காதல் தூயது. காதலர்கள் சுய நல மாசு கொண்டவர்களாயிருக்கலாம். நட்பு புனிதமானது சில நண்பர்கள் துரோகிகளாய் மாறலாம். அதே மாதிரி ஜோதிஷ்யம் புனிதமானது. சில ஜோதிடர்கள் டுபாகூர் பார்ட்டிகளாய் இருக்கலாம். ( நான் உட்பட)
ஜோதிஷ ஆர்வலர்கள் (ஜோசியம் பார்த்துக்கறவுக) டுபாகூராய் இருக்கலாம். ( உம். சரவணபவன் அண்ணாச்சி போன்றவர்கள்)
ஆனால் ஜோதிடம் டுபாகூர் இல்லே. மனித உடல்,மனசு மேல சூரிய ,சந்திரர்களோட எஃபெக்ட் என்னனு ஓரளவு தெரிஞ்சிருக்கும். நம்ம பங்குக்கு நாமளு ஒரு பாயிண்டை சொல்லிவைப்பம்.
இப்போ அனல் மின்சாரம், புனல் மின்சாரம், அது இதுனு நிறைய மின்சாரம் இருக்கு. சனம் பெருத்து போய் ,திருட்டு பயம் காரணமா போதிய வெளிச்சம்,காத்து வராம தீப்பெட்டி சைஸ்ல வீடுகளை கட்டிப்போட்டதாலா பவர் கட்டும் இருக்கு அது வேற விஷயம்.
சப்போஸ் வெறும் சோலார் பவர் மட்டும்தான் இருக்குதுனு வைங்க.பேட்டரில சேவ் ஆகியிருந்த பவர் ராத்திரிக்கே காலியாயி நில் பவராயிருச்சுனு வைங்க.டைரக்டா சூரியன்லருந்து ஜெனரேட் ஆகற பவர் மூலமாவே உலகம் ஓடிக்கிட்டிருக்குனு வைங்க. திடீர்னு சூரியன அணைஞ்சி போயிட்டாருனு வைங்க என்னாகும் ?
இதுவாச்சும் மனித உடலுக்கு வெளிய இருக்கிற மின் உபகரணங்கள், உயிர்காக்கும் மருந்துகளை காப்பாத்தற ஃப்ரிட்ஜ் இத்யாதிய தான் பாதிக்கும். இந்த மனித உடல் எதை தின்னு வாழுது? தாவரங்கள் சூரிய ஒளியிலருந்து தயாரிக்கிற ஸ்டார்ச்சை சாப்பிட்டு வாழுது. ஒருவாரம் சூரியனே உதிக்கலன்னா என்னாகும்? சூரியனுக்கும் மனித உடலுக்கும் இருக்கிற லிங்க் இது. இதை மறுக்க முடியுமா?
இப்போ இதர கிரகங்களோட எஃபெக்ட் என்னனு இப்ப பார்ப்போம்.
விந்துவுக்கு தெலுங்குல சுக்கிர கணாலு என்று பெயர். தெலுங்குக்கு தாய் வீடு சமஸ்கிருதம். அதுல விந்துவை என்ன சொல்றாங்கனு நமக்கு தெரியாது. சிற்றின்பம், விந்து உற்பத்திக்கு சுக்கிரனே காரகன். இந்த லிங்க் எப்படி வந்தது?
ஏன் சூரிய கணாலுனு சொல்லலாமே, சந்திர கணாலுனு சொல்லலாமே சரிங்கப்பா இது வெறும் பெயர் விவகாரம்.
அந்த காலத்துல குஷ்ட ரோகத்தை க்யூர் பண்ண பச்சைக்கல்ல பஸ்மமாக்கி கொடுப்பாய்ங்களாம். பச்சைக்கல் புதனுக்குரியது. புதன் தான் தோல் வியாதிக்கெல்லாம் அதிபதி.
உலகத்துல நடந்த வெட்டு,குத்துக்கெல்லாம் காரணம் நிலப்பகுதிகளை பிடிக்கறதும்,காப்பாத்திக்கறதும்தான் இதெல்லாத்துக்குமே யுத்தகாரகனான செவ்வாய் தான் காரகத்வம் வகிக்கிறார்.
இப்படி நிறையவே சொல்லலாம். ஜோதிஷ ஆர்வலர்கள் இன்னும் நிறைய பேரு பைசா கொடுத்து பலன் தெரிஞ்சிக்கிட்டு இன்னும் கொஞ்சமா வசதியாயிட்டா இன்னும் நிறைய ரிசர்ச் பண்ணலாம் . எழுதலாம்.
ஜோதிஷம் கேட்பதே தொழிலா?
