சினிமா ஸ்டோரி டிஸ்கஷன்லாம் ஒரு காலத்துல அந்தந்த சினிமா கம்பெனிலயே நடக்கும்.மாத சம்பளத்துக்கு கதை இலாகால ஆள போட்டு வச்சிருப்பாங்க. ஒரு குறிப்பிட்ட காலம் வரை தயாரிப்பாளர்களோட ராஜ்ஜியம் நடந்தது. அதுவரைக்கும் இதான் நடைமுறை. மேலும் புதுசா கதை பண்றதெல்லாம் ரேர். சூப்பர் டூப்பர் ஹிட்டான நாடகங்களோட உரிமைய வாங்கி சினிமாவுக்கு ஏத்தாப்ல மாத்தறதுதான் அதிகம்.
அப்புறம் கொஞ்ச நாள் ஹீரோக்களோட ராஜ்ஜியம் நடந்தது. அந்த காலத்துல கூட டிஸ்கஷன்லாம் கம்பெனி காம்பவுண்ட்லயே நடக்கும்.அப்புறம் ஹீரோக்களுக்கு கதை சொல்லி அவர் சொல்ற கரெக்சன்ஸ் பண்ணிக்குவாங்க. இந்த ஸ்டேஜுல கூட டைரக்டர்ஸுக்கு அசிஸ்டண்ட்ஸ் இருந்திருக்காங்க.ஆனால் அவிக கம்பெனிக்குத்தான் ரெஸ்பான்சிபிள். ஏன்னா அவிகளுக்கு சேர வேண்டிய பைசாவ கம்பெனிதான் பைசல் பண்ணும்.
அதுக்கப்புறம் டைரக்டர்களோட ராஜ்ஜியம் வந்தது. அப்பத்தான் ஒவ்வொரு டைரக்டரும் அசிஸ்டண்டுங்கன்னிட்டு ஒரு குரூப்பை மெயிண்டெயின் பண்ண ரம்பிச்சாக.அவிகளுக்கு சம்பளம் டைரக்டரே தருவாரு. ( அதாவது தன்னோட சம்பளத்துல அவிக சம்பளத்தை கூட்டி வாங்கி இவர் கணக்கு பண்ணி தருவார். படம் இல்லாத காலத்துல சொந்த பணத்துல தருவாரு). சில டைரக்டர்கள்னா நாலஞ்சு க்ரூப்ஸ் கூட மெயிண்டெயின் பண்ணுவாங்க. ஒரு படத்துக்கு ஒரு க்ரூப் பண்ணிட்டா அடுத்த சினிமாவுக்கு வேற க்ரூப், அடுத்ததுக்கு அடுத்த படத்துல இன்னொரு க்ரூப்.
ஒரு க்ரூப்புக்கு அடுத்த படத்துல ஒர்க் பண்ற வாய்ப்பு வர்ர வரை என்ன வேலை? டிவிடி பார்க்கிறதுதான். பாரதியார் கூட சொன்னார்.
"சென்றிடுவீர் எட்டு திக்கும். கொணர்ந்திங்கு சேர்ப்பீர் கலைச்செல்வங்கள் யாவும்"
ஆனால் எவனோ பெத்து போட்ட குழந்தை என்னதான் மகாலட்சுமி மாதிரி இருந்தாலும் அதை மருமகளா கொண்டு வரலாம்.இல்லே பலானவர் பொண்ணு சம்மர் லீவுக்கு வந்திருக்குனு சொல்லலாம். அதை விட்டுட்டு அப்படியே உருவறது கயவாளித்தனம்.
