Thursday, April 1, 2010

அடிக்காத உதைக்காத விரைய நசுக்கு

என்.டி.ஆர் வீழ்ச்சி பின்னால இருந்த மீடியா சூழ்ச்சி, லிக்கர் லாபி சூழ்ச்சியை விவரிச்சு இந்த பதிவு போட்டிருக்கேண்ணா ஒரு ஓட்டம் பார்த்திங்கண்ணா ஆகா இதுவல்லவா நிர்வாண உண்மைனு துள்ளி குதிப்பிக‌...

"அடுத்த வீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா? அந்த நேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா?" - இது மனிதன் சினிமாவுக்கு வைரமுத்து எழுதின பாட்டு வரி. தமிழ் நாடு உங்க வீடு . எங்க ஆந்திரம் பக்கத்து வீடு. இங்கே பிரிவினை வாதம் தலையெடுத்தா உங்க வீட்லயும் சலசலப்பு கேட்கும். கேட்டுது கூட.
நீங்க என்னதான் ஆந்திரா கொல்ட்டினு நக்கலடிச்சாலும் , பல விஷயங்கள்ள எங்காளுங்க நல்ல அவேர்னெஸோட இருக்காங்க. ஆனால் ஒரு விஷயத்துல மட்டும் ஆந்திராகாரனா தலை குனிய வேண்டியிருக்கு. அதான் சந்திரபாபு எபிசோட்.
நல்ல காலம் இந்த முதுகில் குத்திய படலத்தோட இன்னர் டீட்டெயில்ஸ் உங்களுக்கு தெரியாது.தெரிஞ்சிருந்தா காறி துப்பியிருப்பிங்க்..
சந்திரபாபுவோட வாழ்க்கையே துரோகத்துல நனைஞ்ச வாழ்க்கை. ஸ்டூடெண்ட் லைஃப்லயே செல்ஃபிஷ் ஃபெலோ, கேல்குலேட்டடா பிஹேவ் பண்ற பார்ட்டி. மாணவர் சங்க தேர்தல்ல பார்ட்டிசிப்பேட் பண்ணி , இளைஞர் காங்கிரஸ்ல இறங்கினார். அந்த காலத்துலயே பாபுல இருந்த ஸ்பார்க்கை ஒரு எம்.எல்.ஏ ஸ்மெல் பண்ணிட்டாரு. தன் மகளை கட்டிக்க சொல்லி ப்ரப்போஸ் பண்ணாரு.
நம்மாளு சரி சரின்னிக்கிட்டே தன் அரசியல் வளர்ச்சிக்கு அந்த எம்.எல்.ஏவை எந்த அளவுக்கு உபயோகிச்சிக்கனுமோ உபயோகிச்சுக்கிட்டார்.
இதையடுத்து இப்போ மந்திரியா இருக்கிற ஒரு அம்மாவ கட்டிக்க சொல்லி அரசியல் வாதி கம் தொழிலதிபரான அவிக அப்பா ஆஃபர் பண்ணாராம். உடனே எம்.எல்.ஏ மகளை திராட்ல விட்டுட்டு பாபு இந்தப்பக்கம் குதிச்சார்.
அவரையும் தன் அரசியல் வளர்ச்சிக்கு அவரை எந்த அளவுக்கு உபயோகிச்சிக்கனுமோ உபயோகிச்சுக்கிட்டார்.
அடிச்சி பிடிச்சி ஒரு இஸ்பேட் மாளிகைதனமான காங்கிரஸ் மந்திரி சபைல மந்திரியா கூட ஆய்ட்டாரு. அப்போதான் ஊழ்வினை உறுத்து வந்தூட்ட சந்திரபாபுவுக்கு தன் மகள் புவனேஸ்வரிய ஆஃபர் பண்ணார். கல்யாணமும் நடந்தது.
