அண்ணே வணக்கம்னே. இன்றைய ஸ்பெஷல்:
மற்றும்
உனக்கு 22 எனக்கு 32 ல் அரசியல் கொலைக்கு திட்டம் தீட்டும்
சென்ன கேசவனின் என்ட்ரி
சென்ன கேசவன் ஸ்பீக்கிங் !
யார்ரா இந்த சென்ன கேசவன்னு திணறாதிங்க.இந்த உனக்கு 22 எனக்கு 32 தொடர்ல ஹீரோ முகேஷ் இருக்கானே அவன் ஜகன் சார் ஜகன் சாருன்னு பூஸ்ட் அப் கொடுத்துட்டு இருக்கானே அந்த ஜகனோட அப்பா காலத்துல அந்த மனுஷனை கிராமத்தை விட்டு துரத்தினாரே நாயுடு அவிக குடும்பத்துல தலை முறை தலை முறையா வேலை பார்த்த வமிசம் எங்களுது.
நாயுடுவ வெறுமனே வில்லனா ஃபோக்கஸ் பண்ணியிருக்கான் இந்த முகேஷ் பய. நாயுடு என்ன சாமானியமான ஆளா ஆனானப்பட்ட இந்திராகாந்தி காலத்துலயே பார்லெமென்ட் மெம்பர். 1947 ல இருந்து 1989 வரை தொகுதி அரசியலை கைக்குள்ள வச்சிருந்த பார்ட்டி.
அப்பல்லாம் எலக்சன்னா என்ன அவனவன் நிலத்துல உழுதுக்கிட்டு ,வேலை செய்துக்கிட்டு இருப்பாய்ங்க. நாயுடு ச்சும்மா கீப்பாஸோட முனைய கைல பிடிச்சிக்கிட்டு வரப்ப்ல நின்னுக்கிட்டு " டே... தெரியும்ல பசு ,கன்னு ரெண்டு ஒன்னா இருக்கும் .புரியுதா பச்சக்குனு முத்திரை போட்டு மடிச்சு டப்பால போட்டுட்டு வந்துக்கிட்டே இருக்கனும்"னிட்டு போய்ட்டே இருப்பாரு. அவ்ளதான் பிரச்சாரம்.
அதுவரை காங்கிரஸ்ல பாலிடிக்ஸ் பண்ண நாயுடு 1983 ல தெ.தேசம் கட்சி புதுசா வந்தப்ப டக்குனு கணக்கு போட்டு தான் ஒதுங்கிக்கிட்டு மகளை பிரப்போஸ் பண்ணாரு பாருங்க அதுமாதிரி சாணக்கியம் இங்க எவனுக்கு இருக்கு பாஸ்கர்ராவ் எபிசோட் நடந்ததும் ஒரு வருஷத்துல மறுபடி எலக்சன் வந்தது . மறுபடி பொண்ணையே நிறுத்தினாரு. ஜெயிக்க வச்சாரு.
நான் எல்லாம் யாரு. ச்சொம்மா மாட்டுக்காரன் மாதிரி. நாயுடுவும் நாங்களும் ஒரே சாதி தான் என்ன அவிக அகமுடையார் மாதிரி , நாங்க செங்குந்தர் மாதிரி .அவரு சாதிய பார்ப்பாரே தவிர உட் பிரிவை எல்லாம் பார்க்க மாட்டாரு. நம்ம பசங்க நம்ம பசங்கனுவாரு.எனக்கு அவரு தெய்வம் மாதிரி. அவர் நினைச்சிருந்தா என்னை எங்கப்பா மாதிரி வேலைக்காரனாவே வச்சிருந்திருக்கலாம். ஆனால் என் அறிவை பார்த்து படிக்க வச்சாரு.
நாயுடு அப்பப்ப சொல்வாரே சாதிக்கொரு புத்தின்னு அது நிஜம் தான் போல. இஞ்சினீரிங்ல கோட்டு. இருந்தாலும் கோ ஆப்பரேட்டிவ் டைரில என்னை இஞ்சினீரா சேர்த்திவிட்டாரு. நிர்வாகத்தை பொருத்த வரை என்ன நான் பாஸ் ஆன மாதிரி ஒரு காயிதம் தானே தேவை. இஞ்சினீரா இருந்தேன்.
