Friday, April 16, 2010

மறுமொழி கேட்டு பிச்சை

அண்ணே வணக்கம்ணே,
வழக்கமா இன்னின்ன பதிவை போட்டிருக்கேன்னிட்டு சூ காட்டிட்டு போயிருவன் இன்னைக்கு கொஞ்சம் டச்சிங்கா பேசிரலாம்னு ஒரு எண்ணம்.

பை தி பை "சாம்பார் சரியில்லை என்று கட்டிய மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்" என்ற தலைப்பில் ஒரு நெடுங்கதைய போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க‌
நானும் நவம்பர் மாசத்துல இருந்து மாடாட்டம் தினசரி கு.ப ஒரு பதிவு. அதிக பட்சம் 4 பதிவுனு போட்டுக்கிட்டே இருக்கேன்.

ஒரு கட்டத்துல நம்ம பதிவுகள் தமிலிஷ் டாட்காமில் தொடர்ந்து பிரபலமாகறத பார்த்து சில பேர் அக்குறும்பா கூட  என்னென்னவோ எழுதியிருந்தாங்க.ஒரு தாய் குலம்னா ஒரு படி மேல போய் (சாரி.. கீழே இறங்கி) கூவம் அது இதுனு எழுதி மறுமொழி கேட்டு பிச்சை எடுக்கிறாய்ங்க. வேண்டப்பட்டவங்கள வச்சி ஓட்ட போட வச்சி பதிவை பிரபலமாக்கறாய்ங்கனு கூட எழுதியிருந்தாங்க. நானும் இதையெல்லாம் கண்டுகிட்டா  பூசணிக்காய் திருடன் யாருன்னா தோளை தடவிக்கிட்ட கதையாயிரும்னு இதையெல்லாம் கண்டுக்கவே இல்லை.

குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். உப்பை தின்னவந்தானே தண்ணிகுடிக்கனும்னு விட்டுட்டன்.

ஒரு கட்டம் வரை நம்ம பதிவுகளுக்கான  மறுமொழி எல்லாம் யூஷுவலாவே இருந்தது. டஜனை மிஞ்சின நாள் எல்லாம் உண்டு. சந்து முனைல சிந்து பாடற மாதிரி சில பார்ட்டிங்க மனச புண் படுத்தினாலும் உற்சாகமாகவே இருந்தது.

சமீப காலமா மறுமொழிங்கறதே சுத்தமா இல்லாம போயிருச்சு. இதுக்கு என்னதான் காரணம்னு  நான் சின்னதா ஒரு பட்டியல் போடறேன் இதுல எது நிஜம்னு சொல்லுங்கண்ணா.

மண்டைல மிச்சமிருக்கிற நாலு முடிய அப்படி இப்படி நிரவி ஏதோ ஃபோட்டோஸுக்கு ஃபோஸ் கொடுத்துக்கிட்டிருக்கேன். அது கூட மிஞ்சாம போயிரும்போல இருக்கு.

வருகைகளோட எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரிச்சுக்கிட்டுதான் போகுது. ஆனால் மறுமொழி மட்டும் நை. விசித்திரமா இருக்கு.

1.நான் பதிவுல போடற விஷயமெல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதுனு நினைக்கிறிங்க?
2. மவுனம் சம்மதத்துக்கு அறிகுறிங்கற மாதிரி நான் சொல்ற விஷயங்களை ஏத்துக்கறிங்க?
3.தத் இதையெல்லாம் விமர்சிச்சு மறு மொழி போட்டா நம்மைத்தான் சீப்பா நினைப்பாங்கனு பம்முறிங்க ?
4.நாம என்னதான் திட்டி திட்டி மறுமொழி போட்டாலும் பார்ட்டி தன் ஸ்டைல மாத்திக்கிறாப்ல இல்லை. எதுக்கு ச்சும்மா செவிடன் காதுல சங்கு மாதிரினு நினைக்கிறிங்க?
5.எப்படியும் 11 மாசத்துல லட்சத்து 35 ஆயிரம் ஹிட்ஸை தாண்டி போயிட்டிருக்கான். நாம வேற எதுக்கு இவனை பெரீ மன்சனாக்கறதுனு நினைக்கிறிங்க?
6.பாம்புனு நினைச்சு அடிக்கவும் முடியல. பழுதுனு நினைச்சு மிதிக்கவும் முடியல. எதுக்கு வம்புனு சைடு வாங்கறிங்க?
7. நாமதான் இவன் எழுத்துக்கள படிச்சு ம.மொ  போடறோம் இந்தாளு நம்முத படிக்க மாட்டேங்கறான். ம.மொ போடமாட்டேங்குறானு கடுப்பு?
8.இவன் எழுதற விஷயமெல்லாமே சந்தேகாஸ்பதமா இருக்கு. ஒரு கோணத்துல பார்த்தா நம்பறாப்ல இருக்கு.. இன்னொரு கோணத்துல பார்த்தா டுபுக்கு மாதிரி இருக்கு. எதுக்கு வம்புனு மவுனமா இருந்துர்ரிங்க.
9.இவனுக்குத்தான் வேற வேலை வெட்டி இல்லே பக்கம் பக்கமா அடிச்சு தள்றான். நமக்கு மட்டும்  வேலையில்லையானு வெறுப்பு
10.எப்படியும் ஒரு நாளில்லை ஒரு நாள் களி திங்க போறது கியாரண்டி. ம.மொ போட்டு நாமளும் ஏன் விசாரணை வளையத்துக்குள்ள போகனும்னு தயக்கம்?

