" இரு இரு..........உணர்ச்சிவசப்படாதே. ஆக்சுவலா நீயும் சந்திரபாபுவோட கேரக்டர்தான். ஆனால் அதுக்கு மாறா என்.டி.ஆரை அட்மைர் பண்றே.இது ஆப்போசிட் போல்ஸ் அட் ராக்ட் ஈச் அதர் பிரின்ஸிபிள் படி சாத்தியம் தான். உனக்கும் யாரோ ஒருத்தரோட நேம் அண்ட் ஃபேமை உபயோகிச்சிக்கனும். யாரோ போட்ட பாதைய லேசா மராமத்து பண்ணிக்கிட்டு போயிரனும்னு ஒரு எண்ணம் இருக்கு. ஆனால் அவங்களை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க கூடாதுங்கற மோரலும் இருக்கு. அவிக இல்லன்னா உன் பப்பு வேகாதுங்கற ப்ராக்டிக்காலிட்டி, இன்செக்யூரிட்டியும் இருக்கு"
நான் எழுந்து நின்னு படபடனு கை தட்டினேன். " கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்ங்கற மாதிரி தூள் கிளப்பிட்டே மாயா ! ஓப்பனா சொன்னா நான் சகட்டு மேனிக்கு படிச்சு கிழிச்சு மாசக்கணக்கா அனலைஸ் பண்ணிக்கிட்டிருந்த விஷயத்தை படார்னு போட்டு உடைச்சே. யுவார் கிரேட்"
" எதிராளிய, அதுவும் மனைவிய க்ரேட்டுனு சொல்ற மனப்பக்குவம் இருக்கிற ஆண்தான் கிரேட். இப்போ சொல்லு.. என்.டி.ஆர் இல்லே. ஐ மீன் சூரியன் மேற்கு திசைல மறைஞ்சுட்டான். மிச்சமிருக்கிறது சந்திரன். சந்திரனா நீ என்ன பண்ணப்போறே"
" நான் தான் ஏற்கெனவே சொல்லிட்டேனே. ஒய்.எஸ்.ஆர். என்.டி.ஆர் கிட்டே இருந்த குண நலன்ல 70 சதவீதம் இவர்கிட்டே இருக்கு. இன்னும் சொல்லப்போனா என்.டி.ஆர் தன் பெயர் புகழுக்கு பங்கம் வர்ர மாதிரியிருந்தா தன்னையே நம்பினவங்களை கூட கழட்டிவிட்டுருவாரு.ஆனால் ஒய்.எஸ்.ஆர் அப்படியில்லே. அவர் ஆக்டர்,இவர் டாக்டர். அவர் ஸ்டேட்பார்ட்டி, இவர் சென்ட்ரல் பார்ட்டி இப்படி சின்ன சின்ன வித்யாசங்கள் தான் இருக்கு. என்.டி.ஆர் எல்லா விஷயத்திலும் ஸ்ட்ரெயிட் ஃபார்வோர்ட். ஆனால் ஒய்.எஸ்,ஆர் கில்லாடி. மாறிப்போன காலத்துக்கு என்.டி.ஆர் ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகாது. 1984ல பாஸ்கர்ராவ் எபிசோடுக்கும், 1994 சந்திரபாபு எபிசோடுக்கும் வித்யாசம் பார்த்தாலே தெரியும் காலம் மாறிப்போச்சு. சனத்துல நியாய உணர்வு குறைஞ்சிபோச்சு. ரெபல் ஆகிற தத்துவம் குறைஞ்சி போச்சு. இன்னைக்கு ஒய்.எஸ்.ஆர் தான் கரெக்ட். ஒரு தேசீய கட்சில ஆஃப்டர் ஆல் ஒரு பி.சி.சி. ( மானில கட்சி தலைவர்) சி.எல்.பி (சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்) லீடரோட இம்பாக்ட் பெரிசா இருக்க வாய்ப்பே இல்லை. ஆனா ஹி ஈஸ் டூயிங் பெட்டர். "
"அப்போ சாரதா அம்மையார் ரோலை ப்ளே பண்ண போறே. இன்னொரு விவேகானந்தர் அதாவது ஒய்.எஸ்.ஆர் வர வரைக்கும் "
"யெஸ். "
"ஒய்.எஸ்.ஆருக்கு அப்புறம்?"
"அவரோட சன் ஜகன் மோகன் ரெட்டி இருக்காரு . யங்க் சாப். சார்மிங் பர்சனாலிட்டி"
"அவருக்கு அப்புறம்?"
"அப்போ பார்க்கலாம்"
"ஏய் மொத்தத்துல நீ சந்திரபாபுவா மாறிட கூடாதுனு ரொம்ப கேர் எடுத்துக்கறே அப்படித்தானே.. ஆமா சந்திரபாபுன்னா உனக்கேன் இத்தனை வெறுப்பு?"
