அண்ணே ,வணக்கம்னே ,
இன்னைக்கு "உனக்கு 22 எனக்கு 32" தொடர்கதை யோட லேட்டஸ்ட் அத்யாயத்தையும் போட்டிருக்கேன் . அதை படிக்க இங்கே அழுத்துங்க
ஜோதிடக்கலையின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நம்பிக்கைக்கான அடித்தளம் அவரவரது சொந்த அனுபவம் என்றால் நான் இதை வரவேற்கிறேன்.யதார்த்த நிலை அப்படியில்லையோ என்று தோன்றுகிறது.
காரணம் ஜோதிடம் என்பதை ஜோதிடர்களாகட்டும், ஜோதிட ஆர்வலர்களாகட்டும் ஜோதிடத்தை நம்பிக்கை சார்ந்த ஒன்றாகவே பார்க்கிறார்கள். ஜோதிடம் ஒரு விஞ்ஞானம். அது வெறுமனே நம்புபவர்களுக்கு மட்டுமானதல்ல ஒட்டு மொத்த மனித குலத்திற்கானது. இதை ஒட்டு மனித குல மேன்மைக்கு பயன்படுத்த வேண்டுமானால் ஜோதிடர்களாகட்டும், ஜோதிட ஆர்வலர்களாகட்டும் ஜோதிடத்தை விஞ்ஞான நோக்குடன் அணுக கற்கவேண்டும்.
ஜோதிடரை கேட்டால் "என்னமோங்க யார் விஷயத்துல எப்படி நடக்குதோ நடக்கலையோ என்னை பொருத்தவரை நான் சொன்னதெல்லாம் நடக்குது" என்று சொல்லும் நிலைதான் உள்ளது.
ஜோதிட ஆர்வலரை கேட்டால் " எனக்கு யார் மேலயும் நம்பிக்கையில்லைங்க பலானவர் சொன்னாதான் எனக்கு நடக்கு என்று சொல்லும் நிலையுள்ளது.
இவை ஜோதிடத்தின் விஞ்ஞான தன்மையை கடுமையாக பாதிக்கின்றன. ஜோதிடர்கள் ஜோதிட நிபுணதுவத்தை தம் தனி நபர் சொத்தாக பாவிப்பதும், ரகசியமாய் வைப்பதும் கூட இதற்கு ஒரு காரணம்.
ஜாதகசக்கரத்தில் இன்ன கிரகம் இன்ன இடத்திலிருந்தால் இந்த பலன் என்று அனேக ஜோதிஷ கிரந்தங்கள் கூறுகின்றன. இவற்றை ஜஸ்ட் மனப்பாடம் செய்து அப்படியே வாந்தி பண்ணும் நிலைதான் உள்ளது.
எங்கோ ஆகாய வெளியில் பல கோடி மைல் தூரத்தில் உள்ள கிரகங்கள் மனிதனை எப்படி பாதிக்கின்றன ? என்று கேள்வி கேட்டால் எத்தனை ஜோதிடர்களால் பதில் சொல்ல முடியும் என்பது கேள்விக்குறியே.
மனித உடல்,மனம்,மூளை மீதான கிரகங்களின் பாதிப்பு உண்மையேயானாலும் ரிஷிகள் ,மகரிஷிகளேயானாலும் சரி என்றோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் எழுதி வைத்த பலன் அப்படியே நடக்கும் என்பதற்கு என்ன கியாரண்டி.அவிக முட்டாளுங்கனு சொல்ல வரலை.
அவிக பலன் எழுதின காலத்துக்கும், இந்த காலத்துக்கும் எத்தனையோ மாற்றங்கள் வந்திருக்கு. அப்போ மன்னராட்சி, இப்போ மக்களாட்சி, அப்போ மாட்டுவண்டி,குதிரை வண்டிதான் வாகனம். மண் ரோடு. சனத்தொகை கம்மி. ட்ராஃபிக் கம்மி. இன்னைக்கு சிக்ஸ் ட்ராக் ரோடிருக்கு, லட்ச ரூபால இருந்து கோடி ரூபா வரை விலையுள்ள கார்கள் இருக்கு. இப்ப கூட இது பைக்குன்னா பைக்கில்ல, காருன்னா காரில்லைனு ஒரு விசித்திரமான வாகனத்தை விட்டிருக்காங்க.
