முன்னுரை:
எதற்குமே முடிவு என்று ஒன்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் போர் தான்.
இளமையின் முடிவு முதுமையில்,முதுமையின் முடிவு மரணத்தில். ஆட்சிக்கு முடிவு அடுத்த தேர்தலில். காதலின் முடிவு கல்யாணத்தில். (அதென்னமோங்க.. லவ் பண்றப்ப ச்சொம்மா நின்னு விளையாடின குட்டிங்க கூட கண்ணாலமுனு ஆயிட்டா தூரதர்ஷன் மாதிரி ஆயிர்ராங்க. )
நமக்குத் தெரிந்த இந்த உண்மை இறைவனுக்கு தெரியாதா என்ன? அதனால் தான் இந்த படைப்புக்கும் பிரளயம் என்று ஒன்றை நிர்ணயித்து வைத்துள்ளான்.
பிரளயம் பற்றி எத்தனையோ யூகங்கள் விஞ்ஞானிகளிடையில் உள்ளன. இதில் எது உண்மையாக போவுதோ தெரியலை.
சிலர் துருவப்பனி உருகி மூழ்கியே செத்துருவம்னு சொல்றாங்க. ( உங்களுக்கு நீஞ்ச தெரியுமாண்ணே).
சிலர் மகா வெடிப்பில் தோன்றிய வெப்பத்தால் இந்த விஸ்வம் ஒரு புறம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. மறுபுறம் "சூடு"ஆறிக்கிட்டே வருது, விஸ்வம் சுருங்கிகிட்டே வருதுன்னும் சொல்றாங்க.
சுருங்கி போவமா ? சும்மா அசால்ட்டா மூழ்கி போயிருவமா தெரியலை.
இந்த சப்ஜெக்ட்ல புராணங்களும், காவி கட்டின பார்ட்டிகளும் கூட தங்கள் கருத்தை சொல்லியிருக்காய்ங்க. பவிஷ்ய புராணம், பிரம்மங்காருவோட கால ஞானம் , பைபிள் எல்லாமே இந்த சப்ஜெக்டை டச் பண்றாய்ங்க.
பவிஷ்ய புராணத்துலன்னா பரதன் காலத்துலருந்து எந்தெந்த ராஜா ஆளப்போறாருனு ஒரு பெரிய லிஸ்டே கொடுக்கப்பட்டிருக்காம். கடைசில பிரளய கால வர்ணனைகளும் தரப்பட்டிருக்குனு கே. (கேள்வி)
பகவத் கீதைல கூட ஸ்டார்ட்டிங்ல கலி முத்திப்போச்சு இதோ குரூபமான ,விசித்திர பிராணிகள் பிறக்குது, ஆனை வயித்துல பூனை, பூனை வயித்துல ஆனை அது இதுனு வர்ணனை வருது.
பைபிள் கூட சகட்டுமேனுக்கு பயமுறுத்துது யந்திரத்தில் அரைக்கிறவ செத்துரலாம். தள்ளி விட்டுட்டிருந்தவ பிழைக்கலாம். மாடில நின்னவன் பூட்லாம். கிரவுண்ட் ஃப்ளோர்ல இருந்தவன் பிழைக்கலாம். அது இதுனு படிச்சதா ஞா.
இதை எல்லாம் படிச்ச பிறகுதான் பிரளயம் வர்ரதுக்கு முன்னாடியே நம்ம சில்லறை தகராறுகளுக்கு மங்களம் பாடி,ஆக்கிரமிப்புகளுக்கு, போர்களுக்கு, சூடோ புரட்சிகளுக்கு விடை கொடுத்து குறுகிய காலத்திற்காவது ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வோம்ங்கற முடிவுக்கு வந்தன்.அந்த முடிவை அமலாக்கறதுக்கான செயல் திட்டம்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000.
என்னடா இது காவி கட்டிய பெரியார்னு தலைப்பை கொடுத்துட்டு இப்படி மொக்கை போடறானு சலிச்சிக்கிராதிங்க. வந்துட்டன். பாயிண்டுக்கு வந்துட்டன்.
பிரம்மங்காரு என்றால் ஆந்திரத்தில் தெரியாதவர்கள் கிடையாது. இவர் உலகத்தில் எதிர்காலத்தில் நடக்க இருப்பதாய் பல சம்பவங்களை பனை ஓலை சுவடிகளில் கால ஞானம் என்றபெயரில் எழுதி வைத்துள்ளார். இன்றைக்கு 500 வருடங்களுக்கு முன்பு பிறந்த பிரம்மங்காரு எழுதிய எதிர்கால சம்பவங்கள் அனைத்தும் யதார்த்ததிலும் நடந்து வருகின்றன. இந்த பதிவு அது குறித்ததல்ல.