"இது சந்திரபாபுங்கற ஒரு தனி மனிதன் மேல இருக்கிற வெறுப்பு இல்லே பொதுவா சந்திர ஆதிக்கத்துல இருக்கிற மனிதர்கள்னாலே வெறுப்பு..ஏன்னா இவிக எல்லாம் நெம்பர் டூவா இருக்கத்தான் லாயக்கு. இவிங்க நெம்பர் டூ வா இருந்து சலிச்சு போய் நெம்பர் ஒன் ஆகனும்னு துடிச்சி அந்த ஸ்தானத்துக்கு வந்தா சொதப்பி விட்டுருவாங்க"
"இப்போ நம்ம டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ், ஸ்டுடியோ , லோக்கல் பேப்பர் இதையெல்லாம் நீதானே நெம்பர் ஒன்னா இருந்து நிர்வாகம் பண்றே ..என்ன கெட்டுப்போச்சு?"
"இதெல்லாம் ஜஸ்ட் சைக்கலாஜிக்கல் சேடிஸ்ஃபேக்சனுக்கு சம்பந்தப்பட்ட ஃபீல்டு இதுவே ஒரு மெடிக்கல் டூர் கண்டக்ட் பண்ணச்சொன்னா சொதப்பிருவன்"
"ஏய் நீதானே சொன்னே எந்த குணமும் நிரந்தரம் கிடையாது , மாறிக்கிட்டே இருக்கும்னு"
"யெஸ். இப்போ சூரியன்,சந்திரன்றதெல்லாம் மறந்துரு.ஆண்,பெண்களையே எடுத்துக்க. ஆண் தன் இளமைல தன் ஆண்மை,வீரம் எல்லாத்தயும் பூரா எக்சிபிட் பண்ணிர்ரான். நீ வேணம்னா பாரு வயசாக வயசாக ஆணுடலுக்கும் ,பெண்ணுடலுக்கும், பாடி லேங்குவேஜு, பிஹேவியர் இப்படி எதுலயுமே வித்யாசமே தெரியாது. இதே பெண்களுக்கு குரல்ல மென்மை,தயக்கம், நாணம், வெட்கம்,பயிர்ப்பு இந்த இழவெல்லாம் போயிரும் லேசா தாடி கூட வரும். எனக்குள்ள இருக்கிற இந்த சந்திர அம்சம் முழுசா வெளிப்பட்டுட்டா அப்போ ஒரு வேளை இத்தனை நாளா வெளிப்படாம இருந்த சூரியனோட அம்சம் வெளிப்படலாம். அப்போ பார்த்துக்கிடலாம்"
பேச்சு இதே விசயத்தை சுத்தி வந்தது. சாப்பிட்டு படுத்துக்கிட்டோம். மறு நாள் ஒரு அஜெண்டா ப்ரிப்பேர் பண்ணேன். முதல்ல வீடில்லாத கட்டிட தொழிலாளர்கள் சங்கம் ஒன்னு அமைக்கனும். அவங்களோட முழு விவரங்களை சேகரிக்கனும். குடக்கூலி கொடுத்து குடிசை வீட்ல இருக்கிறவனுக்கு ஃபர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸ், ஓட்டு வீட்ல குடியிருக்கிறவனுக்கு செகண்ட் ப்ரிஃபரன்ஸ். மோல்டிங்க் போட்ட பக்கா வீட்ல இருக்கிறவனுக்கு தேர்ட் ப்ரிஃபரன்ஸ். இப்படி பெனிஃபிஷியரீஸ் லிஸ்ட் தயார் பண்றது ரெண்டாவது வேலை. அதையடுத்து சைட் சர்வே, ரெஜிஸ்ட்ரேஷன், கன்ஸ்ட்ரக்சன், நோ காண்ட்ராக்டர், பெனிஃபிஷியரீஸ் வந்து பாதி கூலிக்கு வேலை செய்யனும், மீதி கூலி அவன் கட்ட வேண்டிய இன்ஸ்டால்மென்டுக்கு அட்ஜஸ்ட் செய்யப்படும். அப்பார்ட்மெண்ட் கட்டி முடிச்சதுமே சாவிய கையில குட்த்துர்ரது , 60 தவணையும் கட்டி முடிச்சுட்டா டைட்டில் மாத்தி குடுத்துர்ரது.