அப்போ சனம் சூரியன் உதிக்கறப்பவே தாங்களும் விழிச்சு , வேலை வெட்டினு பார்த்து சூரியன் அஸ்தமிக்கிறப்பவே வீட்டை போய் சேர்ந்து முடங்கிக்கிட்டிருந்தாங்க. கூட்டுக்குடும்பம் இருந்தது. விவசாயம்தான் முக்கிய தொழிலா இருந்தது. சொந்தம்,பந்தம்ங்கற அட்டாச்மென்டெல்லாம் பக்காவா இருந்தது. பொம்பள பசங்க 17 ,18 வயசுல மெச்யூர் ஆகிட்டிருந்தாங்க. பத்து வயசுலயே கல்யாணம் நடந்து கிட்டிருந்தது.காத்து,தண்ணி, எரி பொருள் எல்லாமே ஃப்ரீ ஆஃப் காஸ்ட்ல கிடைச்சிட்டிருந்தது. அப்பல்லாம் பண்டிகை காலத்துல தான் அரிசி சோறு. இப்போ 365 நாளும் அதுவே .
அப்போ டீ,காஃபி கிடையாது. இப்போ அது இல்லன்னா ஆயே வராது. அப்போ படிப்புன்னா இலக்கணம்,இலக்கியம் தான் படிப்பு. இப்போ ?இப்படி தனி மனிதவாழ்வு மட்டுமில்லே, வானும்,மண்ணும்,கடல் காற்றும் ஏன் தாய்பால் கூட மாறியிருக்கு.
மேற்படி ரிஷிகள்,மகரிஷிகள் எழுதிவச்ச பலன்களை இன்னைக்கும் ஈயடிச்சான் காப்பி மாதிரி சொல்லிக்கிட்டிருந்தா வேலைக்காகுமா? இந்த கோணத்துல யாராவது யோசிச்சதுண்டா?
ஜோதிஷம் உண்மைன்னா, அது ஒரு விஞ்ஞானம்னா எந்த ஜோதிடர் யாருக்கு பலன் சொன்னாலும் அது நடக்கனுமில்லயா? ஜோதிடர்கள் தாங்கள் சொல்லி நடந்த விஷயங்களை மட்டும் தினசரிகளில் விளம்பரமாக கொடுத்து பந்தா பண்ணுகிறார்களே தவிர தாம் பலன் சொல்லி நடக்காமல் போன சந்தர்ப்பங்களை மட்டும் வசதியாய் மறந்து போகிறார்கள்.
நான் இந்த துறைக்குள் அடியெடுத்து வைத்தது வெறுமனே சுய நலம் கருதிதான். ஒரே ஆசாமி, பிளாட்ஃபாரத்து ஆசாமி சொன்ன பலன் ஆக்யுரேட்டாய் நடந்துவிடவே என் ஈகோ மரண அடி வாங்கியது. அதன் பின் அதே ஆசாமியை அணுகியும் அவரால் சரியாய் பலன் சொல்ல முடியாமல் போயிற்று. அடுத்தடுத்து நான் அணுகிய நபர்களும் ரொம்பவே அந்தாசா பலன் சொல்லவும்தான் நானே களத்துல குதிச்சேன்.என் எதிர்காலத்தை நான் முழுக்க அறியவே ஜோதிஷம் கற்றேன்.