சில மாசத்துலயே புரிஞ்சி போச்சு. இஞ்சினீரா ஒரு இழவையும் கழட்ட முடியாதுன்னு. நான் பரபரனு இருப்பேன். சீக்கிரம் சீக்கிரமா பெரியாளாவனும்னு நினைப்பேன்.பதைப்பேன். டைரில அங்கே இங்கே கை வைக்க ஆரம்பிச்சேன். நாயுடு பேக் கிரவுண்டு இருக்கிற தைரியத்துல ரெட்டிங்களை ஓரங்கட்டிட்டு பணம் பார்க்க ஆரம்பிச்சேன்.
ரெட்டிப்பய மட்டிப்பயன்னு ஒரு பழமொழி உண்டு. அது நிஜம்தான் போல. காரியம் பெருசா வீரியம் பெருசான்னா இந்த ரெட்டிபசங்க வீரியம் தான் பெருசும்பாங்க. காலைப்பிடிச்சிக்கிட்டா பொழச்சு போன்னிருவானுங்க. எனக்கு அடங்கியிரு அஞ்சு லட்சம் தரேன்னா கூட ஊஹூம்..ஒத்துவரமாட்டானுவ. எப்படியோ என் சர்ட்டிஃபிகேட்விவகாரத்தை மோப்பம் பிடிச்சிட்டானுவ.
காங்கிரஸ் ஆட்சின்னா இதையெல்லாம் நாயுடு ஊதிதள்ளியிருப்பாரு. தெலுங்கு தேசம் ரூலிங்ல பப்பு வேகலை. என்.டி.ஆர் ஒரு எசன் ட்ரிக். எப்ப என்ன செய்வான் மனுஷனு கெஸ் பண்ணவே முடியாது.
நாயுடு பேசாம ராஜினாமா பண்ணிட்டு சர்ட்டிஃபிகேட்ஸ் வாங்கிட்டு வந்துருன்னாரு.
வாங்கிட்டு வந்துட்டன்.கைல கொஞ்சம் போல பணம் இருந்தது. என்னடா பண்றதுன்னு யோசிச்சிட்டிருந்தப்ப ஒரு டிஸ்டிலரீஸ் சேல்ஸுக்கு இருக்கிறதா தெரிஞ்சது. போய் பேசினேன். அங்கே இங்கே பிரட்டி அட்வான்ஸ் பண்ணேன். அக்ரிமெண்ட் போட்டேன். அதை காட்டி பணம் புரட்டினேன்.
எனக்கு டிஸ்டிலரீஸை வித்த பார்ட்டி கழிவு நீரை ப்ராஸஸ் பண்றதுக்கே வருஷத்துக்கு அரை கோடி செலவழிச்சிருக்கான். முதல்ல அந்த செலவை கட் பண்ணேன். ஆறுன்னு ஒன்னிருக்கிறது எதுக்கு.. இதையெல்லாம் அதுல விடத்தானே. கழிவு நீரை அப்படியே ஸ்டாக் பண்ணி வைக்கிறது.மழை வந்து ஆத்துல லேசா தண்ணி போனாலும் திறந்துவிட்டுர வேண்டியது. இப்படி வருஷத்துக்கு அரை கோடி
மிச்சம் பிடிச்சேன். இன்னும் நிறைய மார்கமிருந்தது ஒன்னை விடாம ஒர்க் அவுட் பண்ணேன். ஒரு ஸ்டேஜில நாயுடுவ விட நான் தான் சவுண்டுனு ஆகிப்போச்சு.
நாயுடு கை மெள்ள விழ ஆரம்பிச்சது. அவரு பில்டப் பண்ணி வச்சிருந்த மாஃபியா லீடரை ஜகனோட ஆட்கள் போட்டுத்தள்ளிட்டாங்க. நாயுடு தெ.தேசத்துலயே பாலிடிக்ஸ் பண்ணிக்கிட்டிருந்தார். எனக்கென்னவோ தோணி போச்சு. இனி நாயுடு பப்பு வேகாது. ஜகன் கிட்டே நேரிடையா போனா மதிப்பிருக்காது. என்ன பண்ணலாம்?
இத்தனை பணத்தை வச்சிக்கிட்டு என்ன செய்ய? பெண்டாட்டி சிம்பன்சி மாதிரி இருப்பா. ( நானும் அப்படித்தான் இருக்கேன்.ஆனால் என் கிட்டே பணம் இருக்கு.பணம் பண்ற டெக்னிக் இருக்கு.) பிசினஸ் நெட் ஒர்க் கர்னாடகாவுக்கு பரவ
ஆரம்பிச்சது.