காங்கிரஸ் கலாச்சாரப்படி சில மாதங்கள்ளயே பாபு முன்னாள் மந்திரியாவும் ஆயிட்டாரு. என்.டி.ஆர் தில்லி போய் இந்திரா காந்தி கிட்டயே பைரவி பண்ணியும் வேலைக்காகலே.
என்.டி.ஆர் நீ என்ன என் மாப்பிள்ளைக்கு மந்திரி பதவி தரமாட்டேங்கறது நானே முதல் மந்திரியாகி நானே மந்திரி பதவி தரேன்னிட்டு புதுக்கட்சி ஆரம்பிச்சுட்டாரு.ஆனா சந்திரபாபு காங்கிரஸுலயே கன்டின்யூ பண்ணிட்டாரு.கும்பல்ல கோவிந்தா போட்டிருந்தால் கூட பரவாயில்லை. கட்சி ஆணையிட்டால் என்.டி.ஆரை எதிர்த்து போட்டியிடுவேன்னு காமெடி கீமிடி எல்லாம் பண்ணிட்டாரு. சொந்த தொகுதில தோத்து போயிட்டாரு. அதுக்கப்புறம்தான் தெ. தேகட்சிக்குள்ள வந்தாரு
அதுக்குள்ளார நாதேள்ள பாஸ்கர்ராவ் எபிசோட். அப்போ பாபு தன் நரிவேலைகளையெல்லாம் என்.டி.ஆர் தரப்புல இருந்து செய்தார். ஆப்பரேஷன் சக்ஸஸ்.ஆனால் என்.டி.ஆர் மக்கள் மேல மட்டும் நம்பிக்கை வச்சிருந்த பார்ட்டி. பெரும்பான்மை பலத்தை நிரூபிச்ச கையோட சட்டசபைய கலைக்க ரெகமண்ட் பண்ணிட்டாரு.
மறுபடி எலக்சன். தூள் மெஜாரிட்டியோட வந்துட்டாரு. ஓவர் கான்ஃபிடன்ஸ்னால எல்லா தரப்பையும் விரோதம் பண்ணிக்கிட்டாரு. முக்கியமா அரசு ஊழியர்கள். அம்பத்தஞ்சு நாள் ஸ்ட்ரைக் பண்ணியும் மூட்டை அவுக்கலே.
அடுத்த எலக்சன்ல கவுந்துட்டாரு. அந்த 5 வருச காலத்துல சந்திரபாபு கட்சியை பலப்படுத்தறேன் பேர்வழி கட்சிக்காரங்க கிட்டே நல்லாவே நெருங்கிட்டாரு.
என்.டி.ஆரோட ஜைகாண்டிக் கேரக்டரை தயக்கத்தோட அணுகிகிட்டிருந்த கட்சிக்காரங்க பாபுவோட ஈஸியா மூவ் பண்ண முடிஞ்சது.
தேர்தல் நெருங்கி வர்ர சமயத்துல லட்சுமிபார்வதிய கல்யாணம் பண்ணிக்கிட்டார் என்.டி.ஆர். இருந்தாலும் மக்கள் ஏத்துக்கிட்டாங்க. என்.டி.ஆர் பூரண மதுவிலக்கு, இரண்டுரூபாய்க்குகிலோஅரிசினு வாக்குறுதி கொடுத்து தேர்தலுக்கு போனாரு.
அப்போ ஈ நாடு,உதயம்னு ரெண்டு பத்திரிக்கை முட்டி மோதிக்கிட்டிருந்த காலம் .இதுக்கு காரணம் இல்லாம இல்லே. உதயம் காங்கிரஸ் ஆதரவு பேப்பர். பப்ளிஷர் டி.சுப்பராமி ரெட்டி. இவரோட முக்கிய ஆதாய சோர்ஸ் வைன்ஸ். ராமோஜி ராவ் அதாங்க ஈ நாடு பப்ளிஷர் அடிக்காத உதைக்காத விரைய நசுக்குங்கற மாதிரி
மதுவுக்கு எதிரா ஒரு போராட்டத்தை துவக்கினாரு. எல்லாம் பேப்பர் வார்.