தமிழ் சினிமால மேண்டேஜ் ஷாட்ஸ்லயே கட்டி முடிக்கிற மாதிரி கட்டி முடிச்சோம். இன்னம் 15 நாள்ள திறப்பு விழான்னா ஜகன் சாரை ஒரு கொலை வழக்குல உள்ளே போட்டு கடப்பா சென்ட்ரல் ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க. ஒருபக்கம் ஒய்.எஸ்.ஆர் பாதயாத்திரை நடக்குது. காங்கிரஸுக்கு அனுகூலமான அலை வீசுது. ஜஸ்ட் ஒரு 500 வீடுகள் அதுவும் இலவசமா இல்லே தவணைல தரப்போறோம்ங்கற ஒரே விஷயம் லோக்கல்ல ஒரு புரட்சியையே ஏற்படுத்திருச்சு. ஜகனை எதிர்த்து எவன் நின்னாலும் அவனுக்கு டிப்பாசிட் காலிங்கற மாதிரி நிலைமை. 15 நாள்ள அப்பார்ட்மென்ட் திறப்புவிழா. ஒய்.எஸ் ஆர் கூட வாழ்த்துச்செய்தி அனுப்பினாருன்னா பார்த்துக்கங்களேன். இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்துல ஜகன் மேல கொலை வழக்கு. கடப்பா சென்ட்ரல் ஜெயில்ல அடைப்பு. எப்படி இருக்கும் பாருங்க. மாயா நொறுங்கி போயிட்டா.
ஜகன் போலீஸ் ஜீப்ல ஏறினப்ப " முகேஷ் ! நீ தான் நம்மாளுங்களுக்கு தைரியம் சொல்லனும். உன்னை நம்பித்தான் போறேன்னாரு" எனக்கு பக்குனு ஆயிருச்சு.
என்ன ஏதுன்னு விசாரிச்சா பெரிய சரித்திரமே காட்சி கொடுக்குது கொத்து கொத்தா சம்பவங்கள். புது புது தகவல்கள். பிரபல கிரிமினல் லாயர் ஒருத்தரை பிடிச்சேன். வரிசையா பெயில் பெட்டிஷன் போட்டுக்கிட்டே இருந்தோம். அவர் ஒரு நாள் சொல்லிட்டாரு. முகேஷ் .. கவர்ன்மென்ட் குறி வச்சுருச்சு. இந்த கேஸ் எல்லாம் நிக்காது. ஜஸ்ட் 90 நாள் தான் இவிக ஆட்டம். நீ வேணம்னா பாரு சார்ஜ் ஷீட் கூட தாக்கல் பண்ணமாட்டாங்க. ஆளுங்கட்சிகாரங்க எய்ம் என்னடான்னா வர தேர்தல்ல ஜகனுக்கு சீட் கிடைக்க கூடாது, கிடைச்சாலும், கிரவுண்ட் ஒர்க் பண்ணக்கூடாது.இதான் அவங்க நோக்கம். நான் பாட்டுக்கு பெட்டிஷன் போட்ட்க்கிட்டே இருக்கேன். நீ மொதல்ல அந்த அப்பார்ட்மென்டை திறக்கற வழியபாரு. அதுக்கு மிஞ்சின கிரவுண்ட் ஒர்க் வேற இல்லேன்னாரு.
மாயா "நீயே திறந்துரு முகேஷ்! உன் சித்தாந்தப்படி சூரியன் மேற்குல மறைஞ்சிருக்கான். நாளைக்கு உதிக்க போறது நிச்சயம். அதுவரை சனத்துக்கு நீதான் துணையா நிக்கனும். ஜகன் கூட அதான் சொல்ட்டு போனாரு அது இதுன்னு ரொம்பவே மோட்டிவேட் பண்ணா."
"எதுவா இருந்தாலும் நீ ஜகன் கிட்டயே பேசிக்க"ன்னிட்டாங்க. காரை போட்டுக்கிட்டு கடப்பா போனேன். என்னதான் ஆளுங்கட்சி தெ.தேசமா இருந்தாலும் கடப்பா மாவட்டமே ஒய்.எஸ்.ஆர் கைல . நானும் அழுத்த வேண்டிய இடத்துல எல்லாம் பயங்கரமா காசு அழுத்தினேன். ஜெயிலுக்குள்ளாறவே ஒரு சாய்பாபா கோவில் இருந்தது. ஜெயிலர் ஜகனை அங்க வச்சு பேச பர்மிஷன் கொடுத்தாரு.
"என்னதான் நடந்தது சார்"னு நான் கேட்டேன். ஜகன் சொல்ல ஆரம்பிச்சாரு. காலை பத்து மணிக்கு ஆரம்பிச்சு சாயந்திரம் அஞ்சு வரைக்கும் சொல்லிக்கிட்டே இருந்தாரு. என் கண் முன்னாடி ஒரு புது உலகம் விரிய ஆரம்பிச்சது. மனசுல ஒரு பதைப்பு. ஏதேதோ யோசனைகள். ஜெயிலருக்கு பல்க்கா அழுத்திட்டு சித்தூர் புறப்பட்டேன்.
