Saturday, March 6, 2010

சீஃப் மினிஸ்டருக்கு 10 ரூபா எம்.ஓ


ஒரு மானில முதல்வருக்கு பத்து ரூபா எம்.ஓ அனுப்பறஅளவுக்கு முருகேசன் சவுண்ட் பார்ட்டியா இல்லை அந்த முதல்வர் தான் ஷெட் பார்ட்டியான்னு குழம்பிராதிங்க. எங்க ஆந்திர மானில முதல்வர் (முன்னாள் ) சந்திரபாபுவுக்கு நான் எம்.ஓ அனுப்பின கதைய தான் இந்த பதிவுல படிக்கப்போறிங்க.

எச்சரிக்கை
அய்யாமாரே, மறுபடி அவள் என்ற தொடர்கதை உனக்கு 22 எனக்கு 32 ஆக நாமகரணமாயி தொடருது இந்த தொடரோட லேட்டஸ்ட் அத்யாயத்தை படிக்க (துடிக்க) இங்கே அழுத்துங்க‌

உங்கள்ள பலரும் கூரியர், மணி ட்ரான்ஸ்ஃபர் யுகத்துல பிறந்திருப்பிங்கன்னு யூகம். 1967ல பிறந்த எனக்கெல்லாம் எம்.ஓ வர்ரதும், அனுப்பறதும் சகஜம். சாதாரணமா பத்திரிக்கைல தப்பி தவறி எதுனா பப்ளிஷ் ஆனா , தப்பி தவறி பத்துலருந்து 50 ரூபாய்க்குள்ள எம்.ஓ வரும். எதாச்சும் புக் தருவிக்கனும்னா எம்.ஓ அனுப்புவம். ஆனால் சி.எம்முக்கு எம்.ஓ அனுப்பனுங்கற ஐடியா ஏன் வந்தது. அதை எந்த திமிர் பிடிச்சவன் டெலிவரி வாங்கினான்ற விவரங்களை இங்கே சொல்லத்தான் போறேன்.

நான் இந்தியாவ பணக்கார நாடாக்க ஏதோ ஒரு திட்டம் போட்டேன். அதுக்காக ரொம்பவே மெனக்கெட்டேன்னு உங்களுக்கு ஒரு ஐடியா இருக்கலாம். திட்டத்தின் முக்கிய அம்சங்களை அறிய இங்கே அழுத்துங்க. (இந்திய திரு நாட்ல எந்த கவர்ன்மென்ட் ஆஃபீசுக்கு போனாலும் அழுத்தினாதான் வேலை நடக்கு. இந்த வலையுலகத்திலும் அழுத்தினா தான் வேலை நடக்குது ..என்ன ஒரு பொருத்தம் பாருங்க.)

ஆப்பரேஷன் இந்தியா 2000 ங்கறஇந்த திட்டத்தோட 200 பிரதிய லோக்சபா ஸ்பீக்கர் ஆஃபீசுக்கு பதிவு தபால்ல அனுப்பினேன்.அன்றைய ரூலிங்க் கொய்லிஷன் எம்.பிக்களுக்கு கொடுக்க சொல்லி கேட்டிருந்தேன். அவிக கண்டுக்கவே இல்லை.

நூத்துக்கணக்குல ரிமைண்டர்ஸ் அனுப்பின பிறகு அது மாதிரி எந்த ப்ளானும் வரவேயில்லை. ஓடி போடான்னு பதில் அனுப்பினாங்க.

அப்புறம் போஸ்டல் டிபபர்ட்மென்டை கான்டேக் பண்ணி ப்ரூஃப் ஆஃப் டெலிவரி வாங்கி அனுப்பினென். அதுக்கப்புறம் நீங்க அனுப்பினேன்னு சொல்றிங்க. ஆதாரமும் காட்டறிங்க ஆனா எவ்ளதான் தேடிப்பார்த்தாலும் நீங்க சொல்ற பார்சலை இங்கே லொக்கேட் பண்ண முடியலை . நீங்க பெரிய மனசு பண்ணி ஒரே ஒரு பிரதி அனுப்புங்க. நாங்களே பிரதியெடுத்து குடுத்துர்ரம்னு பதில் அனுப்பினாங்க. அனுப்பினேன்.