ஆந்திராவுலன்னா நான் யாரு, என் பாஸ்ட் என்னனு எல்லாத்துக்கும் தெரியும்.ஆட்டம் போட்டா ஆடுது பாரு அல்ப்பம்னிருவாங்க.அதனால அடக்கி வாசிச்சேன். கர்னாடகால நான் ஒரு தொழிலதிபன் தானே . கம்பெனிக்காக விஸ்கி சிப் பண்ண ஆரம்பிச்சேன். கன்னடத்துக்கு குட்டிங்களை தொட்டு கொஞ்சம் செலவழிச்சு பார்த்தேன். வகை வகையா திங்க பார்த்தேன். ஊஹூம் பணம் செலவழியற மாதிரியே இல்லை. இதெல்லாம் ஒரு ரெண்டு வருஷம் தான்.இந்த ஆட்டத்துக்கெல்லாம் ஒடம்பு ஒத்துழைக்கிற மாதிரி இல்லை. குடிச்சதால தொப்பை வந்துருச்சு. தொப்பை வந்ததால செக்ஸ்ல ஆர்வம் குறைய ஆரம்பிச்சுருச்சு. திங்கறதுல ஒரு அலுப்பு தோண ஆரம்பிச்ச நேரம் ஜெனரல் செக் அப் பண்ண ஃபேமிலி டாக்டர் சார் ஷுகர்,பி.பி.,அசிடிட்டி , பைல்ஸ் எல்லாமே ஆரம்ப கட்டத்துல இருக்கு. ஆட்டத்தை குறைங்கன்னிட்டார்.
எனக்கு பயம் வந்துருச்சு. செத்து போனா இந்த சொத்தையெல்லாம் யாரோ அனுபவிப்பானேங்கற எரிச்சல் வந்துருச்சு. அப்பத்தான் யாரோ புட்டபர்த்தி சாய்பாபா பத்தி சொன்னாங்க. ஒயிட் ஃபீல்டுக்கு போக ஆரம்பிச்சேன். அங்கே நிறைய அரசியல்வாதிங்க வருவாய்ங்க. அவிக கான்வாய், கன் மேன் , கார் நின்னதுமே இறங்கி ஓடி வந்து கதவை திறக்கிற ஐ.ஏ,எஸ்ஸுங்க எல்லாத்தயும் பார்த்தேன். அரசியல் மேல ஆர்வம் வந்தது.மேலும் நம்ம வியாபார சாம்ராஜ்ஜிய விரிவாக்கத்துக்கும், நிர்வாகத்துக்கும் தினசரி அதிகாரிகளோட வேலை இருந்தது. என்னதான் ப்ரைப் பண்ணாலும் அவிக ஈகோவை நாம சேட்டிஸ்ஃபை பண்ண வேண்டியிருந்ததே தவிர அவிக நமக்கு ஒத்துவரமாதிரியில்லே.
என் மனசுல ஓடினதை சாயிபாபா படிச்சாரா இல்லை நான் அந்தளவுக்கு வெளிப்படையா பிஹேவ் பண்ணேனா தெரியாது. முதல்ல காங்கிரஸ்ல சீட் கிடைச்சது. என்னதான் பணத்தை வாரி இறைச்சாலும் ஜெயிக்க முடியலை. நானும் பழைய கதையையெல்லாம் மறந்துட்டு ஜகன் கிட்டே போய் ஆதரவு கேட்டேன். ஒரே கட்சி தானேப்பா. நீ எம்.எல்.ஏ கேண்டிடெட். நான் எம்.பி கேண்டிடெட். நான் உனக்கும் சேர்த்து கேன்வாஸ் பண்றேன். நீ எனக்கும் சேர்த்து பண்ணு பணம் தரேன்னேன்.
அவன் நீ ஆத்துல விட்ட சாராய ஆலை கழிவால பல மைலுக்கு நிலத்தடி நீர் பொல்யூட் ஆயிருச்சு. எல்லா போர்லயும் தண்ணி மஞ்சளா வருது.சனம் காமாலை, வாந்தி பேதினு சாகுது. நீ எம்.பி.ஆயிட்டா எங்க வீட்டு கிணத்துல கூட சாராய கழிவை விடுவே.
இப்பவே ஆத்துல வெள்ளம் வரப்ப குறுக்கால நடந்து போனா அஞ்சு நிமிசத்துல உடம்பெல்லாம் நமைக்குது. நீ போய்க்கோன்னிட்டான். நானும் என்னென்னமோ தகிடுதத்தம்லாம் பண்ணி பார்த்தேன் .ஒன்னும் பேரலை. இருந்தாலும் என்ன அரசியல்னா என்னனு புரிஞ்சி போச்சு. நாயுடு மாதிரி நானும் சாதிகும்பலை நம்பினேன். ஆனால் இவனுக நான் இறைக்க சொல்லி கொடுத்த பணத்தை எல்லாம் தங்களுக்கு அமுக்கிக்கிட்டானுக.