வீட்டுக்கு வந்ததும் மாயாவை மாடிக்கு கூட்டிட்டு போய் உட்கார வச்சு ஜகன் சொன்னதையெல்லாம் ரிப்பீட் பண்ணேன். அவர் முன் பின்னா சொன்னதையெல்லாம் எடிட் பண்ணிக்கவும், அப்போ புரியாததை இப்போ புரிஞ்சுக்கவும் முடிஞ்சது.
தேர்தலுக்கான கிரவுண்ட் ஒர்க்கை தடுக்கிறதுதானே இந்த கைது நடவடிக்கையோட உத்தேசம். அதுக்காகத்தானே ஜகனை ஜெயில்ல போட்டாங்க. ஜகன் இல்லாமயே கிரவுண்ட் ஒர்க் நடக்கும் . பார்த்துர்ரதான்னு களத்துல இறங்க போறேன் . இந்த விசயத்துல "மாயா! நீ தான் எனக்கு உதவ முடியும்"னேன்.
"ச்சீ என்ன இது அசிங்கமா உதவி கிதவின்னிக்கிட்டு. நான் உன்னோட தாசி .. நீ டீ சாப்டா நான் சிகரட் எடுத்து குடுப்பேன், நீ தண்ணியடிச்சா நான் ஊறுகா தருவேன்"
" நான் குட்டி போட்டா.."
மாயா என் இடுப்பை பிடிச்சி ஒரு கிள்ளு கிள்ளினா பாருங்க .. நான் அலறின அலறலுக்கு அப்பா ஹால்ல இருந்து "என்னடா ஆச்சு"னு குரல் கொடுத்தார்.
நீ இந்த நாட்டுக்கே ராசா ஆகனும். இந்த நாட்ல எந்த பொண்ணும் என் அக்காங்க மாதிரி கண்ணீர் வடிக்காம இருக்க வழி பண்ணனும் அதுக்காக நான் என்ன வேணம்னா செய்ய தயார்."ன்னாள் மாயா. நான் என் ப்ளானை சொன்னேன். "சூப்பர் முகேஷ்"னாள் மாயா.
மறு நாள் சாயந்திரம் ஷாப்பிங் கிளம்பி ஒரு நல்ல ரெகார்டர், மைக், எம்ப்டி ஆடியோ கேசட்ஸுனு வாங்கிட்டு வந்தோம். ஜகன் ஜெயில்ல சொன்ன மேட்டரை வச்சு அப்படியே 1மணி நேர குறும்படமா தயாரிச்சு தமிழ்+தெலுங்குல வெளியிடறடா ப்ளான்.
ஜகன் ஜெயில்ல சொன்ன விஷயங்களை மாயாவும் நானும் டிஸ்கஸ் பண்ணும்போது வரி விடாம ரெக்கார்ட் பண்ண வேண்டியது. அதுக்கப்புறம் மாயா அதையெல்லாம் டாக்குமென்ட்டைசேஷன் பண்ண வேண்டியது. அப்பார்ட்மென்ட் திறப்பு விழா அன்னைக்கே மேற்படி ரெண்டு குறும்படத்தையும் ரிலீஸ் பண்ணவேண்டியது. அப்புறம் வார்ட் வார்டா, பஞ்சாயத்து பஞ்சாயத்தா கிராமம் கிராமமா டிவிடி ப்ளேயரும் ப்ளாஸ்மா டிவியுமா போய் ப்ரொஜக்ட் பண்றதுனு முடிவு பண்ணிக்கிட்டோம்.
