முகேஷ் ஸ்பீக்கிங்!
ஒரு நாள் பார் அஸோசியேஷன்ல இருந்து யாரோ வந்திருந்தாங்க.ஹவுஸ் ப்ளான் அப்ரூவலுக்கு அலைய விடறதா புகார் சொல்ல டவுன் ப்ளானிங் ஆஃபீசரை கூப்டு என்ன ஏதுனு பார்க்க சொல்லிட்டு கேஷுவலா பேசிக்கிட்டிருந்தப்ப அவங்கள்ள ஒருத்தர் சென்ன கேசவன் கிஷ்டனுக்கு நோட்டீஸ் விட்டிருக்கிற கதைய சொன்னார். அந்த நேரம் அசால்டா விட்டுட்டாலும் அதென்னவோ ரொம்ப ஆடா (Odd) தோணுச்சு.மொத்த எபிசோடையும் நோண்ட நோண்ட சென்ன கேசவன் ஏதோ ஒரு பெரிய ப்ராஜக்டை கிஷ்டனுக்கு கொடுத்திருக்கிறதாவும் நாளைக்கு எதாச்சும் எக்கு தப்பா நடந்துட்டா தன் பேர் வெளிய வராம இருக்க இந்த நாடகமாடறதாவும் தகவல் கிடைச்சது.
அது என்னன்னு யாருக்கும் தெரியலை. கிஷ்டன் மட்டும் பெங்களூருக்கு அடிக்கடி போறதாவும், கர்னாடகா சிம் போட்ட செல்ஃபோனே வச்சிருக்கிறதாவும் தகவல். இதுதான்னு கெஸ் பண்ணமுடியலன்னாலும் ஜகனை போட்டுத்தள்ள எதுனா சதி நடக்குதோனு மனசுக்குள்ள ஞம ஞமங்குது.
ஜகன் என்னடான்னா சாயி பாபா கோயில் கட்டறதையே ஃபுல் டைம் ஜாபா ஏத்துக்கிட்டு கிடக்கார். அங்கே யார் மேஸ்திரி,யார் சித்தாளுன்னே தெரியாது. இதுல 24 மணி நேரமும் கல்,மண், சிமெண்ட்டுன்னு லாரிகள்ள வந்து இறங்கிக்கிட்டே இருக்கும். எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ ..
இந்த சந்தேகம் வந்ததுமே அர்த ராத்திரினு கூட இல்லாம உடனே காரை எடுக்க சொல்லி ஜகன் வீட்டுக்கு போனேன்.ஜகன் தூக்கம் கலைஞ்சு அசதியோட வெளிய வந்தாரு. என் சந்தேகத்தை விளக்கமா சொன்னேன். ஜகன் கலகலனு சிரிச்சுட்டு " த பாருப்பா இது வரை எத்தனை அட்டெம்ப்ட் நடந்திருக்கு தெரியுமா? ஒவ்வொரு தாட்டியும் நான் செத்திருந்தா கின்னஸ் ரிகார்ட்லயே வந்திருப்பேன். நீ போய் வேலைய பாரு" ன்னாரு .