அடுத்த என்.டி.ஆர் போய் சேர்ந்துட்டாரு.தெ.தே.சந்திரபாபு கையில இருந்தது. அவரும் சாய்பாபா பக்தர்தான். எனக்கு பார்லெமென்ட் சீட் கிடைச்சது. இந்த தடவை சாதி கும்பலை தூர வச்சி நானே ராமர் கோவில்ல சுண்டல் கொடுக்கிறாப்ல கிரவுண்ட் லெவல்ல பணம் செலவழிச்சேன். ஜெயிச்சேன். ஜெயிச்சு வந்த பிறகுதான் ஜகன் மேல எரிச்சலே அதிகமாச்சு. முத தடவை தோத்தப்ப 2 கோடிக்கிட்டே அடி. ரெண்டாவது தடவை நாலு கோடி ஆச்சு. ஆனால் இந்த பயல் மட்டும் சட்டைப்பைல இருந்து காலணா எடுத்து செலவழிக்காமயே ஜெயிக்கிறான்.எப்படினு எரிச்சல். முதல் தேர்தல்ல எனக்கு வேலை செய்யாதது கடுப்பு.
அரசியல்ல இவன் இருக்கிற வரை அஞ்சு வருஷமும் பாலிடிக்ஸ் பண்ணாதான் ஜெயிக்க முடியும்ங்கற நிலைம. பாலிட்டிக்ஸ்ல வந்ததே பிசினஸை டெவலப் பண்ணத்தான். என்ன இழவு பாலிட்டிக்ஸ் வாராவாரம் சித்தூர் வரனும். தொகுதில இருக்கிற நத்தம், நாடோடி, பீத்த,பிச்சைக்கார பயலெல்லாம் ராயலா வீட்டுக்கு வந்துருவான். பேசிக்கிட்டு கிடக்கனும்.அவனவன் கல்யாணம்,கருமத்துக்கு பணம் கொடுக்கனும். காரிய சோறு சாப்பிடனும். இவ்ள செய்தே குப்பத்துல பாபுவுக்கு கிடைச்ச மெஜாரிட்டித்தான் ஜெயிக்க வச்சது. ஒரு வேளை பாபுவுக்கே டப்பா டான்ஸ் ஆடிட்டா. ஒரு வேளை பாபு தொகுதிய மாத்திக்கிட்டா? இந்த ஜகன் பயலை எப்படியாவது ஒழிக்கனும்னு பார்த்துக்கிட்டிருந்தப்பதான் நாயுடுவோட பேத்தி புண்ணியம் கட்டிக்கிட்டா,இவ ஜகனை தோக்கடிச்சு எம்.எல்ஏவான பார்ட்டியோட அஜால் குஜால் வேலைல இருந்தப்ப இவள் அதை பார்த்துட்டு அலப்பறை பண்ண அவனை போட்டுத்தள்ளிட்டாங்க. ஜகனை அந்த பையனோட கொலை கேஸ்ல ஃபிட் பண்ணிட்டாள். இதெல்லாம் உலகறிஞ்ச ரகசியம். கோர்டு ,கடப்பா ஜெயிலுன்னு அலைஞ்ச ஜகன் தேர்தலுக்கு வாரம் இருக்கும்போது ரிலீஸாகி இன்டிபெண்டென்டா கன்டெஸ்ட் பண்ணான் தோத்து போனான்.
தெ.தே தோத்ததுல இருந்த வருத்தம் ஜகன் தோத்து போன சந்தோஷத்துல உறைக்கவே இல்லன்னா பார்த்துக்கங்களேன். சரி இந்த ஜகன் பயலை ஒழிச்சுக்கட்ட இதான் சந்தர்ப்பம்னு நான் என் ஒர்க் அவுட்டை ஆரம்பிச்சேன். பாபு கிட்டே பேசி மகனை இழந்த நாயுடுவோட பேத்தியயே சேர்மன் கேண்டிடெட்டாக்கினேன். பணத்தை வாரி இறைச்சேன். ஜகன் கிட்டே பணம் கிடையாது. அவனுக்கு மணி மேனேஜ்மென்டே தெரியாது. யாரோ நாலு பேர் செலவழிச்சாதான் பணம். அதுலயும் 3 தடவை செலவழிச்சு ஜெயிக்க வச்சும் இந்த ஜகன் னால அவிகளுக்கு காலணா ஆதாயம் கிடையாது. நாலாவது தடவையும் செலவு பண்ணியும் வியர்த்தமாயிருச்சு.