ஓகே ஓகே விஷயத்துக்கு வரேன். டைரக்டர்கள் ராஜ்ஜியம் துவங்கின பிறகுதான்
ஸ்டோரி டிஸ்கஷன்ங்கற சம்பிரதாயமே ஆரம்பமாச்சு. இவன் டைரக்டராவறதுக்கு முன்னாடி ஏதோ சில்லறை வேலையெல்லாம் செய்துக்கிட்டே ஒரே ஒரு கதைய 24 மணி நேரம் அசை போட்டு அசை போட்டு வருஷ கணக்கா நகாசு வேலையெல்லாம் செய்து வச்சிருப்பான் போல. முதல் படம் பண்ணி முடிச்சதுமே டெலிவரி ஆன பொம்பளை மாதிரி டீலாயிருவான் போல. ஒத்தை ஆளா ஒரு கதை பண்ற கெப்பாசிட்டி தாரவார்ந்து போயிருமோ என்னமோ கூட ஆள் சேர்த்துக்கிட்டு கதை "பண்ண" ஆரம்பிச்சுருவான்.
அறிஞர் அண்ணா ஒரே ராத்திரில ஒரு சினிமாவுக்கு கதை வசனம் எழுதிட்டாராம். அதுக்குத்தான் அந்த படத்துக்கு ஓர் இரவுனு பேர் வச்சாங்க.அண்ணா யார்கிட்டயும் டிஸ்கஷன் பண்ணலை.டிக்டேட் பண்ணா எழுதிக்கறதுக்காக ஒரு மாணவரை கூடவே போட்டு வச்சிருந்தாங்க. அவரும் பாவம் அந்த ராத்திரி ஊழல்,விலைவாசி ஏற்றம் விஷயத்துல மத்திய மானில அரசுகள் மாதிரி தூங்கிக்கிட்டிருந்தார்.
இந்த டிஸ்கஷன்லாம் எப்படி நடக்கும்னா விக்ரம் டிஸ்கஷனை பத்தி சுஜாதா சொல்றப்ப எல்லாரும் ஒரே கதைய யோசிக்க ஆரம்பிக்க ஒரு வாரமாச்சாம்.
இதுல ஹீரோயினியோட ப்ரொட்யூசர், டைரக்டர்,ஹீரோ நடாத்தற டிஸ்கஷன் எல்லாம் வேற ஜாதி. இதை பத்தி ஆ.வி.க்ரூப் எழுதித்தொலையட்டும்.
தெலுங்குல அஸ்வினி தத்துனு ஒரு ப்ரொடியூசர் பயங்கர சவுண்ட்பார்ட்டி. அவரு ஏதோ ஹிந்தி படத்தை தெலுங்குல எடுக்கிறதுக்காக டிஸ்கஷன் ஆரம்பிச்சார். பிரபல எழுத்தாளர் ஒருத்தரையும் இதுக்கு கூப்பிட்டிருந்தாரு. ஏற்கெனவே மேற்படி எழுத்தாளரோட பல கதைகள் படமாகி, க்ளிக் ஆகி நல்ல பேரு.
காலைல டிஃபன் காஃபிக்கப்புறம் டிஸ்கஷன் ஸ்டார்ட் ஆகும். எழுத்தாளர் ஒன்னுமே பேசமாட்டார். தன் சூட் கேஸ்ல இருந்து மினி கேஸ்,குக்கிங்க் வெசல்ஸ் எல்லாம் எடுத்து வச்சிக்கிட்டு சமைக்க ஆரம்பிச்சுருவார்.
ஒரு தடவை ப்ரொட்யூசருக்கு கடுப்பாயிட்டு அதான் கீழ ரெஸ்டாரண்ட்ல சாப்பாடு கிடைக்குதுல்ல அப்புறம் இங்கெதுக்கு சார் சமைச்சு அவஸ்தை படறிங்கன்னாரு.
எழுத்தாளர் நீங்க தெலுங்குல எடுக்க போற படத்தை கூட ஏற்கெனவே இந்தில எடுத்துட்டாங்க இல்லையா நீங்க எதுக்கு தெலுங்குல எடுத்து அவஸ்தை படறிங்கனு கேட்டார்.