இதுவே போதுமா இன்னும் கொஞ்சம் வேணமாண்ணே.. ஒழுங்கா தினசரி முறை போட்டுக்கிட்டாவது நாலு ம.மொ யாவது போட்டுருங்க, இல்லனா இந்த மாதிரி இன்னும் 90 காரணங்களை போட்டு இம்சை பண்ணிருவன். 

மேற்படி தாய் குலமாகட்டும், சந்துல சாக்குல கள்ள ஓட்டு பார்ட்டி கணக்கா திட்டி எழுதின பார்ட்டிகளாகட்டும் இவிக எல்லாம்
என்னைப்பத்தி தெரிஞ்சிக்க  காத்திருக்கிராங்கனு சொல்லமாட்டேன். ஆனாலும் சமீபத்தில் கவிதை07 வலைப்பூவுக்கு பந்தாவாய்  நிர்வாண உண்மைகள் என்று பெயர் வைத்துக்கொண்டாலும்  சமீப காலமாய் ஒரு வித முன்.ஜா யுடன் டூ பீஸ் அணிந்த  உண்மைகளை எழுதப்போய்  என்னைப்பற்றி யாருக்கும் பெரிதாக ஏதும் தெரியாத நிலையில் கண்டவன் கண்ட படி வைவதும் தேய் பிறை சமயம் நானும் கடுப்பாகி சாக்கடை பாஷையை உபயோகிப்பதும்  சகஜமாகி போய் மறுமொழி மட்டறுத்தல் கூட  செய்ய வேண்டியதாயிற்று.

என்ன சொல்லப்பட்டது என்பதை போலவே யாரால் சொல்லப்பட்டது என்பதும் சில நேரங்களில் முக்கியமாகிவிடுகிறது. நான் செக்ஸ் குறித்தும்,பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் குறித்தும் எழுதிய சில கருத்துக்களுக்கான மறுமொழிகள் அத்தனை காட்டமாக வர என்னை பற்றி அவர்களுக்கு ஏதும் தெரியாததும் ஒரு காரணமாகிவிட்டது.

எனவேதான்  என்னைப்பற்றி நானே சொல்லிக்கொள்ள வேண்டி வந்துவிட்டது.  இந்த சுய அறிமுகப்படலத்தை ஓஷோவின் கருத்தோடு ஆரம்பிக்கிறேன்.

"சமுதாயத்தில் பிறரைவிட நாம் தாழ்ந்துவிட்டால் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். உயர்ந்து விட்டாலோ அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியாது. "

 பொருளாதார அளவிலான உயர்வுக்கே இதுதான் நிலை. அறிவு,ஆக்கம்,ஆய்வு,ஆன்மீகம்,இப்படி சகல துறைகளிலும் உயர்ந்துவிட்டால் உங்களுக்கும் உலகத்துக்கும் இடையில் பெரிய்ய.......இடைவெளி ஏற்பட்டுவிடும். இது உறுதி. என் அனுபவம் கூட..

