முன்னுரை:
நான் என்.டி.ஆர் ஃபேன் தான். அவரை பூஜையே பண்றவன் தான் ஆனால் அதுக்காக அவர்கிட்டே உள்ள நிறை குறைகளை அறியாதவனில்லே. விமர்சிக்காதவனும் இல்லே.ஆனால் அவர்கிட்டேயிருந்த அத்தனை குறைகளையும் உஃப் னு ஊதி தள்ற திறமை இருந்தது. அந்த திறமைக்கான அங்கீகாரத்தை (சில சமயம் ரெட்டிப்பாவே) பெறக்கூடிய அதிர்ஷ்டமும் இருந்தது.
க்ளிப்பிங் நெம்பர் 1 :
இதுவும் அதே படத்துல வர்ர ஒரு பாட்டு சீன் தான். போலீஸ் ஆஃபீசர் தன் சின்ன குடும்பத்தோட (சின்ன வீட்டோட இல்லிங்கண்ணா) பிக்னிக் போறாரு அங்கே பாட்டு. பிக்னிக்னா கோக், பெப்சி எதாச்சு திறந்தாதானே பிக்னிக் மூடே வரும். தலைவரும் திறக்க முயற்சி பண்றாரு. பாவம் அந்த காலத்து கோலி சோடான்னா படக்குனு உடைச்சிருப்பாரு போல. இதை திறக்க முடியறதில்லை. நியாயமா பார்த்தா இந்த ஷாட்டை கட் பண்ணியிருக்கனும் ஏனோ விட்டுட்டாரு போல டைரக்டர் ( கே.ராகவேந்திரராவ். இவிங்க அப்பா யாரு தெரியுமா? கே.எஸ்.பிரகாஷ் ராவ். இவர் டைரக்ட் பண்ண தமிழ் படம் பேர் ஒன்னு சொல்லவா? வசந்த மாளிகை.
க்ளிப்பிங் நெம்பர் : 2
நீங்க பார்க்கப்போற க்ளிபிங்க் தங்கப்பதக்கத்தோட உல்டாவான கொண்டவீட்டி சிம்ஹம்" படத்துலருந்து சுட்டதுதான்.
இது ஒரு பாட்டு சீன். ஜோடி ஸ்ரீ தேவி. அந்தம்மாவ பத்தி புதுசா சொல்ல என்ன இருக்கு. எந்த கருமாந்திரம் பிடிச்ச இழவா இருந்தாலும் ஜஸ்ட் லைக் தட் ஊதிதள்ளிட்டு போய்க்கினே இருப்பாங்க. (இப்போ ஒரு சோப்பு விளம்பரம் வருதே பார்த்திங்களா.. ஆமா உங்கள்ள ஹரி ப்ரசாத்னு யார்னா இருக்கிங்களா? நாய்க்கு எப்படி உங்க பேரை வைக்கலாம்னு கோவம் வரலை)
இந்த பாட்டுல அப்படியா கொத்த ஸ்ரீ தேவி பரத நாட்டிய உடைய மாட்டிக்கிட்டு, அருவியோட பேக் கிரவுண்ட்ல ச்சொம்மா நின்னு விளையாடறாங்க. தலைவருக்கு அந்த அளவுக்கெல்லாம் டேன்ஸ் மூவ் மென்ட் வராது அதனால தூரமா நிக்க வச்சுட்டாப்ல இருக்கு. ஸ்ரீ தேவி எல்லா வித்தையையும் காட்டி ஒரு பொசிஷனுக்கு வந்த பிறகு தலைவர் எவ்ள சின்சியரா நடந்து வந்து அதே பொசிஷனுக்கு வரார் பாருங்க.
(ஹி ஹி இந்த க்ளிப்பிங்கை இன்னைக்கு வைக்கிறது மலைதான் போல இருக்கு பார்ப்போம்)
No comments:
Post a Comment