ப்ரொட்யூசர் ஆகே பீச்சே பந்த் ஆயிட்டாரு. டிஸ்கஷன் முடிஞ்சது. ப்ரொட்யூசர் எழுத்தாலருக்கு ஒரு லம்பான தொகைக்கு செக் கொடுத்தார். எழுத்தாளர் செக்கை ப்ரொட்யூசர்கிட்டே கொடுத்து இது உங்களுக்கே தேவைப்படலாம் வச்சிக்கங்கனு கொடுத்துட்டு போயிட்டார். படம் ரிலீசாச்சு. படம் பப்படம்.
டிஸ்கஷனால லாபமே கிடையாதுனு நான் சொல்லமாட்டேன்.1987ல நான் ஒரு கதை பண்ணேன் (சினிமாவுக்காக எழுதற கதைய எல்லாம் எழுதினேனு சொல்லவே முடியாது. பண்ணேங்கறது சரியான பிரயோகம்). என்னை பொருத்த வரை ரொம்ப நல்லா வந்தது.
ஒரு நாள் என் க்ளாஸ்மெட் அருஞ்சுனை பாண்டியன் வீட்டு மாடில இருந்த என் ரூமுக்கு வந்தான். எட்டாங்கிளாஸ்ல தான் வந்து சேர்ந்தான். அப்பவே ஸ்கூலுக்கு சைக்கிள்ளதான் வருவான். .ஃப்ரண்ட் பேக் கேரியர் , ஹேண்டில்கெல்லாம் கவர், ரிவர் வ்யூ மிர்ரர், சக்கர நடுவுல ஒட்டடை குச்சி மாதிரி அலங்காரம்லாம் செய்து பொய்க்கால் குதிரை மாதிரி இருக்கும். எனக்கெல்லாம் இண்டர் வந்த பிறகுதான் சைக்கிள் யோகம்.
7 வருஷம் ஓடிப்போச்சு. படிக்கிற வயசுல பார்ட் டைமா பண்ணிக்கிட்டிருந்த கோணி வியாபாரத்தை ஃபுல் டைமா மாத்திக்கிட்ட பாண்டியன் அந்த வயசுலயே பெரிய அளவுல லாவாதேவி பண்ணுவான். அவன் சொல்ற கடன்,சீட்டு,ஃபைனான்ச் பிரச்சினை எல்லாம் அப்ப நமக்கு புரியாது. சரி சரி விஷயத்துக்கு வரேன்.
இப்போ உடுப்பி ஓட்டல் சர்வர் மாதிரி யாருக்கு என்ன பிடிக்குமோ அதை மட்டும் (பேசற) சர்வ் பண்ற மெச்சூரிட்டி வந்திருக்கு. அப்போ தராதரமெல்லாம் கிடையாது. எவன் வந்தாலும் கவிதை நோட்டை பிரிச்சு வச்சிக்கிட்டு ஆரம்பிச்சுருவன்.
பாண்டியனுக்கும் இலக்கியம், சினிமா இத்யாதிக்கும் ஸ்னான ப்ராப்தி கூட கிடையாதுன்னு எனக்கொரு அபிப்ராயம். இருந்தாலும் அன்னைக்கு நான் எழுதின திரைக்கதைய சொல்ல ஆரம்பிச்சேன்.
பாக்கெட்லருந்து வில்ஸ் ஃப்ளேக் சிகரட் பாக்கெட்டை எடுத்து எனக்கொரு சிகரட்டை கொடுத்தான், தானும் ஒன்னை பத்த வச்சிக்கிட்டு ஆடாம அசையாம கதைய கேட்க ஆரம்பிச்சான்.
கடைசில "முருகா! எல்லாம் நல்லாருக்கு.ஆனால் ஹீரோயினோட அம்மாவுக்கும், ஹீரோவோட அப்பாவுக்கும் செக்ஸுவல் காண்டாக்ட் இருக்கே. அப்ப ஹீரோவுக்கு ஹீரோயின் தங்கச்சி முறையாயிருதுல்லயா"ன்னான் பாருங்க ..மண்டைல கிரிக்கெட் மட்டைலயே ஒன்னு போட்டாப்ல ஆயிருச்சு. அடுத்த அஞ்சு நிமிஷத்துல அந்த குறைய ரெக்டிஃபை பண்ணி கதைய மாத்திட்டன் . அது வேற விஷயம்.ஆனால் அந்த குறை எனக்கு எப்படி தெரியவந்தது. அந்த கதைய பாண்டியனுக்கு சொன்னதாலதானே. இதான் டிஸ்கஷனோட பலம்.