இதுக்கு காரணம் என்னடான்னா.. சனம் துக்கத்துல இருக்கு. துக்கத்துல இருக்கிறவன் அடுத்தவனை துக்கப்படுத்தி தான் பார்ப்பான்.  சனம் பெருத்து போச்சு. ஸ்பெஷல் ஐடென்ட்டிட்டி கிடையாது. பங்க் வச்சிக்கிற இளைஞன்ல இருந்து பொடி டப்பாவ எடுத்து ஸ்டைலா நாலு தட்டு தட்டி மூக்குப்பொடி போடற கிழவாடில இருந்து எல்லாருமெ தங்களை இந்த சமுதாயம் பார்க்கனும்னு தான் ஆசைப்படறாங்க.
முந்தானைய எடுத்து விசிறிக்கிற ஆன்ட்டி. ஃபுட் போர்ட்ல பிரயாணம் பண்ற டீன் ஏஜன் எல்லாருமே இந்த சமுதாயம் பார்க்கனும்னு தான் ஆசைப்படறாங்க.

இது எக்சிபிஷனிசம்னு ஒரு மனவியாதி. இந்த படைப்புல ஒவ்வொரு உயிரும் ஸ்பெஷல் தான். முன் பத்தில சொன்ன கவன ஈர்ப்பு தீர்மானமெல்லாம் தேவையில்லே. ஒவ்வொரு மனிதனும் தான் இந்த படைப்புல சம் திங்க் ஸ்பெஷலுன்னு தெரிஞ்சிக்கிட்டா, அனுபவ பூர்வமா புரிஞ்சிக்கிட்டா இந்த ஐடென்டிட்டி பிராப்ளமெல்லாம் வரவே வராது.

நீங்க இந்த சமுதாயத்தால  அடையாளம் காணப்பெறனும்னா இந்த சமூகம் எதை எல்லாம் பார்த்து அரண்டு போயிருமோ அதையெல்லாம் டச் பண்ணனும். எதையெல்லாம் தலைமேல வச்சு கொண்டாடுதோ அதை எல்லாம் கொஸ்டியன் பண்ணனும். இந்த சமூகம் எதுக்கெல்லாம் அடிமையா இருக்கோ அதையெல்லாம் உஃப்னு ஊதி தள்ற தில் வேணும். சவால்களை சந்திக்கிற தம் வேணும். இப்படி நிறைய வேணும் இதெல்லாம் இருந்தா சமூகம் உங்களை அடையாளம் காணும்.

நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன். எழுத்துங்கறது என்ன? மவுனமான உரையாடல்.வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கு. வாயசைஞ்சா அதுவும் அசையாம அசைஞ்சா ( சூட்சுமமான வைபரேஷன்) அந்த அசைவு இன உறுப்பை அடையுது. நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகள் உள்ளவர்கள் தான் அதிகம் பேசுவாங்க.(எழுதுவாங்க) இல்லேன்னா தின்னு கழிவாங்க.

எழுத்துங்கறதே கையாலாகதவங்க வேலை. நாய் இது தன் ஏரியானு ஸ்தாபிக்கிறதுக்காக அங்கங்கே ஒன்னுக்கடிச்சிட்டு வரும். (வெளி ஏரியா நாய் வந்தா அதை மூந்து பார்த்துட்டு சாக்கிரதையா அந்த ஏரியாவ தாண்டும்) மனுஷன் என்ன பண்றான்.வீட்டை கட்டறான். வியாபாரம் பண்றான்.தொழில் பண்றான்.க்ளப்ல மெம்பரா சேர்ரான். தன் ஏரியாவ  எக்ஸ்டென்ட் பண்றான். அரசியல்வாதி என்ன பண்றான் பேனர் வைக்கிறான்.இதெல்லாம் நாய் ஒன்னுக்கடிச்ச கதைதான்.

நாம என்ன பண்றோம். ப்ளாக் எழுதறோம். படிங்க படிங்கனு ஷேர் பண்றோம், பிங்க் பண்றோம்.அதிக ஹிட்ஸ் கிடைச்சா அதிகம் சந்தோஷப்படறோம். இந்த ஷேரிங்,பிங்கிங் கூட  நாய்  ஒன்னுக்கடிச்ச கதைதான்.

உண்ணாவிரதம் இருந்துக்கிட்டு வாட்டர் தெரஃபி எடுத்துக்கிட்டு ஒன்னுக்கடிச்சா அதுல காட்டு ( நெடி) இருக்காது. ஊர்ல இருக்கிற நாய்க்கு வாசனை தெரியாது.

