Tuesday, April 6, 2010

தெலுங்கு திரைப்பாடல்களில் சிருங்காரம்

சிருங்காரம்னாலே பெண்ணை தலைமுதல் கால்வரை உள்ள அவயவங்களை  வர்ணிக்கிறது, அந்த அவயவங்க இவனை என்ன பண்ணுது, என்ன பண்ணச்சொல்லி தூண்டுது, இவன் என்ன செய்ய போனா அவள் என்ன சொல்லி தடுக்கிறாள்,இவன் என்ன செய்தா அந்த பார்ட்டுங்க எப்படி மாறுது  இந்த மாதிரி கசமுசாவெல்லாம் இருக்கும். நம்ம தமிழ் திரைப்பாடல்களில் உள்ள சிருங்காரத்தை தான் பார்த்திருப்பிங்க.

"சம்பலு கெம்புலாயெரா" சம்பலுன்னா சம்பல் பிரதேசமில்லை தம்பி ! கன்னங்கள். கெம்புன்னா ரூபி . பலான நேரத்துல கன்னம் சிவக்கிறத கவிஞர் இப்படி ஷார்ட் கட்ல சொல்றார். கன்னங்கள் கெம்புக்கல் மாதிரி சிவந்து போச்சாம். (வெட்கங்கண்ணா. இந்தம்மா அந்த அளவுக்கு வெட்கப்பட அந்த பார்ட்டி அப்படி என்னதான் சில்மிஷம் பண்ணானோனு ஜொள்ளு விடாதிங்க..)

"ஏ நாடு சூடனிதி எவ்வரிக்கி இவ்வனிதி இவ்வு மரி.." என்னைக்கும் பார்க்காததை, யாருக்கு கொடுக்காததை கொடு" கற்பனை சிறகடிக்குதுல்ல. வேணாங்கன்னா நித்யானந்தா மாதிரி கூவத்துல லேண்ட் ஆயிரபோவுது. அடுத்த வரிய பாருங்க. இவ்வு மரி நீ கன்ய மனசு கட்னமு. (கன்னிமனங்கற வரதட்சிணைய குடு)

ஃபர்ஸ் நைட் பாட்டு ஒன்னை பார்ப்போம்

"பை பைக்கி ராக்கு சூர்யுடா
பொத்தன்டே மாகு சேதுரா
வெலுகு வலலு தெச்சி மா கலலு பட்டகு
ஈ ரேயினி சாகனீ ஈ ஹாயினி ரேகனீ "

(கிழக்கு திசைல இருந்து ) மேல மேல வராதே சூரியனே
ஒளி வலைய கொண்டு வந்து எங்கள் கனவை பிடிக்காதே
இந்த இரவை கன்டின்யூ ஆக விடு
இந்த சுகத்தை சீற விடு

இந்துவதன ,குந்தரதன,மந்தகமன,மதுரவசன,ககன ஜகன சொகசு லலனவே
(இதை தடுமாறாம திருப்பி சொன்னா சானியா மிர்சாவோட இ மெயில் ஐடி மெயில் செய்யப்படும்)

நிலா முகத்தவளே, தங்கரதமே, நிதான நடை கொண்டவளே (மந்தன்ங்கற வார்த்தை சனிய கூட குறிக்குது.அவர் நிதானமா சஞ்சரிக்கிற பார்ட்டி ஒரே ராசில இரண்டரை வருஷம் இருப்பாரு) ஆகாயம் மாதிரி பரந்த மார்பை கொண்டவளே, அழகை போஷிக்கிறவளே

ஓ செலி.. சலி சலி இதேமி மண்டலே
நேனே குவ்வனை  நா  நுவ்வே கூடுவை
தோடுகா நீடகா நுவ்வுண்டே சாலுலெ

(தமிழ் வான் நிலா  நிலா அல்ல உன் வாலிபம் நிலா பாட்டோட ட்யூன் சாரே)

தோழி..குளிர் குளிர் (இருந்தாலும்) இதென்ன தீ
நான் சிட்டாக நீ கூடாக துணையாக, நிழலாக ( பிரியாதுல்லயா) நீ இருந்தா போதும்

ஒரு மாதிரி கேரக்டர் கொண்ட ஃபிகர் ஹீரோவ பிக் அப் பண்ணுது எப்படி?