அதுவும் பத்திரிக்கைக்கு அனுப்பின கதையா போச்சு ( கிணத்துல போட்ட கல்லுங்கறதுக்கு பதில் இந்த பிரயோகம்).அதுக்கப்புறம் நம்ம வயித்தெரிச்சல் வேலை செய்தோ விதி முடிஞ்சு போயோ ஸ்பீக்கர் பாலயோகி ஹெலிகாப்டர் விபத்துல போய் சேர்ந்துட்டார்.அவருக்கு பிறகு பிஎம். சயீதுன்னு நினைக்கிறேன்.அவர்தான் அப்போ டெபுட்டி ஸ்பீக்கர் .அவரை கலாய்க்க அம்பது ரூபா போஸ்டல் ஆர்டர் அனுப்பினேன். என் ப்ளானை எனக்கு திருப்பிகுடுங்கன்னு. அதையும் ஸ்பீக்கர் அலுவலகம் ஆசனத்துல செருகி வச்சிக்கிட்டு இருக்கு. நிற்க.

இந்த இழவெல்லாம் எடுக்கறதுக்குள்ளவே நான் திவாலாயிட்டன். கூரியர் கம்பெனிங்க பிரபலமாக ஆரம்பிச்சுருச்சு. கூரியலர்ல அனுப்பினா பத்து ரூபாதான். ஆனால் தில்லிக்கு அனுப்பினான் ஜாஸ்தி சார்ஜ் பண்றான்.என்னடா பண்ணலாம்னு யோசனை பண்ணி
ஐதராபாதுல இருக்கிற சந்திரபாபுவ டார்கெட் பண்ணேன்.

அப்ப அவர் தான் சி.எம்."போஸ்ட் கார்ட் போடுங்க பதில் போடறேன்.. ஐடியா கொடுங்க ஃபாலோ பண்றேன், புகார் பண்ணுங்க நடவடிக்கை எடுக்கேன்னு "ஒரே அனல் . ( என் ஐடியல் ஹி என்.டி.ஆருக்கு ஆப்பு வச்சி சி.எம். நாற்காலில தொத்திக்கிட்டதில்லாம அடுத்து வந்த எலக்சன்ல பா.ஜா.க துணையோட மறுபடி சி.எம். ஆயிருந்தாரு.) இவருக்கு 1997 லயே சாஸ்திரத்துக்கு என் ப்ளானோட ஒரு காப்பிய அனுப்பியிருந்தேன். அத பேஸ் பண்ணிக்கிட்டு சந்திரபாபுவுக்கு ரிமைண்டர் மேல ரிமைண்டர் அனுப்பி குடைச்சல் கொடுக்க ஆரம்பிச்சேன்.

1999 லருந்து 2002 ஏப்ரல் வரை இப்படி சரமாரியா கடிதக்கணைகள் தொடுத்து, தெலுங்கு தினசரிகள்ள ஸ்டேட்மெண்ட் எல்லாம் கொடுத்து என்னென்னவோ பண்ணி வச்சிருந்தேன். மேற்படி ஸ்டேட்மெண்டையெல்லாம் ஜெராக்ஸ் எடுத்து சி.எம் ஆஃபீசுக்கு அனுப்பறது வாடிக்கை.

