Wednesday, April 21, 2010

இஸ்லாம் : சில கேள்விகள்

அண்ணே வணக்கம்ணே,
 நேத்து என்னாச்சுண்ணே வழக்கமா ஹிட்ஸ் ஏவரேஜா 500 ஆவது இருக்கும்  நேத்து 200 க்கும் குறைவாயிருக்கு. எல்லாரும் வெளியூர் போயிருந்திங்களா என்ன ? சரி ஓஞ்சு போவட்டும். கதம்!  கதம்!

நீங்க படிக்கப்போற  இஸ்லாம் : சில கேள்விகள் என்ற பதிவில்லாம இன்னைக்கு ஏக் தம் ஹெவியா மேலும் ரெண்டு பதிவுகள்  பதிவுகள் போட்டிருக்கேன்.

1. ஒரிஜினல் மருந்துகள் மட்டும் ஒழுங்கோ?

2. குண நலன்கள் மீது கிரகங்களின் பிரபாவம்


அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிச்சுருங்கண்ணா
இஸ்லாம் ஈஸ் தி பெஸ்ட் ரிலிஜியன். முஸ்லீம்ஸ் ஆர் தி வொர்ஸ்ட் ஃபாலோவர்ஸ். இது என் கருத்தல்ல. ஒரு முஸ்லீம் நண்பரே இதை சொன்னார்.

இஸ்லாம் மீது எனக்கு பெரும் மதிப்பும்,மரியாதையும் உண்டு. அதே நேரம் இந்து மதத்தின் சாரம் திரிக்கப்பட்டுவிட்டது போலவே இஸ்லாமின் அடிப்படையும் திரிக்கப்பட்டு நீர்த்து வருகிறதோ என்ற ஐயமும் உண்டு.

இறைவனால் அருளப்பட்டு பல்லாயிரக்கணக்கான வருடங்களா ஒரே ஒரு எழுத்து கூட மாறாம   செலாவணில இருக்கிற ஒரே நூல் திருக்குரான் தான். இது முஸ்லீம்களுக்கு மட்டுமானதல்ல. ஒட்டு மொத்த மனித குலத்துக்குமானது. ஆனால்
அதன் வாசனை கூட எட்டாத முசல்மான்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.
இந்த நிலைக்கு காரணம்தான் என்ன ? இது போன்றவர்களின் நிலைதான்  என்ன ?

ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு நடமாடும் திருக்குரானாக இருக்க வேண்டாமோ ? அதன் மகத்துவத்தை மகிதலமெங்கும் பரப்ப வேண்டாமோ ? திருக்குரானுக்கு எதிரான எத்தனை எத்தனை விஷயங்கள் தம் வாழ்வில் திணிக்கப்பட்டுவிட்டன என்பதை புரிந்து அவற்றை தூக்கி எறிய வேண்டாமோ?

என் பிறந்த தேதி 7/8/67 ஆக அமைந்தது குறித்து எனக்கொரு ஆணவமே உண்டு. 786 என்ற எண்ணுக்கும்  இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு என்பதே புரியவில்லை. சிலரை கேட்டால் ஆகா ஓகோ என் கிறார்கள், சிலரை கேட்டால்  இது ஒரு விஷயமே அல்ல என்பது போல் சொல்கிறார்கள். ஏனிந்த அறியாமை.

இந்து மதத்திலாவது சூத்திரன் வேதம் படிச்சா நாக்கை அறு, சூத்திரன் வேதத்தை கேட்டா காதுல ஈயத்தை காச்சி ஊத்துனு  வேதங்களை சரோஜா தேவி புஸ்தவம் மாதிரி மறைச்சு வச்சு படிச்சாங்க. இஸ்லாம்ல அந்த பிரச்சினையே கிடையாதே. பின்னே ஏனிந்த அறியாமை?

இத்தனைக்கும் திருக்குரானின் வசனங்கள் நேரிடையாக ,எவ்வித ஒளிவு மறைவுமில்லாமல் ,எளிமையாய் அமைந்துள்ளதை மொழி பெயர்ப்புகளிலேயே அறிய முடிகிறது.

இஸ்லாமை எவ்வித முன் கூட்டிய கருத்துமின்றி திறந்தமனதுடன் அணுகுவோர் எவரானாலும் சரி இஸ்லாமை மிகச்சரியாக புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஒவ்வொருவருக்கும் ( முஸ்லீம்களில் சிலருக்கும் கூட) இஸ்லாம் பற்றிய தெளிவே இல்லாததோடு அது  குறித்த வெவ்வேறு விதமான முன் கூட்டிய கருத்துக்கள் இருப்பது ஏன்?  இவை எப்படி தோன்றின? இவற்றை ஒழிக்க என்னதான் வழி? இது குறித்து இஸ்லாம் என்ன செய்து வருகிறது?

சரி விஷயத்துக்கு வருகிறேன். இஸ்லாம் குறித்து நானறிந்துள்ளவற்றை விடவும் நபி (சல்) அவர்களை பற்றி அறிந்ததே அதிகம்.  நான் இஸ்லாமை நோக்கி   கவரப்பட்டதே நபி (சல்) அவர்களின் அரிய குணங்களால் தான். ஆனாலும் அவரை கூட இஸ்லாம் இறைவனுக்கு இணையாக கொள்வதில்லை. தூதர்களில் தலை சிறந்தவர் என்று போற்றப்படுகிறாரே தவிர இந்து மதம் மாதிரி  இறைவனுக்கு இணையாக்கும் குழப்படி எல்லாம் கிடையாது. தனி சன்னிதி பிசினஸ் எல்லாம் கிடையாது இது இஸ்லாமின்  தனிச்சிறப்பு.

