அண்ணே, வணக்கம்ணே..
இந்த பதிவுல ஒரு சரோஜா தேவிதனமா டிவி சீரியலை கிழிச்சிருக்கேன் .பை தி பை ஒரு சேஞ்ச் இருக்கனும்னு நவகிரக பாதிப்பிலிருந்து விடுதலையோட இரண்டாவது பாகத்தை (டீல்ல விட்டுராம ) போட்டிருக்கேன். அப்படியே தெலுங்கு கற்றுக்கொள்ளுங்கள் 1+2 வும் போட்டிருக்கேன். அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிச்சுருங்க
கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்த மதிய நேரம் டிவி சீரியல் இலக்கணத்தை மீறி ஏதோ வசனம் காதில் விழவே டிவி பக்கமாய் பார்வையை திருப்பினேன். சீன் என்னடான்னா
ஒரு கணவன்.மனைவி. மனைவியின் காதலன். கணவன் ஆண்மையற்றவர். ஆனால் மனைவி இல்லாம வாழ முடியாத அளவுக்கு பாசம் வச்சிட்டவர். அவர் பேசறார்
" தபாருப்பா .. நான் ஆண்மையற்றவன் தான். ஆனால் பகிரங்கமா இதை சொல்லி விவாகரத்து தரமுடியாது. அப்படியே தந்து தொலைச்சாலும் எங்க வீட்ல என்னை வேகண்டா விடமாட்டாங்க. உடனே இன்னொரு கல்யாணம் பண்ணிருவாக. இன்னொரு பெண் வாழ்க்கை பாதிக்கும் நீங்க ஓடிப்போயிட்டா காலத்துக்கும் எனக்கு அவமானம் ,உங்களுக்கு குற்ற உணர்ச்சி. பேசாம ஒன்னு பண்ணு எங்களோடவே இருந்துரு"
ராஜேஷ்குமார் கதை மாதிரி மண்டைக்குள்ள நட்சத்திரங்கள் வெடிச்சது. இதென்னாடா விதி நம்மை இந்த மாதிரி உசுப்பி விடுது.
நமக்கு டிவின்னாலே அலர்ஜி . ஏதோ அசம்பாவிதம் (உ.ம்: முதல்வர் ஹெலிகாப்டர் காணாம போனது) நடந்த சமயத்துல மட்டும் விளம்பரங்களை சகிச்சிக்கிட்டு பார்த்து தொலைக்கிறது உண்டு. நானும் ஒரு ரிப்போர்ட்டனா குப்பை கொட்டியிருந்தாலும் (குப்பை கொட்டினதாலயேவோ என்னவோ) ரிப்போர்ட்டன் என்றாலே அலர்ஜி. அதுலயும் ஏதாச்சும் விபரீதம் நடந்த இடத்துலருந்து லைவ் கொடுக்கும்போது அது வாயா வேற ஏதாச்சுமானு குழம்பற அளவுக்கு இவிக பண்ற கூத்து இருக்கே வேண்டாண்டா சாமி.
இப்படியா கொத்த நான் ஏன் டிவி பக்கம் கண்ணை திருப்பனும். அந்த நேரம் பார்த்து இந்த இழவெடுத்த சீரியல் வரனும். அதுவும் எந்த டிவி தெரியுமா சன் நெட் ஒர்க்ல இருக்கிற தேஜா டிவி.
சின்னவயசுல இந்து நேசன் படிச்சிருக்கிங்களா? அதுல கண்டவன் கண்டவன் பெண்டாட்டிய கெட்ட காரியம் செய்வான். ஆனால் கடைசில ராஜேஷ்குமார் நாவல் மாதிரி ஜெயிலுக்கு போவான். இல்லைன்னா எவனாச்சும் போட்டு தள்ளிருவான். அந்த மஞ்சள் இலக்கிய கர்த்தாவுக்கு இருக்கிற மோரல் கூட கற்பில் சிறந்த கண்ணகி பிறந்த தமிழ் குலத்து தாய்குலத்தை நம்பி சீரியல் எடுக்கிற நாதாரிகளுக்கு இல்லியேனு பத்திக்கிட்டு வந்தது.
புதுமை தேவைதான். பழையன கழிதலும் புதியன புகுதலும் இல்லன்னா இலக்கியத்துக்கே மலச்சிக்கல் வந்துரும்தான். அதுக்காக என்னங்கடா இழவு இது? நான் பார்த்த காட்சி ஃப்ளாஷ் பேக்காம். இதை கணவன்,மனைவி காலனி வாசிங்களுக்கு சொல்றாய்ங்க. இதை காலனி வாசிங்க ரெகக்னைஸ் வேற பண்றாய்ங்க.