இவரை எப்படி காவி கட்டின பெரியாருனு சொல்லலாம் ?ங்கற கேள்விக்கு பதில்தான் இந்த பதிவு.கடவுள் மறுப்புங்கற ஒரு பாயிண்டை விட்டுட்டா இவரும் ஒரு பெரியார்தான்
பெண்ணடிமை எதிர்ப்பு:
இவர் சமாதியாறதுக்கு முந்தி தன் மனைவிக்கு " த பாரும்மா.. நீ பொறந்ததுலருந்து பூவும்,பொட்டும் வச்சு அலங்கரிச்சிருப்பாய்ங்க. இந்த பூவும் பொட்டும் நான் கொடுத்தது இல்லே. அதனால எனக்கப்புறமும் நீ பூவும்,பொட்டுமாவே இருக்கனும்"னு சொல்ட்டாரு.
பிரம்மங்காரு சமாதியான பிறகும் அவங்க பூவும் பொட்டுமாவே இருந்தாங்க. இதை சாதி சனம் நக்கலடிக்க, அவர் பையனுக்கு கடுப்பாயிருது. அம்மா கிட்டே போய் "பூவை பறிச்சி எரி, பொட்டை கலைச்சு போடு"னு சத்தம் போடறான்.
அதுக்கு அந்தம்மா "இல்லப்பா உங்கப்பா ". நான் சாகலை.(எந்த உயிருமே சாகறதுல்ல. ஜஸ்ட் பாடி தான் மாறுது) நான் சிரஞ்சீவினு சொல்லி சொல்லியிருக்காரு. நான் அவர் சொன்னதுக்கு மாறா நடக்க மாட்டேனு மறுக்கறாங்க.
அப்போ பிரம்மங்காருவோட மகன் சமாதியை திறந்து பார்த்துர்ரனு போறார். இந்த சமாசாரம் தெரிஞ்சு அவரோட பிரிய சிஷ்யன் சித்தய்யா (இவர் ஒரு முஸ்லீம். இந்த கதை பின்னாடி வரும்) அதை தடுக்க ஓடறார். சமாதி திறக்கவும், தியானத்துல இருந்து பிரம்மங்காரு கண் விழிச்சு பார்க்கவும் பிரம்மங்காரு பையனை தூர தள்ளிட்டு சித்தய்யா முன்னாடி போகவும் சரிய்யா இருக்கு.
தியானம் கலைஞ்ச கடுப்புல சிவந்திருந்த பிரம்மங்காரு கண்கள் சித்தய்யாவ பார்த்து சாந்தமாகுது. இருந்தாலும் தன் மகனை சபிக்கிறார். இனி என் பெண் வயிற்று வமிசம்தான் தழைக்கும்.
ஜாதி ஒழிப்பு:
பிரம்மங்காரு சித்தய்யாங்கற முஸ்லீமுக்கு மட்டுமில்லே கக்கன் என்ற செருப்பு தைக்கும் தொழிலாளியோட மனைவிக்கும், கக்கனுக்கும் கூட ஞானோபதேசம் பண்றார். ஆதில ஜாதி இல்லை. ஜாதியெல்லாம் பிராமண சதிங்கறார்.
மத வேறுபாட்டுக்கு எதிரி:
பிரம்மங்காரு மத வேறுபாட்டுக்கும் எதிரியா இருந்திருக்காரு. ஏற்கெனவே சொன்னபடி சித்தய்யா என்ற முகமதியனை சீடனாக ஏற்று " பிரம்மத்துக்கு மிஞ்சிய குருவில்லை ஸித்தய்யாவை (முகமதிய சீடர்) மிஞ்சிய சீடனில்லை என்ற சொலவடைக்கே காரணமானார். சீடனா ஏத்துக்கறதுன்னா பத்தோட பதினொன்னா இல்லே. துரோணருக்கு அர்ச்சுனன் மாதிரி பிரிய சிஷ்யனா ஏத்துக்கிட்டார்.
ஆரம்பத்துல சித்தய்யாவுக்கு யோக பயிற்சி தர்ரதுக்கு வீட்டு சனம்,ஊரு சனம் அப்ஜெக்சன் பண்ணதால விடியல் நாலு மணிக்கு கிணத்தங்கரைக்கு வரச்சொல்லி ரகசியமா கூட பயிற்சி தர்ரது வழக்கம். இது வீட்ல தெரிஞ்சு போய் சாப்பிடற நேரத்துல லொள்ளு பண்றாங்க. "அப்படி அந்த சித்தய்யாவுல என்ன சிறப்பை கண்டுட்டிங்க' னு கேட்கிறாங்க.
பிரம்மங்காரு அது வரைக்கும் சாப்பிட்டுக்கிட்டிருந்ததை இலைல வாந்தி பண்ணி அஞ்சு நிமிஷம் முன்னாடி இது அறுசுவை உணவுதானே . இதை சாப்பிட்டா சகல யொக வித்தையும் கைவரும். பெண்டாட்டி,பிள்ளை,பெண் எல்லாம் இருக்கிங்க. உங்கள்ள யாருக்கு வேணுமோ அவிக தின்னுங்க"ங்கறார். எல்லாரும் "சீ சீ"னு விலகி ஓடறாங்க.