டிஸ்கஷன்ங்கறது ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட ஒரு கதையை மெருகேத்தவோ, சரிபார்க்கவோ நடக்கலாமே தவிர டிஸ்கஷன் மூலமாவே ஒரு கதை உருவாவறது அயோக்கிய தனம்.
தெலுங்குல ஒரு பிரபல டைரக்டர். அவர் வசனத்தையே பத்து பேரை எழுதச்சொல்வாராம். எல்லாத்தயும் படிச்சு அததுல இருந்து ஒரு வார்த்தை அ ஒரு வரினு தூக்கி தானும் ஏதாச்சும் சேர்த்து எழுதிருவாராம். ஒரு பீரியட்ல வெறுமனே டைரக்டர்னு தன் பேரை போட்டுக்க அனுமதி கொடுத்து அதுக்கும் லம்பா ஒரு தொகைய கலெக்ட் பண்ணதாவும் செய்திகள் உண்டு.
சரி இதையெல்லாம் எழுதிட்டு வந்ததோட நோக்கம் என்னன்னா.. எனக்கே வசதி வந்து (வசதியால இப்ப இருக்கிற இந்த அரையணா மூளை கூட வேலை செய்யாம போயி) இந்தியாவை பணக்கார நாடாக்க நான் தீட்டின ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ ஃபோக்கஸ் பண்ணி ஒரு சினிமா எடுக்க முடிவு பண்ணி அதுக்கான டிஸ்கஷன் நடந்தா எப்படியிருக்கும்னு எழுதி உங்களை சிரிக்க+சிந்திக்க வைக்கிறதுதான்.
நான்: வணக்கம் தம்பிகளா .. நீங்கல்லாம் நேத்துவரை பிரபல டைரக்டர்ங்க கிட்டே அசிஸ்டண்டா இருந்து நிறைய எக்ஸ்பீரியன்ஸ் கேதர் பண்ணியிருக்கிங்க. என்னப்பத்தி உங்களுக்கு ஓரளவு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நான் 1986ல இருந்து உழைச்சு இந்தியாவ பணக்கார நாடாக்க ஒரு திட்டம் தீட்டினேன். அதனோட முக்கிய அம்சங்கள் ...
பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல் ,.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல், நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்,.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்
இந்த திட்டத்தை அன்றைய ஆட்சியாளர்ங்க கவனத்துக்கு எடுத்துட்டு போக 1997 லருந்து என்னென்னவோ தகிடுதத்தங்கள் பண்ணியும் ஒரு பப்பும் வேகலை. ஒரு 7 வருஷம் சின்சியரா ட்ரை பண்ணிட்டு ஒதுங்கிட்டன்.ஏண்டான்னா தனிப்பட்ட வாழ்க்கை ரொம்பவே நாறிப்போச்சு. என் மேல உள்ள மரியாதைல உதவ முன்வரவங்க கூட இவனுக்கு உதவ போய் நாம சிக்கல்ல மாட்டப்போறோம்னு ட்ராப் ஆகிற மாதிரி ஆயிருச்சு. தப்பி தவறி உதவறவங்க கூட குடிகாரனுக்கு, சூதாடிக்கு, கூத்திக்கள்ளனுக்கு சொல்றாப்ல " பார்த்து சாமி ! நீங்க நல்லாருக்கனும், நாலு பேர் மாதிரி ( சுய நலத்தோட) நல்லபடியா வாழனும்னுதான் இந்த உதவிய பண்றேன். நீங்க பாட்டுக்கு மறுபடி ஆப்பரேஷன் இண்டியா, இந்தியாவ பணக்கார நாடாக்கறேனு கிளம்பிராதிங்கன்னு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டான்.