அந்த கணவனோட கேரக்டரை பாருங்க. அய்யாவுக்கு ஆண்மையில்லேனு தெரியும். தெரிஞ்சும் கண்ணாலம் கட்டிக்கிறார். அது தப்பில்லையாம். பெண்டாட்டிக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவள் அவனோட வாழ விரும்பறா.ஆனால் இவர் விவாகரத்து கொடுக்கமாட்டார்.ஏண்டான்னா இவர் ஆண்மை இழந்தவர்னு ஊருக்கு தெரிஞ்சுருமே.
இவருக்கு ஆண்மையில்லாம இருந்தாலும் நோ பிராப்ளம். அதை மறைச்சு கண்ணாலம் கட்டிக்கிட்டாலும் நோ ப்ராப்ளம். பெண்டாட்டி தன் காதலனோட சேர்ந்து வாழ இவர் விவாகரத்து கொடுக்கமாட்டார்.ஏண்டான்னா காரணம் சொல்ல வேண்டி வந்துருமே. மேலும் இவரால அவள் இல்லாம வாழமுடியாது.
அதுக்காக அவரு என்ன பண்றாரு நான் விவாகரத்து தரமாட்டேன். அதுக்காக ஓடியும் போயிராதிங்க. வேணம்னா நீ எங்க கூடவே இருந்துருங்கறார். எதுக்கு ? ஆளுயர மாலை மாதிரி ஆளுயர வைபரேட்டராவா?
சரிப்பா .. அவன் உங்க கூடவே இருக்கான். ஓகே .சட்டப்படி பார்த்தா அவள் உன் மனைவி. அவள் கர்பமாகிறாள், உங்க மத்தில ஆரம்பத்துல இருந்த அதே அண்டர் ஸ்டாண்டிங்க் அப்படியே இருந்தா நோ ப்ராப்ளம். ஒரு வேளை நீ ஜெலசாயிட்டே.
கடுப்பாயிட்டே. என் மனைவிய இவன் கெடுத்துட்டாங்கறே.அப்போ அந்த மனைவியோட கதி என்ன?
சரி குழந்தை பிறக்கற வரை பிரச்சினை வரலை. ஒன்னை பெத்துர்ரானு வை. சட்டப்படி அது உன் வாரிசு. குழந்தை வளர்ப்புல பிரச்சினை வந்ததுன்னு வை . காதலன் கோர்ட்டுக்கு போறான்னு வை. மெடிக்கல் டெஸ்ட்ல அது அவனுக்கு பிறந்ததுன்னு ப்ரூஃப் ஆகுது. அப்போ அந்த மனைவியோட நிலை என்ன? தன் காதலனோட அவ வச்சிக்கிட்ட உறவுக்கு என்ன பேரு ? கள்ளக்காதல் தானே.
நாயே உன்னை கட்டிக்கிட்டு வாழ வந்தது இப்படி அடல்ட்ரி குற்றச்சாட்டுக்கு இலக்காகி சமுதாயத்தோட பார்வைல வேசியா நிக்கவா? என்னங்கடா இது இழவு?
இது மாதிரி ஒரு ப்ரப்போசல் வந்து போற மாதிரி இருந்தா கூட பரவாயில்லை. வாழ்ந்துர்ராங்கப்பா.
இந்த மேல் சேவனிஸ்ட் சொசைட்டில உதவாக்கரை சட்டங்களுக்கு உட்பட்டு வாழ்ந்தாலே பெண்ணுக்கு பாதுகாப்பில்லை.
இது ஆண்கள் தங்களோட தாராள மனப்பான்மைய காட்ட பெண்களை இது மாதிரி விஷபரீட்சைகள்ள இறக்கிவிட்டா என்ன அவள் எதிர்காலம் என்ன ஆகறது.
அட ..அவளே ஒரு பொருளாதார தன்னிறைவு எய்தின பெண்ணா இருந்து தன் சொந்த புத்தில இலக்கியம் பேச ஒருத்தன், பிசினஸ்ல கூட மாட ஒத்தாசை பண்ண ஒருத்தன் இப்படி பத்து பேரை வச்சிக்கிடட்டும். அது அவள் தலையெழுத்து. இப்படி ஒரு சில பெண்கள் வாழ்ந்துக்கிட்டும் இருக்கலாம். இதெல்லாம் விதிவிலக்குப்பா.
காசு பொறுக்க சீரியல் பண்ற நாதாரிங்க விதிவிலக்கையெல்லாம் எடுத்துட்டு வந்து வீட்டு கூடங்கள்ள கூறு கட்டினா வீடுங்க எல்லாம் நாறிடாது. தூத்தேறி..
இப்படி ஒரு சீரியல் எடுத்துத்தான் பொழப்ப ஓட்டனுங்கற நிலைமை இருந்தா அதுக்குனு இருக்கிற செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு பி.ஆர்.ஓவா இருங்கடா .
No comments:
Post a Comment