எங்கயோ பொம்பளைங்க போய் கள்ளுக்கடைய அடிச்சா ஹெட் லைன், எங்கயோ பெண்கள் போய் வைன்ஷாப் முன்ன தர்ணா பண்ணா தலையங்கம்னு தாளிச்சாரு.
என்.டி.ஆரும் மக்கள் கருத்து இதான் போலனு பூரண மதுவிலக்கு கொண்டுவர்ரதா வாக்குறுதி கொடுத்தார், அதுக்குள்ள உதயம் பேப்பர் நின்னு போச்சு. ராமோஜி ராவ் லட்சியம் நிறைவேறிபோச்சு.
இப்போ லாபியிங்க் ஸ்டார்ட் ஆயிருச்சு. லிக்கர் லாபி.உதயம் பேப்பர் நின்னுருச்சில்லியா இன்னும் மதுவிலக்கு இருந்தா என்ன போனா என்ன? மதுவிலக்கை ரத்து பண்ணவச்சா லிக்கர் லாபி மூட்டை வேற அவுக்கும்
மதிவிலக்கை ரத்து பண்ணச்சொல்லி என்.டி.ஆர் மேல ப்ரஷர் ஆரம்பமாயிருச்சு. அது பிடிச்ச முயலுக்கு மூனே காலுங்கற பார்ட்டி. பப்பு வேகல.
நான் சொன்னது நடக்கலன்னா அந்த அரசாங்கமே இருக்ககூடாதுங்கறது ராமோஜிராவ் சைக்காலஜி. அந்த நேரம் பார்த்து பாபு நிதி மந்திரியா தன் பிற்கால பொருளாதார சீர்திருத்தங்களை அமல் செய்ய ஏழையோட கோவணத்தை உருவ தன் கோவணத்தை வரிஞ்சி கட்டினாரு. இதுதொடர்பான ஜி.ஓ வெளிவந்தபிறகு கூட அதை என்.டி.ஆர் ரத்து பண்ண சந்தர்ப்பம் அனேகம்.
இன்னொரு பக்கம் லட்சுமி பார்வதி. மாமன் எந்திரிச்சா திண்ண என்னுதுனு இருந்த பாபுவுக்கு ல.பா பெரிய தடையாயிட்டாங்க.
ஸோ லிக்கர் லாபி, ராமோஜிராவோட மீடியா லாபி, பாபுவோட பதவி ஆசை எல்லாம் கூட்டு சேர்ந்து என்.டி.ஆருக்கு வச்சிட்டாங்கய்யா ஆப்பு.
பாபு சி.எம்.ஆனாரு.மாமன் போட்ட கோட்லயே ரோட்ட போட்டுக்கிட்டு அப்படி இப்படி சைட் வாங்கிக்கிட்டு போயிருந்தா பரவால்ல படையப்பா ரஜினி மாதிரி என் வழி தனி வழின்னு சிலும்பினாரு.
ஆனால் சந்திரபாபு மதுவிலக்கை கள்ளு,சாராயத்துக்கு மட்டும் அமல் படுத்தி கலர் சாராயத்தை வெள்ளமா ஓட விட்டாரு. அரிசி விலை ஏத்தியாச்சு. புதுசா எவனுக்கும் கார்டு தரமுடியாதுன்னுட்டாரு .(ஆனா 2003 ல இவர் நக்சலைட்டுகளோட க்ளைமோர் குண்டு வெடிப்புல மாட்ன உடனே தாளி அனுதாப ஓட்டை அள்ளிர வேண்டியதுதான்னு முன் கூட்டியே தேர்தலுக்கு போனாரு . சில நாள்ளயே பர்சனாலிட்டி தெரிஞ்சு போச்சு . நீ செத்திருந்தா தீபாவளி பண்ணியிருப்பாங்க. பொழச்சதுக்குதான் வருத்தமா இருக்காங்கனு ரிப்போர்ட் போச்சு. உடனே கேட்டவன் கேட்காதவன் எல்லாருக்கும் , எல்லாமும் அள்ளி விட்டாரு.ஆனாலும் சனம் ஓட்டை கிள்ளி கூட போடலங்கறது வேற விஷயம்)