விவேகானந்தர் சொல்வாரு " தா பாரு கண்ணா இந்த படைப்புலயே உன் மனசை விட உன்னத வஸ்து பிரபஞ்சத்துலயே கிடையாது. சப்போஸ் ஏதாவது ஒரு வஸ்து உன்னதமா தோணுச்சின்னா . உன் மனசு வீக்கா இருக்குனு அர்த்தம்"
நாலு பேருக்கு அட்வைஸ் பண்ற பொசிஷன்ல இருந்துக்கிட்டு அந்த நாள் முதல் இந்த நாள் வரை எவனெவனோ நாதாரி பண்ண நாதாரி வேலைக்கு நாசமா போன நாட்ல மானங்கெட்டு வாழந்து கிட்டு தன்னை வேகவைக்க கல்லடுப்பு மேல போட்ட உலைல ஜல கிரீடை பண்ற ஆமை மாதிரி அற்ப சந்தோஷம் அனுபவிக்கிற சனம் கிட்டே நான் அட்வைஸ் கேட்டுக்கற நிலை எதுக்கு வந்தது என் கிட்டே பணமில்லேங்கறதாலதானே.. முதல்ல பணம் பண்ணி நான் பணக்காரனாகி அப்புறம் இந்த நாட்டை பணக்கார நாடாக்கிறேனு சபதம் போட்டேன்.
என் திட்டத்தை அமல் படுத்த சொல்லி நான் அனுப்பற ரெஜிஸ்டர் போஸ்ட், கொரியர்,தந்தி,மெயிலை பார்த்து ரெஸ்பாண்ட் ஆகிற அளவுக்கு இன்னைய தேதில உத்தமர்கள் யாருமில்லே.
ஸோ டெம்ப்ரரியா ஆ.இ க்கு லீவு விட்டேன். என்னை நானே கமர்ஷியலைஸ் பண்ணிக்கிட்டேன். கடந்த 2 வருஷத்துல ஒரு நாய் கிட்டே போய் நூறு கொடு ஆயிரம் கொடுன்னு கேட்க தேவையில்லாத ஸ்டேஜுக்கு வந்துட்டன். நான் என் லட்சியத்தை கை விட்டது குடிகாரன் குடியை விட்ட கணக்கா சர்க்கிள் எல்லாம் பரவி நம்ம ரெப்புடேஷன் ஜாஸ்தியாயிருச்சு.
நானும் மனசாட்சிய கழட்டி வச்சுட்டு காசு பொறுக்க ஆரம்பிச்சேன். பேசிக்கலா அறிவாளியான நான் என் அறிவை சம்பாதனை பக்கம் திருப்பினேன். காலமும் கை கொடுத்தது. இன்னைக்கு என் திட்டத்தை தீமா வச்சி ஒரு கோடி ரூபா பட்ஜெட்ல ஒரு படம் எடுத்து தமிழ்,தெலுங்கு,இந்தினு மூணு மொழில ரிலீஸ் பண்ண ப்ளான் பண்ணியிருக்கேன்.
என் கண்டிஷன் ஒன்னுதான். என் திட்டத்தோட 5 அம்சங்கள் ரசிகர் மனசுல சிக்குனு நிக்கனும் .அதுக்காக அந்த காலத்து ந்யூஸ் ரீல் மாதிரி பண்ணீராதிங்க. .இதை சொல்ல காரணம் போட்ட பணம் திரும்பனும்னுல்ல. சொல்ல நினைச்ச விஷயம் சனங்களை சென்றடையாம போயிருமேனுதான்"
துணை இயக்குனர் 1:
சார் ஹீரோ யாரு, ஹீரோயின் யாரு,வில்லன் யாருனு சொல்லுங்க சார்
நான்:
ஏன்யா உங்க ஊர்லல்லாம் காலுக்கேத்தாப்ல செருப்பை வாங்க்குவிகளா? செருப்பேக்காத்தாப்பல காலை வெட்டிக்குவிங்களா?