எனக்கு பயங்கர கடுப்பு " ஜகன் சார் ..உங்க உயிர் மேல உங்களுக்கு அக்கறையில்லாம இருக்கலாம்.நான் எங்களுக்கு உங்க உயிரு ரொம்ப முக்கியம். இந்த கூட்ஸ் ஷெட்டை பாருங்க. ஒரு ஏக்கர் ஏரியால ஒரு வீடு. ஃபேகடரிங்களுக்கு வைக்கிற மாதிரி தொத்தலா நாலு ஜன்னல் , ஒரு உதைக்கு கூட தாங்காத கதவு. முன் பாகத்துல மட்டும் காம்பவுண்ட் அதுக்கு ரீப்பர்ல ஒரு கேட்டு. இந்த பக்கம் 50 அடி தூரத்துல பஸ் ஸ்டாண்டு , அந்தப்பக்கம் நூறு அடில ரயில்வே ஸ்டேஷன். காலி இடத்தை சொத்தி சாஸ்திரத்துக்கு ஒரு ஃபென்சிங். இதுக்கு முன்னாடின்னா எம்.எல்.ஏங்கற ஹோதால 2+3 கன் மேன் இருந்தாங்க .இப்ப அந்த இழவும் கிடையாது. எனக்கு எதுனா ஸ்பார்க் ஆனால் நான் அதை நெக்லெக்ட் பண்ணமாட்டேன். இதுவாச்சும் பரவால்லை. அப்படிபஸ்ஸ்டாண்டு, இப்படி ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ஃபோகஸ் லைட் விழறதால மாடில இருந்து பார்த்தா மொத்த ஏரியாவும் கண்ணுக்கு தெரியும். கோயிலண்டை இந்த ஃபெசிலிட்டியும் கிடையாது. ரோட் சைட்ல நாலு கிழவாடிங்க, நாலு ஐயர் பசங்களோட இருக்கிங்க. எப்படியும் பசங்க ஹாஸ்டல படிக்கிறாய்ங்க. இருக்கிறது நீங்களும் உங்க வைஃபும் தான். நான் சொல்றாப்ல கேளுங்க எப்படியும் நகராட்சி வளாகத்துல ஒரு கெஸ்ட் ஹவுஸ் ஒன்னு சகல வசதிகளோட கட்டி வச்சிருக்கு. பேசாம நீங்க அங்கே வந்துருங்க. இந்த கோயில் கீயில் எல்லாம் காலைல ஒருதரம் , சாயந்திரம் ஒரு தரம் விசிட் பண்ணா போதும். கெஸ்ட் ஹவுஸுக்கு டைட் செக்யூரிட்டி ஏற்பாடு பண்ணீரலாம். போது போகலன்னா என் சேம்பருக்கு வந்துருங்க. சனமும் ஜகன் ஜகன் னிட்டு அலைபாயறாங்கன்னேன்.
ஜகன் செயின் ஸ்மீக்கர் கிடையாதுதான். நான் பேச பேச மூணு சிகரட்டை முடிச்சுட்டார்.
"சரிப்பா.. சரியா ஒரு மாசம் தான் கெஸ்ட் ஹவுஸ்ல தங்குவேன். அதுக்குள்ள இந்த இடத்தை எப்படி காபந்து பண்ணனுமோ பண்ணிட்டு என்னை ஷிஃப்ட் பண்ணிரனும்"னாரு
சரி இவ்ள மாத்திரம் இறங்கி வந்ததே எட்டாவது அதிசயம்னு நினைச்சுக்கிட்டு . "ஓகே டீல்"னிட்டு வீட்டுக்கு வந்தேன்.
மறு நாளே ஹைதராபாத் புறப்பட்டேன். செக்ரட்ரியேட் போனேன். ஹோம் செக்ரட் ரிய பிடிச்சேன். சித்தூரோட ரத்தம் தோய்ந்த வரலாறை விளக்கி ஜகன் உயிருக்கு ஆபத்து இருக்கிறத எக்ஸ்ப்ளெயின் பண்ணேன். ரிட்டர்னாவும் ஒரு ரெப்ரசன்டேஷன் கொடுத்தேன். ரெண்டாவது நாள் நான் செக்ரட் ரியேட்ல அல்லாடறது சி.எம் க்கு தெரிஞ்சு யாரோ ஜூனியர் மினிஸ்டரை விட்டு கூப்பிட்டார். சேம்பருக்குள்ள போனதுமே அவரே கை கொடுத்து குலுக்கி
" என்னய்யா ஜில்லா எடிஷனெல்லாம் உன் புகழ்தான் பாடுதாம்.. ஸ்டேட் வைட் உன் ப்ரப்போசல்ஸை எல்லாம் அமல் படுத்த சொல்லி தினசரி சனங்க கிட்டருந்து லெட்டர்ஸ் வந்துகிட்டே இருக்கு. வெரி குட் வெரி குட் கீப் இட் அப்"னாரு.