தூங்கறவனை எழுப்பலாம்.தூங்கற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியுமா என்ன?
அப்போ கலாம் அய்யா ஜனாதிபதி. பயங்கர சீன் எல்லாம் போடுவார். அவருக்கு ஒரு புகார் அனுப்பினேன். அவிக சி.எம். ஆஃபீசுக்கு என் புகாரை ஃபேக்ஸ்ல அனுப்பினாப்ல இருக்கு. சி.எம்.செக்ரட்டரி ஒருத்தர் அது மேலயே எனக்கு நோட் போட்டு அனுப்பினார். சி.எம் முன் வைக்க உங்க ப்ரப்போசலை அனுப்புங்க இதான் சாரம். உடனே அனுப்பினேன். இது நடந்தது 2002, ஆகஸ்ட் மாசம்

இதனால எனக்கோ , நம்ம திட்டத்துக்கோ ஒரு மயிரும் பேரலை. ஆனா பாபு மட்டும் செப்டம்பர் மாசம் 1 ஆம் தேதி கட்சி ஆண்டு விழால " கங்கை காவிரி இணைப்பாலதான் நாடு செழிக்கும்"னு ஒரு ஸ்டேட்மென்ட் விட்டாரு. அவரு அரசியலுக்கு வந்து எந்த நாளும் கங்கை காவிரி இணைப்பை பத்தி பேசினவரில்லே. மொத்தத்துல ஆ.இ திட்டத்துல இருந்து ஒரு பாயிண்டை எடுத்து விட்டு பேர் வாங்கிர பார்த்தார்.நானு வயிறெரிஞ்சு செத்தேன். மத்த படி நம்ம ப்ளான் விஷயாத்துல ஒரு ல..டா முன்னேற்றமும் இல்லை . இது நடந்தது 2002 ,செப்டம்பர் மாசம்.

மறு வருசம் ஏப்ரல் 22 ஆம் தேதி சி.எம்.க்கு என்னாது சீஃப் மினிஸ்டருக்கு பத்து ரூபா எம்.ஓ அனுப்பினேன்.

அப்பல்லாம் பாபு அரசாங்கம் மக்களுக்கு எதையும் / குடி நீர் ,மருத்துவ வசதி உள்பட இலவசமா தரக்கூடாதுன்னு ஓதிக்கிட்டிருந்தார்.

யப்பா நீ தான் இலவசமா ஒன்னுமே செய்ய மாட்டியே இந்தா மாரி உங்க செக்ரடரி ஆத்தரைஸ்டா கேட்டாருன்னு ப்ளான் ஒன்னு அனுப்பினேன் அதுக்கு பதில் போட யூஸர் சார்ஜ் எதுனா கட்ட வேண்டியது இருந்தா இந்த ரூபாய வாங்கிக்க பதில் போடுன்னு சொல்லியிருந்தேன். எம்.ஓ டெலிவரி ஆயிருச்சு. அக்னாலட்ஜ்மென்ட் வரலை. நான் உஷாரா போஸ்டல் டிப்பார்ட்மென்ட்லருந்து பேமெண்ட் ரெசிட் வாங்கி வச்சுக்கிட்டேன். சி.எம். ஆஃபீஸ் சிண்டு என் கைல வந்தது. அதை முதல்ல அந்த காலத்து எதிர்கட்சி தலைவர் ஒய்.எஸ் .ஆருக்கு தான் கோர்த்துவிட்டேன். ஆனால் காங்கிரஸ் அப்போ அவர் சாதாரண கதர் சட்டைதான். ( அவரு மானிலம் முழுக்க பாதயாத்திரை ஸ்டார்ட் பண்ண பிறகுதான் பல சக்தி வாய்ந்த ஆத்மாக்கள் அவருக்குள் பிரவேசமாகி தூக்கிருச்சுங்க)

மாவட்ட நுகர்வோர் மன்றத்துக்கு புகார் ஒன்னு தட்டி விட்டேன். நேர்ல கூப்டு அதை எப்படி எழுதனும், எத்தனை காப்பி தரனும்னெல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க. செய்தேன். கேஸ் போட்டு ஜெயிச்சு என்னத்த கிழிக்க. நம்ம திட்டம் மானிலம் முழுக்க பேசப்படனும் அதானே நம்ம நோக்கம். உடனே தெலுங்கு தினசரிகளுக்கு ஸ்டேட்மென்ட் கொடுத்தேன். வார்த்தா காரன் மெயின் எடிஷன்ல தூக்கி தட்டிட்டான். இந்த செய்தி எல்லா பதிப்புலயும் வந்து நாறிப்போச்சு.