(இதுக்கான டிஸ்கஷன் எல்லாம் ஒரே நாள்ள நடந்துரலை. எங்களோட ரொட்டீன் ஆக்டிவிட்டீஸை பார்த்துக்கிட்டே.. ஸ்டுடியோல இருக்கிற எங்க சேம்பர், பெட் ரூம்ல நடந்தது. மாயா முதல்ல தானே எழுதிரலாம்னு ஆரம்பிச்சு.. அப்புறம் அது முடியாம ஷார்ட் ஹேண்ட் தெரிஞ்ச பார்ட்டி ஒருத்திய பிடிச்சு எழுத வச்சு அதை பேஸ் பண்ணி ஸ்க்ரீன் ப்ளே எழுதினோம்.அதைத்தான் இப்போ படிக்க போறிங்க)
ப்ளாக் & வைட் :
ஒரு கிராமம். அந்த கிராமத்துல ஒரு பிராமண குடும்பம். ஒரு நாயுடு குடும்பம். ஒரு ரெட்டி குடும்பம். எந்த காலத்துலயோ ராஜாவா, ஜமீந்தாரா கூட தெரியாது அவன் கொடுத்த பட்டாவ வச்சிக்கிட்டு கிராமத்து நிலங்கள்ள பாதிய தங்களுதுனு சொல்லிக்கிட்டு பிராமண குடும்பம் அலம்பல் பண்ணிக்கிட்டிருக்குது. நாயுடு ஜல் ஜக் பார்ட்டி ஆனால் பகைய உள்ளுக்குள்ளவே வச்சிக்கிட்டு ஆப்பு வச்சிர்ர பார்ட்டி . ரெட்டி சுயமரியாதை உள்ளவர். தருமத்துக்கு கட்டுப்பட்டவர்.பேச்சு மட்டும் அடிக்கிற மாதிரியே இருக்கும். ஐயரோட பேர்பாதி நிலத்தை ரெட்டி, பேர்பாதி நிலத்தை நாயுடு பயிர் பண்ணிக்கிட்டிருக்காங்க. நாயுடு ரெட்டியோட சுய மரியாதையை அகங்காரமா போட்டுக்குடுத்து கலகம் வைக்கிறான். அய்யரு ரெட்டிய கூப்டு நீ ஒன்னும் என் நிலத்துல பயிர் பண்ண வேணாம் . குத்தகை கான்சல்னிர்ராரு .ரெட்டி தருமத்துக்கு கட்டுப்பட்டு ஐயரோட நிலத்தை ஒப்படைச்சுர்ராரு. ரெட்டி குடும்பம் டவுனுக்கு ஷிஃப்ட் ஆகுது.
கொஞ்ச நாளைக்கப்புறம் அறுப்பு நடக்குது. ஐயரு களத்து மேட்டுக்கு போய் குத்தகை நெல்லை அளக்க சொல்லி நாயுடை கேடிகிறாரு. ஐயரு வேட்டிய உருவி துரத்தி விட்டுர்ரார் நாயுடு. ஐயரும் டவுனுக்கு ஷிஃப்ட் ஆயிர்ரார். ஏற்கெனவே ஷிஃப்ட் ஆகி வந்த ரெட்டி பெண்டாட்டி நகைய வித்து ஒரு மாவு மிஷின் வைக்கிறார். மார்க்கெட் கேட் கலெக்சன் காண்ட் ராக்ட் கிடைக்குது. அதை செய்யறார். அவருக்கப்புறம் ஷிஃப்ட் ஆகி வந்த ஐயரை கணக்கெழுத வச்சிக்கிறார்.
கிராமத்துல நாயுடு ராஜ்ஜியம் நடக்குது. சாதீய கொடுமைகள் நடக்குது. ,வைக்கோற்போர் எரிப்பு, பயிர் எரிப்புன்னு ஆரம்பிச்சு கொலைகள் கூட நடக்குது. பாதிக்கப்பட்டவுக பழைய பாசத்துல ரெட்டிய வந்து பார்க்கிறாங்க. ரெட்டி கோர்ட்டுல கேஸ் போட வைக்கிறார். நாயுடுவோட அட்டூழியம் அதிகமாகுது. கிராமத்து தாழ்த்தப்பட்ட மக்கள் தட்டுமுட்டு சாமானோட ரெட்டிக்கிட்டே வந்து அபயம் கேட்குது. டவுனே யார்ரா இந்த கிராமத்தானு திரும்பி பார்க்குது.
இந்திரா காந்தி பி.எம் ஆகிறாங்க. அரசு நிறுவனம் நில உச்சவரம்பு சட்டம், உழுபவனுக்கே நிலம் இத்யாதி பாதைல ரூட் மாறுது. நாயுடுவோட நிலத்துல முக்கால் வாசி பறி போய் அதே கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவுகளுக்கு கிடைக்குது. இதனால பிரஸ்டிஜ் போயிட்டதா ஃபீல் பண்ற நாயுடு டவுனுக்கு ஷிஃப்ட் ஆயிர்ராரு.
ரெட்டியை மக்களே முன்சீஃபா நிக்க வச்சு ஜெயிக்க வைக்கிறாங்க. நாயுடு பண மூட்டைய அவிழ்த்து ஜெயிச்சுரலாம்னு என்னென்னவோ பண்ணியும் உபயோகமில்லாம போயிருது. நாயுடுவுக்கு விட்டதை பிடிக்கனுங்கற வெறி. சாராய கடைகளை ஏலத்துல எடுக்கிறாரு. கடைல கலாட்டா நடந்தா அடக்கவே சில ரவுடிகளை வளர்க்கிறார்.அவிக கெட்ட ஆட்டம் போடறாங்க. காலேஜ் எலக்சன்ல இருந்து , கந்து வட்டி வசூல், வீட்டு வாடகை வசூல், தாதா மாமூல் வசூல், கட்டை பஞ்சாயத்துனு தூள் பண்றாங்க. ஆனா எவ்ள பணம் வந்தாலும் வச்சி வாழ தெரியாம மறுபடி மறுபடி நாயுடுகிட்டே கைகட்டி நிக்கிறாங்க. காங்கிரஸ் உடையுது. நாயுடு ஏதோ ஒரு துண்டுல முட்டி மோதி சீட் வாங்கிர்ராரு . ரவுடிகள் பலத்தை வச்சு மாய்மாலமெல்லாம் பண்ணி எம்.பி ஆயிர்ராரு.