" சார் .. நாங்க பண்றதெல்லாம் என்ன சார் ஜுஜுபி அரசியல்வாதின்னா கொடுத்த வாக்கை காத்துல பறக்கவிடறது சகஜம்னு சனமே டிசைட் ஆயிட்ட காலத்துல பாதயாத்திரைல கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேத்திக்கிட்டு வர்ரிங்க.. ஐம் இன்ஸ்பைர்டு. உங்க இன்ஸ்பிரேஷன்ல ஏதோ கானமயிலாட கண்டிருந்த வான் கோழி மாதிரி என்னத்தையோ போட்டு குழப்பிக்கிட்டிருக்கேன்"
அந்த நேரம் பார்த்து ஹோம் செக்ரட்ரி சேம்பருக்குள்ள வந்தாரு. ஃபைல பார்த்ததுமே ஒய்.எஸ். முகத்துல பயங்கர கடுப்பு.
" என்னய்யா இது கூத்து எவனோ டயரிகாரன் என் ஆளை போட்டு தள்ளபோறானு தகவல் ஜகனுக்கு செக்யூரிட்டி கொடுக்கனும்னு ரெப்ரசண்ட் பண்ணியிருக்கே. யாரந்த கிஷ்டன் தூக்கி உள்ளே போட்டுட்டா போவுது. செக்யூரிட்டி வேணம்னா ஒரு ஃபோன் பண்ண வேண்டியதுதானேய்யா. ஜகனெல்லாம் யாருனு நினைச்சே. முப்பது வயசுல பிசிசி ப்ரசிடென்ட் ஆன நான் இந்த போஸ்டுக்கு வர 25 வருஷமாச்சு. இந்த 25 வருஷத்துல இந்த ஒய்.எஸ் சிந்தாம சிதறாம அரசியல் களத்துல நிக்க காரணம் யாரு? ஜகன் மாதிரி ஆளுங்கதான். நீ ஊருக்கு போ ..2+3 கன்மேனை போட சொல்றேன். ஜகனை எங்கிட்ட பேசச்சொல்லு. "
அவர் காலை தொட்டு வணங்கிட்டு வெளிய வந்தேன். ஹோட்டல் ரூமை வெக்கேட் பண்ணிட்டு கவுண்டர்கிட்டே நிக்கேன். ஜகன் கிட்டேருந்து ஃபோன். கண்ட படி பிடிச்சி ஏறினாரு. "முகேஷ்! ஐம் சாரி. நான் உன் கிட்டே இதையெல்லாம் எதிர்பார்க்கலை"ன்னாரு. நேர்ல வந்து பேசறேன்னிட்டு கட் பண்ணிட்டேன்.
ஊர் வந்ததும் மாயாவை கூட்டிக்கிட்டு முனிசிப்பல் கஸ்ட் ஹவுஸ் போனேன். சட்டை பாக்கெட்லருந்து ஒரு கவரை எடுத்து கொடுத்தேன்.
"என்னய்யா இது?"
"ராஜினாமா?"
"உனக்கென்ன பைத்தியமா? நான் என்னா சொல்ட்டேனு இப்படி ராஜினாமா லெட்டர் தரே.. இத்தனை லட்சம் ஜனங்களுக்கு பிரதி நிதியா இருந்த நான் என் பாதுகாப்புக்காக கன் மேனை போட்டுக்கிட்டு திரிஞ்சா சனம் என்னய்யா பேசிக்குவாங்க.. இவனை காப்பாத்திக்கவே இவனுக்கு துப்பில்லே. இவன் எங்கே நம்மைகாப்பாத்தறதுனு துப்புவாங்கய்யா"
"ஒரு வேளை நடக்க கூடாதது எதுனா நடந்துட்டா உங்க ஆளுங்க என்னை கம்பத்துல கட்டி வச்சி பெட் ரோல் ஊத்தி எரிச்சுருவாய்ங்க"
" என்னடா இது வம்பா போச்சு. சரிப்பா. கன்மேன்ஸ வச்சிக்கிறேன். போதுமா..உயிர் போற நேரம் வந்துருச்சுனு வை ராணுவத்தையே பாதுகாப்புக்கு வச்சிருந்தாலும் போயிரும்.சரி சரி முதல்ல இந்த லெட்டரை கிழிச்சு போடு."
அடுத்த 30 நாள்ள ஜகனோட ரெசிடென்ஸுக்கு பக்கா காம்பவுண்ட் போட்டு அது மேல மின் வேலி போட்டு , முன் பாகத்துலருந்த ரீப்பர் கேட்டை பிடுங்கி எறிஞ்சி மூனு ஆள் உயரத்துக்கு பலமான இரும்பு கேட்டு போட்டு, கன்மேன்ஸுக்கு தேவையான ஷெல்டர், ரெஸ்ட் ரூம் எல்லாம் கட்டி கார்டன் மத்தில ஒரு கொத்து ஃபோக்கஸ் லைட்பொருத்தி முடிச்சோம். ஈவ்னிங்க் ஜகன் வந்து பார்த்துட்டு " என்ன முகேஷ் இதெல்லாம் செலவு எவ்ள ஆச்சு? இந்த ரேஞ்சுல செலவு பண்ணா தாங்குமா?ன்னாரு கவலையா.
"அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லே சார். உங்களுக்கு என் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்ல 49 % ஷேர் இருக்கில்லயா. இந்த வருஷம் உங்களுக்கு சேரவேண்டிய டிவெடென்ட்ல இது 10% கூட கிடையாது"ன்னேன்.
மறு நாள் மதியம் கூட்ஸ் ஷெட்டுக்கு ஷிஃப்ட் ஆகிறாப்ல ப்ளான். கெஸ்ட் ஹவுஸ்ல ப்ரேக் ஃபாஸ்ட் அரேஞ்ச் பண்ணியிருந்தேன். முனிசிபல் ஆஃபீஸ் கேட்ல ஒரு கன்மேன். கெஸ்ட் ஹவுஸ் கதவண்டை ஒரு கன் மேன். இவிக இல்லாம கஸ்ட் ஹவுசை சுத்தி சென்னைலருந்து பி.ஆர் மூலமா யாரோ சினிமா ஸ்டண்ட் பார்ட்டி நடத்தற செக்யூரிட்டி ஏஜென்ஸில இருந்து வரவழைச்ச ஒரு அரை டஜன் பிரைவேட் செக்யூரிட்டி .
சிந்து டவர்ஸ்லருந்து வரவழைச்ச ஐட்டங்களை டஃபேதார் பவ்யமா சர்வ் பண்ண ஜகன்,கமிஷ்னர், நான். மூணே பேர்தான்.ஏதோ பேசிக்கிட்டே சாப்பிட்டுக்கிட்டிருக்கோம். திடீர்னு வெளியே ஏதோ ரகளை. திருவிழால அதிர்வேட்டு போடுவாங்க பாருங்க அது மாதிரி வேட்டு சத்தம். சவ ஊர்வலத்துல வேட்டு விடறானு தெரிஞ்சா தப தபனு ஷட்டர் இறக்குவோம்.