இஸ்லாம் மீதான என் காதலுக்கு இதுவும் ஒரு காரணம்.

இஸ்லாமை நான் மதிக்க காரணம்
1.ஓரிறை கொள்கை

2.இறைவனை உருவமற்றவராக வணங்கும் முறை
3.சமத்துவம்,சகோதரத்துவம்
நமாஸ் வேளைகளில் யார் முன்னே வந்தால் அவருக்கு முதலிடமே தவிர இந்து கோவில்கள் போல் கொள்ளையடிப்பவனுக்கு பூர்ண‌கும்பம் எல்லாம் கிடையாது‌
ஆனால் யதார்த்தத்தில் பார்க்கும்போது என்னென்னவோ பிரிவினைகள் உள்ளன. குர்திஷ், சன்னி,ஷியா,லெப்பை .

4.சாதிகளுக்கு இடமில்லாமை
5.ஹிப்பாக்ரசி இன்மை. எளிய திருமணம் & விவாகரத்து முறை. பலதார மணத்துக்கு அனுமதி
6.உடலுறவை இயல்பாக ஏற்றுக்கொண்ட மதம்.(விரத காலத்திலும் உடலுறவு அனுமதிக்கப்படுகிறது)
7.சமூக நோக்கு. ஹ்யூமன் ஆட்டிட்ட்யூட் .   வட்டியை  தடை செய்துள்ளது.  ( நம்ம சாமிங்களே வட்டி வியாபாரம் பண்றாய்ங்க) .பெண்ணுக்கு சொத்துரிமை வழங்கியுள்ளது
8.இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையில் தரகர்கள் இன்மை
9.எளிய அடிப்படை கடமைகள்
10.யதார்த்தமான புரிதலுடனான ,கொள்கைகள்.ஒளிவு மறைவற்ற தன்மை,அடிப்படை விஷயங்களில்  வளைந்து கொடுக்காத    தன்மை.
11. வரதட்சிணைக்கு தடை அதற்கு பதில் மொஹர்
இப்படி நிறைய  சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இன்றைய இஸ்லாமிய சமுதாயம் இந்த எளிய  நேர் வழியை கடைபிடிக்கிறதா? என்பதில் எனக்கு ஐயங்கள் உண்டு. இஸ்லாம் மீது உனக்கென்ன அக்கறை என்று சிலர் கேட்கலாம்.

பிறப்பால் இந்துவான நான் இந்த 43 வயதுக்கும் ஆன்மீக வாழ்வில்  முடிவான முடிவுக்கு வர வொட்டாது  இந்து மதத்திலான குழப்படிகள் குழப்பியடிகின்றன.  நான் கடந்த பிறவிகளில் ஏதேனும் ஒரு பிறவியில் முஸ்லீமாக இருந்தேனா என்ற சம்சயமும் என்னில் உண்டு. அதற்கான பல ஆதாரங்களும் கண்டுகொண்ட நிலையில் இஸ்லாம் மீதான ஈர்ப்பை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது அவ்வப்போது திணறுவதுண்டு.

ஒரு வேளை இஸ்லாம் சமூகம் நான் முன் வைக்கும் விஷயங்களை திறந்த மனதுடன் சிந்தித்து விவாதிக்க முன் வருமேயானால் தமது பாதையில் முளைத்து வந்து விட்ட முள் மரங்களை கெல்லி எறியுமேயானால்  நான் இஸ்லாமை தழுவவும் தயங்க மாட்டேன்.

சரி இலக்கண தமிழ்ல எழுதி கடுப்படிச்சிட்ட மாதிரி இருக்கு நம்ம ஸ்டைலுக்கு வந்துருவம்

இதையெல்லாம்  எழுதலாமா வேணாமானு இத்தனி காலம் ஊற வச்சிருந்தேன். நான் பிறப்பால இந்துவா இருந்தாலும் உணர்வுகளால் நான் ஒரு முஸ்லீம் தான். அந்த உரிமைல எழுதித்தான் பார்த்துருவம்னு எழுதிக்கிட்டிருக்கேன்.

இஸ்லாமை பத்தி நமக்கு (எனக்கு) தெரிஞ்சது பத்து பைசா அளவுகூட இருக்காது ..இதுக்கே பயந்துட்டன். இப்படி கூட ஒரு மதம் போதிக்குமா ? மனிதமே  மதமாக உருமாறிய ஒரே மதம் இஸ்லாம் தான். ஆனால் இஸ்லாம் முஸ்லீம்களால் ஒழுங்காக பின்பற்றப்படுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

இந்துமதத்தில் எப்படி அச்சு அசலான யோக முறைகள் எல்லாம் மூலையில் கிடத்தப்பட்டு விளக்குக்கு எத்தனை திரி போடனும் என்ன எண்ணை ஊத்தனும்னு கதை அளக்கறாகளோ அப்படியே  இஸ்லாம்லயும் வெத்து விவாதங்கள் நிறைய நடக்கறாப்ல தெரியுது. நம்ம மதத்துல பிராமணர்கள் ஆற்றிய தொண்டை(?) அங்கே சில மத பெரியவர்கள் ஆற்றுகிறார்கள்.