2003 ஏப்ரல் மாசம் சி.எம்.ஆஃபீஸ்ல இருந்து நமக்கு ஒரு லெட்டர் வந்தது. அத கூட செக்ரட்டரி தான் அனுப்பியிருந்தார். சி.எம். ஐ மேற்கோள் காட்டி " தங்கள் யோசனைகளை உரியவிதத்தில் உபயோகித்துக்கொள்கிறோம். தட்ஸால்.

நமக்கு அப்பவே தெரியும் சந்திரபாபு டுபாகூர் பார்ட்டின்னு. ஆனால் நாடு அந்தாளை பெரிய சீர்திருத்தவாதியா கொண்டாடிக்கிட்டிருந்தது. அந்த நேரத்துல ச்சும்மா சீன் போடவாவது என்ன கூப்டு பெசி ஆ.இ.பத்தி ஒரு சின்ன ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தா கூட இப்ப சொல்லிக்க அந்த ஒரு விஷயமாவது இருந்திருக்கும்.

இப்ப பாருங்க கண்டமேனிக்கு கட்சிகளை சேர்த்து மஹா கூட்டமி வச்சும் புட்டுக்குச்சு. தெலுங்கானா விஷயம் பத்தி எரியுது. வாயை திறக்க முடியல. தெலுங்கானா வேணம்னா இந்தபக்கம் கந்தலாயிரும். ஒன்றுபட்ட ஆந்திரா தொடரனும்னு சொன்னா அந்த பக்கம் நாறிடும்.

என்ன ஒரு சோகம்னா ஒரு என்.டி.ஆர்.ஒரு ஒய்.எஸ்.ஆருக்கு அப்புறம் எல்லா பகுதிக்கும் சேர்த்து ரெப்ரசன்ட் பண்ணீ பேச ஒரு தலைவனில்லாம போயிட்டான் ஆந்திரால.

ஜகன் என்னமோ கோல்டன் தெலுங்கானான்னு ஒரு ஸ்லோகன் விட்டாரு.. ஆனால் அதை கண்டுக்கற நாயே காணோம். இதான் தலை.. சி.எம்முக்கு நான் பத்து ரூபா எம்.ஓ அனுப்பின கதை. இதுக்குண்டான ஆதாரங்களையும் இதே பதிவுல போஸ்ட் பண்ணியிருக்கேன்.

இத்தனை நாள் பலான ஜோக், பலான சமாச்சாரம்லாம் எழுதி நாறடிச்சது பத்து பேர் கூடுதலா இந்த விஷயத்தை படிக்கனும்னுதான். முடிஞ்ச வரை இந்த பதிவை ட்விட்டர், ஃபேஸ்புக் மாதிரி சோஷியல் நெட்வொர்க்ஸ்ல ஷேர் பண்ணிக்கங்க.. உங்க கருத்தை தெரிவிங்க.

ஓகே ஜூட்

2 comments:

  1. நாடு நல்லா இருக்கவேண்டும் என்பதற்காக நீங்கள் எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
    அரசியல்வாதிகள் திருந்தும்வரை நிலைமை இப்படிதான் இருக்கும். அரசியல்வாதிகள் திருந்தவேண்டுமென்றால் மக்கள் முதலில் திருந்தவேண்டும். ஒருவேளை கால போக்கில் நல்ல மாற்றங்கள் வரலாம்.

    ReplyDelete
  2. மறுமொழிக்கும் பாராட்டுக்கும் நன்றி தலைவா!

    ReplyDelete