"கட்டுகுன்னோடு வதிலேசாடு புட்டின்டோள்ளு தரிமேசாரு கட்டுகுன்டே மூடே முள்ளுரா "
கட்டிக்கிட்டவன் விட்டுட்டான், பிறந்த வீட்ல துரத்திட்டாங்க கட்டிக்கிட்டா மூணே முடிச்சுதான்

"கட்டு கதலு செப்பமாகுலே ஓ ராமி
கட்டுகுன்டே பாதிகேள்ளுலே"

"கட்டுக்கதையெல்லாம் சொல்லாதே
கட்டிக்கிட்டா ( நீ சொன்ன மாதிரி சிம்பிளா மூணு முடிச்சில்ல கண்ணு) இருபத்தஞ்சு வருஷம் ( நாறனும்)

இன்னும் என்னல்லாம் சாக்கு சொல்றான் பாருங்க

"அம்ம தோடு ஆதிவாரம் நாடு அந்தமைனா அந்துகோனு நேனு
அம்மம்ம தோடு அர்த ராத்திரி முத்துக்கைனா முட்டுகேனு
அம்மம்ம தோடு காலேனு நீ தோடு நன்னிடிச்சி பெட்டம்மா நாச்சாரம்ம
நன்னிடிச்சி பெட்டம்மா நாச்சாரம்ம

அம்மா மேல ஆணையா ஞாயிற்றுக்கிழமை எவ்ள அழகானதா இருந்தாலும் ரிசீவ் பண்ணிக்க மாட்டேன்.
அர்த ராத்திரில ஜஸ்ட் ஒரு கிஸ்ஸுக்கு கூட ஐ வில் டோண்ட் டச்
பாட்டி மேல ஆணையா உனக்கு ஜோடியாக என்னால முடியாது. ஆளவிடு

இருந்தாலும் அவ வற்புறுத்தறாள். அப்போ இன்னொரு காரணம் சொல்றான் ஹீரோ

"அம்ம தல்லி ஆஷாட மாசம் அந்துலோனு முந்துந்தி மோடம்"
அம்மா தாயே  இது ஆடி மாசம். அதுலயும் (சுக்கிர)  மூடம் இருக்கு

தமிழ்ல மழைப்பாட்டுனு நிறைய பார்த்து,கேட்டிருப்பிங்க.  இப்ப தெலுங்குலயும் பாருங்க ( ஒரு வெரைட்டி தானே)
ஹீரோயின் மழைல நனையறா . ஹீரோவும் நனைஞ்சிக்கிட்டே பாடறார். "ஆகு சாட்டு பிந்த தடிசே கொம்ம சாட்டு குவ்வ தடிசே " இப்படி பாட்டு துவங்குது.
வெறுமனே மழை பெய்யுதுன்னா அது சாதா மழை . ஆனால் இது சோதா மழை.
ஏண்டான்னா இலைகளின் மறைவில் உள்ள பிஞ்சு  நனையுதாம். கிளை மறைவில் இருக்கிற குருவியும் நனையுதாம்.அப்படி ஒரு செமர்த்தியான மழை.

தொடர்ந்து ஒவ்வொரு மழைத்துளியும் அவள் மேல பட்டு என்னென்ன ஆகுதுனு வர்ணனை வருது.
"ஓ சினுக்கு முத்திச்சி முத்யமை போதுன்டே"
'ஒரு (மழை)துளி (உனக்கு) முத்தம் கொடுத்து முத்தா மாறிக்கொண்டிருக்க"

"சிகுராகு பாதான சிரிமுவ்வவுதுண்டே"
"தளிர்பாதத்தில் கொலுசா மாறிக்கிட்டிருக்க"
"  நீ மெடலோ ஓ சினுக்கு நகலாகா நவுதுண்டே"(உன் கழுத்துல/விழுந்த/ ஒரு /மழைத்/ துளி (தங்க)  நகை போல நகைத்துக்கொண்டிருக்க.."

வர்ணனை தொடருது. இதுல ஹைலைட் வரி

"ஓ சினுக்கு நினு தாக்கி தடியாரி போதுன்டே"
"ஒரு துளி உன்னை தொட்டு ஈரம் உலர"
(பலான நேரத்துல காது மடல், கழுத்துப்பக்கம், உடம்பு எல்லாம் சூடேறுமில்லையா . அந்த சூட்ல அந்த மழைத்துளியோட ஈரம் உலர்ந்து போச்சாம். யப்பாடி இன்னா டெம்பரேச்சருப்பா.

ஃபினிஷிங் டச் " சிலிப்பி சினுக்குல்லோ சலி காஞ்சுகோவாலி"
குறும்பு பிடிச்ச மழைத்துளிகள்ள ( கண்ட இடத்தை தொடுதுல்ல அதான் குறும்பு பிடிச்சனு வருது) குளிர்காயலாம்னு ஹீரோயின் கூப்புடுதாம்.  அடங்கொக்க மக்காஆஆஆஆஆஆஆஆ

2 comments:

  1. aahaa!
    muruesaa-poonuul unkalaiyum paadaa patuththiyathaa?
    chinna noolkandaa nammai imsai seithathu?

    ReplyDelete
  2. ttpian avargale,

    //chinna noolkandaa nammai imsai seithathu?//

    dhool !

    ReplyDelete