இறைவனை தவிர வேறெதற்கும் தலை வணங்க கூடாது என்ற தலையாய விதியிருந்த போதிலும் அவர்களிலும் மூட நம்பிக்கைகள்,மந்திர தந்திரங்கள் மீதான நம்பிக்கைக்கு குறைச்சல் இல்லை. சமத்துவம்,சகோதரத்துவம் என்பது போதிக்கப்பட்டிருந்தாலும் யதார்த்தத்தில் பார்க்கும்போது பிளவுகள் இருக்கவே இருக்கின்றன.

நபிகள் நாயகம் போன்ற மனிதாபிமானியை நமது புராணங்களிலோ ,வேதங்களிலோ,சரித்திரத்திலோ எங்குமே காணமுடியாது ,காட்டவும் முடியாது . அது போன்றதொரு மனிதாபி மானி முகமது(சல்) அவர்கள்.

அந்த யுத்த காலத்துக்கென்று, பாலை பூமிக்கென்று வகுத்துக்கொண்ட நியதிகள் பல பல.

இஸ்லாம் சம்பிரதாயங்களை பார்த்தால் அது பாலை நிலத்துக்கும்,யுத்த காலத்துக்கும் ஏற்றவகையில் அமைந்திருப்பதை உணரலாம். உதாரணமாக: ஆண்கள் சிறு நீர் கழித்தபின்பு கற்களால் சுத்தம் செய்வதை பார்த்திருக்கலாம். பாலை நிலத்திலென்றால் சூரிய வெப்பம் காரணமாய் கிருமிகள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பாலைவனத்தில் ஒரு காரவான் (பிரயாணிகள் கூட்டம்) கடந்து சென்றால் மற்றொரு காரவான் வர மாதமாகலாம், இரண்டு மாதமாகலாம். இன்று ? சென்னை போன்ற கான்க்ரீட் காட்டில் ?

இன்றும் இந்த சாந்தி காலத்திலும், இந்த பொன் விளையும் பூமியிலும் பின்பற்றுவது எந்த அளவுக்கு அறிவுடமை என்று அவ்வப்போது கேள்விகள் எழுவது உண்டு.

உதாரணமாக : பலதார மணம். அது யுத்த காலம். யுத்தத்தில் வீரமரணங்கள் சகஜம். பெண்டிர் விதவைகளாவது சகஜம். அந்த சஞ்சார வாழ்வில்,யுத்த காலத்தில்  தனிமையில் வாழும் பெண்களால்  தனி மனித  ஒழுக்கம் பாதிக்கப்படலாம். இது யுத்தத்திலான  வெற்றிவாய்ப்பை கூட பாதிக்கலாம். அதனால் நபிகள் நாயகம் பல தார மணத்தை ஆதரித்திருக்கலாம். இன்று ?

பிள்ளை பெறுவதற்கும் இதே விதியை பொறுத்திப்பாருங்கள். பெண் குழந்தை பிறந்தால் ஒரு  வீரமாதா கிடைப்பாங்க. அவிக எதிர்காலத்துல  வீரர்க்ளை பெற்றுத்தருவாங்க. ஆண்குழந்தை பிறந்தால் ஒரு வீரன் கிடைக்கிறான்

 பாலை பூமியில்  ஆண்களுக்கு  கழுத்து,புறங்கை , கால் வரை மூடிய உடை தேவை தான். பெண்கள் புர்கா அணிவதும், கோஷாவாக இருப்பதும் எதிரிகள் குறித்த அச்சத்தால் தான் (அது யுத்த காலம் என்பதால் இந்த ஏற்பாடு) மேலும் பாலை நிலத்தில் சூரிய வெப்பம், அதை பிரதிபலிக்கும் மணல்வெளி காரணமாக பெண்களின் முகம் பொலிவிழந்து போகுமென்பதாலும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம்.

 மாமிச உணவும் தேவைதான். அங்கு தாவர உணவு கிடைப்பது சிரமம் என்பதால்.

முஸ்லீம்கள் மீசையை ட்ரிம் செய்து கொள்வதும் ஆடு,மாடு ,ஒட்டகம் போன்றவற்றின் எலும்புகளை கடிக்கத்தான். . இன்று  தாவர உணவு யதேஷ்டமாக கிடைக்கிறதல்லவா ?

முஸ்லீம்கள் விருந்துண்ணும்போது சாப்பாடு பாய் மீது பரிமாறப்படும். விருந்தினர் அனைவரும் உணவுப்பொருட்களை சுற்றி தரையிலமர்ந்து உண்பர். இதுவும் பாலை நிலத்தை(மணல்) கருத்தில் கொண்டு செய்ய‌ப்பட்ட ஏற்பாடே.


இந்த பழக்க வழக்கங்கள் இன்றும், இங்கும்,இப்போதும் தேவைதானா?

பார்ப்போம் முஸ்லீம் சகோதரர்கள் ஆக்கப்பூர்வமான வாதங்களை எடுத்து வைக்கிறார்களா .."எரி தழல் கொண்டு வா " என்று சீறி விழுகிறார்களா ?