எத்தனை ஜோசியர்களுக்கு ஜோசியத்து மேல நம்பிக்கையிருக்கோ எனக்கு தெரியாது. ஆனால் நான் நம்பறேன். பாருங்க நான் நம்பிக்கைங்கற வார்த்தைய உபயோகிக்கிறேன். நம்பிக்கை என்ற வார்த்தையே அது தர்கத்துக்கு அப்பாற்பட்ட ஒன்று என்பது மாதிரி தொனிக்கிறது.
1989 முதல் என்னை அணுகிய ஆர்வலர்களுக்கு நான் என்ன சொன்னேன் என்ன நடந்தது. எத்தனை சதவீதம் சக்ஸஸ் ஆச்சு, எத்தனை சதவீதம் ஃபெயில் ஆச்சுங்கற தகவல் ஸ்தூலமா இல்லாட்டியும் ஒரு குன்சா ஞா இருக்கு. ரஜினி ஸ்டைல்ல சொன்னா கியாபகம் இருக்கு. ஆனால் இது ஆராய்ச்சிக்கு உதவாதுதான் .
இருந்தாலும் ஆயிரம் பேரை கொன்னா அரைவைத்தியங்கற மாதிரி பல பலன்கள் தவறினாலும் அது ஏன் தவறிப்போச்சுனு விடாப்பிடியா ஆராய்ச்சி பண்ற ஈகோ, பிடிவாதம்,சின்சியாரிட்டி இருந்ததால அனுபவ ஜோதிடம் னு தனியா ஒரு ஸ்டைலை உருவாக்கியிருக்கேன்.
அனுபவ ஜோதிடத்தோட சாரம் என்னடான்னா ஜாதக சக்கரத்துல ஒரு கிரகம் நின்னிருக்கிறதை பார்த்ததுமே படபடனு பலனை சொல்லிர்ரதுல்ல. முதல்ல ஒன்னு ரெண்டு பாயிண்டை சொல்லி அது நடந்திருக்கா தெரிஞ்சிக்கனும். ஒரு வேளை நடக்கலன்னா ஏன் நடக்கலை அந்த கிரகஸ்திதியை இன்ஃப்ளுயன்ஸ் பண்றமாதிரி வேற ஏதானா அம்சமிருக்கா பார்க்கனும். உ.ம் கிரக பாதசாரம், பாவச்சக்கரத்துல பலம் பெற்றுள்ளது
இப்படி ஒவ்வொரு கிரகத்தையும், ஒவ்வொரு பாவத்தையும் செக் பண்ணிக்கிட்டு அதுக்கப்புறம்தான் பலன் சொல்லனும்.
லக்னம்னா அது ஜாதகரோட உடல், மனம்,புத்தியை காட்டுது. லக்னத்துல நின்ன கிரகம் ஜாதகரோட உடல் மேல வேலை செய்யலாம், மனசு மேல வேலை செய்யலாம். இல்லே புத்தி மேல வேலை செய்யலாம். இத்தனை ஆப்ஷன் இருக்கு. லக்னத்துல சனியிருக்காருனு வைங்க . சனி பாடி மேல வேலை செய்தா பார்ட்டி கருப்பா இருக்கலாம், கால் ஊனமா இருக்கலாம். இரும்பு ,ஆயில் தொடர்பான வேலை செய்யலாம். ஒரு வேளை மனசு மேல வேலை செய்யறதா இருந்தா மனுஷன் கஞ்ச பிசினாறியா இருப்பார். கூலிக்கு மாரடிக்கிற் பார்ட்டியா இருக்கலாம். புத்தி மேல வேலை செய்தா ட்ராப் அவுட்டா இருக்கலாம். ( ஒரு வேளை சனி யோகத்தை தரக்கூடிய ஜாதகமா இருந்து , சனி பலம் பெற்றிருந்தா இந்த பலன் தலை கீழா மாறும்)
ஆக கிரக பலன் நீங்கள் கருப்பா, சிவப்பா, மணமானவரா இல்லையா? மணமாகாவிட்டால் பலான பெண்களை அணுகுபவரா இல்லையா? அப்பா அம்மாவை வைத்து போஷிப்பவரா இல்லையா? நல்லது கெட்டதுக்காவது அக்கா,மாமா, அண்ணா,தம்பிகளை கூப்பிடறவரா இல்லையா? வேலைக்காரவுங்களுக்கு ஒழுங்கா சம்பளம் கொடுக்கிறவரா இல்லையா இப்படி பல அம்சங்களை பொருத்து மாறிவிடுகின்றன.