பிரம்மங்காரு "சித்தா.."ங்கறார். உடனே சித்தய்யா இலையை கூட விடாம கபளீகரம் பண்ணிர்ரார்.
இது மட்டுமில்லேசித்தய்யாவோட குருபக்தியை இன்னொரு சந்தர்ப்பத்துல உலகமே தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு கிடைக்குது .
ஒரு முஸ்லீமை ஒரு இந்து சாமியார் எப்படி சீடனா ஏத்துக்கலாம்னு நவாபுக்கு ஏத்தி விடறாங்க. நவாபு முதல் கட்ட விசாரணைக்கு சித்தய்யாவ கூப்பிடறார்
அரசவைக்கு போன சித்தய்யா நவாபை வணங்க மறுக்கிறான். "ஏன் ஏன்" னிட்டு நவாப் சீற என் வணக்கத்தை ஏத்துக்கற சக்தி என் குருவுக்கு மட்டும்தான் உண்டுங்கறான் சித்தய்யா.
நவாப் ஒரு பெரிய பாறைய கொண்டு வரச்சொல்லி அதை வணங்க சொல்றான். அப்போ சித்தய்யா அந்த பாறைய வணங்க அது தூள் தூளா சிதறிப்போகுது.
இதே போல பிரம்மங்காரு . தன் கடைசி நிமிடத்துல கூட சித்தய்யாவோட குருபக்தியை எஸ்டாப்ளிஷ் பண்ண ஒரு திட்டம் போட்டு தான் சமாதியாற நேரம் பார்த்து பலான ஊர் போய் ,பலான பூக்களை கொண்டுவானு அனுப்பிர்ராரு. குரு வாக்கை என்னைக்கும் மீறாத சித்தய்யா குரு ஆணைய நிறைவேத்த போயிர்ரார். அவர் திரும்பி வரதுக்குள்ளே பிரம்மங்காரு சமாதிக்குள்ள இறங்கிர்ராரு. கல்லை போட்டு மூடிர்ராங்க.
சித்தய்யா வந்து சமாதி கல் மேல தலைய மோதிக்கிட்டு வாய்விட்டு அழுது,அலறி,புலம்ப சமாதில இருந்து மேலேறி வந்து தரிசனம் கொடுக்கிறாரு.
பிராமண எதிர்ப்பு:
பிராமணர்களின் சாதி செருக்குக்கு எதிராவும் பிரம்மங்காரு கடுமையா போராடியிருக்காரு. குணத்தை பொறுத்துதான் வர்ணம் அமையும். நீங்க அந்தண குணத்தை எப்பவோ இழந்துட்டிங்க.கலியுகாதி 5000 ஆண்டுகள் ஆன பின் உங்க பப்பு வேகாதுகண்ணா சூத்திர பசங்க முன்னாடி கை கட்டி நிக்க வேண்டியதுதானு காட்டமா சொல்லியிருக்காரு.
சில்லறை தேவதைகள் வழிபாட்டை எதிர்த்திருக்காரு. ( கிராம தேவதையான போலேரம்மா திருவிழாவுக்கு ஊர் பெரியவங்க வந்து டொனேசன் கேட்க போலேரம்மாவை தன் சுருட்டுக்கு நெருப்பு கொண்டுவரச்சொல்லி சனங்க வாய அடைக்கிறார்) பலிய எதிர்த்திருக்காரு.
இந்த பாயிண்ட்ஸ எல்லாம் வச்சுத்தான் சொல்றேன். பிரம்மங்காரு ஒரு காவி கட்டின பெரியார். பெரியார் கொள்கைகள்ள கடவுள் மறுப்பு ஒன்னைதவிர எல்லாமே யோக நெறி சார்ந்தவை தான்.
anna very nice
ReplyDeleteகருவாச்சி அவர்களே,
ReplyDeleteவருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி. ஆமா இம்மாம் வில்லங்கம் பிடிச்ச பதிவா போட்டு தாக்கறேன். மறுமொழி மட்டும் நை. ஏங்க .. டு யு ஹேவ் எனி ஐடியா?
அண்ணா, நேக்கு தெரியல (அவா சதியா இருக்குமோ)
ReplyDeleteஆனா நீங்க நல்ல எழுதுங்க நான் என் கருத்தை போடுறேன்
நல்ல எழுதியிருக்கேங்க
ReplyDeleteகடவுள் மறுப்பு என்ற ஒரு பாயிண்டை பெரியார் விடாதாலத் தான் பெரியார் அடிவருடிகள் பல அராஜகத்தை செய்கின்றனர். அதனால் பெரியாருடன் சேர்த்து வைத்துப் பார்க்கமுடியாது என்பது எனது தாழ்மையான கருத்து