நான் அவதானித்த வரையில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் முஸ்லீம்கள் ஒருவித அபத்திர பாவத்தால் இன்றைய கால,தேச ,வர்த்தமானங்களுக்கு பொருதாத  மேற்படி பழக்க வழக்கங்களை பிடிவாதமாக தொடர்கிறார்களே தவிர ஓரளவு நல்ல கல்வி, வேலை வாய்ப்பு, செல்வ செழிப்பு பெற்றுள்ளவர்கள் மாறியிருக்கிறார்கள்.
தம்மை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றும் கூட தமது டிப்பாசிட்டுகள் மீதான வங்கி வட்டியை கூட தனியே கணக்கிட்டு வருடம் ஒருமுறை தானம் செய்யும் முசல்மான்கள் உண்டு. ஆனால் பலர் கூசாமல் பத்து வட்டி வசூலிப்பதையும் காண முடிகிறது. முஸ்லீமாக பிறந்தவன் இறைவனை தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க கூடாது என்பதால் தான் வந்தேமாதரம் பாடுவதை கூட அந்த காலத்தில் தவிர்த்தனர். ஆனால் இன்று ஒன்றரையணா அரசியல்வாதியை கூட இந்திரன் சந்திரன் என்று புகழும் முஸ்லீம்கள் உள்ளனர்.

மேலும் மதச்சார்ப்பற்ற தன்மை என்ற பெயரால் கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தலும் ,ஆஞ்சனேயர் தாயத்து தரிப்பதையும் காணமுடிகிறது. தர்காவை வணங்குவோர் எத்தனை பேர் ! ஃபகீர்களை வணங்குவோர் எத்தனை பேர் ! மதச்சார்பற்ற தன்மை உள்ளத்தில் இருந்தால் போதுமே தவிர இறைவன் ஒருவனே என்ற முடிபுக்கு களங்கம் விளைவிப்பது ஹராம் தான்

நான் முஸ்லீம் சகோதரர்களை கேட்டுக்கொள்வது ஒன்றே அந்த யுத்தகாலத்துக்கேற்ற வகையில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை இன்றும் பின்பற்றுவது தேவையா ? என்று யோசியுங்கள். பலதார மணத்தை கைவிடுங்கள். குடும்பக்கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள். பிள்ளைகளுக்கு (ஆண்,பெண்) கல்வியை வழங்க பாருங்கள். இருக்கிற பாய் எல்லாம் பழைய இரும்பு வியாபாரம்,ஆட்டோ புரோக்கர் என்று இருப்பது நல்லதா ?

இறைவனுக்கும், பக்தனுக்குமிடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை. நாம் பேசுவதை இறைவன் கேட்கிறான். இறைவன் சொல்லை நமக்கு சேர விடாமல் செய்வது இடைத்தரகர்களும், அகந்தையும் தான். எனவே அகந்தையை கைவிடுவோம்.( நாம் சரி மற்றவர்கள் அனைவரும் தவறு என்ற எண்ணம்) இடைத்தரகர்களின் சூழ்ச்சியை சூட்சும புத்தியுடன் சிந்தித்து செயல்படுவோம்.

அத்னால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் . இஸ்லாம் மட்டும் ஒழுங்காக பின்பற்றப்படுமேயானால் இந்த பூமியில் வேறு மதங்களே இருக்காது !


வட்டியை தடை செய்துள்ளமை. (யதார்த்தத்தில் பலரும் வட்டி வாங்குவதும் கொடுப்பதும்)


இந்து மதம் போலவே இஸ்லாமிலும் பண்டித கூச்சல்கள் அதிகமாய் உள்ளன. அண்டர்வேர் அணியலாமா கூடாதா என்று ஒரு அப்பாவி முஸ்லீம் கேட்டால் கூட ஒரே பதிலை கூற முடியாத நிலை உள்ளது. இஸ்லாம் குறித்த விவாதங்களில் தத்துவத்தின் மையத்தை விட்டு விலகிப்போகும் தன்மை உள்ளது. இதற்கு மதப்பெரியவர்களே காரணமாய் உள்ளது வருத்தம் தருகிறது.

32 comments:

  1. //786 என்ற எண்ணுக்கும் இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு என்பதே புரியவில்லை. சிலரை கேட்டால் ஆகா ஓகோ என் கிறார்கள், //

    இதுல எழுதி இருக்கிறேன்.

    ReplyDelete
  2. //இந்து மதத்திலாவது சூத்திரன் வேதம் படிச்சா நாக்கை அறு, சூத்திரன் வேதத்தை கேட்டா காதுல ஈயத்தை காச்சி ஊத்துனு வேதங்களை சரோஜா தேவி புஸ்தவம் மாதிரி மறைச்சு வச்சு படிச்சாங்க.//


    I like this :)

    ReplyDelete
  3. //11. வரதட்சிணைக்கு தடை அதற்கு பதில் மொஹர்
    இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.//

    கீழக்கரை, நாகூரில் வரதட்சனை லட்சங்களில் கொடுப்பது இஸ்லாமிய திருமண வழக்கம் ஆகி ஆண்டுக்கணக்காச்சு சாமியோவ்

    ReplyDelete
  4. //நான் கடந்த பிறவிகளில் ஏதேனும் ஒரு பிறவியில் முஸ்லீமாக இருந்தேனா என்ற சம்சயமும் என்னில் உண்டு.//

    இஸ்லாமிய அடிப்படையையே இடிக்கிறீர்கள், இஸ்லாமில் மறுபிறவி நம்பிக்கையே கிடையாது

    ReplyDelete
  5. //பார்ப்போம் முஸ்லீம் சகோதரர்கள் ஆக்கப்பூர்வமான வாதங்களை எடுத்து வைக்கிறார்களா .."எரி தழல் கொண்டு வா " என்று சீறி விழுகிறார்களா ? //

