறுமனே உழைப்பை மட்டும் ஈந்தவனுக்கு தேசீய வருமானத்தில் எந்த அளவுக்கு உண்மையான,ஸ்தூலமான பங்கு கிடைக்கும்?
ஆளும் வர்கம் நிலம்,முதல், நிர்வாகம் ஆகிய மூன்று காரணிகளை வைத்திருக்க ,ஆளப்படும் வர்கமோ வெறுமனே உழைப்பை மட்டும் வைத்திருக்க இது என்ன போட்டி?
ஆளும் வர்கமா எண்ணிக்கையில் மைனாரிட்டி.
ஆளப்படும் வர்கமா எண்ணிக்கையில் மெஜாரிட்டி;
இந்த நிலையில் செல்வ குவிப்பை எப்படி தவிர்க்க முடியும்?
சுரண்டலை எப்படி தடுக்க முடியும்? வறுமையை எப்படி கட்டுப்படுத்த முடியும்?
நாட்டின் 70 சதவீத மக்கள் விவசாயத்துறையின் மீது ஆதாரப்பட்டுள்ளனர். மேற்படி இருவர்கங்களுக்கிடையிலான அக்ரிகல்ச்சுரல் லேண்ட் ஓனர்ஷிப் குறித்த விகிதத்தை பார்த்தால் நொந்துவிடுவீர்கள்.(இதுகுறித்த புள்ளிவிவரங்களை இந்த பதிவில் போட்டுள்ளேன்)
ஆக தேசீய வருமானத்தில் உண்மையான பங்கை பெற ,உற்பத்தி நடவடிக்கைகளில் ஆளப்படும் வர்கமும் சமப்பங்கை பெற வேண்டும். சமப்பங்கை பெற வேண்டுமானால் உற்பத்தி காரணிகள் இந்த இரு வர்கங்களுக்கிடையில் சமமாக பங்கிடப்பட வேண்டும்.அப்போதான் எண்ணிக்கையில் மெஜாரிட்டியா இருக்கற ஆளப்படும் வர்கம் உற்பத்தி நடவடிக்கையில் ஆக்டிவா பார்ட்டிசிப்பேட் பண்ணும். தேசீய வருமானத்துல உண்மையான பங்கை பெறும். ஏழ்மை ஒழியும். ஏழ்மை காரணமா தலைவிரிச்சாடற 99.9 சதவீதம் பிரச்சினைகள் ஒழியும்.
ஆளும் வர்கத்தின் கைகளில் உள்ள நிலம், முதலீடு, நிர்வாகம் ஆகிய 3 உற்பத்திக் காரணிகளில் மற்ற இரண்டை காட்டிலும் நிலத்தை ஆளப்படும் வர்கத்தின் கைகளுக்கு மாற்றப் படுவது சாத்தியமே.
இது நேரிடையாக அமல் செய்யப் பட்டால் நாட்டில் ரத்த வெள்ளம் ஓடும். இதை தவிர்க்க விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, நாட்டில் உள்ள விவசாய நிலங்கள் மேற்படி விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் தரப்பட வேண்டும். கூட்டுறவுப்பண்ணை விவசாயம் அமல் படுத்தப் படவேண்டும். இந்த புரட்சிகர திட்டத்தை அமலாக்கும் "தம்" "தில்" "அதிகாரம்" இன்றைய ஆட்சி முறையிலான பிரதமருக்கு கிடையாது.
நேரிடை ஜனநாயகம்:
தனி மெஜாரிட்டி என்பது கனவாகிப் போன நிலையில் நேரிடை ஜனநாயக முறையில் மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கே இதை அமலாக்கும் "தம்" "தில்" "அதிகாரம்" உண்டு.
பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் போது இன்று போல் அநாமதேயங்கள் அரசாள்வது தடுக்கப்படும்.பிரதமருக்கு எம்.பிக்களுக்கு லாலி படும் அவசியம் இருக்காது.இந்தியாவில் 52 சதவீதம் மக்கள் எஸ்.சி,எஸ்.டி,பி.சி மற்றும் மைனாரிட்டிக்களாக இருக்கும் நிலையில் -பிரதமர் பதவிக்கு மும்முனைப்போட்டி ஏற்பட்டால் மேற்சொன்னவர்களில் பாதிப் பேர் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும். அரசு,அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் செலவும் பெருமளவு குறையும்.
கங்கை காவேரி இணைப்பு:
கூட்டுறவுப் பண்ணை விவசாய முறை அமலானாலும் விவசாயத்துறைக்கு சவாலாக இருக்கக்கூடியது நீர்ப்பாசன பற்றாக்குறை. நதிகளை இணைப்பதே இதற்கு தீர்வு.
நீர் பாசனப்பற்றாக்குறை பிரச்சினை கூட்டுறவு சங்கத்தின் குரல் வளையை நெறித்துவிடும் என்பதால் இதற்கு நிரந்தரத்தீர்வாக முதல் கட்டமாக கங்கை காவேரி இணைப்பு மேற்கொள்ளப் படவேண்டும். பின் படிப் படியாக எல்லா நதிகளும் இணைக்கப் பட வேண்டும்.
நதிகளை இணைக்க சிறப்பு ராணுவம்:
நதிகளை இணைக்க சிறப்பு ராணுவம் ஒன்று அமைக்கப் படவேண்டும்.இந்தியாவில் வேலையின்மை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. இதனால் வேலையற்ற வாலிபர்கள் பாதை மாறிப்போகும் நிலை உள்ளது. இந்த நிலையில் நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை அமைத்து அதன் மூலம் நதிகளை இணைக்கவேண்டும்.
இந்த நடவடிக்கைகளால் செல்வக்குவிப்பு தவிர்க்கப்பட்டு வறுமை ஒழியும்,உற்பத்தி பெருகும். எல்லாம் ஓகே. கடந்த கால தவறுகளால் குவிந்து கிடக்கும் கருப்பு பணத்தை என்ன செய்ய ? அதற்குத்தான் தற்போதைய கரன்சி ரத்து. புதிய கரன்சி அறிமுகம்.
No comments:
Post a Comment