பதிவு பிரபலமாகலியேன்னா பிரபலமாக என்ன எழுதலாம் எப்படி எழுதலாம்னு ப்ளான் பண்ணனும். அதை விட்டுட்டு கள்ள ஓட்டு,மொள்ளமாரி வேலைன்னா எப்படி?

6 comments:

  1. //இவன் எழுதற விஷயமெல்லாமே சந்தேகாஸ்பதமா இருக்கு. ஒரு கோணத்துல பார்த்தா நம்பறாப்ல இருக்கு.. இன்னொரு கோணத்துல பார்த்தா டுபுக்கு மாதிரி இருக்கு.//

    ஸாரி கோச்சுக்காதீங்க‌, எந்த கோணத்துல பாத்தாலும் டுபுக்க்கத்தான் இருக்கு.

    --ராஜா.

    ReplyDelete
  2. sir,
    yenakku tamil la type panna theriyale, but thanglish la yen comment solren....., neenga ezhudhina yellam nan padikavillai, siladhu mattum padithen... but andha siladhum ungalai patri dhan irukku.... nan paditha andha siladhu end less-a irukku(?????) ungalai patriye solla yen titles vera vera use pandring???

    ReplyDelete
  3. ராஜா அவர்களே,
    நீங்கள் தினசரிகளை, நிபுணர்களை அவிக அரை வேக்காட்டு லேட் ஸ்டேட்மென்ட்ஸை நம்பற சாமானியர் . உங்களுக்கு என் கருத்துக்கள் டுபுக் ஆக தோன்றுகிறதென்றால் "ஆகாசத்து அகண்ட வெளியிலிருந்து" வந்த தகவலை நான் சரியாகவே சேகரித்து, சரியாகவே வெளிப்படுத்தியிருக்கேனு அர்த்தம்.
    ஒரு பத்து வருசம் போகட்டும். அப்ப பாருங்க யார் எந்த வழில போயிருந்தாலும் என் வழிக்கு வந்திருப்பாய்ங்க‌

    ReplyDelete
  4. எஸ்.ஏ.இ அவர்களே,
    தமிழில் டைப் செய்வது ரொம்ப ஈஸி . தமிழ் எடிட்டர் டாட்காம், ஹி கோபி டாட் காம் மாதிரி எத்தனையோ சைட்ஸ் இருக்கு. தூள் கிளப்புங்க.

    என்னை பத்தி நிறைய சொல்றேன்னு உங்களுக்கு தோணுதுன்னா நீங்க பின் தங்கியிருக்கிங்கனு அர்த்தம் .

    நான் சொல்றது என் சலவை கணக்கோ, காய் கறிகணக்கோ இல்லை. நான் இந்த சமூகத்தோட நலம் நாடி அதன் கதவுகளை கச்சா முச்சானு தட்டின பார்ட்டி.

    என் அனுபவம் இந்த சமூகத்தோட இழி நிலைய காட்டுது. நீங்களும் இந்த சமூகத்துல தானே வாழறிங்க.

    எல்லா தப்பையும் நாமே ( நீங்களே) பண்ணீத்தான் திருந்தனும்னா வாழ் நாள் போதாது.

    என் தவறுகள்ள இருந்து பாடம் கத்துக்கங்க. இந்த சமூகத்தை பத்தி இன்னும் கொஞ்சம் பெட்டரா தெரிஞ்சுக்கங்க

    ஐம் கிவிங் யு மோர் ஸ்டஃப் யார் !

    ReplyDelete
  5. நிறைய எழுதுகிறீர்கள் எனவே , கருத்து வெளியிடத் தயக்கம் என தோன்றுகிறது. சுவைப்பட எழுதினால் நிறைய கருத்தும் , ஓட்டும் விழும் என்பது என் கருத்து. வாழ்த்துக்கள் நீங்களும் நிறைய கருத்துக்கள் வாங்க.

    ReplyDelete
  6. மதுரை சரவணன் அவர்களே,
    வருகைக்கும் மறுமொழிக்கு (தாமதித்த) நன்றி. சுவை பட எழுத ஆரம்பித்தால் வெற்று வரிகள் நிறைய வந்துவிடுகின்றன. ( நானே ஜொள்ளு பார்ட்டி.. இது சுவைபடனு எழுத ஆரம்பிச்சா பலான சமாசாரம் சாஸ்தியாயிருங்களே

    ReplyDelete