Thursday, April 8, 2010

"அந்த" ஐந்து நிமிடத்துக்கான பொய்கள்

அண்ணே வணக்கம்னே,
நமக்குள்ள இருக்கிற மிருகம் நம்மை சந்திக்க வந்தா எப்படியிருக்கும்னு ஒரு கவிதை, தத்துவம் , இத்யாதி கலந்த உரையாடலையும் தனிப்பதிவா போட்டிருக்கேன்.அதை படிக்க  இங்கே    அழுத்துங்க‌

  • "அந்த" ஐந்து நிமிடத்துக்கான பொய்கள்

நாற்பதில் நாய் குணம்?
ஆம்..படைப்பின் பால்
படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.
என் தந்தை அதிகப்படி
வரதட்சிணை கேட்டுஎன் தாயை
கொளுத்தியிருந்தால்?
உதவாக்கரை அரசாங்கங்களின்
பேச்சைக் கேட்டுகு.க செய்திருந்தால்?
அவனே மாவா,குட்காவுக்கு பழகி
ஆண்மை இழந்திருப்பின்?
மூன்றாவது வாரிசாக
நான் பிறந்திருக்க முடியுமா என்ன?
ஆம் ..நாற்பதில் நாய் குணம்?
ஆம்..படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.

பெண்ணாய் பிறந்திருப்பின் மாதவிலக்கு உதிரத்தின்
நாற்றம் முகர்ந்து , அந்த ஐந்து நிமிடத்துக்கான
பொய்களை சீரணித்து
அவன் என்னுள் வருகையில் பூரணித்து
அன்பே பகிர்ந்து,
அன்பை இரந்து,
அது கிட்டாது பன் முறையும்,
சீதைக்கு நிலமகளாய், கியாஸ் ஸ்டவ்
சரண் தர ஒரு முறையும்
எரிந்து போயிருப்பேன்

எவன் வீட்டு கட்டிலிலோ
கசங்கி , சமையலறையில் பொருமி,
குளியலறையில் அழுது
முடிந்திருப்பேன்.
ஆணாய் பிறப்பித்து பெண்மனம் தந்து
அன்பே பகிர்ந்து , அன்பு மறுத்தால்
இரங்கும் கலை தந்த உன்னத நிலை தந்த
படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.

இதர சகாக்கள் போல் ஹோமோ உணர்வுகளால்
உந்தப்பட்டு அவர்களுடன் சேர்ந்து
மாங்காய் அடிக்கவும்,
நீச்சல் அடிக்கவும் போகாது
இயற்கை வகுத்திட்ட விதி வழி மதி செல்ல
மான் விழி மாதரொடு இணங்கி
உரையாட உறவாட தூண்டிய
படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.

ஆசன பருவத்தில் நின்றுவிடாது
மலர் கணைகள்  தொடுத்து
மலர் மஞ்சம் குறித்த கனவுகளை
காணும் தீரம் தந்த, பகிர்ந்து மகிழும்
நட்பு தந்த , சூழல் தந்த
படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி. 

காம ஜுரம் தகித்த போதும்
கன்னியர் உறவில் ஊடல் எனும் பெயரில்
அவர் இட்ட நிபந்தனைகள் தமை ஏற்காதே
தன்மானம் தனை இங்கே
உயிராய் காத்திடும் உறுதி தந்த,
தலைவன் உறவு தந்த
படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.

காமத்திலிருந்து கடவுளுக்காய் பயணம் செய்து
காமம் "கட" பின் அவன் உன் "வுள்"  என்று
இதய வானில் வான வில் வளைத்து
ஞான அம்பெய்திய உள்ளுணர்வு சரிதான் என்று
உறுதி செய்த ஓஷோவின் ஒரு சொல் எனை
சேரச்செய்திட்ட படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.

ஆம் நாற்பதில் நாய்குணம்.

3 comments: