இந்த பதிவுல மனித குண நலன் களை எல்லா கோணத்துல இருந்தும் ஒரு அலசு அலசிரலாம்னு உத்தேசம். இங்கே செலாவணில இருக்கிற எல்லா உண்மையுமே அரை குறைதாங்கறது என் அனுபவம். ஏன்னா ஜோதிஷங்கறது ஒரு விஞ்ஞானம். அதை கருத்துல கொள்ளாத எந்த விஞ்ஞானமும் அரை குறைதாங்கறது என்னோட தாழ்மையான கருத்து. அதே நேரத்துல வெறுமனே ஜோதிஷத்தை வச்சிக்கிட்டு ஜல்லியடிக்கிறதும் ஆபத்து. அப்புறம் அவாள் நுழைஞ்சுருவா. எந்த விஞ்ஞானமா இருந்தாலும் அதுல மனிதம் இருக்கனும். அது ஒட்டு மொத்த மனிதகுலத்துக்கு நன்மை செய்யறதா இருக்கனும்.
மனுஷன் ஒரு மிருகம். ஏதோ பல்லாயிரக்கணக்கான ச(சு)மூக வாழ்வு காரணமா அவனுக்குள்ள இருக்கிற மிருகத்து மேல கான்கிரீட் ஊத்தி மூடி வச்சிருக்கம். அது என்னைக்கோ ஒரு நாள்,ஏதோ ஒரு நிமிஷம் வெளிய வந்துரும். அப்போ அதை எந்த சட்டமும் ஒரு ...ரும் பிடுங்க முடியாது.
இப்படி அதை அடைச்சி வைக்கிறத விட தினசரி கொஞ்சம் வாக் பண்ண விட்டாலே போதுங்கறது என் ஸ்டாண்ட். அதுக்குத்தான் விபசாரத்துக்கு சட்ட அங்கீகாரங்கற ஸ்டாண்டை எடுத்தேன்.
இது மட்டுமில்லாம ஒவ்வொரு மாவட்டத்துலயும் ஒரு மண்டலத்தை லா ஃப்ரீ ஜோனாக்கிரனும். இன்னைக்கு சட்டம் எதையெல்லாம் தடை பண்ணி வச்சிருக்கோ அதுக்கெல்லாம் அங்கே அனுமதி கொடுத்துரனும். சுத்தி மின்சார வேலி போட்டு, ராணுவத்தை காவல் வச்சிரனும். உள்ளார போறச்ச ஒரு ஹெச்.ஐ.வி டெஸ்ட் வெளிய வரச்ச ஒரு ஹெச்.ஐ.வி டெஸ்ட் முடிஞ்சது கதை. உள்ளார போய் என்ன வேணா பண்ணிக்கலாம். நோ ஐ.பி.சி, நோ எஃப்.ஐ.ஆர் .(சனத்தொகை குறையும். இருக்கிற கருப்பு பணமெல்லாம் அது மனுஷனுக்குள்ள இஞ்செக்ட் பண்ற வக்கிரமெல்லாம் வடிஞ்சுரும்.
நிற்க குண நலன்னு ஆரம்பிச்சோம். பாயிண்டுக்கு வந்துர்ரன். மனிதனோட குண நலத்தை ஜீன்கள், என்விரான்மென்ட்,படிப்பு,வேலை வாய்ப்பு,காதல் திருமணம், பிள்ளை பிறப்பு, குடும்பம்,சமூகம், மத்திய மானில அரசு, உலகின் போக்கை நிர்ணயிக்கும் சக்தி படைத்த அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசுகளோட செயல்பாடுகள் இப்படி எத்தனையோ அம்சங்கள் உருவாக்குதுனு சொல்றாங்க. நான் இதையெல்லாம் மறுக்க போறதில்ல. கேள்விக்குள்ளாக்க போறேன்.
ஜோதிஷம் ஒருத்தனோட குண நலன் சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் இத்யாதி தோஷங்கள் லக்னம்,லக்னத்துல நின்ன கிரகங்கள், லக்னாதிபதி, லக்னாதிபதியோட பலம்,இருப்பு ,அவரோட சேர்ந்த கிரகங்கள், சப்தம பாவ ஸ்தித கிரகங்கள், அவற்றின் பலம் இத்யாதிய பொருத்து அமையறதா சொல்லுது.
இதுல எது நிஜம்? எது பொய் ?
மனித குண நலன் களை நிர்ணயிப்பதாக கூறப்படும் அம்சங்களும் சில கேள்விகளும்:
1.ஜீன்கள்:
ஒரு உயிர் தன் முக்திக்கான நீண்ட பயணத்துல தன்னோட பிறப்பை தானே திட்டமிடுது. தன் முக்திக்கான பயணத்தை வேகப்படுத்த ஏதுவான குடும்பத்துல பிறக்குது. அப்போ குண நலன் மீதான ஜீன் களின் பாதிப்பு டுபுக்காயிருது. அந்த உயிர் தன் குண நலனுக்கேற்ற குடும்பத்தை / ஜீன் களை தேர்ந்தெடுக்குதே தவிர ஜீன்களை பொருத்து அதனோட குண நலன் ஏற்படறதில்லை. இது ஒரு பாயிண்ட் .
ஒரே தாய் தகப்பனுக்கு பிறந்த பிள்ளைகள் ( ஒரே விதமான ஜீன் களை கொண்டு பிறந்தவை) ஏன் ஒரே மாதிரி குணங்களை கொண்டிருக்கிறதில்லே.
2.என்விரான்மென்ட்,படிப்பு,வேலை வாய்ப்பு,காதல் திருமணம், பிள்ளை பிறப்பு, குடும்பம்,சமூகம் இத்யாதி:
உயிர் தன் முக்திக்கான பயணத்தில் ஒரு பாகமாக பிறவியெடுக்கிறது. தன் முக்திக்கு ஏதுவான என்விரான்மென்டில் தன் பிறவி நிகழும்படி திட்டமிடுகிறது. தன் முக்திக்கு உதவும் வகையில், முக்திக்கான ப்ராசஸை ஃபாஸ்ட் அப் பண்ணும் வகையிலான கிரக ஸ்திதி வரும்வரை காத்திருந்து , முக்திக்கான பயணத்தில் ஒரு அடியாவது முன்னோக்கி வைக்க உதவும் ஜாதகத்தில்தான் பிறக்கிறது.படிப்பு,வேலை வாய்ப்பு,காதல் திருமணம், பிள்ளை பிறப்பு, குடும்பம்,சமூகம் போன்ற அனைத்து அம்சங்களும் ஜாதகத்தில் கிரகங்கள் நின்றதை பொருத்து அமைந்துவிடுகின்றன. பின்னே இவற்றை பொருத்து குண நலன் அமையும் என்பதில் என்னத்த தர்க்கம் இருக்கும் ?
ஒரேயடியா ஒவ்வொரு உயிரும் ஏற்கெனவே ஒரு லட்சியத்தை பெற்றிருக்கு (முக்தி) அதை அடைவதற்கு ஏற்ற / கு.பட்சம் அதற்கு முயல்வதற்கு/ கு.பட்சம் அந்த லட்சியத்தை ஒரேயடியாய் மறந்துவிடாது அவ்வப்போது ஞா படுத்திக்கொள்ளும் வய்ப்பை தரும் நேரத்தில்,கிரகஸ்திதியில் (ஜாதகத்தில்) பிறக்கிறது. மேற்சொன்ன ஜீன் கள் முதல் அரசுகள் வரை அமைவது மக்களின் ஜாதகங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. ஜாதகம் அதன் குண நலனால் நிர்ணயிக்கப்பட்டதுனு அடிச்சி விட்டுட்டேன். அதாவது மேற்சொன்ன ஸ்தூல அம்சங்கள் யாவும் ஏற்கெனவே உள்ள குண நலன் களை வெளிக்கொணர உதவுமே தவிர புதிதாக உருவாக்காது என்பதே என் வாதம்.
பின்னே இத்தனை மனோதத்துவ நிபுணர்கள், அத்தனை கஷ்டப்பட்டு கண்டு பிடிச்சதெல்லாம் வீணா ? அவிக எல்லாம் முட்டாளா ? நீ ஒருத்தன் தான் அறிவாளியானு கேக்கறிங்க அப்படித்தானே.
இல்லிங்கண்ணா நான் என்ன சொல்றேன்னா விஷயங்களை ஜெனரலைஸ் பண்ணிராதிங்கங்கறேன்.
ஒரு தடவை சென்னை போய் இருந்தேன். ட்ராஃபிக் சிக்னல்ல வண்டியெல்லாம் நின்னுச்சு. பாவம் ஒரு பார்ட்டி டூவீலர்ல டேங்க் மேல ஒரு புது குக்கரை வச்சிட்டிருந்தான். பச்சை விழுந்தது. எல்லா வண்டியும் சீறிக்கிளம்ப குக்கர் தவறி கீழே விழுந்துருச்சு. பின்னாடி வந்த ஒரே ஒரு வெயிக்கிள் கூட நிக்கலை. அப்படியே அந்த குக்கர் மேல ஏறி நசுக்கிக்கிட்டே தான் போச்சு. இதான் சிட்டி கல்ச்சர். சிட்டி என்விரான்மென்ட்ல மனிதனோட குண நலன்.
ஆனால் அதே சென்னைல அனாதை பொணத்தை அடக்கம் பண்றதே வேலையா இருக்கிறவுகளும் இருக்காங்க.தெரு நாய்களை கொல்லக்கூடாது கு.க பண்ணி விட்டுரலாம்னு போராடறவுகளும் இருக்காங்க. அவிக மேல ஏன் சிட்டி என்விரான்மென்ட் வேலை செய்யலே.
இங்கேதான் ஜோசியம் வருது. யார் யார் ஜாதகத்துல லக்னம்,லக்னாதிபதி, அஞ்சாமிடத்து அதிபதி ( இவர்தான் மனசு,புத்திய கண்ட் ரோல் பண்றவர்) வீக்கா இருக்காரோ அவிக மேல மேற்படி ஸ்தூலமான அம்சங்கள் தங்களோட ப்ரபாவத்தை காட்டும்.
அதே மாதிரி சந்திர கிரகம் (இவர் தான் மனோகாரகர், ஜல காரகர்) . இவருக்கு ஒவ்வொரு ராசில ஒவ்வொரு பலம். ரெண்டேகால் நாளைக்கொருதரம் ராசி மாறிருவாரு. இவர் பலமும் மாறிரும்.
இவர் ரிஷபத்துல உச்சம் பெறுகிறார். நீங்க வேணா பாருங்க ரிஷப ராசிக்காரவுக எந்த ஒரு என்விரான்மென்ட்லயும் சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணுவாய்ங்க. இவிக லக்னாதிபதி வேற சுக்கிரனாச்சா. இவரு வருஷத்துல 8 மாசம் அனுகூலமாச்சா. சின்ன சின்ன விஷயங்களை கூட தேடிப்பிடிச்சு தங்களை தாங்களே சந்தோஷப்படுத்திப்பாய்ங்க. ( சுக்கிரன் 3,6, 7,10 ஆமிடங்கள்ள வர்ரப்ப மட்டும் கொஞ்சம் காஞ்சிருவாய்ங்க) அதே மாதிரி சந்திராஷ்டம காலங்கள்ளயும் கொஞ்சம் கடுப்படிப்பாய்ங்க.
ஆனால் விருச்சிக ராசிக்காரங்கள பாருங்க. என்னதான் பெட்டர் பொசிஷன்ல இருந்தாலும், எவ்ள நல்ல என்விரான்மென்ட்ல இருந்தாலும் கடுப்படிச்சிட்டே இருப்பாய்ங்க. சண்டைக்கு, விவாதத்துக்கு காரணத்தை தேடிக்கிட்டே இருப்பாய்ங்க.
கடக ராசி கேசெல்லாம் ரொம்ப பெக்யூலியர். இவிக லக்னாதிபதியே சந்திரன் தான். இவரு ரெண்டேகால் நாளைக்கு ஒரு தரம் ராசி மாறிருவாரு. இவிக மனசும் ரெண்டேகால் நாளைக்கொருதரம் அடியோட மாறிரும். மாசத்துல ஒரு 14 நாள் (வளர்பிறை) ரொம்ப கான்ஃபிடென்டா, ப்ரொடக்டிவா , பாசிட்டிவா இருப்பாய்ங்க. அடுத்த 14 நாள் கடுப்படிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க. சந்திராஷ்டமம் வந்தா கேட்கவே தேவையில்லை. பகலெல்லாம் சோர்ந்து போயிருப்பாய்ங்க. சந்திரோதயம் ஆனதும் ச்சொம்மா பூனைக்குட்டி மாதிரி சுறு சுறுப்பாயிருவாய்ங்க.