எனவே கிரக நிலையை வைத்து ஜோதிடர் கூறும் அனைத்து நற்பலன்களும் நடப்பதில்லை. அதே மாதிரி தீயபலன்களும் அனைத்தும் நடந்துவிடுவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இவற்றை குறித்து 1989 முதல் ஆராய்ந்து வருகிறேன்.அவ்வப்போது பதிவுகளும் போட்டு வருகிறேன். இந்த முயற்சி தொடரும்.
எனவே ஜாதகத்தை பார்த்து ஜோதிடர் கூறும் பலன்கள் 100 சதம் ஏற்கெனவே நடந்திருக்க வேண்டும் என்ற அவஸ்யமில்லை. நீங்கள் அவரை அணுகும் சமயம் நடக்காத பலன்கள் எதிர்காலத்தில் நடக்கலாம். நடக்காமலும் போகலாம்.
ஆகவே ஜோதிடர் கூறும் பலன் 60 சதவீதம் நடந்தாலே அவர் சூப்பர் ஜோதிடர் என்பதை மனதில் வைத்து பலனை படிக்கவும் .
முக்கிய விஷயம் என்னவென்றால் ஜோதிஷம் வேதத்துல ஒரு பாகம்னு பம்மாத்து பண்ணி, அதை தங்கள் இனத்துக்கு மட்டுமே உரிமையானதாக்கிக்கிட்டு ஆர்வமிருக்கோ இல்லையோ, தகுதி இருக்கோ இல்லையோ ஜோதிஷத்தை தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுக்கொடுத்தபடி , பிராமணர்களில் பலர் இல்லாத பொல்லாத சீக்ரஸி மெயிண்டெயின் பண்ணதால இந்த விஞ்ஞானம் தலைமுறைக்கு தலைமுறை ஹோல்சேலா எக்சேஞ்ச் ஆகாம, பார்ஷியாலிட்டி காரணமா பார்ஷியலா தான் எக்ஸ்சேஞ்ச் ஆச்சு. இப்போ நாங்க சொல்ற ஜோசியமெல்லாம் ஜோசியமே இல்லனு கூட சொல்லலாம்.
என்ன செய்ய அவிக அன்னிய படையெடுப்பு சமயத்துல அன்னியர்கள் பூட்ஸை நக்கி, பர பாஷை கத்துக்கிட்டு துபாஷிகளா மாறி கிச்சன் கேபினட்டா தயாராய்ட்டாய்ங்க.ராஜ சேவைக்கே அங்கிதமாயிட்டாய்ங்க.
வேதங்களை போலவே ஜோதிஷத்தையும் குப்பைல போட்டுட்டாங்க. என்னை மாதிரி சூத்திர பசங்க அதை பொறுக்கி எடுத்து ஸார்ட் அவுட் பண்ணி ஏதோ கதை பண்ணிக்கிட்டிருக்கம். ஹூம் .. நம்ம சனம் கொடுத்து வச்சது அவ்ளதான்.
இப்பவும் சான்ஸ் இருக்கு ஐபிஎல், அது இதுனு அலையற இளைஞர் கூட்டம் இந்த தலைமுறைல மிச்சமிருக்கிற ஜோதிஷ (விஞ்) ஞானத்தையாவது பாதுகாக்க முயற்சி பண்ணனும். அடுத்த தலைமுறைக்கு இதை சிந்தாம சிதறாம எக்சேஞ்ச் பண்ண நான் காத்திருக்கேன்.
No comments:
Post a Comment