இந்த ப்ராஸசெல்லாம் முடிய 18 வருஷம் ஆகுது. ரெட்டியோட மகன் தான் ஜகன்.அப்பாவுக்கு தப்பாம பிறந்த புள்ள. ஜகன் படிக்கிற காலேஜ்ல எலக்சன் வருது. ஜகன் கண்டெஸ்ட் பண்றாரு. நாயுடுவுக்கு ரெட்டி குடும்பத்து மேல தீரா பகையிருக்கே. ரவுடி கூட்ட தலைவனுக்கு அசைன்மென்ட் தரார். எப்படியாவது ஜகனை போட்டு தள்ளிருனு. வசமா மாட்ட செம காட்டு காட்டி தலை மேல கல்ல தூக்கி போட்டுட்டு போயிர்ராங்க. ஜகன் அதிர்ஷ்ட வசமா பிழைக்கிறார். ஜகனோட நண்பர்கள் 11 பேர் பழிக்கு பழினு சபதம் போடறாங்க. ஜகன் எவ்வளவோ தடுத்தும் கேட்காம ரவுடி கூட்டதலைவனை போட்டுத்தள்ளிர்ராங்க. அவன் தம்பி தலைவனாகிறான். அவனையும் போட்டுத்தள்ளிர்ராங்க.
ஜகனோட ரெஜிம் ஆரம்பமாகுது. நாயுடு பிச்சைக்காரனுக்கு பத்து காசு பிச்சை போடனும்னா கூட அவன் நாயுடுவானு பார்த்துதான் போடுவார். அவருக்கு சுட்டு போட்டாலும் தமிழ் வராது. தமிழ்காரங்க பார்க்க வரும்போது அரவம் அத்வானம்னு வெகண்டையா பேசுவார். இட்லி சாம்பார்னு நக்கலடிப்பாரு. வாழ் நாள்ள 24 மணி நேரம் 365 நாளும் தன் நிலம், தன் வெள்ளாமை, தன் பதவி, தன் உறவுக்காரவுக காண்ட் ராக்ட் இதான் அவர் மைண்ட்ல இருக்கும்.
ஜகனை பொருத்தவரை இந்த பாவத்து எதுவும் கிடையாது. தேர்தல் நேரம்னு கிடையாது தினசரி ஆஃபீஸ்ல ஆஜராயிருவாரு. டிஃபன், சாப்பாடு மதிய தூக்கம்லாம் அங்கயே சனம் வந்துகிட்டே இருப்பாய்ங்க. அவிகளை தன்னால முடிஞ்ச வரை சேட்டிஸ்ஃபை பண்ணி அனுப்புவாரு. ராத்திரி 10 மணிக்கு மேலதான் வீட்டுக்கே கிளம்புவாரு. சாதி,ஜமா,வயசு,பாஷ இப்படி எந்த கல்மிஷமும் இல்லாம சின்ன சின்ன தகராறுக்கெல்லாம் மரியாதை ராமன் கணக்கா தீர விசாரிச்சு ரெண்டு பார்ட்டியையும் கன்வின்ஸ் பண்ணி தீர்ப்பு கொடுத்து அனுப்புவார்.
இதெல்லாம் டவுனுக்குள்ள பரவி பரவி எதுவா இருந்தாலும் "அட நீ ஜகன் மின்னாடி போய் நின்னுருப்பா"ங்கற மாதிரி ஆயிருச்சு. ஒரு காலத்துல எம்.பியா ஜெயிச்ச நாயுடுவோ , நாயுடுவோட வாரிசுகளோ கவுன்சிலரா கூட ஜெயிக்க முடியாத நிலைம.
சாராய கடை ஏலத்துல நாயுடுவோட முட்டி மோதற பார்ட்டி ஒன்னு இருக்கு. ஜகன் பிராபல்யத்தை பார்த்து அசந்து போய் ரெண்டு பேரும் கூட்டு சேர்ராங்க. அந்த பார்ட்டியும் காங்கிரஸ்ல சேருது. அப்பா மாதிரியே ஜகனும் காங்கிரஸ் கட்சில தான் இருக்காரு. அதுக்குள்ள சித்தூர் முனிசிபாலிட்டி ஆகுது. ஜகன் சேர்மனா நிக்க சீட்டுக்கு ட்ரை பண்றாரு. ஒன்னும் பேர்ரதில்லை. சாராய பார்ட்டியோட தம்பிக்கே சீட் கிடைக்குது. ஜகன் தன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் கவுன்சிலரா கன்டெஸ்ட் பண்ண வைக்கிறாரு. டைரக்ட் எலக்சன்ல சாராய பார்ட்டி தம்பி சேர்மனானாலும் கவுன்சிலர் எலக்சன்ல மெஜாரிட்டி ஆஃப் தி சீட்ஸ் ஜகன் ஆளுங்க ஜெயிச்சுர்ராங்க. ஜகன் வைஸ் சேர்மன் ஆகிறாரு.