    அருமையான,நடு நிலைப் பதிவு. முஸ்லிம்கள் விளக்கம் கொடுக்கலாம் அல்லது
    கொடுக்காமலே இருக்கலாம். இந்தப் பதிவுக்கு சீறுப‌வர்கள் முஸ்லிம்களாய் இருக்க மாட்டார்கள். இஸ்லாம்/முஸ்லிம்கள் மேல் காழ்ப்புணர்ச்சி உடையோர், சீண்ட வாய்ப்பிருக்கிறது

    ReplyDelete
  6. //குர்திஷ், சன்னி,ஷியா,லெப்பை //

    குர்தீஷ் என்பது குர்தீஷ் மொழி பேசக்கூடைய முஸ்லீம்கள் தான். அவர்களின் பெரும்பான்மையினர் சன்னி முஸ்ல்ளீகள் அது ஜாதி வேறுபாடு அல்ல அது மொழி அடிபடையிலான பிரிவு. குர்தீஷ்கள் ஈரான், ஈராக், சிரியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் பரவி வாழுகின்றனர். இந்த பகுதிகளை ஒண்றினைத்து குர்தீஸ் நாடு என்ற தனி நாடு கோருகிறார்கள். அந்த கோரிக்கையை அந்தந்த நாடுகள் தனது ரானுவ பலத்தைக் கொண்டு அடக்குகிறார்கள். அதனால் வந்த பிரிவினைதான் தவிர. தனி பிரிவு அல்ல.

    ReplyDelete
  7. சன்னி பிரிவு என்பது முகமது நபியவர்களி பின்பற்றுவது என்பதாகும்.

    ஷியா என்ற பிரிவு நபியவர்கலீன் மருமகனாகிய அலி என்பவரை பின்பற்றுபவர்கள். அவர்கள் ஒரு கை உருவத்தை வணம்க்குவார்கள்.(காங்கிரசின் கை அல்ல) இது இஸ்லாத்தின் வணக்க முறைக்கு எதிரானதாகும். இருப்பினும் அவர்களும் குரான்னையே வேதமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  8. //அதன் வாசனை கூட எட்டாத முசல்மான்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்//

    முன்னொரு காலத்தில் டாக்டர்களும் வக்கில்களும் மார்க்க அறிங்கர்களாகவே இருந்தனர். அதாவது நடமாடும் திருகுரானாக. பின் வந்த போட்டி மயமான நவின வாழ்ககியில் மார்க்க கல்வியை அனைவரும் மறந்தே விட்டனர்.

    அதற்க்கு காரணம் போதிக்கும் முறை. குரானை போதிக்கும் கல்வி நிலையங்கள் உலக கல்வியை போதிப்பதில்லை அதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக பிந்தங்கி விடுகிறார்கள். இதர்க்கு தீர்வு மார்க்க கல்வி வழங்கு கல்வி கூடங்கள் உலக கல்வியும் சேர்த்தே போதிக்க வேண்டும். அப்படி செய்யும் போது அனைவரும் குரானை மணம் செய்து நீங்கள் கூறியது போல் நடமாடும் திருகுரானாகவே இருக்கலாம்.

    நீங்கள் கூறியது போல் இப்போது யாரும் குரானின் வாசனை கூட அறியாமல் இருப்பதில்லை. மனனம் செய்ய முடியாவிட்டாலும் பார்த்தாவது ஓதுகிறார்கள்.

    ReplyDelete
  9. //786 என்ற எண்ணுக்கும் இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு என்பதே புரியவில்லை. //

    எதத் தொடட்பும் இல்லை. அது பிஸ்மில்லாஹ் னிர்ரன்ஹ்மான் னிர்ரஹிம் என்ற வாக்கியத்தில் வரும் அரபு எழுத்துக்களை கூட்டி போடுகிறார்கள்.

    பிஸ்மில்லாஹ் - 7 எழுத்து அரபியில்.

    னிர்ரன்ஹ்மான் - 8 எழுத்து அரபியில்.

    னிர்ரஹிம் - 6 எழுத்து அரபியில்.

    வேறு எந்த சிறப்பும் இஸ்லாத்தில் அந்த எண்களுக்கு இல்லை.

    ReplyDelete
  10. //ஆண்கள் சிறு நீர் கழித்தபின்பு கற்களால் சுத்தம் செய்வதை பார்த்திருக்கலாம்//

    இது பாலைவனத்துக்கா வகுத்துக் கொண்ட விதி அல்ல மாறாக சுகாதாரத்துக்கான விதி ஆகும் சிறுநீர் கழித்த பிறகு கடைசி துளி உங்களது உடையில் பட்டு விடக்கூடாது என்பதற்க்காக தன்னீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பது விதி. அப்படி தன்னீர் கிடைக்காத பட்சத்தில் கற்க்களை பயன் படுத்தல்லம். அது நீரை உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும்.

    சுகாதாரம் என்பது பாலைவனத்துக்கு மட்டுமல்ல. நந்தவனத்திற்க்கும் முக்கியமானது.