யாராச்சும் ஜோதிஷம் சொல்றத தொழிலா வச்சிருந்தா அதை புரிஞ்சிக்கலாம். (என்னைக்கேட்டா கண்டதையும் ஸ்பான்சர் பண்ற கம்பெனிக என்னை மாதிரி ஆளை ஸ்பான்ஸர் பண்ணிட்டா காசு வாங்காமயே ஜோதிட ஆலோசனைவழங்கலாம். அப்பத்தான் இன்னும் சுதந்திரமா,முலாஜா இல்லாம வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா பலன் சொல்லமுடியும்.) ஜோதிஷம் பார்த்துக்கறதையே தொழிலா செய்றவங்களை என்ன செய்ய? இப்படியும் இருக்கு சனம்.
நான் என் முதல் ஜோதிடனை சந்தித்தது 1989, ஜனவரி. ஜோதினாக அவதரித்தது 1990 மார்ச். அதாவது 15 மாதங்களில் ஜோதிடனாக மாறிவிட்டேன். இடைப்பட்ட காலத்தில் (இன்று வரை) நான் சந்தித்த ஜோதிடர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.ஆனால் மக்களில் நிறைய பேர் ஜோதிஷம் கேட்பதையே தொழிலாக கொண்டுள்ளனர்.
என்னிடம் இது போல் தொடர்ந்து வந்தால் கடுப்புல இருந்தா ஒரு நோயாளி தொடர்ந்து டாக்டரை பார்க்க வந்தா டாக்டருக்கு அவமானம்னு முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிடுவேன். ஒன்பத் இடமும் குளிர்ந்திருந்தா இங்கே சனிபிடிச்சவங்க தான் வருவாங்க. நீங்க வராதிங்க. இப்படி வரது நல்லதில்லேனு கழட்டி விடுவேன்.
டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட். ஜோசியங்கறது வருசத்துக்கு ஒரு தரமோ, தசை,புக்தி மாறும்போதோ இல்லே கோசாரத்துல சனி,குரு,ராகு ,கேது யார்னா மாறும் போதோ ,புதுசா எதுனா துவங்கும்போதோ மட்டும்தான் பார்க்கனும்.
குழந்தைங்க விஷயத்துல அதுக பிறந்ததும் என்ன மாதிரி நோய்கள் வரும், சுத்தப்பட்டவுகளுக்கு எதுனா சிக்கலிருக்கா இந்த மாதிரி தான் கேட்டு தெரிஞ்சுக்கனும். பத்தாம் கிளாஸ் முடிக்கிற வரை ஜாதகம் பார்க்கனுங்கற அவசியமே கிடையாது. பெரிசா ஏதும் பிரச்சினை தலைகாட்டற வரை (உ.ம் டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்துர்ரது)
பத்தாம் கிளாஸ் முடிச்ச பிறகு இல்லே குண்டு போட்ட பிறகு ஜாதகத்தை கொண்டு வந்து காட்டி இன்டர்ல எந்த சப்ஜெக்ட் எடுக்கலாம். அகடமிக்கா, டெக்னிக்கலானு கேட்கலாம். இன்டர் முடிஞ்சி ஸ்பெஷலைசேஷன் பண்றப்பயும் கேட்கலாம். படிப்பு முடிஞ்ச பிறகு வேலையா,தொழிலாங்கறத பத்தி கேட்கலாம்.
அதை விட்டுட்டு மாசாமாசம்,வாராவாரம் வர்ரதும் கேட்கிறதும் கிரிமினல் வேஸ்ட். என்ன இருந்தாலும் ஜோஸ்யங்கறது தனிப்பட்ட வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கற ஃபீலிங் எல்லாருக்குமே இருக்கு.
ஆனால் கொஞ்சம் மாத்தி யோசிச்சா கொஞ்சம் மெனக்கெட்டு ஜோசியத்தை அப்ளை பண்ணா எத்தனையோ அசம்பாவிதங்களை தடுக்கலாம்.
உ.ம்
இப்போ ஸ்கூல் வேனெல்லாம் படக்கு படக்குனு கவுந்து போவுது.பிள்ளைங்க பொட்டு பொட்டுனு செத்து போவுது. கொஞ்சமா மெனக்கெட்டு கானென்ட்ல படிக்கிற பிள்ளைங்களோட பிறப்பு விவரங்களை சேகரிச்சு சனி,செவ்வாய் சேர்க்கை பார்வை ( 3,6,10,11 தவிர) இருக்கிற ஜாதகங்களை பிரிச்சு அவிகளை இன்னும் கொஞ்சம் கேர்ஃபுல்லா பார்த்துக்கலாம். அப்படியே கோசாரத்துல யார் யாருக்கு செவ்வாய் 8,12 மாதிரி இடத்துல இருக்காருனு பார்த்து கேர் எடுத்துக்கலாம். முக்கியமா ட்ரைவர்கள் விஷயத்துல கேர் எடுக்கலாம்.
அரசு போக்குவரத்துக்கழக ட்ரைவர்கள் விஷயத்தில் கேர் எடுத்தால் எத்தனையோ ஆயிரம் உயிர்களை காப்பாற்றலாம்.
No comments:
Post a Comment