விவசாயம்லாம் வேஸ்டு. விவசாயத்துக்கு எதிர்காலமில்லே. விவசாயிகளோட வாரிசுகள் எல்லாம் கம்ப்யூட்டர் கத்துக்கனும்னிட்டாரு. விவசாயம் 70% மக்களை வாழவைக்குது. அந்த நேரத்துல இந்தியால கம்ப்யூட்டர் உபயோகிச்சவங்க 2% க்கும் கம்மி. அவுகளை தலை மேல வச்சி தாங்கினாரு. விவசாயத்துக்கு என்.டி.ஆர் ஹெச்.பிக்கு அம்பது ரூபானு கொடுத்த மின்சார கட்டணத்தை டபுளாக்கிட்டாரு. பாக்கி கட்டாதவங்களோட வீடு ஆடு,மாடு,சட்டி பானையெல்லாம் ஜப்தி பண்ணவச்சாரு. கிரிமினல் கேஸ் போட்டாரு.
பஸ் சார்ஜ் ஏத்தறது என்ன? மின் கட்டண உயர்வு என்ன?( அதுலயும் 100 சதவீதம்), வீட்டு வரி உயர்வென்ன? ( சில நகரங்கள்ள 300 சதவீதம் கூட) கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில கூட யூசர் சார்ஜ் என்ன.. கேட்டா இப்ப நான் அரசியல் வாதி இல்லே. சி.இ.ஓ. கம்பெனிக்கு (கவர்ன்மென்டுக்கு) எது லாபமோ அதை தான் செய்வேனு பேச ஆரம்பிச்சாரு. தனியார் மயமென்ன?( எங்க ஊரு ஷுகர் ஃபேக்டரியையே தாரை வார்க்க பார்த்தாரு தலை ! இப்போ அது லாபத்துல நடக்கலையா என்ன? ) பொருளாதார சீர்திருத்தம் என்ன ? தகவல் தொழில் நுட்ப புரட்சின்னு அலப்பறை என்ன? நானும் தூங்கமாட்டேன். உங்களையும் தூங்க விடமாட்டேன்னு வசனம் என்ன?
அவர் ஒரு ட்ரான்ஸ்ல போயிட்டாரு. யதார்த்தத்துல இருந்து விலகிப்போயிட்டாரு.
பன்னா பன்னானு தன் பேச்சையே பேசிக்கிட்டு (அதுவும் ஒரு உணர்ச்சியோ,ஏற்ற இறக்கமோ இல்லாத இயந்திர குரல். கொச்சை வார்த்தைகள், ராங்க் ப்ரனவுன்ஸேஷன். கேட்க சகிக்காது. )
ஒரு பக்கம் பச்சதனம் பரிசுப்ரதான்னிட்டு ( பசுமைமயம், சுத்தம்) ம்ரம் நடவேண்டியது. மறுபக்கம் சாலை விரிவாக்கம்னுட்டு லட்சக்கணக்கான மரங்களை வெட்டி தள்றது. பரிசுப்ரதான்னிட்டு ஐ.ஏ.எஸுங்களை யெல்லாம் சுண்ணாம்பு அடிக்க வைக்க வேண்டியது. பெண்டிங்க ஃபைல் ஒழிப்புனு ஒரு ஸ்கீம் கொண்டாந்தாரு. நல்லாருக்கு. உண்மையிலயே பெண்டிங்க ஃபைல் ஒழிப்புனு நடந்திருந்தா மூணு மாசத்துலயோ ,ஆறு மாசத்துலயோ பெண்டிங்க் ஃபைல்ஸ் எல்லாம் ஒழிஞ்சுரனும்லியா.. ஊஹூம் . ஆட்சி காலம் பூரா நடந்து ஆஃபீசருங்களுக்கு பைல்ஸ் வந்ததுதான் மிச்சம்.
சனத்துக்கு ஆப்பு வச்சிட்டோம்னு அவருக்கே தோணிட்டாப்ல இருக்கு. தான் பண்ண குழப்படியையெல்லாம் மறைக்க போஸ்ட் கார்ட் எழுதுங்க ரெஸ்பாண்ட் ஆகறேன்னு டி.வி ல வரேன் கேள்வி கேளுங்க, உழவர் சந்தை ,ஜன்ம பூமினு கதை பண்ணி இந்திரஜாலமெல்லாம் பண்ண ஆரம்பிச்சாரு. ஜன்ம பூமினு ஒரு ஸ்கீம்.
(தொடரும் .. வழக்கமான சம்பிரதாயபரமான தொடரும்னு .. நினைச்சிராதிங்க. நிஜமாவே தொடரும்

2 comments:

  1. Anna,

    Sorry about the lost comment. Accidental entry. Please delete that.

    Meanwhile, this is again a well-researched and well-scripted work. You have a special nose for digging the truth. Keep doing that so that we mortals can get to know what is happening behind the scenes. Meanwhile, 'Enakku 22 Unakku 32' ennachunganna?

    ReplyDelete
  2. நன்றி பிரபு அவர்களே,
    உண்மை ரொம்ப செக்ஸியா நிர்வாணமா இருக்கும். அதை தரிசிக்கிற ஆண்மை தான் குறைஞ்சிக்கிட்டே போவுது.

    ReplyDelete