ஜகனை போட்டு தள்ள பல தடவை முயற்சி பண்றாங்க. ஜகன் அதிர்ஷ்டவசமா தப்பிச்சிக்கிட்டே வரார். அப்போ எம்.எல்.ஏ எலக்சன் வருது. ஃபீல்டுல ஒரு புது கட்சி வருது. அதான் என்.டி.ஆரோட தெ.தேசம் . ஜகன் காங்கிரஸ் கட்சில டிக்கட்டுக்கு ட்ரை பண்றாரு.. ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.வேற யாரோ நிக்கிறாங்க.காங்கிரஸ்ல இருந்த நாயுடு கட்சி தாவி தெ.தேசத்துல சேர்ந்து தன் பேத்திக்கு சீட் வாங்கிர்ராரு. அவள் என்.டி.ஆர் அலைல ஜெயிச்சுர்ரா. அடுத்த டெர்ம் வருது அப்போ மறுபடி ஜகன் முயற்சி பண்ண நோ டிக்கட். நாயுடுவோட கை கோர்த்துக்கிட்ட சாராய பார்ட்டிக்கு டிக்கட் வருது. ஜகன் இண்டிபென்டென்டா நின்னு ஜெயிச்சுர்ராரு. அடுத்த எலக்சன் வரும்போது ஜெயிக்கிற குதிரை தான் வேணம்னு காங்கிரஸ் பார்ட்டியே ஜகனுக்கு டிக்கெட் கொடுத்துருது. ஜெயிச்சுர்ராரு. அடுத்த டெர்ம்ல தான் சந்திரபாபு எத்தனையோ தகிடுத்தத்தம் பண்ணியும் தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்னு ஜெயிக்கிறார்.
பழைய பகை ஒரு பக்கம். தன் வாரிசுகள் அரசியல்ல சக்ஸஸ் ஆகனும்னா ஜகன் ஒழியனுங்கற எதிர்கால அச்சம் ஒருபக்கம் நாயுடுவை குழப்பியடிக்குது.
இதுல வீடில்லாத கட்டிட தொழிலாளி குடும்பங்களுக்கு 500 வீடுகள்ங்கற ஸ்கீம் தொகுதியையே கலக்குது. சாதாரணமாவே சொல்லி சொல்லி அடிக்கிற பார்ட்டி. இதுல இது வேற சக்ஸஸ் ஆனா தன் குடும்பம் அரசியலையே மறந்துர வேண்டியதுதான். நாயுடு தீவிரமா ரோசிச்சிட்டிருக்காரு.
இந்த சந்தர்ப்பத்துல தெ.தேசம் கட்சி சார்ப்பா போட்டியிட்டு தோத்து மூணாவது தடவையா ஜகனை எம்.எல்.ஏ ஆக்கின நாயுடுவோட உறவுக்கார பையன் நாயுடுவுக்கு ஒரு சான்ஸ் குடுத்துட்டான். மதன் பேருக்கேத்தாப்ல மன்மதந்தான்.
நாயுடுவோட பேத்தி கல்யாணமாகி 17 வயசுல மகன் இருந்தும் இந்த மன்மதன் கிட்டே மயங்கிர்ரா. மதனும், தன் அம்மாவும் அஜால் குஜால் வேலைல இருக்கிறப்ப அந்த பையன் பார்த்துர்ரான். ஜான் பிள்ளன்னாலும் ஆண்பிள்ளை இல்லியா பயங்கர அலம்பல் பண்றான். ஊரை கூட்டற மாதிரி கத்தறான்.
அப்போ அம்மாகாரியும், மதனும் சேர்ந்து அந்த பையனை நைலான் கயிறை போட்டு கழுத்தை நெறிச்சு போட்டு தள்ளிர்ராங்க. நாயுடுவோட பேத்தி ," ஜகன் வந்தான் பழைய பகைய மனசுல வச்சி என் மகனை போட்டுத்தள்ளிட்டா"ர்னு கேஸ் கொடுத்துர்ராங்க.
ஹைதராபாத்லருந்து போலீஸ் டிப்பாட்மென்டுக்கு சீரியஸ் இன்ஸ்ட் ரக்சன். கைது ரிமாண்ட் . கடப்பா ஜெயில். நோ பெயில்.