    ReplyDelete
  11. //பலதார மணம். அது யுத்த காலம். யுத்தத்தில் வீரமரணங்கள் சகஜம்//

    எந்த ஒரு முஸ்லீமும் கண்டிப்பக 4 மனைவிகளை பெற்றிருக்க வேண்டும் என எங்கு சொல்ல வில்லை. அது ஒரு சிறப்பு அனுமதியாகவே சொல்லப்பட்டுள்ளது. இரண்டு மனைவிகள் வைத்திருக்கும் முஸ்ல்லீகள் மிக மிக அரிது. மற்ற அனைவரும் ஒண்றுடனே வாழ்கிறார்கள். இங்கு (அரபு நாடுகளில்) ஒருவர் இரண்டாவ்து திருமனம் முடிக்க வேண்டு மென்றால் முதல் மனைவி NOC கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இரண்டாவது திருமனம் நடக்காது.

    FYI
    அரபு நாடுகளில் கூட பெரும்பாலன அரபுகள் மாத சம்பளம் வாங்குபவர்கள் ஒரு மனைவியோடு மட்டுமே வாழ்கிறார்கள்.

    ReplyDelete
  12. //பிள்ளை பெறுவதற்கும் இதே விதியை பொறுத்திப்பாருங்கள்//

    இஸ்லாத்தில் தற்காலிக குடும்ப கட்டுப்பாடு அனுமதிக்கப் பட்டிருக்கிறது.
    குழந்தை உருவாவதை தடுக்கலாம். ஆனால் நல்ல முறையில் உள்ள கருவை கலைப்பது குற்றம்.

    இறைவன் மிக அறிந்தவன்.

    ReplyDelete
  13. //முஸ்லீம்கள் மீசையை ட்ரிம் செய்து கொள்வதும் ஆடு,மாடு ,ஒட்டகம் போன்றவற்றின் எலும்புகளை கடிக்கத்தான்.//

    இல்லை. மீசையை டிரிம் செய்வது சாப்பிடு போது மீசையில் உள்ள முடி உதிர்ந்து வாய்க்குள் போக கூடாது என்பதுதான். மாமிசம் சாப்பிட்டாலும் சரி தாவர உணவு சாப்பிடாலும் சரி மிசை முடி உதிரத்தான் செய்யும். அதை தடுக்கவே இந்த முறை சிபாரிசு செய்யப் பட்டுள்ளது.

    ReplyDelete
  14. //முஸ்லீம்கள் விருந்துண்ணும்போது சாப்பாடு பாய் மீது பரிமாறப்படும். விருந்தினர் அனைவரும் உணவுப்பொருட்களை சுற்றி தரையிலமர்ந்து உண்பர். இதுவும் பாலை நிலத்தை(மணல்) கருத்தில் கொண்டு செய்ய‌ப்பட்ட ஏற்பாடே.//

    ஒரு பருக்கையை கூட வீனாக்க கூடாது என்பது நபி மொழி அதனால் கீழே விழுந்த சோற்றை மீண்டும் எடுத்து உண்ணுவதற்காக விரிப்பு விரிக்கப் பட்டிருக்கலாம். வீட்டில் யாரு அப்படி சாப்பிடுவதில்லை. மேசையில் வைத்தே அல்லது தரையில் அமர்ந்தோதான் சாப்பிடுகின்றனர்.

    பாலை என்றாலும் மண் கொண்டு தரை அமைத்துதான் வீடு கட்டப்படும் அதனால் வீட்டிற்க்குள் மணல் இருக்காது.

    ReplyDelete
  15. // ஆடு,மாடு ,ஒட்டகம் போன்றவற்றின் எலும்புகளை
    கடிக்கத்தான்//

    எலும்பை கடிக்க பல் தான் தேவை மீசை தேவையில்ல ஐயா :)))))

    ReplyDelete
  16. //நான் அவதானித்த வரையில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் முஸ்லீம்கள் ஒருவித அபத்திர பாவத்தால் இன்றைய கால,தேச ,வர்த்தமானங்களுக்கு பொருதாத மேற்படி பழக்க வழக்கங்களை பிடிவாதமாக தொடர்கிறார்களே தவிர //

    மேற்க்கண்டவைகள் இங்கு பொருந்தும்.

    // ஆனால் இன்று ஒன்றரையணா அரசியல்வாதியை கூட இந்திரன் சந்திரன் என்று புகழும் முஸ்லீம்கள் உள்ளனர்.//

    பதவிக்காக ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கிய அன்வர் ராஜா. தன் இனத்தையே கருவருக்க துடிக்கும் பாஜ்க வில் இருக்கும் சிலர். இவர்கள் பெயர் தாங்கிகள். முஸ்லீம்கள் அல்ல. பதவிக்காகவும் பணத்திற்க்காவும் எதுவும் செய்வார்கள்.

    ReplyDelete
  17. //ஆனால் பலர் கூசாமல் பத்து வட்டி வசூலிப்பதையும் காண முடிகிறது.//

    இஸ்லாம் வட்டியை முழுமையாக தடை செய்திருக்கிறது. மீறி வட்டி வாங்குகிறார்கள் என்றால் அது அந்த மனிதனின் தவறு. அவ்ரின் கனக்கு இறைவனிடம் உள்ளது. அவர் பதில் சொல்லுவார்.

    //தர்காவை வணங்குவோர் எத்தனை பேர் ! ஃபகீர்களை வணங்குவோர் எத்தனை பேர் ! //

    பலர் இருந்தார்கள் சில அமைப்புகளின் முயர்சியால் அவர்கள் சிலராகி விட்டனர். இன்னும் அவர்களிடம் விழிப்புனர்வை ஏற்ப்படுத்த வேண்டும்.