ஆனா அப்படி இறக்கறதுக்கு முன்னாடியே ஏதோ ஒரு ராக்கெட் கடைக்குள்ளாற புகுந்து சீறும்பாருங்க அதுமாதிரி ஒரு புல்லெட் (புல்லெட்தான்னு அப்போ தெரியலை) கெஸ்ட் ஹவுஸுக்குள்ள சீறி பாஞ்சுது. வெளிய இருந்து அடர்த்தியா புகை வந்து கெஸ்ட் ஹவுஸ்ல சூழ்ந்துக்குச்சு. என்ன நடக்குதுன்னே புரியலை. கதவு பக்கமா பாஞ்சு கதவை எட்டி உதைச்சேன். அது ஆட்டோலாக். அதோட சாவி எங்கருக்குனு தெரியாது. ஒரு தடவை லாக் ஆயிருச்சுன்னா சாவி போட்டுத்தான் திறக்க முடியும். உள்ளே சாவி கிடைக்கலன்னா வெளியருந்து யார்னா திறந்தாதான் விடுதலை.இது எதையும் யோசிக்கலை.ஜகனை கீழே தள்ளி சோஃபா கீழே உருட்டி விட்டேன். நானும் உருண்டு இன்னொரு சோஃபா கீழே போனேன்.கமிஷ்னர் ஆல்ரெடி சோஃபா கீழேதான் இருந்தார். வெளிய இருந்து போலீஸ் சைரன் கேட்குது.ஆம்புலன்ஸோட ஊளை கேட்குது. ஃபயர் இஞ்சினோட மணி சத்தம் கேட்குது. அவ்ளோ டென்ஷன்லயும் தமிழ் சினிமா போலீஸ் ஞா வந்தது.
மொத்தம் நாலு பேருபா.. முதல்ல வெடி குண்டு போட்டானுவ. அப்புறம் மிஷின் கன் எடுத்து சுட்டுகிட்டே உள்ளாற நுழைஞ்சானுவ. கேட்லருந்த கன்மேன் சுதாரிச்சிக்கிட்டு சுட ஆரம்பிச்சான். நாலு பேர்ல ஒருத்தன் காலி. மிச்சமிருந்த மூணு பேரையும் சுட்டுக்கிட்டே ஃபாலோ பண்ணான்யா. ஒரு தாயோளி மவன் திரும்பி நின்னு சுட்டான் பாரு. கன்மேன் காலி.
கெஸ்ட் ஹவுஸ் கேட்லருந்த கன்மேன் மிச்சம் மூணு பேரையும் காலி பண்ணிட்டாரு சீமான்யா. ஆனா என்ன புண்ணியம் அந்த கன்மேனும் காலியாயிட்டான். வெளியே யாரோ உரத்த குரல்ல காமெண்ட்ரி கொடுக்கான்.
கெஸ்ட் ஹவுஸ் கதவை தட்டறாங்க." எஸ்.பி வந்திருக்கன். ஓப்பன் தி டோர்"னு குரல் கேட்குது.
கமிஷ்னர் படக்குனு சோஃபாக்குள்ளருந்து வெளிய வந்து ஏதோ பீரோவை திறந்து சாவி எடுத்து திறந்தார். நானும் வெளிய வந்தேன். "ஜகன் சார் ஜகன் சார் போலீஸ் வந்துட்டாங்க .வெளிய வாங்க. வி ஆர் சேஃப்" ஜகனை தள்ளின சோஃபா கீழே கைய விட்டு உசுப்பறேன். கையெல்லாம் ரத்தம்.
பக்குனு ஆயிருச்சு..
கலக்கலான தொடர்கதை... மேலும் தொடரருங்கள்
ReplyDeleteகரிகாலன் அவர்களே,
ReplyDeleteநம்ம கதைல ஃபேண்டசி கூட வரப்போவுது. முதுகெலும்புல குண்டு துளைச்ச அதிர்ச்சில ஜகன் உலகத்துல நடக்கப்போற சங்கதியையெல்லாம் சொல்லப்போறாரு. ஒய்.எஸ்.ஆர் மரணத்தை முன் கூட்டி சொல்ல ஒய்.எஸ்.ஆரை எப்டி காப்பாத்தறோம் பாருங்க