இப்போ முனிசிபல் எலக்சன்ல பார்ட்டி ஜெயிச்சு வந்தாதான் ஜகனுக்கு கட்சில மரியாதை. இல்லன்னா டம்மி பீஸாயிருவான். ஜகனை புதைக்க காங்கிரஸ் கட்சிலயே இன்னொரு கோஷ்டி காத்துக்கிட்டிருக்கு.அவிகளோட நமக்கு நல்ல கம்யூனிகேஷனிருக்கு. ஃபண்ட்ஸ் விஷயத்துல சுதாரிக்க தெரியாம ஏதோ காட்டடில அரசியல் பண்ணிக்கிட்டிருந்த ஜகனுக்கு இந்த முகேஷ் பய வேற வித்தை எல்லாம் கத்துக்கொடுத்து இன்னும் கொஞ்சம் ஸ்ட் ராங் பண்ணிட்டான். இதுல ஒரு லோக்கல் பேப்பர் வேற.
நகராட்சி தேர்தல் சமயம் சூடு அதிகமாகி,ஜகனோட கொஞ்சம் தள்ளு முள்ளூ ஆகி எலக்ட் ரானிக் ஓட்டிங் மெஷின் விழுந்து உடைஞ்சி ரசாபாசமாயிருச்சு, நேஷ்னல் மீடியா வரை நம்ம பேரு ரிப்பேராயிருச்சு. 36 வார்ல 30 வார்ட் காங்கிரஸ் கேண்டிடெட்ஸ் ஜெயிச்சுட்டாங்க. சேர்மனா இந்த முகேஷ் பயல் ஜெயிச்சு வந்துட்டான்.
சரி அரசியல்ல காலத்துக்கும் நாமளே ஆளனும்னா, சாப்பிடனும்னா முடியுமா..ஒரு அஞ்சு வருசம் தானே , நகராட்சிதானேனு விட்டுர பார்த்தா
இந்த முகேஷ் பய ச்சொம்மா இருக்க மாட்டான் போல . இவன் ஆரம்பிச்சிருக்கிற வேலையெல்லாம் முடிஞ்சா அடுத்த எலக்சன்ல ஜகன் வீட்டு நாய்க்குட்டி கென்டெஸ்ட் பண்ணா கூட நம்மாளுங்களுக்கு டெப்பாசிட் கிடைக்காது.
குப்பத்துல வர்ர மெஜாரிட்டிய சித்தூர்ல கைவிட்டுப் போற மெஜாரிட்டி மெறிச்சிக்கினா நானே எம்.பியா ஜெயிப்பேனாங்கறது சந்தேகமாயிரும்.
மேலும் ஜகன் பர்சனலா என்னை ஹர்ட் பண்ணிட்டான் டைரில போகஸ் சர்ட்டிஃபிகேட் கொடுத்து வேலைல சேர்ந்த கதைய நாலு பேர் முன்னாடி போட்டு உடைச்சிட்டான். எல்லாரும் என்னை பிறப்புலயே கோடீஸ்வரனு நினைக்கிற காலத்துல இப்படி வண்டவாளத்தை தண்டவாளத்துல ஏத்திவிட்டா கடுப்பாகுமா ஆகாதா. அதனால தான் முடிவு பண்ணேன். இனி ஜகனை உயிரோட வைக்கக்கூடாது. இந்த முகேஷ் பயல் துடியா இருக்கானே தவிர, ஃபண்ட்ஸ் மொபிலைஸ் பண்றான், பிரசாரத்தை கோ ஆர்டினேட் பண்றானே தவிர ஜகனுக்கு இருக்கிற மாதிரி வெறி பிடிச்ச கூட்டம்லாம் இல்லை. ஆனால் ஜகன் இருக்கிற வரைதான் அந்த கூட்டத்தோட ஆட்டம். ஜகன் போய் சேர்ந்துட்டா எல்லாம் நெல்லிக்காய் மூட்டை மாதிரி சிதறிடும். ஜகன் காலியாயிட்டா முகேஷ் எல்லாம் டம்மி பீஸு ஊதி தள்ளிரலாம்.
பல கோணத்துல ரோசனை பண்ணி ஜகனை போட்டுத்தள்ளிர்ரதுனு முடிவு பண்ணிட்டேன்.
No comments:
Post a Comment