துணை இயக்குனர்1:
ஐம் சாரி சார்.. நம்ம பட்ஜெட்டுக்கு ரஜினி ,கமல்,விஜய், அஜீத்தெல்லாம் கிடைப்பாங்களா சார். ஹீரோ யாருனு தெரிஞ்சா கதை பண்ண நல்லாருக்குமேனுதான் கேட்டேன்
நான்:
தம்பி நான் சொன்ன ஒரு கோடி ரூபா பட்ஜெட் சினிமா தயாரிப்பு செலவுக்குதான் . நீங்க தயார் பண்ற கதைய ரஜினி பண்ணாதான் நல்லாருக்கும்னு தோணினா ரஜினியையே புக் பண்ண தயங்க மாட்டேன்.
துணை இயக்குனர்2
: அவருக்கு லம்ப் ரெம்யூனரேஷன் தரணுமே சார்.
நான்:
கண்ணா .. நதிகளை இணைக்க ஒரு கோடி ரூபா டொனேஷன் தரேன்னாரில்லையா. அனவுன்ஸ் பண்ணி பலவருஷமாச்சு. இந்த படத்தோட லட்சியம் கூட அதுவேதான். ஸோ ஃப்ரீ ஆஃப் காஸ்ட் நடிச்சு கொடுங்கனு கேட்கிறேன்
துணை இயக்குனர்3:
(மனசுல) ஏதோ படம் கிடைச்சது .. ஒரு ஆறுமாசம் பிழைப்பை ஓட்டிரலாம்னு பார்த்தா இந்தாளு வில்லங்கம் பிடிச்ச ஆளாயிருக்கானே (வெளியே) ஓகேசார்..
நான்:
வெரிகுட் தட் ஈஸ் தி ஸ்பிரிட்.
துணை இயக்குனர்:1
சார் நம்ம படம் ஃபேண்டசி படமா? சோஷியல் மூவியா?, ஹிஸ்டாரிக்கல் மூவியா?
நான்: தம்பி .. இதுதான் நான் தயாரிக்கப்போற முதல் படம். இதுவே கடைசிபடம் கூட மனுஷனைத்தான் சாதி பேரை சொல்லி பிரிச்சு வச்சுட்டம். சினிமாவ கூட ஏன் பிரிக்கனும். மூணுமே சேர்ந்து வராப்ல ஒரு கதை பண்ணுங்க
துணை இயக்குனர்2:
ஓகே சார். ஒரு சின்ன சந்தேகம் நம்ம கதை நீங்க சொன்ன 5 அம்சங்களை அமலாக்க ஹீரோ பண்ற முயற்சிகளோட துவங்கி அமலாகிறதுல முடியனுமா? இல்லே இன்டர்வெல் பேங்ல அமலாயி, அதுக்கப்புறம் இந்த திட்ட அமலாக்கத்துல வர்ர பிரச்சினைகள், கிடைக்கிற லாபங்களை கூட ஃபோக்கஸ் பண்ணனுமா?
நான்: ரெண்டாவது ஆப்ஷனே பெட்டராயிருக்குப்பா..
துணை இயக்குனர்1: ஓகே சார். நம்ம கதை ஹீரோ ஓரியண்டடா இல்லை ஹீரோயின் ஓரியண்டடா?
நான்: டே நான் ஆண்பிள்ளை சிங்கம்டானு அலட்டிக்கிறமே தவிர ஆண்மகன் ஒரு ட்ரை கேரக்டர். ஹீரோ ஓரியண்டட் படத்தை ஆண்களே பெரிசா ரசிக்கிறதில்லை. இதை ரசிக்கிறவுக ஒரு குறிப்பிட்ட ஏஜ் க்ரூப்ல தான் இருப்பாங்க. ஹீரோயின் ஓரியண்டட்னா ஆல் ஏஜ் க்ரூப்ஸ் அட்ராக்ட ஆவாங்க. ஸோ ஹீரோயின் ஓரியண்டடாவே இருக்கட்டும்.
No comments:
Post a Comment