    வால் போய் கத்தி வந்தது என்ற கதையாக இப்போது கபர் வணக்கம் குறைந்து குழு மணப்பான்மை அதிகரித்து விட்டது. இது நபிகளாரின் போதனைக்கே எதிரானதாகும். This is pure ego.

    //மதச்சார்பற்ற தன்மை உள்ளத்தில் இருந்தால் போதுமே தவிர இறைவன் ஒருவனே என்ற முடிபுக்கு களங்கம் விளைவிப்பது ஹராம் தான்//

    இதுதான் எனது முடிவும். எனது மற்ற மத நன்பர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். அதற்க்கா சர்சில் சென்று சிலுவை போட்டுக் கொண்டும். கோவிலி சென்று பட்டை போட்டு கொன்டும் என்னால் நடிக்க முடியாது.

    ReplyDelete
  18. //பலதார மணத்தை கைவிடுங்கள். குடும்பக்கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள்.//

    முன்னமே கூறியது போல் அனைத்து முஸ்லிம்களும் பல தார மனம் புரிவதில்லை. ஒரு சிலரே செய்கின்றனர். அப்படி செய்பவர்கள் இஸ்லாத்தில் மட்டுமல்ல அனைத்து மததிலும் இருக்கின்றார்கள்.

    ReplyDelete
  19. // பிள்ளைகளுக்கு (ஆண்,பெண்) கல்வியை வழங்க பாருங்கள்.//

    இந்திய முஸ்லீம்கள் கல்வியரிவில் பின் தங்கி இருப்பத்ற்க்கு பல காரணிகள் உண்டு. முஸ்லீம் பென்கள் மட்டுமல்ல ஆண்களூம் கல்வியில் பின் தங்கி உள்ளனர். இப்போதுதான் விழிப்புனர்வு வந்து கல்வியை கற்கின்றனர்.

    பென் வயதுக்கு வந்த உடன் நடை பெற்ற திருமணம் இப்போது ஒரு இளங்கலை பட்டம் பெற்ற பின்னே நடக்கிறது. மாஹா அல்லாஹ்!

    //இருக்கிற பாய் எல்லாம் பழைய இரும்பு வியாபாரம்,ஆட்டோ புரோக்கர் என்று இருப்பது நல்லதா ?//

    அது ஒண்றும் கேவலமில்லையே செந்தமாக தொழில் செய்கிறார்கள். அனைவர்ம் படித்து விட்டு மாதசம்பளம்த்திற்க்கு தான் செல்வேன் என்றால் என்ன செய்வது.

    ReplyDelete
  20. //நான் இஸ்லாமை தழுவவும் தயங்க மாட்டேன்.//

    இது ஒரு உனர்வு மேலீட்டால் சொல்லி இருக்கலாம் ஆனால் நடைமுறையில் சாத்தியப்படாது ஏனென்றால் நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் உங்கள் தொழிலை அதாவது ஜோசியம் பார்க்ப்பதை விட்டு விட வேண்டும். இஸ்லாம் ஜோசியதை கடுமையாக சாடுகிறது.

    //பார்ப்போம் முஸ்லீம் சகோதரர்கள் ஆக்கப்பூர்வமான வாதங்களை எடுத்து வைக்கிறார்களா .."எரி தழல் கொண்டு வா " என்று சீறி விழுகிறார்களா ? //

    ஆக்கப்பூர்வமான மரியாதையான அவதூறு பரப்பும் கேள்விகளல்லாத கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான முறையிலே பதில் அளிப்போம்.

    சிலர் இஸ்லாத்தின் மீது எப்படியாவது பழி ஏற்படுத்திவிடவேண்டும் என துடியாய் துடித்து தன்னை தானே அசிங்கப் படுத்திக் கொள்கிறார்கள். அந்த மாதிரிப் பதிவுகளுக்கு பதில் சொல்லுவதே இல்லை. ஏனென்ரால் சொல்லும் பதில்கள் வெளிவருவதில்லை. அனானியாக பாட்டி முதல் பிறந்த குழந்தை வரை பாகம் குறித்து படம் வரைவார்கள். அதனால் அதை கண்டு கொள்வதே இல்லை. Ignore is best solution for them.

    மிக நேர்மையாக பன்புடன் கேள்விகளைக் கேட்ட உங்களுக்கு நன்றி நன்பரே.