Dear Brother,
ReplyDeleteFirst up, let me apologize for not typing in Tamil. Laptopla edho unicode prachinainga. Now let me go on.
Though I don't agree with many of things you write about like astrology, planets etc,I truly admire your writing which is really, really wonderful. God has blessed you with wonderful researching and writing talents. I really wonder why people don't record any comments in your blog. The serial story Enakku 22 Unakku 32 is turning out to be a real good one. Expecting many such gems like this from you. Wish u the best. God bless you.
பிரபு அவர்களே,
ReplyDelete//First up, let me apologize for not typing in Tamil//
மொழி எதுவானாலும் உணர்ச்சி ஒன்னுதானே இதுக்கு என்ன மன்னிப்பு வேண்டி கிடக்கு.
" I don't agree with many of things you write about like astrology, planets etc"
கிரகம், கிரக பலன் , ஏன் தெய்வத்தை கூட மறுக்க உங்களுக்கு உரிமை இருக்கு. மனிதனை, மனித குல சுபிட்சத்தை மறுக்காத எல்லாருக்கும் நான் தலைவணங்க காத்திருக்கேன்.
"I truly admire your writing which is really, really wonderful. God has blessed you with wonderful researching and writing talents. "
இப்ப எழுதற எழுத்தெல்லாம் சக்கர நாற்காலி எழுத்துங்க. 1987 ல எல்லாம் ச்சும்மா தீபாவளிதான் . ஆனா இந்த பாடாவதி பத்திரிக்கைகாரவுக இடுப்பை ஒடச்சி கலைஞர் மாதிரி ஆக்கிட்டானுவ.
ஆனாலும் விடறதா இல்லை தலைவா ! நம்ம ஆராய்ச்சியெல்லா லேப்ல பண்ணதில்லிங்கண்ணா. வேணம்னு பண்ணதும் இல்லிங்கண்ணா. ஏதோ போற போக்குல அந்த அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதல் சிலும்பி தெறிச்சுதுதாங்கண்ணா.
இது நம்ம பார்ட் என்னடான்னா அய்யோ சனம் கோச்சிக்கிருமே. அய்யோ பைத்தியம்னிருவாங்களேன்னெல்லாம் டர் ஆகாம போட்டு தாக்கறதுதான். ஒண்டர்ஃபுல் ரைட்டிங் டேலண்டெல்லாம் இல்லிங்கண்ணா.
இதெல்லாம் அருள்வாக்கு மாதிரி. திடீர்னு தோணி திடீர்னு எழுதினதுதான். நான் வலுக்கட்டாயமா முக்கி எழுதப்பார்த்து பாதில கிடக்கிற பதிவுக நூத்துக்கு மேல கிடக்கு. ஹார்ட் டிஸ்க் ஸ்பேசை அடைச்சிக்கிட்டு சட்டமன்றத்துல சில எம்.எல்..ஏங்க மாதிரி
"I really wonder why people don't record any comments in your blog. "
அது வந்துங்கண்ணா நீங்க ஒத்துக்கிட மாட்டிங்க. இருந்தாலும் சொல்றேன் நம்முது சிம்மராசிங்கண்ணா வாக்கு ஸ்தானத்துல சனி. சனின்னா எல்லாம் பயப்படுவாங்க. ஆனால் அவரு கர்ம காரகனாம். அவர் பிடிக்கும்போது கருமத்தை எல்லாம் ஒழிக்கிறாராம். நான் என் தாய் நாட்டு மக்கள் போட்ட பிச்சைல வளர்ந்தவன். கடன் பட்டவன். இதை தான் சோசிய பாஷல கருமம்ங்கறோம்.
உண்மைய உரக்க சொல்லி என் கருமத்தை , கடனை தீர்த்தா போதுங்கணா. கமெண்ட் போட்டா என்ன .. போடாட்டி என்ன ? போட்டாதான் வம்பு. ஏதோ நாதாரி என் வாயை கலக்க அது சாக்கடையா பொங்க எதுக்கு லொள்ளு.
"The serial story Enakku 22 Unakku 32 is turning out to be a real good one. "
தொடர்ல ட்ராகிங் வந்துருச்சானு ரோசிக்கிற நேரத்துல உங்க கருத்து நிஜமாவே ஆறுதலுங்கண்ணா ..( நம்மள வச்சி காமெடி கீமெடி பண்ணலியே)
Expecting many such gems like this from you. Wish u the best. God bless you.
ஜெம், வைரம்லாம் மடில இல்லிங்கண்ணா மேலேயிருந்து எதுனா விழுந்தா தவறாம ப்ளாக்ல வச்சுர்ரண்ணா.