இந்தியாவுல எத்தனை பேருக்கு பாதுகாப்பான குடி நீர் கிடைக்குது ? ஆனால் எல்லாருக்குமா வாயால வயித்தால போகுது, இல்லே 365 நாளும் போகுதா? இல்லே இதுக்கு காரணம் என்னன்னா சந்திரன் ஜலகாரகன். சந்திரபலம் புஷ்கலமா இருக்கும் வரை தண்ணியால பிரச்சினையே வராது. சந்திர பலம் இல்லன்னா நீங்க மினரல் வாட்டரே சாப்பிட்டு,அதுலயே குளிச்சு,கழுவினாலும் வா. பே வந்தே தீரும்.
ஜஸ்ட் ஒரு சந்திரனே மனிதனோட குண நலனை இந்த அளவுக்கு பாதிக்கும் போது
ஜாதகத்துல லக்னம்,லக்னாதிபதி, அஞ்சாமிடத்து அதிபதி ( இவர்தான் மனசு,புத்திய கண்ட் ரோல் பண்றவர்) இத்யாதியோட இம்பாக்ட் எப்படி இருக்கும்னு கற்பனை பாருங்க.
இவிக யார் ஜாதகத்துல வீக்கா இருக்காகளோ அவிக மேல சைக்கிரியாட் ரிஸ்டுகள் சொல்ற மேற்படி ஸ்தூலமான அம்சங்கள் தங்களோட ப்ரபாவத்தை எந்த அளவுக்கு காட்டும்னு கற்பனை பண்ணிபாருங்க.
ஆக மொத்தத்துல இந்த பதிவு மூலமா நான் சொல்ல வர்ரத் என்னன்னா ..எவன் ஜாதகத்துல குண நலனை நிர்ணயிக்க கூடிய கிரகங்கள் வீக்கா இருக்கோ அவன் மேல தான் மேற்படி ஸ்தூலமான அம்சங்கள் தங்கள் ப்ரபாவத்தை காட்டும். கிரகங்கள் பலம் பெற்றிருந்தா /முக்கியமா லக்னாதிபதி,பஞ்சமாதிபதி / ஒரே எண்ணம் இருக்கும். அந்த ஒரே எண்ணம் ஒட்டு மொத்த மனதையும் நெல்லிக்காய் மூட்டைக்கு கட்டின சணல் கயிறு மாதிரி சிந்தாம சிதறாம காக்கும். உறுதியான மனம் கொண்டவன் மேல மேற்படி ஸ்தூல அம்சங்களின் இம்பாக்ட் 00.01% இருந்தாலே அதிகம்.
சரி ஜாதகப்படி தான் எண்ணம்னா அப்ப நாம நினைக்கிறதெல்லாம் வீணான்னு நீங்க கேட்கலாம். அந்த எண்ணம் உங்களுக்குள்ளே இருந்து வந்திருந்தா உங்க எண்ணம் நிச்சயம் மெட்டீரியலைஸ் ஆகும். அப்படியில்லாம உங்க ஜாதகம் வீக்காயிருந்து மேற்படி ஸ்தூல அம்சங்களால பிரபாவிக்கப்பட்டு வந்த எண்ணமா இருந்தா அந்த எண்ணம் செயலா மாறாது. ஒரு வேளை விவேகானந்தர் சொன்னபடி நீங்க 14 வருஷம் அதேஎண்ணத்தோட இருந்து மெட்டீரியலைஸ் ஆனாலும் ஆப்புதான் .
எல்லாம் சரி முருகேசா! பெரியார் புகழ் பாடறே. ஜோதிஷத்துல புலிங்கறே. இந்த கிரகங்கள் பிடிலருந்து மனுஷன் விலகவே முடியாதானு கேட்கிறிங்க. அப்படித்தானே ..என்னா ஜேஜி கோச்சுக்கும். கோச்சிக்கிட்டா போவுது இத்தீனி பேர் நல்லாருக்க நான் ஒருத்தன் நாசமா போனாதான் என்ன அடுத்த பதிவு ......டட்டடாஆஆஆஆஆஆஆஅய்ங்க்
நவ கிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை
No comments:
Post a Comment