    ReplyDelete
  21. நண்பர் அவர்களுக்கு, தாங்கள் இஸ்லாத்தை இந்தளவுக்கு புரிந்துள்ளது ஆச்சரியம். மகிழ்ச்சி.இஸ்லாத்தை பற்றி சிறந்த அபிப்ராயம் தங்களுக்கு இருந்தாலும் வேறு சில சந்தேகங்களும் இருப்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். இஸ்லாம் வலியுறுத்தும் சில விசயங்களை மாற்ற சொல்கிறீர்கள். உலகத்தில் மாற்றம் இல்லாத வேதத்தை கொண்ட இஸ்லாம் நடைமுறை வாழ்கையில் மனிதன் மனிதனாக வாழ எல்லா வழிகளையும் காட்டியுள்ளது. அதன் சட்ட திட்டங்கள் என்றுமே முரண்பட்டதில்லை. நமக்கு தோன்றும் சிந்தனைகளுக்கு ஏற்ப காலத்திற்கும் மாற்றிக் கொண்டிருந்தால் இஸ்லாத்திற்கும் பிற மதங்களுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது. இஸ்லாத்தின் சில அம்சங்கள் பாலைவன வாழ்கையை தழுவி உள்ளதாக சொல்கிறீர்கள்.அவ்வாறு இல்லை.இஸ்லாத்தின் மீதுள்ள ஆர்வம் உங்கள் சந்தேகங்களை விரைவில் தீர்க்கும். இப்போதுள்ள தகவல் தொழில்நுட்பம் அதற்கு நிறைய வழிசெய்கிறது. திருக்குரானை படியுங்கள், www.onlinepj.com தளத்தை தாங்கள் பார்வையிட்டால் உங்களுக்கான சந்தேகங்கள் தீர வழி இருக்கிறது. உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் தீர்த்து வைப்பார்கள்.நீங்கள் சொல்வதுபோல் இஸ்லாம் ஒரு தன் நிகரற்ற மார்க்கம்தான்.மேலும் எல்லா முஸ்லிம்களும் worst followers இல்லை. இஸ்லாத்தை தவறாக விளங்கியவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.அதற்கு இஸ்லாம் பொறுப்பாகாது. மனிதர்களில் உயர்வு தாழ்வு இல்லை. இறை அச்சமுடையவரே மனிதர்களில் சிறந்தவர். Allah is the only god, prophet mohamed (sal) is the best person and Islam is the only best religion in the world. so i would like to invite you to read and understand islam. அல்லாஹ் நாடினால் நீங்களும் இஸ்லாத்தை ஏற்பீர்கள்.

    ReplyDelete
  22. கோவி கண்ணன் அவர்களே,
    மறு பிறவி நம்பிக்கை இஸ்லாமில் இல்லாமல் இருக்கலாம். இஸ்லாமில் பிறவாத போதும் இஸ்லாம் மீது நம்பிக்கை கொண்ட எனக்கு இருக்கலாம் அல்லவா?

    ReplyDelete
  23. அருமையான,நடு நிலைப் பதிவு.

    ReplyDelete
  24. மறுமொழி போட்ட அண்ணனுகளுக்கு வேண்டுகோளண்ணே,
    உங்களுக்கெல்லாம் விளக்கமா பொறுப்பா பதில் போடனும்னு ஒரு எண்ணம் . ஒரு 12 மணி நேரம் வாய்தா கொடுங்கண்ணா..

    ReplyDelete
  25. மிக மிக அருமையான பதிவு.
    ஜோதிட ஓஷோ (இப்பட்டத்தை நான்தான் முதலில் உங்களுக்கு கொடுத்தேன் )

    வாழ்த்துக்கள்

    எனக்கும் கூட முற்பிறவிகளில் ஏதும் முஸ்லிம் சம்பந்தம் உண்டோ என சிலசமயங்களில் நினைக்க தோன்றும்.

    கோவி கண்ணன் பதிவிலேயே ஓம் மற்றும் 786 இணைப்பை சொல்லியிருக்கிறேன் பாருங்கள் .

    விஜய்

    ReplyDelete
  26. ROMBA ROMBA ROMBA............OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOVARU THALAIVA ENAKKU SAGIKKAKALA NEENGALA IPPADI?

    ReplyDelete
  27. THAAAAAAAAAAAAANGA MUDIYALA TOOOOOOOOOOOOO MUCH/

    ReplyDelete
  28. பாலாஜி கண்ணன் அவர்களே,
    லோகோ பின்ன ருச்சி. என்ன செய்யலாம் சொல்லுங்க ?

    ReplyDelete
  29. விஜய் அவர்களே,
    ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒவ்வொரு மதத்தின் பாதையிலும் சாதனை செய்து ஒரே விதமான அனுபவங்களை அடைந்தாராம். எனக்கு ஒரு சம்சயம் எல்லா உயிருமே எல்லா மதத்திலும் ஒவ்வொரு பிறவி எடுக்குதானு..

    //எனக்கும் கூட முற்பிறவிகளில் ஏதும் முஸ்லிம் சம்பந்தம் உண்டோ என சிலசமயங்களில் நினைக்க தோன்றும்.//

    வெங்கடேச பெருமாளுக்கே இருக்குங்கண்ணா துலுக்க நாச்சியார் கதை தெரியுமோண்ணோ . ஆமா உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் ஏற்பட என்ன காரணம்னு சொல்லமுடியுமா.. இஃப் இட் ஈஸ் நாட் பர்சனல்.

    நானும் என் காரணங்களை வச்சி ஒரு பதிவே போடறேன்

    ReplyDelete
  30. இறைவனை தவிர வேறெதற்கும் தலை வணங்க கூடாது என்ற தலையாய விதியிருந்த போதிலும் அவர்களிலும் மூட நம்பிக்கைகள்,மந்திர தந்திரங்கள் மீதான நம்பிக்கைக்கு குறைச்சல் இல்லை. சமத்துவம்,சகோதரத்துவம் என்பது போதிக்கப்பட்டிருந்தாலும் யதார்த்தத்தில் பார்க்கும்போது பிளவுகள் இருக்கவே இருக்கின்றன.


    மனிதனின் பிழையினை மார்க்கத்துடன் இணைக்க வேண்டாம்.
    வாழும் பகுதியில் தொடரும் நிலை

    ReplyDelete
  31. Nindurali அவர்களே

    வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி. என் கருத்தும் இதுவே.
    Yet I am a dreamer and dream ever for a perfection.

    ReplyDelete